பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 13, 2012

பில்லா - 2 FIR


ஹாலிவுட் தரம் என்று சொல்லும் இன்னொரு கோலிவுட் படம். ஆரம்பம் முதல் ரசிகர்கள் 'தல தல' என்று அவர் கோஷம் போடுவதால் அஜித்துக்கு பித்தம் தலைக்கேறி எல்லோர் தலையையும் வெட்டியும், சில சமயம் சுட்டும் தள்ளுகிறார்.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:
படம் ஆரம்பிக்கும் போது கிடைக்கும் நண்பர் மட்டும் கடைசியில் மிஞ்சுகிறார். மற்றவர்கள் எல்லோரும் மடிகிறார்கள்.

வழக்கம் போல எல்லா தாதாவும் குறுதாடி வைத்துக்கொண்டு முதலில் அஜித் செய்யும் சாகசங்களைப் பாராட்டி பிறகு அவர்களே விரோதியாகி மடிகிறார்கள்.

அவர் அக்கா, அவர் மகள், சகுனி வேலை பார்க்கும் நண்பர்கள், உதவும் நண்பர்கள், போலீஸ், சிம்x2, அவர் மகன் எல்லோரும் கிளோஸ்!

ரகுமான் ஒரு சீனில் வருகிறார். பிறகு எங்கே அடுத்த அடுத்த சீன்களில் வந்தால் செத்துவிடுவேனோ என்று அவரே நினைத்ததாலோ என்னவோ கடைசி வரை வரவே இல்லை.


அடுத்து ஒரு சின்ன கேள்வி பதில்:
நல்ல தாதா கெட்ட தாதா என்ன வித்தியாசம்? படத்தின் ஹீரோ வைரம், போதை மருந்து, ஆயுதம் எல்லாம் கடத்தினால் அவர் நல்ல தாதா. அதே வில்லன் செய்தால் அவன் கெட்ட தாதா.
இதே தான் இங்கே நடக்கிறது. அஜித் நல்ல தாதா. கூட இருப்பவர்கள் எல்லாம் கெட்ட தாதா!
வில்லன் தாதா நல்ல ஃபிகராக வைத்து இருந்தால் அந்த வில்லன் சாக வேண்டும். அப்போது தான் அந்த பிக்கினி குட்டி நீச்சல் அடித்தும், அஜித் உட்காரும் சோபா செட் கைப்பிடியிலும் உட்கார முடியும். இங்கேயும் அப்படியே!

அஜித் ரொம்பப் பேசுவதில்லை. பாதி நேரம் முறைப்பதிலும், நடப்பதிலும் செலவு செய்கிறார். சில சமயம் சின்னச் சின்ன வசனங்களைப் பேசுகிறார் - "நல்லவங்களைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டம்" என்ற வசனத்துக்கு கைத்தட்டல் வருகிறது. வசனம் இரா.முருகன் மற்றும் முகமது ஜாபர் என்று வலது பக்கம் போடுகிறார்கள். படத்தில் நிறைய பஞ்ச் வராவிட்டாலும், இந்தப் படத்துக்கு தேவையான வசனங்கள் சரியான அளவிலே நன்றாகவே இருக்கிறது. படத்தில் வரும் வசனம் போல "உழைப்பு தான் உயர்த்தும்" என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இசை - யுவன்.
படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதால் முதலில் வைரம், போதை மருந்து, ஆயுதம் என்று அஜித் தாதாவாகிற 'சரித்திரத்தை' காண்பிக்கிறார்கள். ஏன் ஆகிறார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்கள். அவர் இப்படி வளரும்போது அவர் காஸ்டியூமும் கைலி, பேண்ட் சொக்கா (@nchokkan அல்ல), கோட் சூட் என்று மாறுகிறது. கூடவே கூலிங் கிளாசும்! ஆனால் புத்திசாலித்தனம்? நோவே! அப்பப்போ முறைப்பதும், ஸ்லோ மோஷனில் நடப்பதும், கூடவே ஹியர் போன் மாட்டிக்கொண்டு நடக்கும் பாடிகாட் மட்டும் போதுமா அஜித்? இதை நாங்க பாஷாவிலேயே பார்த்துவிட்டோம்.

