பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 29, 2012

திருடனுக்குத் தேள் கொட்டினால்....

யாரையோ திருப்திப் படுத்துவதற்காக நாம் பேசிய பேச்சு நமக்கே வினையாக முடியும் என்பதை ப.சிதம்பரம் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். 2008 நவம்பர் 26 ஆம் தேதி பம்பாயில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட எட்டு தீவிரவாதிகளுள் அஜ்மல் கஸாப் என்ற பயங்கரவாதியைத் தவிர அனைவருமே கொல்லப்பட்டனர். இந்த சதிவேலைக்கான வலை பின்னப்பட்டதில் பாகிஸ்தான் அரசாங்கம், அதன் உளவுத்துறையான ISI, மற்றும் லஷ்கர் ஈ தொய்பா ஆகியோருக்கு பங்கிருப்பது பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதியானது. அன்றிலிருந்து இன்றுவரை பாகிஸ்தானுடன் இதில் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு மன்றாடும் படலம் நடந்து கொண்டுதானிருக்கிறது, ஆயினும் இதுவரை எதுவும் உருப்படியாக நடந்தபாடில்லை. இத்தாக்குதலின் சூத்ரதாரியான லஷ்கரின் தலைவன் ஹஃபீஸ் ஸயீத் வெகு தோரணையாக பாகிஸ்தானில் அங்குமிங்கும் வலம் வருகிறார், பொதுக் கூட்டங்களில் உரை நிகழ்த்துகிறார்.

இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆளுங்கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங் இது ஆர் எஸ் எஸ்சின் சதி வேலை; கர்கரே இறப்பதற்கு 2 மணிநேரம் முன்னதாக தம்மை தொலைபேசியில் அழைத்து, ஆர்.எஸ்.எஸ் மூலம் தனக்கு மிரட்டல் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தவிர, ப.சிதம்பரமும், தம் பங்கிற்கு இது உள்ளூர்காரர்களின் வேலை என்று தீர்ப்பு வழங்கினார். அன்றுமுதல் இன்று வரை பாகிஸ்தான் இதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அஜ்மல் கஸாபின் குடியுரிமை அடையாள அட்டை கிடைத்தபிறகே அவன் பாகிஸ்தானி என்றே ஒப்புக் கொள்ள நேர்ந்த்து பாகிஸ்தானுக்கு, அதற்கு முன்புவரை அவன் பாகிஸ்தானியே அல்ல என்று வாதிட்டு வந்தது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் முகத்திரை தொடர்ந்து கிழிக்கப்பட்டு வந்துள்ள நிலையிலும், இந்தியாவிலுள்ள ஸ்திரமாக முடிவெடுக்கத் தெரியாத, முதுகெலும்பில்லாத பிரதமரால் பாகிஸ்தானுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் அத்தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து உத்தரவுகளை வழங்கிய, லஷ்கரின் இந்தியப் பிரிவின் முக்கியத் தளபதி, இந்தியாவைச் சேர்ந்த சையத் ஜபியுதீன் அன்ஸாரி என்கிற அபு ஜிண்டால் என்ற அபு ஹம்ஸா தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 43 மாத தேடுதல் வேட்டை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இவனை விசாரித்ததில், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் ISI க்கு உள்ள தொடர்பை இவன் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு கராச்சியிலுள்ள ரகசிய உத்தரவுகள் வழங்கிய இட்த்தை ISI தகர்த்து விட்ட்தாகவும் இவன் தெரிவித்துள்ளான். தாக்குதலுக்குப் பிறகு சில காலத்தில் பாகிஸ்தான் பாஸ்போர்டில் செளதிக்குப் பயணம் செய்து, லஷ்கருக்கு ஆள் சேர்க்கும் பணியிலீடுபட்ட இவனை, சில சில்லறை ஏமாற்று குற்றங்களில் செளதி அரசு கைது செய்ததும், பாகிஸ்தான் இவனை தன் நாட்டில் செய்த குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி என செளதியிடம் தெரிவித்து, அவனை திரும்பப் பெற்றுக் கொள்ள முனைந்த முயற்சி தோல்வியடைந்தது. கடைசியில் அவனாகவே பாகிஸ்தானிய பாஸ்போர்டில் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தகவல் கிடைக்கப்பெற்று, தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆனால் பாகிஸ்தான் இப்பொழுது இவன் இந்தியர் என்றும், உங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஓட்டை என்றும், ஹிந்து தீவிரவாதிகள் வளர்கிறார்கள் என்றும் ப்ளேட்டைத் திருப்பிப் போகின்றனர். நமது அமைச்சர்களும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த அபு ஹம்ஸாவே பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து அஜ்மல் கஸாபிற்கு செல்பேசியில் தாக்குதல் உத்திகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளான். தவிர, அஜ்மல் கஸாபிற்கு ஹிந்தியும் போதித்து வந்துள்ளான் பாகிஸ்தானிலுள்ள பயிற்சியகத்தில். அபு ஹம்ஸா கைது செய்யப்பட்ட செய்தியறிந்த கஸாப் அதிர்ச்சியடைந்த்தாகவும், தொடர்ந்து கைது விவரங்களை கேட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை ஹிந்துக்களைச் சாடினால் சிறுபான்மை முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி தரந்தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தோதாக திக்விஜய் சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த ஹிந்து தீவிரவாதக் கருத்து. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஹிந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது இதுவென்று எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஹிந்து தீவிரவாதம் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வந்த்து. இப்பொழுது பாகிஸ்தானும் அதையே திருப்பிச் சொல்கிறது. இதில் பாகிஸ்தானைக் குறை கூற வழியில்லை. ஏனெனில் இது இங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட பிரசாரம்; அதை அவர்கள் சாமர்த்தியமாக தங்களது தவறை மறைக்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர், அவ்வளவே!

