பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 26, 2012

3 பட விமர்சனம் - ஜெயக்குமார்

தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று நல்ல படம் வருவதில்லை என எல்லோரும் எப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. நல்ல படங்கள் வந்தால் அதை வரவேற்பதில் காட்டும் அக்கறையைவிட அதை குப்பை எனச் சொல்வதற்கென ஒரு கூட்டம் உருவாகிவந்திருக்கிறது. மூன்று ( ௩ ) சினிமா வெளிவந்தபோது அதைப் பற்றி வந்த வியாபார ரீதியான எதிர்மறை விமர்சனங்களை பார்த்தும், ஐஸ்வர்யா திரைப்படத்தின் இயக்குனர் என்பதாலும் அதைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். பொதுவாக தனிப்பட்ட ஆட்கள் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அல்லது தன்னை உயரத்தில் வைத்துக்கொண்டு அதாகப்பட்டது காசு கொடுத்து படம் பார்க்கும் ஒரே தகுதியே சினிமாத்துறையில் இருப்பவர்களைப் பற்றி எந்தவித கருத்தும் சொல்லும் உரிமையில் அவர்களை கேவலப்படுத்துவது. ஒரு படம் சிறந்த படமா இல்லை சராசரிப் படமா எனத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக அப்படத்தின் வருமானத்தை கொண்டு அளவிடுவதும் தொடர்ச்சியாக நாம் செய்துவரும் தவறுகள். ஐஸ்வர்யாவுக்கு நடந்ததுகூட Charecter assasination தான். மூன்று ( 3) படத்துக்கு வந்த திரைப்பட விமர்சனங்களைவிட அப்படத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்ட மன உழைச்சலும், அந்தப் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக அவரை தயாரிப்பாளர்கள் நெருக்கியதாக சொல்லப்படும் விஷயங்களே பரபரப்பை நம்பிச் செயல்படும் பத்திரிக்கைகளுக்கும் நமக்கும் போதுமானதாக இருந்தது.தனுஷ் :-

இந்தப் படத்தில் தனுஷுக்கு கிடைத்திருக்கும் வேடம் சாதாரணமானதுதான். ஆனால் எவ்வளவு இயல்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு இயல்பாக அந்த "ராம்" ஆகவே மாறிவிடுகிறார். கொஞ்சல் ஆகட்டும், வருத்தங்களை காண்பிப்பதில் ஆகட்டும், மனநிலை பிறழ்ந்தது எனத் தெரிந்தவுடன் அவர்காட்டும் முக பாவங்களாகட்டும், கலக்குகிறார். குறையென அவர் பாத்திரத்தில் சொல்வதற்கு எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. தான் ஒரு மசாலா நடிகன் இல்லை என ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அடுத்த கமல், ரஜினி என்றேல்லாம் சொல்லி அவரைக் கேவலப்படுத்தக் கூடாது. தனுஷ் தமிழ் திரையுலகின் ஒரு தனி நாயகனாக வலம் வரும் காலம் தொலைவில் இல்லை. மூன்று படம் அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. மிகச் சிறப்பான காட்சிஎனில் " நான் பைத்தியமாடா? எனக் கேட்டு அவர் காண்பிக்கும் முக பாவங்கள். மிக்கிய முக்கியமாக ஹீரோயிசம் ஏதுமின்றி நடித்தது.

ஸ்ருதி :-

நிச்சயமாக இப்படி ஒரு நடிப்பை இந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கவே இல்லை. கண்களின் அழகை எல்லாம் வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகு. சிறு வயது ஸ்ருதியின் நடிப்பும், விடலைக் காதலை மிக இயல்பாக நடித்துச் செல்வதிலும் மிளிர்கிறார். அப்படியே தனுஷுடனான திருமணத்திற்குப் பிறகும். காதல் பொங்க வாழ்வதிலும், தனுஷிடம் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிந்தும் அதைப்பற்றி முழுதும் தெரியாமல் தவிப்பதிலும் கலக்குகிறார். வழக்கமாக கிண்டலாகச் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் இடையில் கச்சிதமாக பொருந்துகிறது. உண்மையில் காதலித்து கைப்பிடித்து மகிழ்வுடன் வாழ்வோருக்கு இந்தப்படம் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் திரையில் பார்க்கும் அனுபவத்தைத் தரும். கண்கள் கலங்குவதிலும், அழும்போதும் நம் மனதை இனம்புரியாத சோகம் கவ்விக்கொள்கிறது. ஸ்ருதியின் அழுகை நிச்சயம் சினிமாத்தனம் இல்லை. மனதை பிசையும் கஷ்டத்தை நினைத்து அழும் மிகச் சோகமான அழுகை. படம் பார்த்து வெகுநேரம் வரை அவரது அழுகை மனதைவிட்டு அகலவே இல்லை. அடுத்து கலக்கப்போகும் நடிகைகளில் இவருக்கும் மிக முக்கிய இடம் இருக்கிறது. அவரது அழகு, உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் கண்கள், மிக முக்கியமாக இயல்பான நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் உச்சங்களை நோக்கி அழைத்துச் செல்லும். மசாலாப் படங்களில்கூட தனது சிறப்பான நடிப்பால் கலக்கப்போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

