பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 11, 2012

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி

தோனி டாஸில் ஜெயித்தது நல்லதாக போயிற்று. அதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை, 2-3 முறை மழை பெய்து கழுத்தறுத்ததில், விக்கெட்டுகளை இழந்து, 9 ஓவர்களில் 43-3 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. சென்னையின் பந்து தடுப்பிலும், பந்து வீச்சிலும் ஒரு purpose தெரிந்தது! ஹில்ஃபன்ஹாஸையும் யோ மகேஷையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். என்ன தான், மழை மற்றும் பிட்ச் காரணமாக பந்து வீச்சுக்கு ஆதரவு இருந்தாலும், அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசினர்.

ஹில்ஃபன்ஹாஸ், field restriction இருந்த முதல் 6 ஓவர்களில், அதுவும் மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ச்சியாக 4 ஓவர்கள் வீசி, 8 ரன்களே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, சென்னைக்கு நல்லதொரு தொடக்கத்துக்கு வழி வகுத்தது! மகேஷ் 4-0-21-2. பிரேவோ ரன்களை சற்றே வழிய விட்டதால் (3 ஓவர்கள், 38 ரன்கள்), ராஜஸ்தான் 126 ரன்கள் எடுத்தது, நான் 110 தான் தேறும் என்று எண்ணினேன்.மிகவும் சுலபமாக சென்னை ஜெயித்து விடும் என்று எப்போதும் போல நம்பினேன் :) முதல் வாட்சன் ஓவரிலேயே முரளி விஜய் முட்டை-அவுட் ஆனார். டைட் தனது பந்து வீச்சில் 150 கிமீ வேகத்தை சர்வசகஜமாகத் தொட்டார்! 6-வது ஒவரில், 23 ரன்கள் எடுத்து, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரைனாவும் காலி. 2-டவுன் பிரேவோ களமிறங்கினார். (ச)செம்மையாகத் தடவினார்! 12வது ஓவரில், அவரது நரக வேதனை முடிவுக்கு வந்தது! 60-3, RRR 8.4.ஹஸ்ஸியை ரன் அவுட் ஆக்கியதோடு இல்லாமல், தானும் ரன் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கத் தயங்கிய தோனியின் தயவால், ராஜஸ்தான் பக்கம் ஆட்டம் மொத்தமாகத் திரும்பியது. ஜடேஜா பந்தை அடிக்க முயற்சியாவது செய்தார். திருவாளர் கேப்டன் தோனி, திரிவேதியின் 110 கிமீ பந்துகளை, க்ரீஸுக்குள் இருந்தபடியே, நடனமாடி கஷ்டப்பட்டு தடுத்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. யாராவது அவரை தடுத்தாட்கொண்டால் நல்லது என்று தோன்றியது ;) இப்படி சொதப்பி, 16 ஓவரில் தோனி (10, 16 பந்துகளில்) வீழ்ந்தபோது, ஸ்கோர் 80-5, தேவையான ரன்ரேட் 11.8 !!!உடனடியாக ஜடேஜாவும் அவுட்! இரு புது மட்டையாளர்கள் களத்தில், மார்க்கல், அனிருத்தா. இவர்களை Nothing to Lose என்ற நிலைக்கு (22 பந்துகளில் 43 ரன்கள்) தள்ளியதற்காவது தோனியை பாராட்டியே தீர வேண்டும்!!! அப்புறம் நடந்தது தான் எல்லாருக்கும் தெரியுமே :-) பங்கஜ், வாட்சன், டைட் என்று எல்லாருமே ஒரு வாங்கு வாங்கப்பட்டதில், 18.1 ஓவர்களிலேயே, சென்னைக்கு ஒரு நம்பமுடியாத வெற்றி! அதுவும், டைட்டின் பந்தில் அனிருத்தா அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! சென்னை தோற்கவே கூடாத ஆட்டத்தில் தோற்றும், ஜெயிக்கவே முடியாத ஆட்டத்தை ஜெயித்தும், இந்த IPL-இல் அடிக்கும் கூத்தை என்னவென்று சொல்ல :)சில குறிப்புகள்: இந்த IPL-இல் சென்னை பேட்டிங் பல ஆட்டங்களில் சொதப்பலாக இருந்தது என்பதை தோனியே ஆட்ட முடிவு பேட்டியில் ஒப்புக்கொண்டார். இந்த லட்சணத்தில் ஆடினால், அடுத்த சுற்றுக்கு சென்னை தேறினாலும், கோப்பையை வெல்வது மிக மிக கடினம். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதில், ஸ்திரத்தன்மை போய் விட்டது! தலைவர் தோனி ஃபார்மில் இல்லாததால், அவர் 2 அல்லது 3-டவுன் வருவதில் எந்த பயனும் இல்லை என்பது தெளிவு! அதனால், ரெய்னா, ஜடேஜா, பிரேவோவுக்குப் பின் அவர் வருவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது!இனி வரும் 3 குரூப் ஆட்டங்களில், ஜடேஜா பேட்டிங் ஃபார்முக்கு / அவருக்கு பொறுப்பு வருவதற்கும் இது வழி வகுக்கும்! அதுவும் இலக்கைத் துரத்தும்போது, இது இன்னும் முக்கியமாகிறது! தோனி, தொடர்ந்து 10 to 15 ஓவர்களில் செய்யும் சொதப்பலால், RRR கண்டபடி எகிறி, அடுத்து வரும் பேட்ஸ்மன்களுக்கு அனாவசிய அழுத்தம் ஏற்படுகிறது! அது போல, சென்னை முதலில் பேட் செய்யும் ஆட்டங்களிலாவது, ஒரு 5-6 ஓவர்கள் இருக்கும் சூழலில், மார்க்கல் களமிறங்குவது மிக அவசியம்!2-3 வருடங்களாக, தொடர்ந்து, ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை இருக்கை நுனிக்கு இட்டு வந்து டென்ஷன் கொடுப்பதை ஒரு கலைவடிவமாகவே சென்னை அணி ஆக்கி விட்டது :) பலம் வாய்ந்த தில்லி அணியும், கெய்லையும், டிவிலியர்ஸையும் (மட்டுமே) நம்பியிருக்கும் டுபாக்கூர் பங்களூர் அணியும், பல ஆட்டங்களை ஓசியில் ஜெயித்த, உருப்படாத மும்பை அணியும் அதை விட உருப்படாத கொல்கத்தா அணியும் ஐபிஎல் கோப்பையை அண்டாத அளவுக்கு சென்னை அணி பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், டிவிட்டரில் உலவும் @elavasam @njganesh போன்ற சென்னை அணி ரசிகர்கள் இந்த டென்ஷனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள் :-) நான் சென்னை ரசிகன் கிடையாது!