கைது செய்யப்பட்ட அபு ஹம்ஸாவுக்கு இனி பொதுமக்கள் வரிப் பணத்தில் சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும் கொடுத்து பல கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பளித்து சொகுசுச் சிறையில் காவல் வைப்பர்.

ஜிண்டால் கைதானதை அறிந்ததும் கசாப் கடும் அதிர்ச்சி அடைந்தான் என்று இன்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவர்களை இன்னும் இந்திய அரசு உயிருடன் வைத்துள்ளது என்பது கூட நமக்கு அதிர்ச்சி தான், ஆனால் நாம் என்ன செய்ய முடியும் ? பிரதமர் என்ன செய்வார் ?

தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் சுதந்திர தினப் பிரகடனம் செய்வார், ஐம்பதாயிரம் போலிஸார் பாதுகாப்பிற்கு மத்தியில். வாழ்க ஜனநாயகம், வாழ்க காங்கிரஸ், வளர்க காங்கிரஸிற்கு ஓட்டளிக்கும் மக்கள்!

17 Comments:

சீனு said...

//பெரும்பான்மை ஹிந்துக்களைச் சாடினால் சிறுபான்மை முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி தரந்தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தோதாக திக்விஜய் சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த ஹிந்து தீவிரவாதக் கருத்து. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஹிந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது இதுவென்று எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஹிந்து தீவிரவாதம் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வந்த்து. இப்பொழுது பாகிஸ்தானும் அதையே திருப்பிச் சொல்கிறது. இதில் பாகிஸ்தானைக் குறை கூற வழியில்லை. ஏனெனில் இது இங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட பிரசாரம்; அதை அவர்கள் சாமர்த்தியமாக தங்களது தவறை மறைக்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர், அவ்வளவே!// unmaiyana karuthukal idlyvadai.....

padithup paarungal

காவி நிறத்தில் ஒரு காதல்

http://seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html

s suresh said...

நெத்தியடியான பதிவு! சிறுபான்மை ஓட்டுக்களுக்காக பெரும்பான்மையரை வஞ்சிக்கும் காங்கிரஸ் எப்போது திருந்தப்போகிறது?

ஜெ. said...

பாகிஸ்தான் முஸ்லிம்கள் மீது சந்தேகம் வராமல் திசை திருப்ப, கசாப் உடன் வந்த தீவீரவாதிகளை பூணூல் தரித்துக் கொள்ளும்படி இந்த அபு ஜுண்டால் ஐடியா கொடுத்த விவரமும் செய்தித் தாளில் வந்துள்ளது! - ஜெ.

Cuziyam said...

The Islamist leader has revealed the plot within a plot to bring bad name to Hindutva people. Here it is:

NEW DELHI: Lashkar-e-Taiba (LeT) terrorist Abu Jundal has confirmed that he and other 26/11 masterminds had plotted to make the attack appear as a handiwork of Hindu radicals upset with the slain Maharashtra ATS chief Hemant Karkare.