ஐஸ்வர்யா :-

வாய்ச்சவடால்கள் இல்லாமல் அழுத்தமான திரைப்படத்தின் மூலம் தானும் ஒரு சிறந்த பெண் இயக்குனர்தான் என சொல்லாமல் சொல்கிறார். அமர்க்களமான ஆரம்பம். ரஜினி தனது மகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இயல்பான திரைக்கதையும், சீரான ஓட்டமும், நடிகர்களின் தேர்வும், காட்சிகளின் கோர்வையும் என ஒவ்வொன்றிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அருமையான இயக்கம். வணிக லாபங்களுக்காக குத்துப்பாட்டோ, தேவையற்ற சண்டைகளோ இன்றி ஒரு நிறைவான படத்தை அளித்திருக்கிறார். வழக்கமாக முதல் படத்தில் எல்லோரும் கலக்குவதுதான் , அடுத்தடுத்த படங்களிலும் இதே போல சிறப்பாகச் செய்வதில்தான் வெற்றி இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஸ்ருதியை தேர்ந்தெடுத்தது அவரது புத்திசாலித்தனம்.

கதை :-

இரு விடலைக் குழந்தைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு நோய் இருப்பது திருமணத்திற்குப் பிறகு நண்பன் மூலம் தெரிய வருகிறது. அதை தனது காதல் மனைவி அறிந்தால் மிக வருத்தபடுவாள் எனச் சொல்லாமல் மறைத்து மனப்பிறழ்வின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்கிறான் நாயகன். ஏன் தனது கணவன் தற்கொலை செய்துகொண்டான் என்பதை நண்பன் மூலம் அறிய வருகிறாள். அதுதான் மொத்தக் கதையும். நாயகி காதலுடன் வாழ்ந்த காலங்கள் அவளது பிளாஷ்பேக்கிலும், நாயகனின் நண்பன் நாயகன் ஏன் இறந்தான் எனச் சொல்லும் பாகம் என இரு பாகங்களாக கதை சொல்லப்படுகிறது.

ரோகினி, பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். வொய் திஸ் கொலைவெறி பாடலும் இந்தப் படத்தில்தான். அது மட்டும்தான் மசாலா ஐட்டம். மற்றபடி இது ஒரு முழுமையான திரைப்படம் .

குறைகள் :-

இவ்வளவு பெரிய வியாதியில் அவதிப்படும் தனது மகன் குறித்து பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை என்பது.
தனுஷ் ஸ்ருதிக்கு பாரில் வைத்து தாலிகட்டுவதாக காட்டி இருக்க வேண்டாம். ஆரம்பத்துலையே இந்த முற்போக்கு ஆகாது.

கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றதும் நாயகனின் அப்பா ( பிரபு) உடனே சரி எனச் சொல்வதும். ( நமக்கெல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா?)

மிக அழகான ஒரு திரைப்படம் பார்த்த ஒரு திருப்தி. குறிப்பாய் உச்சத்தில் இருந்தா பாலுமகேந்திரா எடுத்த படம் பார்த்த உணர்வு.எதிர்மறை விமர்சனங்கள் மூலம் குழியில் தள்ளப்பட்ட ஒரு நல்ல திரைப்படம்.

- ஜெயக்குமார்
http://jeyakumar-srinivasan.blogspot.com/

இதற்கு மஞ்சள் கமெண்ட் போட்டு வேஸ்ட் செய்ய விரும்பவில்லை :-)

27 Comments:

Anonymous said...

why this kolaveri to support !!! (3) ?

vijayakhanth said...

eee pulla thanusha kupittu vanthu
DMDk la sera sollu pullaa...Why this kolaverinu katchi nadathuvom

Kavithai Nadan said...

3 padam adiyenum paarkave illai..pothuvaga ethir marai vimarsangal niraintha intha samuthaaya makkaluku ondrey ondru solla virumbukiren..thayavu seithu oru kurumb padamvathu eduththu paarungal..trowser kilunchu vimarsanam panratha niruthitu olukkama rasichu padam paarpeenga

வடக்குபட்டி said...

நீங்க என்னதான் சப்ப கட்டு கட்டுனாலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கொசு படங்களை நான் பார்ப்பதில்லை

Anonymous said...

பி ஜெ பி க்கு ஆதரவா படத்தில் ஏதேனும் இருக்கு போல சோழியன் குடமி சும்மா ஆடாது

குரங்குபெடல் said...

