பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 10, 2012

IPL5 - மும்பை இந்தியன்ஸ் என்னும் ”தீவிரவாத” அணி -எ.அ.பாலா

இது மும்பையின் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்துக்காக வைக்கப்பட்ட தலைப்பு அல்ல !!!

நேற்று நடந்த மும்பை-டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் ஆட்டம் மிக மிக விறுவிறுப்பாக இருந்தது. ஐபிஎல்-5 இன் முதல் nail biter ஆட்டம் என்று தாராளமாக கூறலாம். முதலில் பேட் செய்த டெக்கான் அணி, சங்ககாரா விக்கெட் இழக்கும் வரை நல்ல நிலையில் தான் இருந்தது, 82-3 (12.3 ஓவர்கள்). சங்ககாரா அவுட் என்று அறிவிக்கப்படுவதற்கு முன் மும்பை அணி செய்த ரவுடித்தனத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை! சங்ககாரா அவுட் இல்லை என்று 2 கள அம்பயர்களும் முடிவு செய்தபிறகு, முனஃப் படேலும், திமிர் பிடித்த, கேப்டன் ஆகியும் திருந்தாத ஜென்மமான, ஹர்பஜனும், நம்ம ஊர் ரவுடி தினேஷ் கார்த்திக்கும், இன்னும் ஓரிரு மும்பை ஆட்டக்காரர்களும், அம்பயரை சூழ்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்ததில், மிரண்டு போன அம்பயர், தனது முடிவை, மூன்றாம் அம்பயருக்கு refer செய்யும் கட்டாயத்துக்கு ஆளானார். ஒரு விஷயத்தை 3-ஆம் அம்பயரிடம் refer செய்வதோ, செய்யாமல் இருப்பதோ, கள அம்பயர்களின் உரிமை என்பதை திமிர் பிடித்த முட்டாள் ஹர்பஜனும் அவனது மும்பை அணி ரவுடி கூட்டாளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்! ஹர்பஜனை கேப்டனாக நியமித்ததில், இனி மும்பை அணியில் இருக்கும் நல்ல குணமுள்ள வீரர்கள் கூட உருப்படாமல் போவதற்கு வாய்ப்பு மிக அதிகம். இந்த எல்லா கூத்தையும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, ஒரு சோஃபா முழுவதையும் தான் மட்டுமே ஆக்ரமித்து கொண்டு அமர்ந்திருந்த அம்பானியின் மகன், எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு ஹைலைட் :-)


சரி மேட்சுக்கு வருவோம்! டெக்கான் 150-ஐ தாண்டும் என்று நினைத்தேன். ஆனால், இறுதி ஓவர்களில் மும்பை நன்றாக பந்து வீசியதில் அல்லது டெக்கானின் லோயர் ஆர்டர் சொதப்பியதில், டெக்கான் 138 ரன்களே எடுத்தது. பேட் செய்ய களமிறங்கிய மும்பை, அங்கிட் சர்மா (சுழல் பந்து வீச்சு) மற்றும் டேல் ஸ்டெயினின் பந்து வீச்சில் பயங்கரமாகத் தடுமாறியது. ஸ்டெயின் தான் ஏன் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை இன்னிங்க்ஸின் 4வது ஓவரில் நிரூபித்தார்!! It was easily the best over of IPL-5 (according to me, of all IPLs!). லெவியை செட்டப் பண்ணி அல்லது ”பதப்படுத்தி”, அந்த அருமையான ஓவரின் கடைசிப்பந்தில், ஒரு 150 கிமீ யார்க்கர் வாயிலாக லெவியின் நடு ஸ்டம்பை தகர்த்தார் ஸ்டெயின். 5 ஓவர்களில் மும்பை 15-2.

