பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 14, 2012

குடியரசு தலைவர் கேள்வி பதில்கள்

குடியரசு தலைவராக யார் வருவார் ?
இன்றைய தேதியில் யார் வேண்டும் என்றாலும் வரலாம். அடிக்கடி வெளிநாடு பயணம், நடு ராத்திரி கதவை தட்டினாலும் கையெழுத்து போட ரெடியாக இருக்கணும். அவ்வளவு தான்.

மம்தா, முலாயம் நேற்று அடித்த லூட்டி ?

பிரதமர் மன்மோகன் சிங், அப்துல் கலாம், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பரிசீலிக்கலாம் என்று பேட்டி அளித்துள்ளார்கள். மம்தா ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க பார்க்கிறார்.
முதல் மாங்காய்: மன்மோகன் சிங் பிரதமாரக இருக்க லாயக்கில்லை என்று அப்பட்டமாக சொல்லிவிட்டார்.
இடதுசாரிகள் மீது உள்ள கோபத்தால் சோம்நாத் சாட்டர்ஜி பெயரை கொண்டு வந்து அடுத்த மாங்காயை அடித்துவிட்டார்.
ஏற்கனவே வெளிநாட்டு பிரஜை சோனியா பிரதமராக வர கூடாது என்ற சர்ச்சையில் கலாம் பெயர் இருக்கிறது அதனால் சோனியாவையும் தாக்கிவிட்டார்.

மன்மோகன் சிங் என்ன செய்ய வேண்டும் ?
பேசாம தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாதையாத்திரை போகலாம்.

பிஜேபி என்ன செய்ய வேண்டும் ?
பிஜேபி தங்கள் உட்கட்சி பிரச்சனைகளை மறந்து கொஞ்ச நாள் ஜாலியாக இருப்பார்கள். பாவம் அவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்

திமுக காங்கிரஸ் பக்கம் இருக்கிறதே ?
அவர்களுக்கு வேறு வழி இல்லை. 2G வழக்கு முன்பு இலாக்காவை டிமாண்ட் செய்து வாங்கியவர்களுக்கு சும்மா பூச்சாண்டி காமிப்பது பொழுது போக்கு. கசப்பான கூட்டணி என்று புலம்பினாலும் Beggars can't be choosers! ஆனால் நேற்று கலைஞர் "பொறுத்திருங்கள். பின்னர் அறிவிக்கிறேன். " என்று சொல்லுகிறார். நல்ல தமாஷ்!

பிரணாப் முகர்ஜி என்ன செய்வார் ?
அவர் நிதி அமைச்சராக இருக்கிறார் என்றே மறந்துவிட்டது. கூட்டணியில் குழப்பம் என்றால் இவர் தான் பஞ்சாயத்து செய்து வைப்பார். குடியரசு தலைவராகிவிட்டால் அந்த பொறுப்பை யார் கவணிக்க முடியும் ? மன்மோகன் சிங் குடியரசு தலைவர் என்றால் பிரணாப் தான் பிரதம மந்திரி!


மம்தாவை எப்படி காங்கிரஸ் சமாளிக்கும் ?
காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய பாஜக-வின் ஒத்துழைப்பையும் காங்கிரஸ் ரகசியமாகக் கோருவதாகத் தெரிகிறது. இதற்கு பிரதி உபகாரமாக குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் அரசியலில்...

அப்துல் கலாம் ?
அவர் தான் குடியரசு தலைவர் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று எல்லோரும் தமிழர் என்று ஆதரிப்பார்கள். மற்றவர்கள் மைனாரிட்டி என்று ஆதரிப்பார்கள். இந்திய அரசியல் இவ்வளவு தான்.

குடியரசு தலைவர் தேர்தல் எப்படி இருக்க வேண்டும் ?
ஐபிஎல் மாதிரி பெர்யர்களை ஏலம் விடலாம். இப்போழுதும் கிட்டதட்ட அது மாதிரி தான் நடந்துக்கொண்டு இருக்கிறது.


யார் தான் சரியான சாய்ஸ் ?
13 ராசியில்லாத நம்பர் அதனால் 13 குடியரசு தலைவர் தேர்வில் இவ்வளவு குழப்பம். நாளைக்கே பிரதிபா பாட்டீல் மாதிரி திடீர் வேட்பாளர் யாராவது வரலாம். நித்தியானந்தாவை கூட இவர்கள் தேர்ந்தெடுக்கலாம் !

15 Comments:

kg gouthaman said...

அடுத்த ஜனாதிபதியாக அன்னா ஹசாரேயைத் தேர்ந்தெடுத்துவிட்டால் ராம்லீலா மைதானம் ஐந்து வருடங்களுக்குக் காலியாக இருக்கும்.

நவீன பாரதி said...

மன்மோகன் சிங் - ஐ
ஜனாதிபதி ஆக்கிவிட்டால் ராகுலுக்கு முன் பிரதமர் ஆகிவிடலாம் என்பதற்காக பிரணாப் மம்தாவுடன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தமோ?

