பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 12, 2012

எல்லாம் நேரம்

நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.

அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.

ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.

இந்த கார்ட்டூன் இன்றும் சரியாக இருப்பது ஆச்சரியம். இந்த செய்தி சர்தாஜி ஜோக் இல்லை :-)

17 Comments:

கவிதை நாடன் said...

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கும் டைம் பத்திரிக்கைக்கும் வித்தியாசம் தெரியாமலா ஒரு கட்சி நாட்டை ஆள்கிறது ???/??/// போங்க பாஸ் அவங்களுக்கு ஏழைக்கும் பணக்காரனுக்குமே வித்தியாசம் தெரியாது இதுல இங்கிலிபிசு பத்திரிக்கை பேரு எப்படி தெரியும் .....

Anonymous said...

namakku naamae....congress :)

cartoon should hv been the other way...the boy with stone should hv the congress kulla... :) hyyo hyyo

Ravi said...

Idhu(kkum) namma Vadivelu joke romba poruthama irukkum:
"Meenukkum jameenukkum vidhyasam theriyathavangala en kooda vechikken paaru... en thappu thaanda..."

Anonymous said...

It is not necessary for TIMES to discover reveal or restate what is already common knowledge to the common man in the country today.
Our Manmohanji is no doubt an economist of immense potential in his field, but helpless in the present political circumstances and lacks the motive to control events. Moreover, he is only strongly believes, that THINGS ARE DESTINED TO HAPPEN, AND YOU ARE ONLY A WITNESS THEREFOR,as Bhagavat Geetha has said.
He is more suited to Rashtrapathi Bhavan as suggested by Mamtaji,developed as a health resort for the last fives years.

kg gouthaman said...

அடுத்து, இளைஞர் காங்கிரஸ், சென்னையில் 'குண்டா'க இருப்பவர்களை எல்லாம் அடித்து,
தலைவி 'சோனி'யா வைக் கேவலப் படுத்திவிட்டார்கள் என்று சொல்லக் கூடும்.

Anonymous said...

copy cat messege from ThatsTamil !!!

Anonymous said...

அதெல்லாம் ஒண்ணுமில்லை. டைம் பத்திரிகையில் வந்த செய்தி, டைமஸ் ஆஃப் இந்தியாவில் வரக்கூடாதுன்னு ஒரு முன் எச்சரிக்கையாக இருக்காலாமே... டெய்லி கூலிக்கு வந்தவங்கதானே இந்த இளைஞர்கள் கூட்டம்.. செலவு கணக்கு எழுதியாச்சு; டாஸ்மாக்குக்கும் போயாச்சு. -மணா

Gopal said...

I strongly protesr the news item in "Times" from US describing MMSingh as "under achiver". As PM he should have achieved at least one thing .If anybody can tell what he has achieved so far except patting A.Raja's back affectionately for his achievements, then he can be called so. Hence Under achiver is not an accepatble term.

Gopal said...

I strongly protesr the news item in "Times" from US describing MMSingh as "under achiver". As PM he should have achieved at least one thing .If anybody can tell what he has achieved so far except patting A.Raja's back affectionately for his achievements, then he can be called so. Hence Under achiver is not an accepatble term.

Ganpat said...

அதே போல national panasonic,samsung நிறுவனங்களுக்கு முன்னால மறியல்/ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும்....
(அவர்கள் "சோனி"யாவின் போட்டியாளர்கள் ஆச்சே!)

Many thanks for the inspiration Mr.K.G.Gouthaman!

Anonymous said...

//copy cat messege from ThatsTamil!!!//

ThatsTamil almost always copies from elsewhere!!!

Anonymous said...

I was told none of these people wear watches, since it shows time. hehehehe

Anonymous said...

For those abusing MMS, here is a food for thought :
When a saint becomes leader for a group of unruly thieves what are the options in front of saint to show some development.
1. Saint can quit but it will be taken over by another thief resulting in zero development.
2. Saint can take the blame, keep the corruption in control to some extent and at-least have 5% development.
I am not an admirer of Congress. Based on the above thought I feel abusing MMS does not make any sense. MMS is serving as pressure valve and without him India would have gone into anarchy or civil war as it will be ruled by a GOONDA patronized by another thief. We've to thank he is not another Karuna.
Congress wants to be in power under any cost. MMS is the best option for now. Even BJP does not have a good PM candidate.

Kannan said...

சீக்கிரமே காங்கிரசுக்கு ஆதரவாக "அன்னை சோனியா ஒழிக, அண்ணன் ராகுல் ஒழிக"-ன்னு போராட்டம் நடக்குதா இல்லையான்னு பாருங்க! எல்லாம் செயல் வீரனுக, கம்பா நிக்குராய்ங்க

Kannan said...

கலைஞர் கிட்ட மேட்டர விட்டுருந்தா அசால்ட்டா டீல் செய்து இருப்பார், கண்மணிகள் இந்து பத்திரிகையை கொழுத்தி இருந்தாலும். "உடன் பிறப்பே, டைம் நாளிதழ் ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பு. அதே பிரதிபலிப்பு தான் இந்த பத்திரிகையும். நம் எதிர்ப்பு ஏகாதிபத்தியத்தை நொறுக்குவதே அன்றி, வேறு ஒன்றும் இல்லை. இது புரியாமல் நாளிதழ்கள் நம்மை முட்டாள்கள் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறி கொள்ள கடமை பட்டு இருக்கிறேன். தேவை பட்டால் முரசொலியையும் கூட கொழுத்துவோம், தமிழர் என்ற உணர்வால் விட்டு வைத்து இருக்கிறோம்." என்று கூறியிருப்பார்.

Kannan said...

//From Anonymous...

For those abusing MMS, here is a food for thought :
When a saint becomes leader for a group of unruly thieves what are the options in front of saint to show some development.//

Anonymous says to his daughter..."Darling...if you cannot avoid rape...better you enjoy it".

தமிழ்நாடு முஸ்லிம் said...

plz join http://www.voicebook.wall.fm/join