120 கிமீ வேகத்தில் பந்து வீசி, முனஃப் படேல் போன்ற கவைக்குதவாதவர்கள் எல்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, ஸ்டெயின் போன்ற அற்புதமான பந்து வீச்சாளர்கள் பரிமளிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர்கள் பரிமளித்தால் தான் கிரிக்கெட்டுக்கும் சிறப்பு! ராயுடுவும், ரோஹித்தும் தாக்கு பிடித்து, ஸ்கோரை 11.2 ஓவர்களில் 58க்கு இட்டு வந்தனர். ராயுடு அவுட்! கடைசி 3.4 ஓவர்களில் (போலார்ட் அவுட்டானபோது) மும்பைக்கு தேவை 44 ரன்கள். ஸ்டெயினுக்கு ஒரு ஓவர் இருந்த சூழலில், நிச்சயம் டெக்கான் ஜெயிக்கும் என்று தோன்றியது. ஸ்டெயின் வீசிய 19வது ஓவரும் ஒரு ஜெம், 5 ரன்கள் தந்து கார்த்திக்கையும் வீட்டுக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், டேன் கிரிஸ்டியனின் மிக மிக மோசமான பந்து வீச்சால் (மட்டுமே!) மும்பை ஜெயித்தது! அவரது மூஞ்சியில் அல்லது முகரைக்கட்டையில் (உதட்டை சுழித்து பண்ணிய கோணங்கித்தனத்தில்) அப்பட்டமாக பிரஷர் தெரிந்தது! He did not look international class yesterday! He bowled that last over so pathetically! மேலும், ஓவரின் 5-வது பந்தில் ரோஹித் ரன் அவுட் (அவரது மட்டை தரையில் இல்லை) என்பது என் கருத்து. அந்த ஓவரில் ரோஹித் பெரிதாக கிழித்ததாகக் கூற எதுவுமில்லை. அதற்காக அவரது நேற்றைய ஆட்டமே தண்டம் என்று கூறுவதாகவும் எண்ண வேண்டியதில்லை!

ரோஹித் இது போலவே, இந்தியாவுக்கு ஆடும்போதும் விளையாடி ஜெயித்துக் கொடுத்தால், அவருக்கு புண்ணியமாகப் போகும் !

எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com


PC மாதிரி பாலாவின் ஆட்டம் தொடரும்... :-)

26 Comments:

Vikram said...

\\120 கிமீ வேகத்தில் பந்து வீசி, முனஃப் படேல்...\\

mr.bala - "good" bowling has nothing to do with pace..u have so many other things to criticise abt munaf patel (though he is a "decent" bowler)...

Anonymous said...

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. முன்ன தெருத்தி தெருத்தி அடிச்சதெயெல்லாம் மறந்துட்டு வந்துட்டான்யா வந்துட்டான்.பின்னாடியே பாலா ரசிகர் மன்ற பின்னூட்டமெல்லாம் வரும் பாரு. எல்லோரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க!

Sridhar Narayanan said...

அட... பாலா மீண்டும் வந்துவிட்டாரா? அவரோட ட்ரேட்மார்க் 'மொ.க.' கமெண்ட் இல்லாம கொஞ்சம் சுவாரசியம் குறைவுதான். :)

கனவான்கள் ஆட்டம் எல்லாம் மலையேறிப் போச்சு சார். 20-20ல ஒரே ஓவர்ல மேட்ச்சே மாறிப் போயிடும்கிறப்போ.. விக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியுமா? வேணும்னா லெவல் -1 அஃபென்ஸ்ன்னு மேட்ச் ஃபீஸை பிடிச்சிக்கட்டும். (அதெல்லாம் அம்பானி போனஸாவே போட்டுக் கொடுத்திருவார்).

இரண்டு மேட்ச் தோத்துப் போனா, சீஸனே காலி... அடுத்த ஆக்‌ஷன்ல ஏலம் எடுக்க ஆளே இருக்காது... எவ்ளோ ரிஸ்க்... எவளோ பணம்... எவ்ளோ பாலிடிக்ஸ்...

