பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 21, 2012

மோடி, நிதீஷ் கேள்வி பதில்கள்

உண்மையைச் சொல்லுங்க சார். பிரதமருக்கு உங்க சாய்ஸ் யார்? இது என்ன கேள்வி?

இட்லிவடை வாசகர்கள் கிட்டத்தட்ட 87% பேர் ( பார்க்க ஓட்டு பெட்டி) மோதி தான் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மோதி ஹிந்துத்துவா வெறியர் ஆச்சே? அவர் வந்தால் உருப்படுமா?

எல்லோருக்கும் ஒரு மதம், ஜாதி இருக்க தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்தவன் என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள். "செக்யூலரிஸம் - அதாவது மதச்சார்பின்மை" என்று பிதற்றுபவர்கள் கூட அந்த அந்த தொகுதிக்கு அந்த மதம்/ஜாதியை வேட்பாளர்களை தான் நிற்க வைக்கிறார்கள்!. நிதீஷ் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த "செக்யூலரிஸம்" பஜனை பிஹாரில் இருக்கும் முஸ்லீம், கிறுத்துவ ஓட்டுக்களை நம்பி தான்.


உண்மையான "செக்யூலரிஸம் - மதச்சார்பின்மை" என்றால் என்ன சார்? புரியும்படி விளக்கவும். ?

தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஞ்யாய!
காதும் யஞ்ய பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந:
ஸ்வஸ்திர் மானுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்:
சந்நோ அஸ்துத்விபதே: சம்சதுஷ்பதே!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்; செடி கொடிகளும், மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்துயர்ந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்; நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும், எங்கும் அமைதி, அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்.

இதுவே மேற்கூறிய புருஷ ஸுக்த ஸ்லோகத்தின் தமிழாக்கம். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், “செக்யூலரிஸம்” அதாவது “மதச்சார்பின்மை” என்பதுதான் இதன் அர்த்தம்.

அப்படி என்றால் மதச்சார்பின்மை என்றால் மதவெறியர்கள் கிடையாதா ?

மேன்மையுடைய விஷயங்களை போதிக்கும் ஹிந்து ஸநாதன தர்மத்தைப் போற்றுபவர்களும், பரப்புபவர்களுக்கும் இன்றைய யுகத்தில் மதவெறியர்கள் என்றும் மதச்சார்புடையவர்கள் என்றும் பெயர் சூட்டப்படுகிறது. இத்தகைய திருப்பணியைச் செய்யும் மஹாகணம் பொருந்தியவர்கள் சாக்ஷாத் நமது அரசியல்வாதிகள்; இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திருப்பணியைச் செய்பவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் மீடியாக்கள். சுருக்கமாக மைனாரிட்டி மதங்களை (முஸ்லீம், கிறுஸ்துவர்களை) சப்போர்ட் செய்தால் அதுக்கு பெயர் மதசார்பின்மை.

நிதீஷ் குமார் - நரேந்திர மோதி பற்றி ஐந்து மார்க்கு ஒரு சிறு குறிப்பு?

இந்தியாவின் இரு ஆகச் சிறந்த அரசியல்வாதிகள் என்று போற்றப்படுபவர்கள் இவ்விருவரும். ஆட்சி செலுத்தும் தத்தமது மாநிலத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைக்கும் நேர்மையான அரசியல்வாதிகள் என்று பெயரெடுத்திருப்பவர்கள். இந்திய அரசியல் பற்றித் தெரியாதவர்கள் கூட மேற்கூறிய இரு முதல்வர்களையும், அவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு தலைபட்சமான பனிப்போரையும் அறிவார்கள். நிதீஷ் குமார் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பெரும் தலைவர், பிஹார் மாநில முதல்வர்; நரேந்திர மோதி பாஜகவின் பெரும் தலைவர்களுள் ஒருவர், குஜராத் மாநில முதல்வர். மத்தியில் இவ்விரு கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. வருகின்ற 2014 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவ்விருவரில் யார் பிரதம வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முன்னிறுத்தப்படுவார்கள் என்று மீடியாக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளன. இது பற்றி அந்தந்தக் கட்சிகளே இன்னும் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நிதிஷ் குமார் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?
நிதிஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற மற்றும் க்ளீன் இமேஜுடைய” ஒருவரே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார், மேலும் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க வேண்டுமென்றும் கருத்து கூறியுள்ளார். இதற்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தரப்பிலிருந்து கடும் ஆட்சேபங்கள் கிளம்பியுள்ளன. இன்னும் ஒரு படி மேலே சென்று, மோதி பிரதமர் வேட்பாளரென்றால், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயார் என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம் தான் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, மோடி வர கூடாது என்று தமிழர்களிடம் உள்ள நல்ல குணம் போன்று இவரிடமும் இருப்பது தான் காரணம். இதற்கு இன்னொரு பெயர் வயிற்றிரிச்சல்.

மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ள நிதிஷ் பற்றி இப்படி கூறலாமா?
பிஜேபியுடன் கூட்டணி அமைத்து சென்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தொண்ணூருக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால் பிறகு மோதி பிரசாரத்திற்கு வரக் கூடாது என்று வெளிப்படையாகவே நிதிஷ் குமார் பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்தது. பிஹார் வெள்ள நிவாரணத்திற்கென்று குஜராத் அரசாங்கம் சார்பில் வழங்கிய நிதியுதவியையும் திருப்பியனுப்பிய ஈனத்தனமான வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு தரந்தாழ்ந்த அரசியல் நடத்தியவர் நிதிஷ் குமார். மக்களுக்கு அனுப்பிய பணத்தை இவர் யார் வேண்டாம் என்று சொல்லுவது?

பிஜேபி என்ன செய்ய வேண்டும்?
நிதிஷ் மற்றும் பாஜகவில் உள்ளிருப்பவர்களின் கருத்துகளுக்கும் மோதியின் கருத்து வெறும் மெளனம் மட்டுமே. இன்று செய்தியாளர்கள் இதனை வருந்தி வருந்தி கேட்ட பிறகும், நிதிஷ் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து விட்டார் மோதி. ஏமாந்த மீடியாக்கள், அவர் பதில் கூறாமல் தவிர்த்ததையே தலைப்புச் செய்தியாக்கிவிட்டனர், வேறு வழியில்லை பாவம்.

அப்படிச் செய்தால் பிஜேபிக்கு பிரச்னை வராதா?
பிஜேபிக்கு தைரியம் இருந்தால், எங்கள் வேட்பாளர் மோதிதான். ஹித்துதுவா சார்பு இருந்தால் தப்பில்லை. ஹிந்துத்துவா தீண்டத்தகாத விஷயம் இல்லை. ஹிந்துக்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை மற்ற மதங்களில் கிடையாது. பார்க்கப்போனால் இவர்கள் தான் அதிக செக்யூலர் என்று சொல்லி மோடியை அறிவிக்க வேண்டும். தேச நலம் முக்கியம் என்றால் இதைச்செய்தாக வேண்டும்.
காங்கிரஸ் பிரணாப் தான் குடியரசு தலைவர் என்று சொன்ன மாதிரி மோதிதான் அடுத்த பிரதமர் என்று அறிவிக்க வேண்டும்.

பிஜேபிக்கு இப்போது இருக்கும் சப்போர்ட்டை விட இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும்.

16 Comments:

Kadavul said...

//தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஞ்யாய!
காதும் யஞ்ய பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந:
ஸ்வஸ்திர் மானுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்:
சந்நோ அஸ்துத்விபதே: சம்சதுஷ்பதே!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!


மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்; செடி கொடிகளும், மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்துயர்ந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்; நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும், எங்கும் அமைதி, அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்.//

ஒரு துக்ளக் ஆண்டு விழாவில் சோ சொன்னது இது . அதை அப்படியே கூறி இருக்கிற இட்லிவடை காப்பி மன்னன் !!

கௌதமன் said...

யார் கேள்வி? யாருடைய பதில்கள்?

Unknown said...

யோசிக்க வைத்த பதிவு..குறிப்பாக மதச்சார்பின்மை பற்றிய கருத்து ...மதமே இல்லை என்றாலும் மதசார்பின்மை தானே ..நான் எந்த மதத்தையும் சார்ந்து இருக்கவில்லை

Anonymous said...