Kayal said...

பணமரதடில நின்னு பாலே குடிச்சாலும் கள்ளுன்னு தான் இந்த உலகம் பேசும். அப்பிடி தான் அப்துல் கலாமை கூட தப்பா பேச சொல்லுது. அவரை தமிழன்னு பார்க்க வேணாம், அவரோட கிளீன் ரெகார்ட் கூடவா உங்க கண்ணுக்கு தெரியல? ஆனா மைனாரிட்டின்னு பார்க்கிற இட்லிவடை வாழ்க

Anonymous said...

Dear IV,

:) lol :) :)
Not able to control myself.
One of your best article.
-Siva

Anonymous said...

power star srinivasan is the best choice

jaisankar jaganathan said...

//நித்தியானந்தாவை கூட இவர்கள் தேர்ந்தெடுக்கலாம் !// ஏன் ஜெயேந்திரனை விட்டுட்டீங்க?

D. Chandramouli said...

Can't control my laughter! Power Star Srinivasan??

Undoubtedly, we have so many self-empowered stars!

In the light of masses receiving Raja at the airport, he is the most popular, I guess. Why not he, then?

Indian politics has indeed become a joke!

sury said...

//மன்மோகன் சிங் என்ன செய்ய வேண்டும் ?
பேசாம தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாதையாத்திரை போகலாம்//

He is already doing it. No other PM appears to have gone on foreign travel so many times as our Hon'ble PM. And, as far as the job of the President is concerned, he is suited very much as he has proved over the last few years.

In the circumstances, Manmohanji can opt to become President, and if Soniaji is not willing, let him go on Paadha yatra as you have suggested.

subbu thatha.

Anonymous said...

Nice article after a long gap. Keep going.

Anonymous said...

/மண் மோகன் சிங்கி ற்கு ஜனாதிபதி பதவி/

சுப்பு தாத்தா,

பெண்களுக்கு சமத்துவம் கொடுக்க வேண்டியதுதான்...அதற்காக தொடர்ந்து இரண்டு பெண்கள் ஜனாதிபதியாகத்தான் வேண்டுமா? நமது மாண்புமிகு எம்.பீக்கள் யோசிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு said...

"நித்தியானந்தாவை கூட இவர்கள் தேர்ந்தெடுக்கலாம் !"

என்னோட சாய்ஸும் அவர் தான்

loganathan s said...

இ.வ. அவர்களே.. அரசியல் காமெடிகளில் பெருமதிப்பிற்குறிய அப்துல்கலாம் அவர்களை ஒருபோதும் இழுக்காதீர்.. அவர் இந்த தேசத்து ஆற்றிய பணிகளில் இலட்சத்தில் ஒரு பங்கு கூட நாம் நம் சார்பில் செய்திருக்கமாட்டோம். எல்லா இந்தியர்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர், வாழ்கின்றவர்..

Kannan.S said...

ஒரு வேளை, பிரதிபாவே இருந்தால்?
எல்லோருக்கும் மறுபடியும் ட்ரிப்....

போன ட்ரிப்-ல விட்டு போன சொந்தங்களுடன்...

ஜெ. said...

ப்ரதிபா படேல் ரிடையர் ஆகும்போது, ராஷ்டிரபதி பவனை அவர் தன் பெயரில் ரெஜிஸ்டர் பண்ணிக்கொள்ளப் போவதாகவும், அடுத்த ஜனாதிபதி வீடு தேடி அலையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

அப்துல்கலாம் ஏன் இந்த விளையாட்டை ஆதரிக்கிறார்? அவருக்கும் ஆசை இருக்கிறது என்பதே அவர் மதிப்பைக் குறைக்கிறதே!

நாட்டிலும், கட்சியிலும் பிரச்னை வந்தபோதெல்லாம் மன் மோஹன் வெளிநாடுகளுக்குப் போய் வந்துவிட்டதால், ஜனாதிபதி ஆனால் செகண்ட் ரௌண்ட் தான்! பார்த்த இடத்தையே பார்க்க வேண்டுமா?

ஜனாதிபதி எலெக்‌ஷனுக்கு அப்புறம் மமதா என்ன செய்வார்?

-ஜெ.

-ஜெ.

cho visiri said...

//அப்துல் கலாம் ?
அவர் தான் குடியரசு தலைவர் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று எல்லோரும் தமிழர் என்று ஆதரிப்பார்கள். மற்றவர்கள் மைனாரிட்டி என்று ஆதரிப்பார்கள். இந்திய அரசியல் இவ்வளவு தான்.//

But, you know, last time the Honest and Self Righteous Kalam Saab insisted successfully that he would be a candidate if and only if the choice was Unanimous and once it became clear that Soniaji led Cong had other thoughts Kalam saasb declined to contest.

Do you think this time around Kalam would change his mind? But, at thesame time, one would assume that without consulting Kalam Saab,Didi, and Dr.JJ (yes, the CM of TN) my not have come with such proposal.

May be we are in for more surprises!