Sources familiar with Jundal's interrogation quoted him saying that it was the Maharashtra-born terrorist who thought of giving it a Hindu hue. Karkare, who was killed in the 26/11 terror attack, had arrested alleged Hindu terrorists — including Sadhvi Pragya Singh and Lt Colonel Prasad Purohit — for the 2008 Malegaon blasts.

As part of the deception, gunman Ajmal Kasab and the other terrorists were made to wear saffron wristbands (maulis). Also, IDs bearing Hindu names like Sameer Chaudhary, were organized. The terrorists were taught the basics of Hindi usage
by Jundal.

The plan would have succeeded had all the terrorists been killed. But Ajmal Kasab's capture was a spanner in the works, although it did not deter many from publicly expressing the suspicion that 26/11 may have been meant to avenge Karkare's action against Hindu radicals.

Jundal told interrogators that he had drafted the email in Hindi that was sent to media houses attributing the authorship of the attack to a fictional group, Deccan Mujahidin. An MA in Hindi literature, Jundal was best suited for the job.

Jundal, who is reportedly the highest ranking Indian in the LeT hierarchy, has also disclosed various locations of Lashkar hideouts and that of the control room in Karachi, from where he along with five others gave directions to the 10 militants in Mumbai. Jundal has claimed that this control room was setup in a rented accommodation in Quaidabad locality, close to Malir Cantonment area and Jinnah International airport in Karachi.

Sources also confirmed that safety of control room was the responsibility of Major Sajid Meer of Pakistan's army, who was present there along with Lakhvi, Jundal, Zarar Shah, Muzammil and Azam Cheema. Officials say that the locality houses several Pakistani army officers and some VIPs. "For travelling from control room to the Lashkar headquarters in Karachi, they used their own vehicles," said the source.

Jundal has also provided names of some officers of ISI and the Pakistani Army apart from various LeT leaders and their hideouts, which investigators say, prove that state actors were part of the 26/11 conspiracy.

http://timesofindia.indiatimes.com/india/With-sacred-threads-Abu-Jundal-tried-to-colour-26/11-saffron/articleshow/14446622.cms

Anonymous said...

இப்போது கசபுக்கும்,ஜிண்டாலுக்கும் ஒரே ஒரு துக்கம்தான்.பிரதிபா பாடில் ஓய்வு பெற்றதிற்க்கு முன்பே மன்னிப்பு பெற்றிற்கலாமே.

சந்திரமௌளீஸ்வரன் said...

49999 போலிசாருக்கு மத்தியில் நின்று கொண்டுதான் பாரதிய ஜனதாவின் பிரதமர் பேசினார் என நினைக்கிறேன்

Anonymous said...

49999 போலீசாருக்கு மத்தியில் நின்று கொண்டு பேசினாலும் தீவிரவாதத்தை கட்டுக்குள் வைக்கிற முனைப்பு தெரிஞ்சுதுதானே !
”பொடா” வெல்லாம் கொண்டு வந்தாளே!

சந்துருமொவ்ளி சார்வாள்! யானைக்கு அரம்’னா குதிரைக்கு குர்ரம்’ன்னு சொல்றமாதிரின்னா இருக்கு ?

பிஜேபி’ல என்னா எல்லாப் பயபுள்ளையும் தன்னை ரொம்ப நல்லவன் சொல்லிண்டு அலையறதுகள். அது ஒன்னு தான் கொறை கேட்டேளா.

கோப்பெருஞ்சேரன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

1998 ஆம் ஆண்டில் கோவையில் தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த போது-- அது பற்றிய முதல் கட்ட செய்தி வெளி வந்த போது ‘ இந்த குண்டு வெடிப்புகள் இந்து அமைப்புகளின் கைவரிசை ‘ என்று தமிழகத்தில் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் கருத்து கூறினார். அது முள்லிம்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கே. பின்னர் புலன்விசாரணையில் அந்த குண்டு வெடிப்புகளுக்கு தீவிர முஸ்லிம் அமைப்பு தான் காரணம் என்று தெரிய வந்தது.பொறுப்புள்ள கட்சிகள் இவ்விதம் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை விபரீதமானது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Kannan said...