ஃபார்மெட் மாறிப்போச்சு. பணம் மாறிப் போச்சு... அதுக்கேத்த 'போர்க்' குணமும் கூடித்தானே ஆகனும்? சியர் லீடர்ஸ் ஆடறது பாத்து ரசிக்கிற மாதிரி இந்த சண்டைகளையும் சுவாரசியமா பாத்துட்டு கடந்து போக வேண்டிதான். Cool :)

Anonymous said...

Bala - You need to show some maturity while writing the review. This is a biased review and it clearly shows your hatred against Mumbai team.

A, USA

Anonymous said...

சார்..! கோலா சார்... மன்னிக்கணும் பாலா சார்..! தயவு செஞ்சு கிரிக்கெட் பத்தியெல்லாம் எழுதி தொலைக்காதிங்க...! ரொம்ப கேவலமா இருக்கு..! முடிஞ்சா மேட்ச மட்டும் பாத்துட்டு மூடிட்டு போங்கோ...! //அந்த ஓவரில் ரோஹித் பெரிதாக கிழித்ததாகக் கூற எதுவுமில்லை.// ஆமா சார்... ஒரு ஓவர்ல பதினெட்டு ரன் எடுக்குறது ரொம்ப சப்பையான மேட்டர் தான....!

ஆஷ்லி said...

இட்லிவடைக்குன்னு பெருசா தரம் எதுவும் இல்லனாலும்... இந்த விமர்சனம் ஒரு பெரும் "Black Mark".

R. J. said...

The second comment by an Anonumous reflects my opinion 100%! Believe me, I wanted to write the same thing - 'Aiyaiyoo..vanthuttaanyaa vanthuttaanyaa..' - R. J.

enRenRum-anbudan.BALA said...

Vikram,

//mr.bala - "good" bowling has nothing to do with pace..u have so many other things to criticise abt munaf patel (though he is a "decent" bowler)...
//

Accepted, but good raw pace has its own advantage just like "line and length"gentle bowling

enRenRum-anbudan.BALA said...

ஸ்ரீதர் நாராயணன்,

நலம் தானே ? நீங்க சொல்றது சரி தான். ஆனாலும், அம்பயரிடம் முறையிடறது என்பது வேறு. கூட்டமாக அம்பயரை சூழ்ந்து கொண்டு அடாவடித்தனம் / அராஜகம் செய்வது கண்டனத்துக்குரியது. முனஃப் மற்றும் ஹர்பஜனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ரொம்ப குறைவு! எல்லாம் பணத்தின் ஆட்டம், நீங்கள் சொல்வது போல!

அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

Anonymous,

//Bala - You need to show some maturity while writing the review. This is a biased review and it clearly shows your hatred against Mumbai team.
//

I dont like the MI team but this review has got nothing to do with that. The atrocious behavior of the MI players need drastic condemnation. No one including Sachin is bigger than the game.

enRenRum-anbudan.BALA said...

மற்ற கிரிக்கெட் ஞானசூன்யங்களின் ”கொலவெறி” பிடித்த பின்னூட்டங்களுக்கு இ.வ அல்லது எ.அ.பா ரசிகர் மன்ற உறுப்பினர் யாராவது வந்து பதிலளிக்கக் கூடும் :-)

“PC மாதிரி பாலாவின் ஆட்டம் தொடரும்... :-) ” என்று இட்லிவடையே மஞ்சள் நிறத்தில் திருவாய் மலர்ந்தருளிய பிறகு சில்லறைகளைப் பற்றி என்ன கவலை?!

Anonymous said...

இட்லிவடைக்குன்னு பெருசா தரம் எதுவும் இல்லனாலும்... இந்த விமர்சனம் ஒரு பெரும் "Black Mark".

Veeraraghavan_PK said...

Dear IdlyVadai, IV Readers and Bala,

I am following Idly Vadai for the last 2 years or so. I have read all the cricket posts by Bala during last year's world cup cricket including the comments section (which was a battlefield on its own). Bala's work, in my opinion is always specious. His posts focuses on everything but the game of cricket. His personal views and emotions are explicit especially in the comments section. His style of writing is just a copy cat of so many others and notably Sujatha.
Bala's style suggests that he is the genius, the expert and so many other superlatives.
He often uses very mean language.

