பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 12, 2012

தலை சிறந்த இட்லிவடை பேட்டி !

த சன்டே இந்தியன் பத்திரிக்கையில் இட்லிவடை ( மற்றும் பேயோனின் ) பற்றி வந்த கட்டுரை.
கிளிக் செய்து பெரிதாக்கி படித்துக்கொள்ளுங்கள்.தேசத்தின் தலை சிறந்த செய்தி இதழில் இட்லிவடை குறித்து வந்தது மகிழ்ச்சியளிக்கிறது, தசஇ குழுவினருக்கு நன்றி. எங்களை யார் என்று காட்டிக்கொடுக்காத பா.ராகவன், பத்ரிக்கு ஸ்பெஷல் நன்றி :-)

16 Comments:

ஜெ. said...

’எங்களை காட்டிக்கொடுக்காத’ -- ஸோ, இட்லி வடை ஒருவர் அல்ல! (சட்னி, சாம்பாரைச் சேர்த்தால் 4 வருகிறது, சரியா! )

பத்ரியே இதில் ஒருவர் என்று எல்லோரும் நினைக்கும்போது, அவர் அப்பாவியாகப் பேட்டிகொடுத்திருப்பது நகைசுவை!

’தேசத்தின் தலை சிறந்த செய்தி இதழ்’ ? இப்போதுதான் தெரிந்துகொண்டேன்!

4000, 5000 பேர் படித்தும் 10, 20 பேர் தான் பின்னூட்டம் இடுகிறார்கள். அதைப்பற்றி இ.வ. என்ன சொல்கிறீர்(கள்)? (நாங்களெல்லாம் வெட்டி என்று மட்டும் சொல்லாதீர்கள்!)

-ஜெ.

enRenRum-anbudan.BALA said...

//எங்களை யார் என்று காட்டிக்கொடுக்காத பா.ராகவன், பத்ரிக்கு ஸ்பெஷல் நன்றி //

”எங்களுக்கு” நன்றி கிடையாதா? திட்டு வாங்கறதுக்கு மட்டும் தான் நாங்களா? ஏன் இந்த அநியாய ஓரவஞ்சனை ;-)

எ.அ.பாலா

Nilofer Anbarasu said...

"அடையாளம் மறைத்து எழுதும்போது பொறுப்புணர்வு என்பது இல்லாமல் போய்விடுகிறது. கழிப்பறை சுவர்களில்.....".

பொறுப்புணர்வோடு அடையாளம் மறைத்து எழுதுபவர்கள் மட்டும்தான் பிரபலம் அடைகிறார்கள். எல்லோரும் அல்ல.

I V Rasigar Mandram said...

//”எங்களுக்கு” நன்றி கிடையாதா? திட்டு வாங்கறதுக்கு மட்டும் தான் நாங்களா? ஏன் இந்த அநியாய ஓரவஞ்சனை ;-) //

பாலா, நீங்கள் எழுதாமல் இருந்தால், உங்களுக்கு ஒரு கோடி நன்றிகள்.

என்றென்றும் பேரன்புடன்.....இ வ ரசிகர் மன்றம்

kg gouthaman said...

அவர்களை அவர்களே காட்டிக் கொடுக்க யாரால் முடியும்? நிற்க.
'இட்லி வடை யார்?' கும்மிகளை சாதாரணமாக அக்டோபர் இருபத்தெட்டாம் தேதி சமயம்தானே ஆரம்பிப்பீர்கள்? இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா?

ABC said...

நல்லா சொல்றீங்கடா டீட்டெய்லு.எல்லா மீடியாவுலயும் ஆள் வச்சிருக்கிறது தெரியுது. இப்படியும் சில நார்சிஸங்கள்.அந்த தலை சிறந்த இதழ் எவ்வளவு விக்குதுன்னு ஒரு ஏ.பி.சி. ரிப்போர்ட் இணைப்பு கிடைக்குமா

கொ.அ.அ. அனானி said...

//பாலா, நீங்கள் எழுதாமல் இருந்தால், உங்களுக்கு ஒரு கோடி நன்றிகள்.

என்றென்றும் பேரன்புடன்.....இ வ ரசிகர் மன்றம்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

கவிதை நாடன் said...

இட்லி வடை யார் என்று சொன்னால் அவர்க்கு சரவணபவனை பரிசாக அளிக்கப்படும் ..........என்ட பணம் இல்லாத காரணத்தால் அட்லீஸ்ட் சரவணபவன் இட்லிவடை வாங்கி தருகிறேன்

Ganpat said...

பேயோன் பற்றிய சாருவின் கருத்து மிக அநாகரீகமானது;மிகவும் கண்டிக்கத்தக்கது..பேயோனைத்தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்.அவர் எழுத்து நடை அலாதியானது.அருமையானது.பின்னூட்டங்கள் அவர் கவனத்தை திசை திருப்பவே அதனையும் நிறுத்தி விட்டு தன் பணியை மிகசிறப்பாக செய்துவருகிறார்.அவருடைய தகுதிக்கு அவர் எங்கேயோ(உயரிடத்தில்) இருக்க வேண்டியவர்.அவருடைய பகடி போல தமிழில் நான் படித்ததேஇல்லை.
நல்ல எழுத்து படிக்க விருப்பமுள்ள அனைவரும் அவரை கட்டாயம் படித்தே ஆகவேண்டும்.

Anonymous said...

வாழ்த்துக்கள் இட்லிவடை!!!

இப்படிக்கு,
பின்னூட்ட ப்ரியன் (NOOO...NOT that one!)

Bala Subra said...

nice :)

kothandapani said...

இதயங்கனிந்த வாழ்த்துக்கள். சமீப இடுகைகளில் தடம் பிறழியது போல் அல்லாமல் வழக்கம் போல் நடுநிலையோடும் நகைச்சுவையோடும் தங்கள் பாணி தொடரட்டும்.

jaisankar jaganathan said...

பாலாவை திட்டுறது , பாலா திருப்பி திட்டுறது எல்லாமே தனி பதிவா போடலாம். அவ்ளோ அருமையா இருக்கு

Anonymous said...

// kothandapani said...
இதயங்கனிந்த வாழ்த்துக்கள். சமீப இடுகைகளில் தடம் பிறழியது போல் அல்லாமல் வழக்கம் போல் நடுநிலையோடும் நகைச்சுவையோடும் தங்கள் பாணி தொடரட்டும்.//

Absolutely Mr. Kothandapani. Thx.
Dear IV. He is referring to the semi nude posts and bala's commentary. For your attention.

நாரத முனி said...

பார்ரா பாராவே பாராவ பாரட்டிகிரத :)

Anonymous said...

I think idly vadai = kadugu thalippu

babu,
covai