நேற்று கொல்கத்தாவில் நடந்த (சென்னைக்கு) முக்கியமான ஆட்டத்தில், தோனி டாஸில் வென்று கொல்கத்தாவை பேட் செய்ய சொன்னதற்கு முந்தைய 2 வெற்றிகரமான துரத்தல்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், மெக்கல்லமும் குறிப்பாக கம்பீரும் விளாசிய விளாசலில், 11 ஓவர்களில் ஸ்கோர் 96/0, சென்னைக்கு ஆப்பு உறுதி என்ற நிலையிருந்தபோது, சென்னையின் famous fightback தொடங்கியது. 12வதில் மெக்கல்லம் ரன் அவுட், 13வது / 15வது ஜகதி ஓவர்களில் கம்பீர், காலிஸ் விக்கெட்டிழந்தார்கள். கொல்கத்தாவின் சரிவுக்கு ஜகதி தான் முக்கியக் காரணம், 4-0-26-2 when CSK was under so much pressure!
16 ஓவர்களில் 122/3, அதாவது 6 ஓவர்களில் 26 ரன்களே கொல்கத்தா எடுத்தது! அடுத்த 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் விழ, ஒரு சமயத்தில் 175-180 ரன்கள் எடுக்கக் கூடிய நிலையிலிருந்த கொல்கத்தா எடுத்தது 158 ரன்களே! அஸ்வின் எப்போதும் போல சிறப்பாக பந்து வீசினார், 4-0-26-1. கடைசி ஓவரில், கொல்கத்தா மட்டையாளர்களை கை தட்டி உற்சாகப்படுத்துமாறு, ஷாருக் கான் தன் கைகளை உயர்த்தி ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தது, பார்க்க கண்றாவியாக இருந்தது!
முரளி விஜய்யும், ஹஸ்ஸியும் எந்தவித அழுத்தமும் இன்றி, அருமையாக ஆடினர். அதுவும் கொல்கத்தா போன்ற double paced ஆடுகளத்தில், ஹஸ்ஸியின் டைமிங்கை அற்புதம் என்று தான் கூறவேண்டும். கொல்கத்தா 11 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை (96/0) சென்னை 10 ஓவர்களில் எடுத்து வெற்றியை நோக்கி உறுதியாக சென்று கொண்டிருந்த நேரம், சனியன் (ஷாருக் கானை சொல்லவில்லை) கண்ணைத் திறந்தது ! நரைன் வீசிய 11வது ஓவரில், இருவரும் அவுட்! அதுவும் ஹஸ்ஸி அவுட்டான நிலையில், செட்டிலாகி இருந்த மொ.க.முரளி விஜய் செய்தது அதிமுட்டாள்தனம் !
14வதில், ரெய்னா அனாவசிய ரன் அவுட்! ”தடவல் திலகம்” தோனி களமிறங்கினார்! 17வது ஓவர் முடிவில், ஸ்கோர் 127/3, 6.3 என்றிருந்த RRR-ஐ 10.7-க்கு இட்டுச் சென்ற பெருமைக்கு முக்கிய சொந்தக்காரர் கப்தான் தோனி அவர்களே! 18வது பாட்டியா ஒவரில், 5 ரன்கள் மட்டுமே! 2 ஓவர்களில், 27 ரன்கள் தேவை என்ற நிலையிலும், தோனி முகத்தில் துளியும் டென்ஷன் இல்லை, இது பிளஸ்ஸா, மைனஸா என்பது கடவுளுக்கே வெளிச்சம் :)
எப்போதும் போல, nothing to lose என்று ஆனபின், தோனி பொங்கியெழுந்தார்! டிலாங்கே வீசிய 19 ஓவரின் முதல் பந்து, டிலாங்கேவின் தலைக்கு மேலே (தலையில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உண்மையாகவே கலங்கி விட்டேன்!) நேர் பவுண்டரிக்கு பறந்தது! டிலாங்கேவும் சற்று அதிர்ந்து போனது போலத் தான் இருந்ததன் விளைவு, அடுத்த 2 பந்துகளில், 1 பவுண்டரி, ஒரு 105மீ சிக்ஸர்! மொத்தம் 18 ரன்கள் அந்த ஓவரில்! அடுத்த ஓவரில் மேலும் டிராமா!
பாட்டியாவின் 2வது பந்தில் தோனி க்ளீன் போல்ட்! கடைசிப்பந்தில், ஜெயிக்க 5 ரன்கள் தேவை என்ற நிலையில், பாட்டியா வீசிய லோ ஃபுல்டாஸை பிரேவோ உயரத் தூக்கி அடித்ததில், லாங்க்-ஆன் பவுண்டரிக்கு சற்றே வெளியே பந்து சென்றதில், சென்னைக்கு அதி அதி அதி அற்புதமான ஒரு வெற்றி :) அதுவும், ஷாருக் கானின் உருப்படாத கொல்கத்தா அணியை வீழ்த்தியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஆனால், சென்னை அணி, நரைனை சற்று கவனமாக ஆடியிருந்தால், இந்த ஆட்டத்தை சுலபமாக, 17-18 ஓவர்களில் ஜெயித்திருக்க வேண்டும்! நமது ரன்ரேட்டும் இன்னும் சற்று கூடியிருக்கும்.
நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில், மும்பை பங்களூரை வென்றது சென்னைக்கு நல்லதே! சச்சின் அணியில் இருந்தும், பொறுக்கித்தனத்தில் அடிக்கடி ஈடுபடும் மும்பை அணியினரில் நேற்று ராயுடுவின் முறை போல! பங்களூரின் ஹர்ஷல் படேலை ஏதோ கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க, கடுப்பான படேல், அடிக்க கை ஓங்கி விட்டார்! ரவுடிப்பயல் ராயுடுவை 2 அறை செவிட்டில் விட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும்! இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முதிர்ச்சியும், பெருந்தன்மையும் இல்லாத அரைகுறை ஹர்பஜன் கேப்டனாக இருப்பதே!