In one of his past posts (IPL match between CSK & KXIP) he claims that some of the CSK players are mere Idiots.
In this recent posts, he uses a similar language to describe Mumbai players.

Who is Bala to do all these?

And if somebody comments about this, he comes after them and engages in a personal battle in the comments section. He will ask the commentator to write an article and show, or he will simply ask the commentator to go and educate his/her children.

Atrocious, isn’t it? IT IS.

By the way, If he is going to come after me for this comment. I have no problem. I am 71 years old. I am not highly educated so my English is very moderate. My children completed their education long back.


Passing Shot: I request Bala to close his eyes for some time and keep his ears and heart open.

God Bless!

Veeraraghavan P. K.

மாலோலன் said...

அதெப்படி எ.எ.பாலா கிரிகெட் பத்தி பதிவு போட்ட உடனே எதோ ஒரு ஆதார துவேஷத்தோடு புற்றீசல் மாதிரி அச்சி பிச்சு அனானிகள் கெளம்பி வந்துடறாங்க அநாகரிகமா கமெண்ட் போட?

enRenRum-anbudan.BALA said...

Veeraraghavan Sir,

If you feel my reviews are specious, you are most welcome to voice that opinion. I have nothing to say.

//Bala's style suggests that he is the genius, the expert and so many other superlatives. //

My style suggests actually suggests NOTHING. If you feel it suggests so many things to you, its just your grand perception, again. Also, I defend my right to use strong criticism on public figures in my posts.

//His posts focuses on everything but the game of cricket. //

This is blatant falsehood. My cricket posts talk about actual happenings in those matches as well as my personal views of what happened in those matches

If Others can comment about "me" then I too have the right to respond to them in equal measure since it is personal (about me) and not about some points related to the post.

//And if somebody comments about this, he comes after them and engages in a personal battle in the comments section. He will ask the commentator to write an article and show, or he will simply ask the commentator to go and educate his/her children.//

This "somebody" (may be your friend) spewed venom on a personal basis and so I gave him back in the same coin. That I will continue to do, for such persons. Kindly refer to the interaction that happened in that specific post you are now referring.

anbudan
BALA

enRenRum-anbudan.BALA said...

மாலோலன்,

//ஆதார துவேஷத்தோடு//

புரிதலுக்கு நன்றி. தகாத காரணத்துக்காக, தனிப்பட்ட வெறுப்பை (அனானியாக வந்து)கொட்டுபவரிடம் பேசிப் பயனில்லை. அவர்களுக்கு ஆனந்தம் என்றால் கொட்டி விட்டு போகட்டுமே ! அவர்களில் சிலர் யார் என்றும் எனக்குத் தெரியும்.

அன்புடன்
பாலா

இ.வ.ரசிகர் மன்றம் said...

///////////////
Anonymous said...

இட்லிவடைக்குன்னு பெருசா தரம் எதுவும் இல்லனாலும்... இந்த விமர்சனம் ஒரு பெரும் "Black Mark".
////////////
உம்மை மாதிரி ஆட்கள் தரத்துக்கு இட்லிவடை தரமே மிக அதிகம்

Veeraraghavan_PK said...

Dear Bala,

You reply was in the same line that I thought it would be.

There are so many books, articles, blogs published all around the world. Many of them are really interesting and enlightening.

I shall read them and I shall never open your posts again.

Thanks.

Vikram said...

bala - whether you like it or not - munaf has got another 4-for and currently is the "proud" owner of the purple cap...
(PS : I am not a serious fan/follower of IPL!!)

Anonymous said...

பாலா பாலா கோபாலா
நீர் என்ன
கிரிக்கெட் பாலா?
புட் பாலா?

இங்ஙனம்
அனானிகள் கூடி அடிப்பது
அன்பாலா?
வெறுப்பாலா?