படம் முடியும் தருவாயில் "நினைச்சதெல்லாம் முடிச்சுட்ட" என்று சொல்லும் போது "இதான் ஆரம்பம்" அஜித் பதில் சொல்லும் போது பகீர் என்று பயம் வந்து நம்மைத் தாக்குகிறது. நல்ல வேளை அப்டி ஒரு விபரீதம் நடக்கவில்லை. நல்ல எடிட்டிங் நன்றி எடிட்டர்சார்.

ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்துக்கு அஜித்தும் அவர் நண்பரும் சென்று பெரிய கன்டைனரை அசால்டாக எடுத்துச் செல்வது,
கடைசியில் தாதா நடத்தும் பெரிய துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அதே இரண்டு மென் ஆர்மியுடன் சென்று நாசம் செய்வது போன்றவை படத்தில் காமெடி சீன்கள்.

படத்தில் இசை, ஒளிப்பதிவு, லொக்கேஷன் கொஞ்சம் படத்தை தூக்கி நிறுத்துகிறது.

இட்லிவடை மார்க் 6/10

அஜித் ரசிகர்கள் நாளைக்கே பார்க்கலாம், காசி தியேட்டரில் கூட்டம் போட்டு டிராபிக் ஜாம் செய்யாமல் கூட்டம் கொஞ்சம் குறைந்த பின் அணில் ரசிகர்களும் பொறுமையாகப் பார்க்கலாம்.


16 Comments:

Doha Talkies said...

விமர்சனம் அருமை.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.நண்பரே ..
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

Anonymous said...

சொதப்பல் தான் போலிருக்கிறது... பார்க்கலாமா ? வேண்டாமா ?

Anonymous said...

/* படம் முடியும் தருவாயில் "நினைச்சதெல்லாம் முடிச்சுட்ட" என்று சொல்லும் போது "இதான் ஆரம்பம்" அஜித் பதில் சொல்லும் போது பகீர் என்று பயம் வந்து நம்மைத் தாக்குகிறது. நல்ல வேளை அப்டி ஒரு விபரீதம் நடக்கவில்லை. நல்ல எடிட்டிங் நன்றி எடிட்டர்சார். */


"யாரங்கே....இந்த இட்லிவடையனைத் தூக்கி சட்னி, சாம்பாரிலே அமுக்கு!.....சலம்பல் தா..ஆ..ஆ.ஆ..ங்க முடியவில்லை.....!! "

மோகன் குமார் said...

முருகனுடன் சேர்ந்து சுபா வசனம் எழுதலை. சரி பார்த்து விட்டு எழுதுங்கண்ணா

Anonymous said...

//ரகுமான் ஒரு சீனில் வருகிறார். பிறகு எங்கே அடுத்த அடுத்த சீன்களில் வந்தால் செத்துவிடுவேனோ என்று அவரே நினைத்ததாலோ என்னவோ கடைசி வரை வரவே இல்லை.//

இது prequel யா இ.வ . பில்லா'ல ரகுமான் வர்ரருள்ள, அதுக்கான லீடு இது. படங்கலபத்தி தெரியாம விமர்சிக்கிற சில நாலைந்து பிரபல பதிவர்களைப்போலவே விமர்சிக்க வந்துடுறாங்க எல்லோரும். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள்.

//நல்ல தாதா கெட்ட தாதா என்ன வித்தியாசம்? படத்தின் ஹீரோ வைரம், ------------------------------------------------சோபா செட் கைப்பிடியிலும் உட்கார முடியும். இங்கேயும் அப்படியே!//

எங்கய்யா அவரு "நல்ல தாதா"ன்னு சொல்லியிருக்காங்க படத்துல, நல்லவராக சித்தரிக்கபடுகின்ற ஒரு அரசியல்வாதியவே அவர் போட்டு தள்ளுறாரு.

//வசனம் இரா.முருகன் + சுபா என்று வலது பக்கம் போடுகிறார்கள்.//

எங்கயா எங்க.. மொக்கைப்லாக் எழுதுகிறவர் இட்லிவடை தானோ..

எப்படி ஒரு சாதாரண மனிதன் பெரிய டான் ஆனான் என்பதை ஒரு நூற்றிமுப்பது நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டுமெனில், இதெல்லாம் சொல்லி ஆகா வேண்டும். எதை விட வேறு எப்படி ஒரு டான்-ஹிஸ்டரியை படமாக்குவதேன்பதை பிரபல விமர்சக பதிவர் இ.வ. சொன்னால் நன்றாக இருக்கும்.

perumal shivan said...

padam super

vegaatha idlyum oosipona vadaiyumaa erukkeeringa unga mandaikku avvalavuthaan theriyum ungalukkellaam oru blog????????

perumal shivan said...

padam super

your the ediot

Shan said...

