பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 27, 2012

கேள்வி பதில்கள் - போட்டி

விஜய் டிவி என்று நினைக்கிறேன் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா?
அழகிரி பதில்: நான் போட்டியிடவில்லை

வாசகர்களுக்கு சில கேள்விகள்

சிலுக்கை இருமுறை நேரில் சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறேன். அவரது உடல்மொழியை வித்யா அப்படியே கொண்டுவந்திருக்கிறார். க்ரேட். - வாக்கு மூலம், ரைட்டர் பாரா

1. கேள்வி: நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார் ?

பிரங்கி ஊழல் புதிதாக வெடித்துள்ளது - செய்தி

2. பிரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது ?

3. மூன்றாவது கேள்வி, 3 படம் தோல்வி, எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று ரஜினி அறிக்கை - செய்தி

கோச்சடையான் பாபா போல வெற்றி பெறுமா ?

பேத்தலான பதிலுக்கும், சரியான பதிலுக்கும் பரிசு உண்டு.

14 Comments:

Madhavan Srinivasagopalan said...

// கேள்வி: நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார் ? //

எவ அவ...?

// பிரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது ? //

கசாப்புக்கு வாங்கின பிர்யாணி செலவவிட கம்மியாத்தான் இருக்கும்..

jaisankar jaganathan said...

கேள்வி: நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார் ?

கங்கூலி

பிரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது ?

எல்லா எலக்‌ஷன் செலவும்

IdlyVadai said...

மூன்றாவது கேள்வி சேர்க்கப்பட்டுள்ளது

Madhavan Srinivasagopalan said...

// 3) கோச்சடையான் பாபா போல வெற்றி பெறுமா ? //

அதெப்படி வெற்றி அடையும் ?

ஒரு ஆளு, எவ்ளோ 'லேடெஸ்டா' வந்தாலும் 'லேட்டா' ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தா டிரெயின் போயிடும்.. டிரெயின் 'கோச்ச' அடையாதவன் (கோச்சடையான்) எப்படி வெற்றி பெற முடியும் ?

Madhavan Srinivasagopalan said...

மூன்றாவது பதில்(ம்) சேர்க்கப் பட்டுள்ளது..

வவ்வால் said...

நக்மாவைப்பேட்டி எடுத்த எழுத்தாளர்
p.v.prabhakar rao s/o p.v.narasimha rao
(சரியான விடை-பாலகுமரன் என நினைக்கிறேன்)

#// பிரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது ? //

பீரங்கி வாங்கின காச விட அதிகமா செலவு செய்து இருக்கும் :-))
(இன்னும் விசாரணையே ஆரம்பிக்கவில்லை எனவே செலவே ஆகவில்லை)

Anonymous said...

With regard Nagma's Interview:

Surely I am Not.

RSM

kg gouthaman said...

சம்பந்தம் இல்லாத பதில்கல்தானே? சொல்லிடுவோம்!

நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார்?
அவரிடம் பெட்டி எதுவும் நான் வாங்கவில்லை.

பீரங்கி ஊழல விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது?
அறுபத்தஞ்சு கோடி ரூபாய் ஊழல் விசாரணைக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியா செலவழிக்க முடியும்?

கோச்சடையான், பாபா போல வெற்றி பெறுமா?
அட்ரஸ் குடுங்க, ஆட்டோ அனுப்பறேன்!

Anonymous said...

கேள்வி: நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார்?
பதில்: கோயம்பேடுக்கு வழி தெரியாது.
\----
பீரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது?
ராசா ஜாமீன்ல் வந்தா அமைச்சராகிடுவார்,
------
பாபா போல கோச்சடையான் வெற்றி பெறுமா?
பதில்: ஒரு கள்; இரண்டு கண்ணடி
--மிக மிகப ஒருத்தமான் சரியா அர்சியல்வாதியைப் போல் பதில் தந்திருக்கிறேன்.
-கபாலி

வெளங்காதவன்™ said...

கேள்வி: நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார்?

கலைஞர் எழுத்தாளரா?

கேள்வி:பீரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது?

அந்தக் காலத்துலயே ராஜீவ் சுவிஸ்ல வச்சிருந்தது 800 கோடியாம். அம்மாடியோவ்!

கேள்வி:பாபா போல கோச்சடையான் வெற்றி பெறுமா?

அரசியலுக்கு வருவதைப் பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது- பவர் ஸ்டார்

வவ்வால் said...

// 3) கோச்சடையான் பாபா போல வெற்றி பெறுமா ? //

திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய மெஹா ஹிட் படம் என்று ஏதேனும் சேனலில் வெற்றிகரமா ஓடும் :-))

(சரியான விடை: தயாரிப்பாளர் சௌந்தர்யாவுக்கு லாபம் கிடைக்கும்)

மூன்றாவது பதில் இது.

jaisankar jaganathan said...

//கோச்சடையான் பாபா போல வெற்றி பெறுமா ?
//

கண்டிப்பா

Anonymous said...

போபோர்ஸ் பிரசங்கி ஊழலை விசாரிக்க இருநூற்று ஐம்பது கோடி செலவானதாக ஊடகங்களில் செய்தி உண்டு. ஆனால் இது எந்த அடிப்பசையில் சொல்லப் படுகிறது என்று தெரியவில்லை
--பணிவரையன்

Prabu said...

1. நக்மாவை பேட்டி எடுத்த எழுத்தாளர் யார் ?

ஓ! இப்ப எழுத்தாளர்கள் இந்த வேலைல்லாம் செய்ய அரம்புச்சுடாங்களா?

2. பிரங்கி ஊழல் விசாரணைக்கு அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது ?

"பிரங்கி" ஊழல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,
நான் கேள்வி பட்டது "பீரங்கி" ஊழல் மட்டும் தான்

3. கோச்சடையான் பாபா போல வெற்றி பெறுமா ?
என்னது பாபா வெற்றி படமா?
அட்ராசக்கை
அட்ராசக்கை
அட்ராசக்கை