சென்னை ரசிகர்களை கொஞ்சம் “காப்ரா” பண்ணி விட்டு இடுகையை நிறைவு செய்கிறேன் ;-) சென்னை அடுத்த ஆட்டத்தில் பஞ்சாபை வென்றாலும், பங்களூரு தனது அடுத்த 2 ஆட்டங்களை வென்று, கொல்கத்தா தனது இரண்டில் ஒன்றை வெல்லும் பட்சத்தில், 3 அணிகளுமே, 19 புள்ளிகளில் இருக்கும். அச்சமயம், 3வது 4வது இடங்களுக்கான தேர்வை, நெட் ரன் ரேட்டே முடிவு செய்யும்!
ராசாவிற்கு ஜாமீன்; ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 15, 2012
IPL5 CSK vs KKR கரணம் தப்பாததால் சென்னைக்கு மரணமில்லை!
Posted by IdlyVadai at 5/15/2012 11:36:00 PM
Labels: எ.அ.பாலா, விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










11 Comments:
ராசாவின் ஜாமீனும் ஒரு அரசியல் விளையாட்டே என்பதால் அதை விளையாட்டு செய்தியில் போட்டுள்ள உங்க குறும்பே அலாதிதான்.
கோதண்டபாணி .
ராசாவின் ஜாமீனும் ஒரு அரசியல் விளையாட்டே என்பதால் அதை விளையாட்டு செய்தியில் போட்டுள்ள உங்க குறும்பே அலாதிதான்.
கோதண்டபாணி .
அது என்னமோ சார்.. சென்னை மேட்ச்னாலே ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. எப்படியாவது வாய்ப்பு கிடைச்சிராதா? என்ற நம்பிக்கையில்தான் பைனல் வரை வந்துவிடும்.
Has anyone noticed? These days there are not much of vindictive comments from Anonys for Bala's posts. Reasons:
1. There is a positive change in Bala's style.
2. The Thirumayam post (this was the turning point) that helped to connect well with the readers.
Keep it up.
திகார் தீரனே...!
தகத்தகாய டுபுக்கே...!!
இவண்,
பாவாடை நாயக்கர்
பி.எ., எம்.எ., கெக்கே (அண்ணா)., பிக்கே (பாரதிதாசன்)., ஊலலல்லா (யு. எஸ். எ)
வேஸ்ட் போஸ்ட். உருப்படியாக எதையாவது எழுதுங்கள். நாங்களும் மேட்ச் பார்க்கிறோம். பார்த்த மேட்சை வேறு கோணத்தில் தருவதாக இருந்தால் சரி. அப்படியெ வாந்தியெடுப்பதால் யாருக்கும் என்ன பிரயோசனம்
Y so much of hatred for SRK?
Kolkota is not urupadatha team... mind u it has world class playerse...
உருப்படாத கொல்கத்தாகிட்டையே விழிபிதிங்கிச்சின்னா சென்னை எவ்ளோ கேவலமான டீம்னு நீங்களே முடிவுபண்ணிக்கோங்க....
nalla siringa:
thatstamil.com: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி திராவிட கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பீட்டர் அல்போன்ஸ் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் என்ற தலைப்பிலும், திருமாவளவன் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பிலும், காதர் மொய்தீன் சிறுபான்மையினரின் சீரியக் காவலர் எனும் தலைப்பிலும், பொன்.குமார் உழைப்போரின் உற்ற நண்பர் எனும் தலைப்பிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா இலக்கிய ஏந்தல் எனும் தலைப்பிலும் பேசவுள்ளனர்.
மதன் ஆனந்த விகடனிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இட்லி வடை என்ன நினக்கிறது? எனக்கோ நிறைய கேள்விகள்.
அ. மதன் ஜெயா டிவியில் பணிபுரிவதால் நடுநிலையாக இருக்க மாட்டார் என்பதை நாம் ஏற்றுகொண்டால் , விகடனின் நெடுந்தொடர்கள் சன் டிவி யில் ஒளிபரப்பாகின்றனவே ? அப்போது விகடனின் conflict of interest பற்றி ! வாசகர்களாகிய நாம் எவ்வாறு பார்ப்பது?
ஆ. இதனை விகடனின் வாசகர் பின்னூடத்திற்கு அனுப்பினேன். எதிர்பார்த்தது போல் என் கருத்து நேரியாலரால் நீக்கப்பட்டு விட்டது. எல்லோரயும் விமர்சிக்கும் மீடியா , தன் மீதான விமர்சனத்தை நேர்மையாக எப்போதுமே அனுகவதே இல்லை. முன்பு NDTV பர்க்ஹா தத், தன்னை விமர்சித்த வலைப்பதிவரை வழக்கு போடுவேன் என்று மிரட்டினார். விகடனோ என் கருத்தை பதிக்க கூட முன் வரவில்லை. எல்லோரும் சரி சமம் அனால் சிலர் ரொம்பவே சமம் என்ற animal farm கூற்று நினைவுக்கு வருகிறது.
இ. பொதுவாக தமிழ் மீடியாவில் வரும் kattruaigalil ஏன் conflict of interest ஏதேனும் இருந்தால் அதைப்பற்றி குறிப்பே இருப்பதில்லை?
அன்புடன்,
சுரேஷ்
why have you not commented on CSK qualifying for Play Off, due to the failure of Punjab and Bangalore ?
Post a Comment