Sorry idly/vadai, this movie was excellent but its only for adults, not for kids. From the 1st scene, this movie was straight to the point. No comedy, no sentiments, no romance, Full of violence. If you like story with violence, you will like it.

Madhavan Srinivasagopalan said...

//Blogger Shan said...

Sorry idly/vadai, this movie was excellent but its only for adults, not for kids. From the 1st scene, this movie was straight to the point. No comedy, no sentiments, no romance, Full of violence. If you like story with violence, you will like it .//

அதாருப்பா வயலன்ஸ ரொம்ப ரசிப்பாராமே..
உங்க வீட்டு வாசலில வயலன்ஸ் நடந்தாலும் இப்படித்தான் ரசிப்பீங்களா..?
சினிமா என்பது ஒரு ஜாலியான பொழுது போக்கா இருக்கணும்.. துப்பாக்கி, கடத்தல், பாம் பிளாஸ்ட்.. இதுதான உங்களுக்கு பிடிக்கும்... பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் வேணும்னு சொன்ன ஆளு நீங்கதானா ?

Shan said...

@Madhavan - Very funny as if this is the only movie has violence and none of the other movies are non-violence movies. Aruval or gun, killing one person or 100 person its all violence.

Anonymous said...

ஏன்ஜாமி, இந்த பேயோனோட உண்மையான பேரு "தி"ல ஆரமிச்சு "ர்"ல முடியுமாமே? நடுல "வாக" மட்டும் வருமாமே?

Madasamy said...

உங்களோட விமர்சனத்துக்கு..ரொம்ப நன்றி...!!

ஆங்கில படத்துக்கு இணையான...தரத்துல வந்திருக்கு பாருங்க..!! இன்னும் எத்தன நாளைக்கு தான் குத்து பட்டு, செண்டிமெண்ட், காமெடி எல்லாத்தையும் ஒரே படத்துல பார்த்துக்கிட்டு இருப்பிங்க..!! இன்னொரு விஷயம் நல்லா கவனிச்சா தெரியும்.. இந்த படத்துல காதல் சீன்ஸ் கூட இல்ல..!! எத்தனையோ தடவ நாம கிண்டல் பண்ணிருக்கோம்.... காதலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாதுன்னு.. அது இதுல நடந்திருக்கு..

கேமரா வொர்க் ரொம்ப நல்ல பண்ணிருக்காங்க...!! படம் தொடங்கும் போதே சொன்னங்க... எப்பிடி பில்லா டான் ஆகிறான் சொல்ல போறோம்னு..யாருமே சொல்லல ஏன் டான் ஆகிறான்னு..அதையும் சொல்லணும் என்றால் பில்லா 3 இல் பார்த்துக்கோங்க... :)

உண்மையில் படம் நல்ல இருந்துச்சி...!! ஒரு இடத்துல கூட போர் அடிக்கல... 2 மணி நேரம் எப்டி போசின்னே தெரியல...!! அஜித் பேச கூடிய வசனம்கள் எல்லாமே... அருமை.. இர. முருகன் அவர்களுக்கு நன்றி..!! 8 மதிப்பெண்கள் தரலாம்.. :-)

வஜ்ரா said...

ஹலோ மாடசாமி,

எல்லாமே படு ஜோரா பாராட்டிட்டு, 100க்கு வெறும் 8 தானா ? :D

குறைந்தது 35 வாங்கினாத் தான் பாஸ்!!

Madasamy said...

வஜ்ரா,

நான் சொல்ல வந்ததது... 8 ஸ்டார்ஸ்...நண்பரே...!

Sridhar Pichumani said...

Great Movie. I dont agree with the review. Looks like you expected "Style-u Style-u thaan", "Dheemthanakka Thillana" type mass songs, Dream Sequence songs from heroine(Luckily the planned song was removed), Hero helping poor people (just imagine Dawood Ibrahim helping poor people after Drug TRafficking and Arms Dealings)... This movie has certainly broken all stereotypes and focussed on the main matter - HOW he became don. Definitely there are some shortfalls but just watch The Dark Knight Rises. You have those short falls in that also. What matters most is how the movie has shaped up and how the story was told. Fantastic movie experience for adults.

Anonymous said...

Billa II is not upto the mark of Billa I