நாம் என் நம்மை ஒரு ஹிந்து நாடாக அறிவித்து கொள்ள கூடாது!

Gopal said...

Species like Digvijay and Pasi (P. chidambaram) have to survive ,.So they will vomit anything that is fed to them by the palace queen (Sonia). If Pasi( P.Chidmabaram) has any sense of shame left in him ,he would have resigned long back .He is clinging to his post with the fond dream that he would get PM slot one day.

Kalyan said...

Again Terrorist groups like lashkar will hijack a flight and demand release of Kasab & Jundal, Our Government will also release happily... What a spineless Government!!!

senthamilan said...

பெரும்பான்மை ஹிந்துக்களைச் சாடினால் சிறுபான்மை முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி தரந்தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தோதாக திக்விஜய் சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த ஹிந்து தீவிரவாதக் கருத்து. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஹிந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது இதுவென்று எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஹிந்து தீவிரவாதம் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வந்த்து. இப்பொழுது பாகிஸ்தானும் அதையே திருப்பிச் சொல்கிறது. இதில் பாகிஸ்தானைக் குறை கூற வழியில்லை. ஏனெனில் இது இங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட பிரசாரம்; அதை அவர்கள் சாமர்த்தியமாக தங்களது தவறை மறைக்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர், அவ்வளவே!

இட்லி வடையின் (பாசிச) முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வருகிறது. லெப்டினன்ட் கர்னல் ப்ரோகித், பிரக்யாசிங் தாகூர், இந்திரசகுமார் அனைவரும் ஆர்.ஸ்.ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் மக்கா பள்ளி , அஜ்மீர் பள்ளி, மலேகோன், நந்தத், சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், குற்றம் நிரூபிக்கபட்டு சிறையில் இருப்பதும் இட்லி வடைக்கு தெரியாமல் போனது ஏன்?
இட்லி வடை மட்டும் உண்பதலா? அல்லது பாசிச பாசமா?

ரமேஷ் said...

@senthamilan
அய்யா இந்த தளம் Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists.... என்று எழுதியுள்ளது உங்க திராவிட கண்ணுக்கு தெரியலியா?நல்ல கண் டாக்டரா பாருங்க(மத சார்பற்ற கண் டாக்டர்)

Anonymous said...

ஐயா செந்தமிழரே,
தீவிரவாதித்தனம் யார் செய்தாலும் அது தீவிரவாதம் தான். இட்லி வடையில் ஆர் எஸ் எஸ் காரர் குண்டு வைத்தார், ஹுர்ரே! என்று கத்துகிறாரா? ஆனால் உலகெங்கிலும் இஸ்லாமியத் தீவரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது அதை பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் ஏன் கண்டனம் தெரிவிக்க மறுக்கின்றன? ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மறுப்பு வருகிறதே ஒழிய யாராவது இத்தகைய அமைப்புகளுக்கு எதிராக ஃபத்வா போடுவார்களா?

சல்மான் கான் பிள்ளையார் சிலைக்கு முன்னால் ஒரு திரைப்பட ஷூட்டிங்கில் நடனமாடினார் என்பதற்காக அவருக்கு ஃபத்வா வழங்கப்பட்டது தெரியுமா உங்களுக்கு?

இந்து தீவிரவாதி என்பது காங்கிரஸாரால் ஏற்படுத்தப் பட்ட ஒன்று. அவர்களுடைய வண்டவாளம் குஜராத்தில் சாயவில்லை. பர்க்கா தத் போன்ற நாட்டை விற்கும் வேசிகள் பணத்தை வாங்கிக் கொண்டு முஸ்லிம்களாய்ப் பார்த்து பார்த்து பேட்டி எடுத்தது தெரியாதா உங்களுக்கு?

இந்துக்களின் சகிப்புத்தன்மையைப் பற்றி ஒன்று புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பேசாமல் ஒன்றும் செய்யாமல் இருப்பதாக தோன்றும். ஆனால் அவர்களின் மெளனம் செயலற்ற மெளனம் அல்ல, ஏனெனில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று அறிந்தவர்கள் அவர்கள். எனவே எவ்வகை வினையை விதைக்கிறோம் என்று அறிந்து கொள்வது அவரவர் பொறுப்பு. போய்யா, பாசிசமாம்ல? அர்த்தம் தெரியுமா பாசிசம்னா என்னன்னு?