தானே கேள்விகேட்டு, தானே உளறி வைக்கும் எங்கள் தமிழ்ஈனத் தலைவனை காப்பியடிக்கும் இட்லி வடையானை வன்மையாக கண்டிக்கிறோம்!!!

seenu said...

I think this sloka is from santhi panchagam. Good article..
Srinivasan

அன்பு said...

கேள்வியின் நாயகனே போற்றி போற்றி

Anonymous said...

எலா இட்லி....இந்த ஜெத்மலானி பேட்டிய நிறுத்தமாட்டியாலே? எளவு எப்ப இட்லிவடைக்கி வந்தாலும் இவிங்க சத்தத்த கேட்டுக்கேட்டு நாலு நாலா வெளிக்கி வர மாட்டேங்குதுலே....மென்னிய கடிச்சி துப்புறதுக்கு மின்னாலே அத நிறுத்தித் தொலைலே மூதி.....

Anonymous said...

எலா இட்லி....இந்த ஜெத்மலானி பேட்டிய நிறுத்தமாட்டியாலே? எளவு எப்ப இட்லிவடைக்கி வந்தாலும் இவிங்க சத்தத்த கேட்டுக்கேட்டு நாலு நாலா வெளிக்கி வர மாட்டேங்குதுலே....மென்னிய கடிச்சி துப்புறதுக்கு மின்னாலே அத நிறுத்தித் தொலைலே மூதி.....

சிவ.சரவணக்குமார் said...

பா.ஜ.க இப்பொழுதேனும் ஒரு தெளிவான ,உறுதியான முடிவை எடுக்க வேண்டும்....மோடிதான் பிரதமர் வேட்பாளர்.என்று அறிவிக்க வேண்டும்...... நிதிஷ் கட்சி வெளியேறும்.....ஆனால் அகாலிதளம், சிவசேனா [ முக்கியமான நேரங்க‌ளில் கழுத்தறுக்கும் சிவசேனாவை வெளியே தள்ளிவிட்டு ராஜ் தாக்கரேவை உள்ளே கொண்டு வந்து விடலாம்] ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சா, அசாம் கன பரிஷத் ,போன்றவை எதிர்க்கப்போவதில்லை......தெலுங்கானாவை காட்டி டி.ஆர்.எஸ் கட்சியை சேர்த்துக்கொள்ளலாம்.....தற்போது பிரதமர் கனவில் மிதக்கும் ஜெ...தேர்தல் நெருக்கத்தில் உன்மை நிலை உணர்ந்து கூட்டணியில் சேர்ந்து விடுவார்..... காங்கிரசின் ஊழல் ஆட்சியில் மனம் வெறுத்துப்போய் இருக்கும் பெறுவாரியான மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்........ மாறாக நிதிஷ் கும்பலுக்கு பயந்து கொண்டு அருன் ஜேட்லி , சுஷ்மா [ ஏன் அத்வானி கூட ] போன்றோரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்..... நிச்ச‌யம் இப்போது உள்ள அளவு சீட்களில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லாது..... சாதிய அடிப்படையில் பிரிந்து கிடக்கும் பீகாரில் பி.ஜே. பி உடன் இருப்பதால்தான் நிதிஷ் குமார் வெல்கிறார்.....மெஜாரிட்டியான யாதவர்கள் லாலுவை ஆதரிக்கிறார்கள்...அந்த இழப்பை பி.ஜே .பியை தொடர்ந்து ஆதரிக்கும் பிராமணர்களும் ,இதர உயர் சாதியினருமே ஈடு செய்கின்றனர்....பா.ஜ.க இலாவிட்டல் நிதிஷ் டப்பா டான்ஸ் ஆடிவிடும்.....சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் நிதிஷ் கட்சியை விட அதிக சதவீத வெற்றியை பா.ஜ.க பெற்றது மீடியாக்களால் மறைக்கப்பட்டது.. கூட்டணி கட்சிகளின் பேச்சை கேட்டு ஆடினால் சொந்த ஆதரவு உள்ள மாநிலங்களில் பிடுங்கிக்கொண்டுவிடும்..

ஜெ. said...