"இவ்வளவு பெரிய வியாதியில் அவதிப்படும் தனது மகன் குறித்து பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை என்பது "


படத்தின் மெயின் விஷயமே

உமக்கு குறையாக தெரியும் போது

அப்புறம் என்ன பாராட்டு . .

படத்தில் சொல்லிகொல்லும்படியான ஒரே விஷயம்

இறுதி காட்சியில் தனுஷின் நடிப்பு . .

மற்றபடி படமும் சரி

இந்த விமர்சனமும் சரி

ரெண்டும் அரைவேக்காடு

Avinash Srinivasan said...

A nice post on IV after a long time. Really a movie to cherish. Inspite of its flaws, it manages to capture people's (all age groups) hearts big time. Kudos to all the 3 (Danush, Aish and Shruti).

ஹரன்பிரசன்னா said...

Good movie indeed.

மோகன் குமார் said...

எப்பவோ வந்த இப்படத்தை இரண்டு நாள் முன் தான் ஹரன் பிரசன்னா பார்த்து விட்டு ஓஹோ என புகழ்ந்து தள்ளியிருந்தார். இப்போது ஜெயக்குமார் என்கிற அவதார பெயரில் அதே மாதிரி இன்னொரு விமர்சனம்

ஹரன் பிரசன்னா தான் இட்லிவடை என பலர் சொன்ன போது நான் நம்பியதில்லை. இப்போது நம்புகிறேன்

ஜெயகுமார் என்கிற பெயரில் இந்த ....... படத்தை ( அவரவர் விருப்பத்துக்கேற்ப ........ஐ நிரப்பி கொள்ளலாம்) புகழ்ந்து தள்ளியது ஹரன் பிரசன்னா தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

நிற்க இந்த ......படம் பற்றி நான் எழுதிய லிங்க் இதோ:

3 -படத்தை பலரும் எதிர்ப்பது ஏன்?

http://veeduthirumbal.blogspot.in/2012/04/3.html

இந்த பதிவின் மூலம் தெரியவருவது இது தான் :

ஹரன் பிரசன்னா = ஜெயகுமார் = இட்லி வடை

IdlyVadai said...

மோகன் குமார் எனக்கு கூட அந்த சந்தேகம் இருக்கு என்ன செய்ய !

R.Gopi said...

// IdlyVadai said...
மோகன் குமார் எனக்கு கூட அந்த சந்தேகம் இருக்கு என்ன செய்ய !//

ஹாஹாஹாஹா....

பதிவு.... அதற்கான பின்னூட்டங்கள் அனைத்தையும் அடித்து பின்னுக்கு தள்ளி விட்டது இட்லியின் கமெண்ட்....

வாழ்க வெள்ளை இட்லி, வாழ்க கெட்டி சட்னி.... கூடவே வாழ்க வெங்காய சாம்பார்....

ஹரன்பிரசன்னா said...

மோகன், ஜெயகுமார் என் நண்பர், உறவினர். நான் சொன்னதால் படத்தைப் பார்த்திருக்கிறார். அவரது வலைத்தளம் இது: http://www.jeyakumar-srinivasan.blogspot.in/ தமிழ்ஹிந்துவிலும் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் ஏன் இட்லிவடைக்கு அனுப்பினார் என்பது எனக்குத் தெரியாது. நான் இட்லிவடையை படிப்பதுக்கூட இல்லை! இதைக்கூட நீங்கள் நம்பவேண்டியதில்லை. ஒரு ஜிகே அப்டேட்டுக்காக மட்டுமே சொல்கிறேன். நன்றி.

IdlyVadai said...

ஹரன்பிரசன்னா
//இட்லிவடையை படிப்பதுக்கூட இல்லை//

ஆனா கமெண்ட் போடுவேன் :-)

3 என்றால் அது இட்லிவடை, ஹரன்பிரசன்னா, ஜெயக்குமார் அஷ்டே. இதுவும் ஒரு ஜிகே அப்டேட்!

Madhavan Srinivasagopalan said...

// வொய் திஸ் கொலைவெறி பாடலும் இந்தப் படத்தில்தான். //


1) என்னாது காந்திய சுட்டுட்டாங்களா ?
# எலேய் இந்த கொசுத் தொல்ல தாங்கல.. இன்னும் எவ்ளோ நாளுக்கு நாங்க காந்திய சுட்டதையே கேக்குறது..


2) Thanks to enlighten my GK by giving this information

டகிள் பாட்சா said...

இனி இ.வ வில் வரப்போகும் புதிய பட விமரிசனம் ‘ ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ஆக இருக்குமோ!

s suresh said...

கமர்ஷியல் படங்களையும் ஹீரோயிசத்தையும் ரசிப்பவர்களால் மூனு படத்தை ரசிக்க முடியாது என்பது உண்மை!

Anonymous said...

