பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 31, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-7-2012

நல்லாருக்கயா இட்லி?
சோட்டா பீம் கார்டூனில் வரும் ராஜாவை போல தான் நம்ம பிரதமரும். பல பிரச்சனைகள்.ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. ராஜாவுக்காவது சோட்டா பீம் இருக்கிறார். பாவம் மன்மோகன் சிங்கிற்கு யாரும் இல்லை.

மன்மோகன் இந்த நாட்டுக்கு செய்தது எல்லாம் மந்திரிசபை மாற்றம் தான். பசி என்றால் ஐஸ்கிரீம், மினரல் வாட்டர் சாப்பிடும் நடுத்தரவர்க்கம் என்று பேசியதால் பசி மீண்டும் நிதி அமைச்சர். சட்டம் ஒரு இருட்டு அறை என்பதால் வீரப்ப மொய்லி இப்போது மின்சாரத்துரை அமைச்சர். பிரணாப் ஒலிம்பிக்ஸ் வீரர்களுக்கு சம்பிரதாய வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

அமிதாப் ஒலிம்பிக்ஸ் ஜோதியை வைத்துக்கொண்டு போனதை விட சிகப்பு நிற டிரஸ் போட்டுக்கொண்டு போன அந்த பெங்களூர் பெண் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஊழல் பெருச்சாளி கல்மாடி வேடிக்கை பார்க்க ஒலிம்பிக்ஸ் போனதைவிட இந்த சாதாரணப் பெண், வீரர்களுடன் போனதில் தவறில்லை. வெட்கக்கேடு எது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை இப்டி இருக்க, இன்று லண்டன் சென்ற அண்ணன் @elavasam அன்றே சென்றிருந்தால் தமிழ் ட்விட்டர்களின் முக்யப் பிரதிநிதியாக அந்த மார்ச் பாஸ்டில் கலந்து கொண்டிருக்கலாம். அவரிடம் அமெரிக்கா என்று போட்ட ஓவர்கோட் இருப்பதால் இம்புட்டு பிரச்சனையும் வந்திருக்காது.

இலவசம் குடுத்து நாட்டை அழித்துக் கொண்டு இருக்கும் இந்த புண்ய பூமியில் ஊழல் என்றால் ராஜா, பவர் லெஸ் என்றால் மன்மோகன் சிங், ஜோக்கர் என்றால் ராமதாஸ் என்ற வரிசையில் உண்ணாவிரதம் என்றால் அன்னா அசாரே என்று ஆகிவிட்டது. பேசாமல் அவர் பெயரை அன்னமில்லா அசாரே என்று மாற்றிவிடலாம். இதில் என்ன கூத்து என்றால் மக்கள் வந்தாலும் மீடியாவிற்கு நியூஸ், கூட்டம் வராவிட்டாலும் நியூஸ். பிழைக்க தெரிந்த பிள்ளைகள்.

அமெரிக்காவில் சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்க இந்திய சீனப் பொருளாதாரம் பற்றி ரெண்டு மூணு இடங்களில் பேசினார் போல. அங்கே போய் இந்தியப் பொருளாதாரம் பத்தி விஸ்தாரமாப் பேசினா அங்கே இருக்கற தமிழர்கள்/இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு பண்ண வசதியா இருக்கும் என்று பேசினாரோ என்னவோ! ஆனால், அவர் ஜோசியக்காரர் இல்லை என்பதை அங்குள்ள மக்கள் உணர்ந்தே இருப்பார்கள் என்று நம்பறேன்.

மாருதி தொழிற்சாலை பிரச்சனைக்கு வாஸ்து தான் காரணம் என்று இப்போ யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் இடம் மாற்றி இப்போது குஜ்ராத்துக்கு போக போகிறார்கள். மும்பை மாமி கூட தன் தளிகை மும்பையில் சரியாக வராத காரணத்தால் இப்போ குஜராத்துக்குப் போயுள்ளார். அதனால்அடுத்த பிரதமர் கூட குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் அது நல்லது என்றும் நான் நினைக்கிறேன்! மக்கள் தங்கள் கருத்தைக் கண்டிப்பாச் சொல்வார்கள் என்றும் நம்பறேன்.