காரணம்: எனக்கு ”சென்னை வெறியன்” சாரி, வெறியர் என்ற பட்டத்தை மிக்க அன்போடு டிவிட்டரில் வழங்கிய நண்பர் @njganesh -க்கு நன்றி :)எ.அ.பாலா

இப்படியே பாலா விமர்சனம் எழுதிக்கொண்டு போனால், அவரை அடுத்த மதுரை ஆதினமாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

7 Comments:

Anonymous said...

@Bala,
Unga cricket commentary la best, chance kedaikkum bodhellam RCB a oru vaaru varidreenga. semma nakkal...

Last paragraph simply superb...

Vikram said...

\\டுபாக்கூர் பங்களூர் அணியும், பல ஆட்டங்களை ஓசியில் ஜெயித்த, உருப்படாத மும்பை அணியும் அதை விட உருப்படாத கொல்கத்தா அணியும்\\

idhu ellam serndha kalavai thaane CSK??!!

Anonymous said...

ஏம்பா தெரியாமத்தான் கேக்குறேன் ராஜஸ்தான் ராயல் மார்க்கெட் போன நடிகையை icon ஆக போடும்போது CSK நம்ம ரஞ்ஜிதா படத்தையாவது போட்டுக்கக்கூடாதா!

மிளகாய் பொடி said...

KKR is not urupadatha team.. it is a great team.. it has covered all its bases with proven performers and champion players.. Sunil Narine is their trump card, which no team is yet to master. Kallis, Brett Lee, McCullum are all matchwinners for sure..

Anonymous said...

இந்தப் போட்டியில் என்னுடைய சில அவதானிப்புகள்
1) 11 பந்துகளின் 5 ரன் எடுக்கவேண்டிய நிலையிலும் கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு சிக்ஸ் தூக்கப் போய் அனைத்து ஸ்டம்புகளையும் பறி கொடுத்து விட்டு நின்ற அனிருத்தைப் பார்த்த போது ஸ்ரீகாந்த் ஆட்டம் நினைவில் வந்து போனது.” பிள்ளை அப்படியே அப்பனை உரித்து வைத்திருக்கிறது ( கொஞ்சம் கூட கிரிக்கெட்டிங் புத்தியை உபயோகிக்காமல் மட்டையை சுற்றுவதில் :)“
2.(மேற்சொன்ன )இக்கட்டான தருணத்தில் விக்கட்டை வீழ்த்தியும் அது ”நோ பால்” என்று அறிவிக்கப் பட “ஞே” என்று விழித்து விட்டு அடுத்த பாலை வைட் பாலாக வீசி 5 ரன்ககளைக் கொடுத்து போட்டியை உப்புச் சப்பில்லாமல் முடித்து வைத்த ஷான் டெயிட்டைப் பார்கப் பாவமாக இல்லை.ஏனென்றால் அவரது பந்து வீச்சில் பெரும்பாலும் டிசிப்ளின் இருப்பதில்லை..அதனால் இந்த மாதிரி இக்கட்டான தருணங்களில் சில சமயம் பந்து வீச்சு அபத்தமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.
3)இன்றைய காலகட்டத்தில் சென்னை டி20 ப்ளேயிங் லெவெனில் பத்ரிநாத்துக்கு இடம் இல்லை என்று உணர தோனிக்கு இத்தனை காலம் (12 ஆட்டங்கள் ) பிடித்திருக்கிறது. உணர்ந்தாரா இல்லை உண்மையாகவே பதிரிக்கு உடம்பு சரியில்லையா தெரியவில்லை.
4) போகிற போக்கைப் பார்த்தால் தோனியும் RCB யின் டேனியல் வெட்டோரி போல விளையாடாத (நான் ப்ளேயிங்) காப்டனாக ஆகி விட்டால் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கலாம் போல் தோன்றுகிறது.

ச.சங்கர்

Anonymous said...

இப்படி எதுகை மோனையாக எழுதுகிறேன் என்று இந்த மாட்சையெல்லாம் “ராயல் வெற்றி “ என்று தலைப்பிட்டு எழுதினால் மஞ்சள் கமெண்ட் மெய்யாகிவிடும் போலத்தான் தெரிகிறது :)

ச.சங்கர்

Anonymous said...

மொத்ததுல தோணிய பாட்டிங் பண்ண இறங்க வேண்டாம்ன்னு சொல்லாம சொல்லுறிங்க ரைட் ஆ ?