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மோடிக்கு ஆதரவாக, நிதிஷுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டுவிட்டன. நிதீஷ் மந்திரிசபையிலிருந்து பா.ஜ.க. மந்திரி ஒருவரும் மோடியை ஆதரித்து அறிக்கை வெளிடிட்டு, வேண்டுமானல் தன்னை மந்திரிசபையிலிருந்து நீக்கட்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

உங்கள் கட்டுரை மோடி சார்பாக இருக்கிறது. மதச் சார்பின்மை என்பது அரசியல்வாதிகளின் கை பொம்மை. விளையாடுவார்கள். பா.ஜ.க. வும் அவ்வப்போது பம்மும். திடீரென்று அயோத்தி கோயில் கட்டுவோம் என்பார்கள், ஆட்சிக்கு வந்தால் பயந்து தள்ளிப் போடுவார்கள்.

இரு கட்சிகளுக்கும் ஒருவருக்கொருவர் வேண்டும் அதே சமயத்தில் தங்களை மற்றவர் மீறக்கூடாது என்றும் கவனம். அவ்வளவுதான்.

முடிந்தால், வரும் லோக் சபா த்/எர்தலுக்கு பா.ஜ.க. அயோத்தி கோயிலை முன்னிறுத்தி, அதை ஒப்புக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி என்று இப்போதே அறிவிக்குமா?

-ஜெ.

ஜெ. said...

அம்மா கொடநாட்டில்! இ.வ.வில் ஒரு பதிவு வேண்டும்! ’கலைஞரின்’ புது சட்டசபை கட்டிடத்தால் அதிகாரிகள் - மந்திரிகளுக்கு 2 மைல் இடைவெளி, தினசரி ஆட்சி சரியாக நடத்தமுடியாது என்று ஜெ கோர்ட்டில் தெரிவித்தார். இப்போது கொடநாடு - சென்னை இடைவெளி 2 மைலுக்கும் குறைவா? - ஜெ.

Anonymous said...

idlyvadai thaan romba vayitherichalla irukara madhiri theriyudhu nitish paetiya paarthu. aiyo aiyo.

kothandapani said...

தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடுவது போல பாவித்து, சமீப காலமாக இட்லிவடை தேசிய அரசியலை மட்டுமே அலசி வருகின்றது. இட்லிவடைக்கு' திராணி '
இருந்தால் தமிழக அவலங்களையும் வெளிச்சம் போடட்டுமே. ஒருத்தர் அதிமுக ஆட்சியை ஆறு மாதம் கழித்துதான் விமரிசிபேன் என்று முழக்கமிட்டார். நீங்கள் என்ன ஒரு ஐந்து வருடம் கழித்து அதிமுக ஆட்சியின் அலங்கோலத்தை விமரிசிக்க போகின்றீர்களா?

Anonymous said...

Modi would be a disaster.

The above article is too lopsided.

Modi is humanitarian credentials are questionable and not acceptable.

Modi is not suitable for Indianess.

KUMARESAN,CHENNAI said...

THE ARTICLE IS VERY NICE. MODI SHOULD BECOME
PM. U SHOULD ALSO TELL LOUDLY TO THIS
SO CALLED SECULARISTS THAT MODI BELONGS
TO BACKWARD COMMUNITY. ALL POLITICIANS
DOING BUSINESS BY THIS CASTE,CREED,RELIGION.
PEOPLE SHOULD REALISE THIS GAMBLE OF POLITICIANS ESP.SECULARISTS. THE DAY HAS COME
TO END THIS MENACE.

Sridhar Pichumani said...

After Modi became chief minister, the girl child education has improved, Growth of Muslims has improved along with Hindus in teh same scale, power supply has been in surplus (only state which sold electricity during summer), water utilization and distribution has become top class, remarkable improivement in infrastructure that includes roads, bridges, telecommunication and broadband network, improvement in the way governance is done day to day 0- All collectors have to answer through video conferencing on the actions taken, Job creation has increased and we can go on....!! He empowers people. There has been no corruption that has been appreciated by congress led institutions. He famously said, government should just facilitate business. It has no business to do business. Obviously this is against Corrupt congress politicians and psedusecularists. It is sad to read some of the comments from some tamil folks who trust Karunanidhi even after 2G and JJ even after TANSI but refuse to trust Modi who is not corrupt and has remained a beacon of development. !!