எடுத்தால் வைக்க முடியாது அது எது? பெரிய விடுகதை என்று நினைக்க வேண்டாம். நம்ம பினாத்தல் சுரேஷ் (@penathal) எழுதின த்ரில்லர் புஸ்தகங்கள் இரண்டு வந்துள்ளன. அதற்கு 'ஸ்டார்' எழுத்தாளர் பா.ராகவன் அட்டைப்படத்தில் முன்னுரை எழுதியுள்ளார். அட்டையில் ஒருவரி விமர்சனம் போடறதும் தமிழுக்குப் புதுசுதான். இருவருக்கும் வாழ்த்துகள்!

செக்ஸ் திரில்லர் எழுத நினைப்பவர்களுகு இந்த நியூஸ் ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார். வேடிக்கை என்னவென்றால் இறந்தவுடன் அவரது முதல் 5 மனைவிகளும் காட்டுக்குள் பறந்துவிட்டதாக 6வது மனைவி போலீசில் தெரிவித்திருக்கிறார். உல்லாசப் பறவைகள் என்றால் இவர்கள்தான்.

ஏன் சார் சட்டசபைக்கு போகவில்லை என்றால் "கூட்டணியில் இருந்தபோது போனேன். இப்ப கூட்டணியில் இல்லை என்று சொல்லியுள்ளார் கேப்டன். அவர் போக வேண்டிய இடம் கோவில்-கொளம் என்று போவதுதான் சரி. ஏனென்றால் அவர் கடவுளுடன்தான் கூட்டணி வைத்துள்ளார்.

என்றென்றும் அன்புடன்
முனி

8 Comments:

Litmuszine said...

சுசில் குமார் ஷிண்டே ஐ Power Ministry லே இருந்து மாத்துறாங்க, இந்தியாவிலே நிறைய இடங்கள்ள Power போச்சு. வரும் ஆண்டுகளில் சுசில் குமார் ஷிண்டே ஐ Home Ministry லே இருந்து மாத்தும்போது இந்தியாவிலே நிறைய பேருக்கு Home போயிடுமோ?? He is Bad Man - The Dark Night Rises.

Equally Bad is crippling to Finance. Beware of Stock buyers!! Anyone remembers deep up & down in stock graph (in three days of interval) middle of the year 2006?

Guru Prasad P said...

Good 'Status Update' post from idlyvadai

Anonymous said...

இ.வ. ஆசிரியர் குழு ஒருத்தர் முதுகை இன்னொருத்தர் சொரியராங்க.சம்பந்தம் இல்லாமல் @இலவசம் பற்றி அன்புடன் பாலா முனீஸ்வரனாக எழுதியிருக்கிறார்.

Subramanian said...

Idly vadai posts are losing their quality these days. Must have to do with the change in the persons running the blogpost now.

Anonymous said...

அன்னமில்லா அசாரேயாமுல்ல.....
நற...நற...

முனி
உனக்குப் பிடித்துவிட்டது சனி.
நீ தப்ப முடியாது இனி....

அடுத்த உண்ணாவிரதம் உன் வீட்டு முன்தான்...ஜெய் அன்னாஜி!

Nilofer Anbarasu said...

அவசரத்தில் இட்ட பதிவோ? இட்லிவடை டச் சுத்தமா இல்லை.
ஒவ்வொரு பார ஆரம்பிக்கும் போதும் இருக்கும் சிகப்பு நிற எழுத்துக்கள் கூட இல்லை. முனி கடிதத்திற்கு உண்டான லே அவுட் மிஸ்ஸிங்.

குறிப்பாக வாலி, சாவி பற்றிய செய்தி, பில்லா-2ஐ ஓரம் கட்டிய நான் ஈ, சகாயம் அறிக்கை போன்ற செய்திகள் எதிர்பார்த்தேன்.

முனி எழுதவிருக்கும் இட்லிவடை கடிதத்திலாவது இடம் பெறுமோ?

Avinash Srinivasan said...

உண்ணா அசாரே would suit him more.

R. J. said...

This is not a letter by 'Muni' and it is wrongly delivered to Idly vadai! Or, Muni has given the letter-writing on sub-contract! - R. J.