பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 04, 2012

கடவுள் செய்தி


திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவவாக்கிய சித்தர் வழிப்பட்ட தலம். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் சன்னிதானம் அருகே, "ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்ற, பெட்டி உள்ளது.பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவார். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும்.


உத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

துப்பாக்கி குண்டு வைத்த போது, கார்கில் போரும், அதைத் தொடர்ந்து நம் தேசத்துக்கு வெற்றியும் கிடைத்தது. மூன்றாண்டுக்கு முன் எலுமிச்சை வைக்கப்பட்டபோது, எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்தது. தேங்காய் வைக்கப்பட்டபோது, அதன் விலை உயர்ந்தது. தென்னங்கன்று வைக்கப்பட்டபோது, "யூரியோபைட்' நோய் தாக்கப்பட்டு, தென்னை மரங்கள் அழிந்தன. நாட்டு சர்க்கரை வைத்தபோது, கரும்பு கொள்முதல் விலை, 1,800 ரூபாயாக உயர்ந்தது.

நடப்பாண்டு ஜன., 13ல், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் கொண்டு வந்த, ஆற்று நீர் ஒரு சொம்பில் வைக்கப்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையும், பழவேற்காடு ஏரி, ஈரோடு அருகே காவிரியாற்றில் மூழ்கி பலர் பலியான சம்பவமும் நடந்தது. பருவமழையும் ஏமாற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்தது.ஜூலை 2 ல், இக்கோவிலுக்கு வந்த, சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன், பட்டு வேட்டியும், துண்டும் கொண்டு வந்தார். மூலவர் உத்தரவு கிடைத்ததால், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு வைக்கப்பட்டது. இதன் மூலம், திருமணம் அதிகமாக நடப்பதுடன், ஜவுளித் தொழிலும், பட்டுத் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என, பக்தர்கள் கருதுகின்றனர்.

செய்தியும், படமும் : தினமலர்

இட்லிவடை சிபாரிசு செய்யும் பொருட்கள்:
1. மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடி
2. இந்திய பணம் ( உயரும் என்ற நம்பிக்கை தான் !)
3. அஜ்மல் கசாப் கோப்பு பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் முன் இங்கே வைக்கலாம்
4. சங்மா
5. இந்த இடம் உங்களுக்கு :-)


இந்த கட்டுரை செய்திக்கும் கடவுள் துகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

22 Comments:

kg gouthaman said...

A pair of handcuffs.

dr_senthil said...

இட்லி வடை வைக்கலாம்

ஜெ. said...

எங்கேயிருந்தாவது கொஞ்ஜம் மழைத் தண்ணீர், நிலக்கரி (மின்சாரத்துக்கு), ஜெயில் கம்பி (நிறைய தேவைப் படும் இல்ல, அண்ணன் கௌதமன் வேறு நிறைய கைகாப்பு ஆர்டர் பண்ணியிருக்கிறார்)! - ஜெ.

Anonymous said...

I dont know why but invariably I hate the comments in yellow. It either has nothing to do with the main topic or it stays away safe. I generally ignore this but can't help reading it sometimes and get frustrated. Is this the author? if yes, you know how to start a blog and how to attract followers. Stay there please. Do good and be good to yourselves. Wish you get the message.

Anonymous said...

5. இட்லி வடை?

Anonymous said...

AMMA JAYA

Muthu said...

பெட்ரோல் (செஞ்சுரி அடிக்குமா னு பார்க்கலாம்)

s suresh said...

சுவாரஸ்யத்தகவல் பகிர்வுக்கு நன்றி!

kothandapani said...

காவி உடை கூடவே ஒரு வீடியோ கேமரா .

பெசொவி said...

//இந்த இடம் உங்களுக்கு :-) //

Fuse Carrier

Kannan said...

5. மன்மோகன் சிங் அல்லது சோனியா அல்லது இருவரும்.

Kannan said...

5. கனவு.
5a. இந்தியா வல்லரசு ஆகும்.
5b. இந்தியர்கள் ரோட்டில் ஒன்னுக்கு அடிப்பதை நிறுத்துவார்கள்.
5c. அரசியல் வாதிகள் சுய நலத்தை கை விடுவார்கள்.
5d. இந்தியர் போல் வாழ்கை உண்டா என்று வெள்ளைக்காரர் ஏங்குவர்.
5e. இந்தியாவை போல வாழ வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் போடும்.
5e. விஜய் உலக நடிகர் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
5f. என்னை புத்திசாலி என்று அனைவரும் பாராட்டுவார்கள்.
5g. அப்படி புகழ் கிடைத்தாலும் நான் ரமணர் போல் ஒரு jaaniyaaga வாழ்வேன். (google indic problem )
அப்பாடி, G வரைக்கும் வந்துட்டேன். இனிமே தாண்ட முடியாது.

Kannan said...

5 . அனானிமஸ் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

Anonymous said...

சொந்தக் கத சோகக் கதய கேளுடே இட்லி....