// கமர்ஷியல் படங்களையும் ஹீரோயிசத்தையும் ரசிப்பவர்களால் மூனு படத்தை ரசிக்க முடியாது என்பது உண்மை! //

'Truth Finding Machine' arrived

kothandapani said...

ஒரு சில படங்களுக்கு விமரிசனங்கள் எதிர்மறையாக இருக்கும் .... படம் பிய்த்துக்கொண்டு போகும். ஒரு சில படங்களுக்கு விமரிசினங்கள் ஜோரா இருக்கும். படம் ஊத்திக்கும். இந்த படத்தி ற்கு விமரசினங்களும் எதிர்மறை , படமும் super flop. எல்லோராலும் ஒதுக்கப்பட்ட படத்திற்கு இரண்டு பேர் வக்காலத்து வாங்கினால் குறை அவர்களின் பார்வையில்தான். என்ன இந்த படத்திற்கு 3 என்பதைவிட 71/2 என்று பெயர் வைத்து இருக்கலாம்.

Anonymous said...

எலா இட்லி, இந்த படம் எப்ப வந்திச்சி? எப்ப தேட்டர விட்டு ஓடிச்சி? எவனுக்காவது தெரியுமாலே? இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி விமர்சனம் போட வேண்டியதுதானே? ...யளி ஒன்னயெல்லாம் மொட்டக் கத்தி வச்சி செரைக்கனும்லே....நற...நற...

பயங்கரம் பக்கெட்டாச்சாரி said...

இட்லி,

சகுனி படத்துக்கு கீழே போட்டிருந்த ”இந்த விமர்சனம் படிச்சு இட்லிவடையை வீடியோவில் இருப்பது போல யாரும் அடிக்க வேணாம்” மனுஷய்புத்திரன் மஞ்சள் கமெண்ட்-ஐ இங்கே போட்டிருக்கனும்.

அறிவுமதியண்னே ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மூனு பட விமர்சனங்களாகவே இட்லிவடைய ஒருபுடி புடிங்கோண்ணே! குப்பைப் படத்தை யாராவது புகழ்ந்தாலும் அறிவுமதியண்ணனுக்கு கோபம் வரும்.

சமுதாயத்தில இருந்து நம்மளை வித்தியாசமா காட்டிக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா ?

பயங்கரம் பக்கெட்டாச்சாரி

Anonymous said...

//அஷ்டே.// சத்தியமா சொல்லுறேன் இந்த எம் ஓ, சுஜாதவுடையது, ஆகவே தேசிகனையும் சந்தேக லிஸ்டில் சேர்த்துகலாமே?

தனுசு said...

யப்பா நான் மிச்ச காசுக்கு செக் அனுப்பிட்டேன் அக்னாலேட்ஜ் பண்ணு ஒய்

Anonymous said...

பிரசன்னன் பிரசன்னமாகி உரைக்கிறார் "நான் இட்லிவடையை படிப்பதுக்கூட இல்லை! " அப்படீன்னு...

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை.....இல்லை...இல்லவே இல்லை...
கமெண்டு கூட அவர் போடறது இல்லீங்க...அவரோட ஆவி...அக்காங்...

/மோகன் குமார் எனக்கு கூட அந்த சந்தேகம் இருக்கு என்ன செய்ய !*/

அடியாத்தீ.....நல்லா கெளப்புராய்ங்கடா பீதிய....பாத்ரூம்ல ஒக்காந்துகிட்டே யோசிப்பாய்ங்களோ....?!!!

Anonymous said...

புலவர் "பொண்ணு"சாமியின் புலம்பல்கள்....

யக்கா....
ஒண்ணுன்னு ஒரு படமெடுத்தேன்
ரெண்டு நாளு கூட ஒடலை.
மூணுன்னு படமெடுத்தா - அது
நாலஞ்சு பேருக்குக் கூடத் தெரியல.
ஆறுன்னு ஒரு படம் வருதாம்
அண்ணன் ஜெயமோகன் புண்ணியத்துல.
நானும்
ஏழரைன்னு ஒரு படம் பண்ணப்போறேன்
எட்டுப்பட்டியும் வந்து பாக்க வேணும்.

மனசுக்குல ஒரு கேள்வி
மறுகி மறுகி வந்து கிட்டே இருக்கு...
நான்
ஒம்போதுன்னு ஒரு படமெடுத்தா
பிரசன்னா வந்து பாப்பாரா?
பிரசன்னா வந்து பாப்பரா?

cho visiri said...

Sri Haran Prasanna said.....
//நான் இட்லிவடையை படிப்பதுக்கூட இல்லை! ///I am really confused.

If the said statement is true, then how his (Haran's) Comment has appeared?

Anonymous said...

Enna Swamigale, Ippathaan Potti vanthatha karuthu sollarathukkku?

kamal ganesh said...

etho onume puriala quizvook.blogspot.com