சொல் பாலா
சொல்.

ConverZ stupidity said...

//enRenRum-anbudan.BALA said...

I dont like the MI team but this review has got nothing to do with that. The atrocious behavior of the MI players need drastic condemnation. No one including Sachin is bigger than the game.//

Nothing is important including game than etiquetts and ethics

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

நாங்கள்ளாம் டெக்னிக்கல் புலி இல்ல. இ.வ் என்ன eliteகளுக்கான blog ஆ. நம்ம தெரு கோடியில லுங்கிய மடிச்சு கட்டிகிட்டு, சும்மா கெளப்பிட்டான்யா. அடி பின்னிட்டான். இவெனெல்லாம் எதுக்கு போலிங்க் போட வரான் போயி புல்லு புடுங்க போறதுதானே ந்க்கிற கமெண்ட்டுகளை பல பேர் miss செய்வதால் எங்கள் தலைவர், அருமை அண்ணன் பாலா அவர்கள் நந்த குறை நீக்க அரும்பாடுபட்டு அரை வேக்காட்டுத்தனமாக எழுதியதை குறை சொல்ல உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது. ஐயா பாலா!வாத்யாரே! நீங்க IPL season ஃபுல்லா பூந்து வெளாடு தலிவரே.

Anonymous said...

நாய அடிப்பானேன் பீய சொமப்பானேன்னு ஒரு பழமொழியில சொல்றாப்பல, தத்து பித்துன்னு ஒரு போஸ்டிங் போடறது பின்னாடி ஓயாம நிமிஷத்துக்கு நிமிஷம் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் புதுசு புதுசா தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியது. வாய குடுத்து எதையோ புண்ணாக்கிக்கறதுன்னு என்ன பொழப்போ இது பாலா. ஐயோ பாவம்யா நீ!

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

//
Anonymous said...

நாய அடிப்பானேன் பீய சொமப்பானேன்னு ஒரு பழமொழியில சொல்றாப்பல, தத்து பித்துன்னு ஒரு போஸ்டிங் போடறது பின்னாடி ஓயாம நிமிஷத்துக்கு நிமிஷம் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் புதுசு புதுசா தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியது. வாய குடுத்து எதையோ புண்ணாக்கிக்கறதுன்னு என்ன பொழப்போ இது பாலா. ஐயோ பாவம்யா நீ!
//
கண்ணு,
அந்த தத்துபித்து போஸ்டிங்கை படிக்க நேரத்தை விரயம் செய்யறதோடு நிக்காம, அதுக்கு கமெண்ட் வேற போட்டு அனானியா அனாமத்து அட்வைஸ் பண்ணும் வெத்துவேட்டு நீ பாவம் இல்ல பரிதாபம்.

enRenRum-anbudan.BALA said...

Veera Raghavan Sir,
**************
Dear Bala,

You reply was in the same line that I thought it would be.
*******************
It is all very convenient to say that my reply was in expected lines instead of responding to specific points in my response to cover up the inadequacies of your mere allegations about me.

*************

I shall read them and I shall never open your posts again.

Thanks.
*****************
This is really a WIN-WIN situation for both of us. You save time by not reading my posts and I save time as I dont need to respond to your comments.

anbudan
BALA

enRenRum-anbudan.BALA said...

Veera Raghavan Sir,
**************
Dear Bala,

You reply was in the same line that I thought it would be.
*******************
It is all very convenient to say that my reply was in expected lines instead of responding to specific points in my response to cover up for the inadequacies in your mere allegations about me.

*************
There are so many books, articles, blogs published all around the world. Many of them are really interesting and enlightening.

I shall read them and I shall never open your posts again.

Thanks.
*****************
This is really a WIN-WIN situation for both of us. You save time by not reading my posts and I save time as I don't need to respond to your comments.

But, I guess, you might still appreciate the Thiruppavai related posts in my own blog at http://balaji_ammu.blogspot.com They could be interesting if not enlightening.

anbudan
BALA