பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 16, 2012

குடியரசு தலைவர் கேள்வி பதில்கள் பகுதி-2

UPA கூட்டணியில் மம்தா தான் odd (wo)man out. ஏன் அப்படி நடந்துக்கொள்கிறார்?
குடியரசுத் தலைவர் பதவி ஒரு கௌரவமான பதவி. அவ்வளாவு தான். இதனால் எந்தக் கட்சிக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த கலாட்டா எல்லாம் கட்சிகளில் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று அறிந்துக்கொள்ள மட்டுமே. மம்தா காங்கிரஸை சப்போர்ட் செய்வதால் பத்தோடு பதினொன்று என்று ஆகிவிடுவார். ஆனால் காங்கிரஸை எதிர்த்தால் அவருக்குப் பல நன்மைகள் இருக்கிறது.


புரியவில்லை. என்ன என்ன நன்மைகள்?
2014 தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் மண்ணைக் கவ்வ போகிறது. காங்கிரஸ்க்கு எதிராக உள்ள ஓட்டுக்களைச் சேகரிக்க சரியான எதிர்கட்சி இப்போது இல்லை. அன்னா ஹசாரே இப்போது ராம் தேவ்வுடன் தொப்பையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். பிஜேபி தலைமை தங்களுக்குள் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மோடியைப் பிரதமராக இவர்கள் நிறுத்துவார்களா என்ற சந்தேகம் கூட எனக்கு இருக்கிறது. ஆமாம் மோடி தான் எங்கள் பிரதம மந்திரி வேட்பாளர் என்று ஏன் இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள் ? மம்தா இப்போது UPA கூட்டணியிலிருந்து வெளியேற முதல் படி இது. காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் சேர்ந்துக்கொண்டு ஜெயிக்கதான் இந்தக்கூத்து எல்லாம்.

பிஜேபி ஏன் வாயை முடிக்கொண்டு இருக்கிறார்கள்?
பிஜேபிக்கு ஒரு நிலையான கொள்கை இல்லை. காங்கிரஸ் கூட்டணி ஊழல் கட்சி. அவர்கள் நிறுத்தும் எந்த உத்தமரையும் ஆதரிக்க மாட்டோம் என்று தைரியமாக சொல்ல வேண்டும். சொல்லவில்லை. சொல்ல மாட்டார்கள். மம்தாவிற்கு இருக்கும் தைரியத்தில் ஒரு சதவீதம் கூட இவர்களுக்கு இல்லை.

மம்தா நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டாரா? அப்படி என்றால் கூட்டணியில் இருக்கிறேன் என்று இன்று சொல்லியிருக்கிறாரே?
2014ல் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஜெகனுக்கு வாழ்த்துச் சொல்லி இதை உறுதிப்படுத்திவிட்டார். இப்போது கூட்டணியில் இருந்தால் மேலும் குடைச்சல் கொடுத்து இன்னும் வெறுப்பேத்தலாம். திமுக இப்போது கூட்டணியில் இருந்துக்கொண்டு சும்மா போராட்டம் என்று காலை சொல்லிட்டு, மாலை அப்படிச் சொல்லவே இல்லை என்று விளையாடவில்லையா? அது போல தான்.


திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது அவர்களுக்கு பிரயோஜனம் இல்லையா?
ஒரே நன்மை டி.ஆர்.பாலு டெல்லி போனால் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கிற்கு ஒரு மஞ்சள் சால்வை கிடைக்கிறது. அவ்வளவு தான்.


புதனன்று மம்தாவுடன் கலாம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பல்டி அடித்துவிட்டாரே? இது சரியா?
என்ன சார் இவ்வளவு அப்பாவியா இருக்கிறீர்கள்? இது அரசியல். அவ்வளவு தான். மம்தாவுடன் பேசிவிட்டு சோனியா காந்தி வீட்டு இன்னொரு கதவு வழியாக போய் டிலீங் செய்தேன் என்று இன்று சொல்லியிருக்கார் முலாம் பூசின சிங். இவரை சிபிஐ கொஞ்ச நாளைக்கு ஒன்றும் செய்யாது. இவ்வளவு ஏன்? மாயாவதி கூட இதற்கே காத்துக்கொண்டு இருந்தவர் போல, பிரணாப் என்று சொன்னவுடன் எழுதி வைத்ததை 30 நிமிடத்தில் மீடியாவிற்கு முன்னால் ஒப்பித்துவிட்டார். இனி அவரையும் சிபிஐ ஒன்றும் செய்யாது.

சிதம்பரம் ஏன் சைலண்டா இருக்காரு? சந்தோஷமா சோகமா?
சிதம்பரம் போட்ட (ராஜ கண்ணப்பன் தொடுத்த தேர்தல் வழக்கில் போட்ட) மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பு இவருக்கு setback என்று எல்லா மீடியாவும் சொன்னது. ஆனால் அது ராஜ கண்ணப்பனுக்கு தான் பின்னடைவு என்று சொல்லியுள்ளார். பாவம் மனுஷன் பயங்கரமாக் குழம்பி போயிருக்கிறார். எனவே அவரை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இனி உளவு பார்க்கும் மைக்கை குடியரசு தலைவர் மாளிகையில் பார்க்கலாம்.


கலாமை கலகம் என்று அடித்த முகவை முமுக ஒன்றுமே கேக்கலையே ஏன்? இதுதான் மைனராட்டி தர்மமா?
ஹிந்துவைத் திருடன் என்று சொன்னார், ராமர் என்ன இஞ்சினீயராஎன்று கேட்டார். இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கொள்ளக் கூடாது. நாளைக்கே அவர் வேறு ஒரு அர்த்தம் சொல்லுவார். முத்தமிழ் அறிஞர் அல்லவா ?. சங்கி மங்கி என்றால் என்ன மங்கி சங்கி என்றால் என்ன? எல்லாம் ஒரே அர்த்தம்தான். அது மாதிரிதான் இந்தப் பேச்சும்.


