பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 17, 2012

ஏன் காக்கா பிடிக்க வேண்டும் ?

இன்று தினத்தந்தியில் வந்த செய்தி:

குமரி மாவட்டம் தமிழ்ராணி என்பவர் உறவினர் ஒருவருக்கு கொடுப்பதற்காக 1 நெக்லஸ், 1 பிரேஸ்லெட், 3 கம்மல் என 5 பவுன் தங்க நகையை ஒரு காகிதத்தில் பொதிந்து, சிறு பார்சல் கட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மாடியில் உலர போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு புறப்பட்டார். புறப்படும்போது, நகை பார்சலையும் கையில் எடுத்து சென்றார். மாடி சுவரில் நகை பார்சலை வைத்துவிட்டு துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

அங்கு இரை தேடி வந்த ஒரு காகம், பார்சலை தின்பண்டம் என கருதி அதை எடுத்துக் கொண்டு பறக்க தொடங்கியது. இதைக்கண்ட தமிழ்ராணி அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

உடனே, அருகில் நின்றவர்கள் காகத்தை துரத்தி சென்றனர். சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு ஓட்டு வீடு கூரையில் காகம் அமர்ந்தது. உடனே, காகத்தை பின்தொடர்ந்து வந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களால் காகத்தை பயமுறுத்தி விரட்டினர். இறுதியில் காகம் நகையை விட்டுவிட்டு பறந்து சென்றது.

காகத்தை விரட்டி சென்றவர்கள் நகை பொட்டலத்தை மீட்டு தமிழ்ராணியிடம் ஒப்படைத்தனர்.

இதனால் காக்கா பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். பிடிக்க முடியவில்லை என்றால் அட்லீஸ்ட் கல்லால் அடிக்கவாவது செய்ய வேண்டும். எ.அ.பாலாவை பலர் பின்னூட்டதில் அடிப்பது கூட இதனாலோ என்னவோ யார் கண்டது :-)

15 Comments:

Unknown said...

ஏன்பா கிரிக்கெட்டுக்கு சம்பந்த்மே இல்லாத இடத்துல பாலாவ இழுக்குறீங்க. பாவம்ல அவர்

முத்தரசு said...

காக்கா பிடிப்பது / அடிப்பதுக்கு பின்னால இம்ம்புட்டு விடயம் இருக்கா - பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

bala = kaakkaa

Vigna said...

// மாடி சுவரில் நகையை வைத்த அம்மணி..//
காக்காவ விடுங்க. இவங்கள ஏன் இன்னும் சுனாமி தூக்கல?

Anonymous said...

இட்லியப்பா வடையப்பா,

பாலா எழுதுவது
அறிவுக்கு அப்பாலா?
இப்பாலா?

நீங்கள் இப்படி அவரை நோண்டுவது
நட்பாலா?
கடுப்பாலா?

கௌதமன் said...

எ அ பாலா கிரிக்கட் விமரிசனம் நன்றாக இருக்கின்றது. மனதில் பட்டதை, 'பட்'டென்று எழுதுகிறார். ஆனால் இவர் எழுத வந்தாலே ஒரு கும்பலா வந்து ஏன் இவரை குமுக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை!

Unknown said...

காக்காவிற்கு நகை வெறும் பொட்டலம் தான் மனிதர்கள் தான் பாவம் நகையை எண்ணி எவளோ சிரமப்பட்டு உள்ளனர்..

Selva said...

// எ அ பாலா கிரிக்கட் விமரிசனம் நன்றாக இருக்கின்றது. மனதில் பட்டதை, 'பட்'டென்று எழுதுகிறார். ஆனால் இவர் எழுத வந்தாலே ஒரு கும்பலா வந்து ஏன் இவரை குமுக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை! //

Repeattu

enRenRum-anbudan.BALA said...

//kg gouthaman said...

எ அ பாலா கிரிக்கட் விமரிசனம் நன்றாக இருக்கின்றது. மனதில் பட்டதை, 'பட்'டென்று எழுதுகிறார். ஆனால் இவர் எழுத வந்தாலே ஒரு கும்பலா வந்து ஏன் இவரை குமுக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை!
//

ஏதோ ஒரு ஆதார துவேஷம் அனானியாக வந்து வெறுப்பைக் கக்கும் மிகச் சிலருக்கு! தங்கள் கருத்துக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

//இட்லியப்பா வடையப்பா,

பாலா எழுதுவது
அறிவுக்கு அப்பாலா?
இப்பாலா?

நீங்கள் இப்படி அவரை நோண்டுவது
நட்பாலா?
கடுப்பாலா?
//
இப்படி கவிதை மூலம் நீங்கள் என்னை பந்தாட நான் என்ன ஃபுட்பாலா ;-)

enRenRum-anbudan.BALA said...

//jaisankar jaganathan said...

ஏன்பா கிரிக்கெட்டுக்கு சம்பந்த்மே இல்லாத இடத்துல பாலாவ இழுக்குறீங்க. பாவம்ல அவர்
//

தங்கள் மிகுந்த கரிசனத்துக்கு நன்றி :-)

kothandapani said...

'என்றென்றும் அன்புடன்' என்று எழுதுவதாலே என்னவோ 'எப்போதும் அனானிகள்' இவரை கடித்து கொதுறுகின்றர்களோ

சித்தார்த் said...

பாலாவின் விமர்சனத்தை படிக்கும் போது சிறு வயதில் கிராமத்தில் வெள்ளந்தியான நண்பர்களுடன் மேட்ச் பார்த்த அனுபவம் வெளி நாட்டில் இருக்கிற எனக்கு இப்போ கிடைக்கிறது... நன்றி பாலா ...Keep it up.

. சித்தார்த்

ஸ்ரீராம். said...

இந்தப் பதிவுக்கு சம்பந்தப்பட்ட கமெண்ட் இரண்டு மட்டுமே....!!!!

enRenRum-anbudan.BALA said...

Selva, Siddharth, Kothandapani,

தங்கள் கருத்துக்கு நன்றி.