பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 23, 2012

சகுனி FIR

எச்சரிக்கை: Saguni movie என்று கூகிள் இமேஜில் தேடினால் முதலில் வருவது எல்லாம் தெலுங்கு சகுனிகள்.

கதை விக்ரம் நடித்த தூள் படத்தைப் போன்றது. அரசியல் பேட் பாய் பிரகாஷ்ராஜூக்கு எப்படி கமல்(க்கண்ணன்) நோஸ்கட் கொடுக்கிறார் என்பது தான் கதை.பலத்த கைத்தட்டலுக்கு இடையில் சந்தானத்தின் பெயரைப் பார்க்க முடிகிறது. கார்த்தி வரும் முதல் காட்சியை விட சந்தானம் வரும் காட்சிக்கு மக்கள் விசில் அடிக்கிறார்கள்.

வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் தங்கள் பெயருக்கு முன்பு 'ரஜினி' என்று வைத்துக்கொள்ளுவதைப் போல இதில் சந்தானத்தின் பெயர் ரஜினி (அப்பாத்துரை). கார்த்தி கமல். ரஜினி-கமல் காம்பினேஷனில் முதல் பாதி காமெடியாக போகிறது. ஆனால் சில சமயம் சந்தானம் அடிக்கும் பஞ்ச் காமெடி கொஞ்சம் ஓவர் டோஸ். ரஜினி-கமல் ஒன்றாக உச்சா அடிக்கும் காட்சி படத்துக்குத் தேவையே இல்லை.

படத்தில் எல்லோரும் நடிக்க, கார்த்தி மட்டும் நடிக்காமல் சும்மா வந்துவிட்டு போகிறார். கார்த்தி ஏதோ சாப்ட்ஃவேர் ஆசாமி கெட்டப்பில் ஃபார்மல் உடையில் லேப்டாப்புடன் வருவது எரிச்சலூட்டும் காமெடி. ராதிகா வரும் காட்சியில் 'அட' சொல்ல வைக்கிறது. அதுவும் அவர் மேயராக பதவி ஏற்கும் காட்சி அவர் காட்டும் முகபாவம் அவருடைய அனுபவத்தை காண்பிக்கிறது. ஆனால் மேயராகிவிட்ட பிறகு இரண்டு மூன்று முறை போனில் பேசுகிறார். பிறகு அவர் மேயர் வேலையில் பிஸியாகிவிடுவதால் காட்சிகளில் வரவில்லை.

ராதிகாவிற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் வலம் வருகிறார். படம் தெலுங்கில் எடுப்பதால் இவரைக் கொண்டு வந்துவிட்டார்கள், புத்திசாலிகள்!

மரத்தடி சாமியாராக, பிறகு ஜக்கி போல பணக்கார சாமியாராக நாசரும் வந்துவிட்டு போகிறார்.

பிரகாஷ் ராஜ் வில்லனாக அவரின் முந்தைய படங்களில் எப்படி நடித்தாரோ அதே மாதிரி ரெடிமேட் நடிப்பை எல்லா ஃபிரேமுலும் தந்துவிட்டுப் போகிறார். வித்தியாசம் என்றால் அவருடைய கண்ணாடி ஃபிரேம் தான். இதுவரை போடாத ஃபிரேம்.

இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைக்கும் படம். வாங்கின காசுக்கு கையில் இருக்கும் எல்லா வாத்யங்களையும் உபயோகிக்க வேண்டாம் என்று ஜி.வி.பிரகாஷுக்கு யாராவது சொன்னால் தேவலை. மகா எரிச்சல். பாடல்களும் அதே ரகம்.

கிட்டத்தட்ட எல்லா வாரப் பத்திரிக்கையிலும் ஹீரோயின் ப்ரணீதா படம் அட்டையில் வந்ததால் அவர் ஏதோ புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. கண்ணைத் தவிர பெரிதாக ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்ப் படத்தில் சண்டை இல்லாமல் இருக்கக் கூடாது என்று சில சண்டைக் காட்சிகளை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். கமல் என்ற பெயர் வைத்த காரணத்தாலோ என்னவோ அனுஷ்கா, ஆண்டரியா போன்ற பார்ட்டிகள் வந்துவிட்டு போகிறார்கள்.

பிரகாஷ்ராஜ் தான் செய்த கெட்ட காரியம் அனைத்தையும் லிஸ்ட் போட, இதை வீடியோ எடுத்து கார்த்தி அவரை மடக்குவார் என்று நாம் நினைத்தால், கிரண் மீண்டு வருவது படத்தில் உள்ளே ஒரே டிவிஸ்ட்.

கதை, திரைக்கதை, கொஞ்சம் சந்தானம் இருப்பதால் இத்தனை சுமாரான படத்தை சகித்துக்கொள்ள முடிகிறது.

இட்லிவடை மார்க் 5.3/10

டிப்ஸ்: படத்தின் முதல் சீனில் சன் டிவி வருகிறது, அதனால் இந்த படம் சன் டிவியில் தான் வரும்.

இந்த விமர்சனம் படிச்சு இட்லிவடையை வீடியோவில் இருப்பது போல யாரும் அடிக்க வேணாம்.


5 Comments:

dhasarathy said...

padaththirkku 5.3 maark miga adhigam padam below averagedhaan indha padaththin vilambarathhai paarththu mudhal naale adiththu pidithuticket vaangi nondhu paoy idhai ezhudhugiren

கௌதமன் said...

சங்கீத சங்கீதா நல்லா இருக்கு. ஆனால், கானமூர்த்தி ராகத்தின் ராக ஸ்வரூபம் மிஸ்ஸிங். (எனக்கு சினிமாக்கள் இண்டரஸ்ட் இல்லை சாரி!)

Anonymous said...

Thodaaa. KG Gouthaman petru mamu.

ஸ்ரீராம். said...

அந்த விமர்சனத்தைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்! அப்புறம்தான் நியாய அநியாயம் தெரியும். என்றாலும் இன்னொரு மேடையில் இதைப் பற்றிப் பேசி சண்டையிடுவது நியாயமா என்றும் தெரியவில்லை... இவர்கள் சொல்வது மாதிரியே குறைகளை இவர்களும் அவரிடம் தனியாகச் சொல்லியிருக்கலாமே... அறிவுமதி கொஞ்சம் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.

Subramanian said...

Saguni is such an ordinary film.Why this buidup for such a film. And to think Karthi took one year to release this film.Their is not even one original scene in this movie.Even writing so many lines about this movie is a waste of time and energy.It is another dud like Ezham Arivu.