ராமதாஸ் திருமா இவர்கள் யாரும் கருத்தே தெரிவிக்கவில்லையே ஏன்?
சர்தாஜி ஜோக்ஸ்(கர்ஸ்) வடக்கே மட்டும் தான் இருக்க வேண்டுமா ?


மீடியா ஏன் முலாயம் சிங் செய்த இந்த பல்டியை கண்டுகொள்ள வில்லை?
ஆங்கில மீடியா முழுவதும் உள்ளூர காங்கிரஸ்கட்சிக்குதான் சப்போர்ட். வடிவேலு சொல்லுவதை போல "அவனா நீ" என்று இவர்களை பார்த்தால் சொல்ல வேண்டும்.

13 Comments:

ஹாரி பாட்டர் said...

எனக்கு பிடித்த டாப் 10 பிளாக்குகள்
http://ideasofharrypotter.blogspot.com/2012/06/10_16.html

Dhas said...

நடப்பது "பிரதம மந்திரி" இடத்துக்கான அரசியல். இது உண்மையாக "குடியரசு தலைவர்" போட்டியே இல்லை!

ஜெ. said...

மீடியா முலாயம் சிங்கை கண்டுவில்லையாவது? இன்றைய தினமலர் பாருங்கள், அவர் அடித்த பல்டிகளெல்லாம் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள்!

-ஜெ.

ஜெ. said...

மீடியா முலாயம் சிங்கை கண்டுவில்லையாவது? இன்றைய தினமலர் பாருங்கள், அவர் அடித்த பல்டிகளெல்லாம் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள்!

-ஜெ.

அன்பை தேடி,,அன்பு said...

என்னுடைய ஆதரவும் விருப்பமும் கண்ணடிப்பா அது நம்ம முன்னால் ஜனாதிபதி கலாமுக்கு தான்

kothandapani said...

கேள்வி: ஜெயலலிதா மேடம் சங்க்மாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததை பற்றி என்ன நினைகிறீர்கள்?
இ வ : பிரதமர் material என்று அரசியல் சாணக்கியன் ' சோ'வால் வர்ணிக்கப்பட்ட ஜெயா அவர்கள் புத்திசாலிதனமாக நகர்த்திய இந்த காயால், டில்லியே
அதிர்ந்து போய் உள்ளது. அத்வானியே அலறி அடித்துக்கொண்டு சென்னை வந்து சென்று உள்ளார். திடீர் மாற்றம் ஏற்பட்டு சங்மா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவே டெல்லி வட்டாரம் கருதுகின்றது. எது எப்படியோ 2014 ல் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் ஆகும் வாய்ப்புகள்
பிரகாசமாக உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.

Anonymous said...

Read www.aniyayangal.blogspot.com

Anonymous said...

What happened to Tamilmanam ?

saravana said...

இதை எழுதியது பத்ரி என நினைக்கிறேன்.
எனது ப்ளாக்:
spraymythoughts.blogspot.in

R. J. said...

Kalam doesn't agree to contest even after Advani's call - OR, is it because of it? Now, does Sangma has a chance? - R. J.

IdlyVadai said...

// Kalam doesn't agree to contest even after Advani's call - OR, is it because of it? Now, does Sangma has a chance? - R. J.//

அத்வானி சொன்னால் கலாம் கேட்பார் என்று எப்படி நினைத்தீர்கள். என்னைக்க்கேட்டால் கலாம் இந்த விளையட்டில் இறங்கியிருக்கவே கூடாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் பலருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்க அவர் வழி விட்டிருக்க வேண்டும். இரண்டு முறை தேர்ந்தெடுக்க இது என்ன பிஜேபி கட்சி தலைவர் பதவியா ?

முன்பே நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை, என்று சொல்லியிருந்தால் அவர் மீது மதிப்பு கூடியிருக்கும். அதை விட்டுவிட்டு அத்வானி, சாமி நிதீஷ் என்று பேசிக்கொண்டு இருப்பது அவருக்கும் இந்த பதவி மீது ஆசை இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அவர் மீது மதிப்பு கொஞ்சம் குறைய தான் செய்கிறது.

kg gouthaman said...

எனக்கு ஒரு சந்தேகம். சட்ட வல்லுனர்கள் யாராவது பதில் கூறுங்கள். பிரணாப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து சங்மா (அதாவது பிரணாப் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பில்லாமல்) அல்லது வேறு யாரோ ஒருவர் போட்டியிடுகிறார். வாக்குப் பதிவு நடக்கின்றது. காங்கிரசும், கூட்டணிக் கட்சியினரும் பிரணாபுக்கு ஆதரவாக வோட்டுப் போடுகின்றார்கள். ஆனால், எல்லாம் சேர்ந்து, நாற்பத்தைந்து சதவிகிதம் வோட்டுதான் அவருக்குக் கிடைக்கின்றது. பி ஜே பி உள்பட்ட எந்த எதிர்க்கட்சியினரும் வோட்டுப் போடவில்லை. மொத்த வாக்குகளில் நாற்பத்தைந்து சதவிகிதமே பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கமுடியுமா?
ஜனாதிபதி தேர்தலில் நாற்பத்தொன்பது ஓ பிரிவு உண்டா?

கவிதை நாடன் said...

மஞ்சள் கமெண்ட் சூப்பர் தலைவா