மத்யான வெய்யலிலே
மன்னார்குடி டவுனுலே - ஒரு
மாங்கா மடையனைத்
தேடிப்போனேன் ங்கொய்யாலே...
தெருத் தெருவா தேடிப்பிடிச்சு
தெரிஞ்சுகிட்டேன் அந்த மடையன...
அது வேற ஆருமில்லேடே
நாந்தான்
நானேதான்....
அவ்வ்வ்வ்வ் ...

gnani said...

how to reach sivnamalai andavar and ask him to suggest in somebody's dreams the ideas you have suggested ? have you found a channel to reach sivanmalai andavar ?

பாலசுப்பிரமணி said...

5.விள்க்குமாறு - ஊரு சுத்தமாகும். 6.கொட்டை(உருத்திராட்சம்) - இந்த சாமியார் பயலுக சரியாக. 7.SIM Card - 2G,3G,முதல் 'மண்' மோகன்ஜி,சோனியாஜி வரை சரியாக. 8.செருப்பு - இந்தக் கதைகளை நம்புகிறவர்களை அடிக்க, நம்பாதவர்கள் அடித்துக்கொள்ள.

siva.saravanakumar said...

முருகன் பெயரை வைத்துக்கொண்டு அநாகரீகமாக உளறும் சுப்பா..... ந‌ம்பலைன்னா உன்ன நீயே செருப்பால அடிச்சுக்கோ........ பத்தலைன்னா கூப்பிடு ,... நாங்களும் வந்து நாலு சாத்து சாத்தறோம்........சிவன்மலை ஆண்டவரை[ எங்கள் சேமலையாண்டவர்] நாங்க நம்பறோம்...... நல்லவங்களை எச்சரிக்கத்தான் அந்த பெட்டி .....உன்ன மாதிரி ஆளுகளுக்கு இல்ல......

siva.saravanakumar said...

சிவன்மலை ஆண்ட‌வரை எட்ட உன்மையான பக்தி போதும் நானி அவர்களே......அந்த பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை வைத்தே எங்கள் [ஈரோடு,திருப்பூர்] பகுதிகளில் விவசாயம் ,மற்றும் தொழில் நிலவரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன......

Anonymous said...

siva. saravanakumar அண்ணாச்சி எதுக்கு எப்பிடி கோவப்படுறிய?

ஆட்டுக்கு பட்டுத் துணி உடுத்தினாலும்
ஆடு ஆடுதான்.
அதுபோல,
"ஞாநி" என்னதான் பகுத்தறிவு பம்மாத்து காட்டினாலும்
அவர் வெறும்
அரைவேக்காட்டு, பார்ப்பன "அஞ்ஞாநி"தான்.
அது அவருக்கே தெரியும்.
பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.

பாலசுப்பிரமணி said...

"உன்மையான" பக்தியா? அது எனக்கு இல்லை சாமி. நம்மகிட்ட எல்லாமே "உண்மை"தான். நல்லவங்களை எச்சரிக்க பெட்டியா? நல்லவங்க நிம்மதியாவே இருக்கக்கூடாதா?ஈரோடு,திருப்பூர் பகுதிகளில் முஸ்லிம்,கிறிஸ்த்துவ, மற்ற மத நண்பர்கள் விவசாயமோ தொழிலோ ப்ண்ணுவதில்லயா? ஆண்டவரை எட்ட உண்மையான பக்தி போதும். மாற்றுக் கருத்து சொல்பவர்களைத 'திட்ட'த்தான் போலி பக்தி வேணுமோ? என்னை நானோ அடிக்கவோ அல்லது வேறு கும்பல் அடிக்கவோ தேவை என்னவோ செருப்புதான்.So, என்னோட 8ஆவது condition OK.ஈரோடு ஒரு "பெரியாரை"யும் பெற்றிருக்கிறது.

siva.saravanakumar said...

கடவுளை நம்புறவனை செருப்பால அடின்னு கமென்ட் போட்டா பதில் இப்படித்தான் வரும்......உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அத உன்னோட வச்சுக்கோ..... ந‌ம்புறவன செருப்பால அடீன்னு சொன்னா கொஞ்சுவாங்களா

ஈ.வெ.ரா காலமெல்லாம் மலையேறிப்போச்சு சாமி.......இனி அடிச்சா பதிலடிதான்.......

Ram said...

Hello Balasubramani,
Periyar is a cheap opportunist. Since he did not get recognition neither in Justice party nor in Congress he came with some crap. His effervescent ideas died even during his life time. To top it his comedy statements targeting under-privileged for price rise and on second marriage. It is a bane for the people of TN to recognize Periyar as a Saint, MK,an incorrigable polygamist as leader and CM.
Not stopping with that, having a nerve to criticize a century old practice. How do you know other religious bodies in that region don't believe in the temple? If you think they don't have Hindu relatives/friends then you're living in fools paradise. No wonder you don't have a contra thinking and recognize Periyar as great man. Don't insult and surprised to find MK relatives going there.
Vazhga tamizhagam !!!