பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 02, 2012

அரவான் FIR

அரவான் படம் பார்க்க தூண்டியது இரண்டு - ஒன்று அதன் டிரைலர் மற்றொன்று எஸ்.ரா 'அபத்தம்' என்று எழுதிய அவருடைய விமர்சனம்.
18ஆம் நூற்றாண்டுக் கதை என்று ஆரம்பிக்கும் காட்சியில் பசுபதி வானத்தில் நட்சத்திரத்தை பார்த்து களவு செய்ய முடிவு செய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. பிரியட் படம் என்ற எண்ணம் படம் பாக்கும் போது கொஞ்சம் கூட வரவில்லை.
முதலில் களவு செய்வதை காண்பிக்கும் காட்சிகள் அருமை... நாமும் அவர்களுடன் சேர்ந்து களவு செய்வது போன்ற எஃபெக்ட்!

ஆதியின் உடல் கட்டு இந்த படத்துக்கு ஒரு பிளஸ். அவர் வந்து நுழைந்தவுடன் அவரை சுற்றி ஏதோ ஒரு பிளாஷ் பேக் இருக்கு என்று நமக்கு தெரிந்தாலும், திரைக்கதையில் அதை நமக்கு சொல்லும் விதம் பிரமாதம். சில இடங்களில் கொஞ்சம் தோய்வு இருந்தாலும், காட்சி அமைப்பு மற்றும் சில திருப்பங்களினால் அவை மறந்து போகிறது. பரத் மரணமும் அதற்கு பிறகு ஆதி அதை கண்டுபிடிக்க முயல்வதும் 'பலி முடிச்சை' கழட்ட கழட்ட யார் என்ற முடிச்சுக்களும் அவிழ்கிறது

ஒளிப்பதிவு இந்த படத்தின் அடுத்த ஹீரோ. பல இடங்களில் இயற்கையை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்கள். 100 கோட்டை நெல் வரும் காட்சியை சுற்றி ஒரு வரண்ட பூமியை காமிக்கும் இடங்கள் அருமை. விபச்சார விடுதியில் கண்ணன் பாடல் பாடும் அந்த விபச்சாரி வரும் போது படம் 'கொலை வெறி' நூற்றாண்டுக்கு வந்துவிடுகிறது. ஏனோ அது வரை இருந்த கலர் டோன் மறைந்து போய் பளிச்சென்று படம் வருவது நமக்கு ஒரு ஜெர்க்.

பாலுமகேந்திரா ஹீயோயின் மாதிரி இருக்கும் தன்ஷிகா இந்த படத்துக்கு அடுத்த பிளஸ். ஜாக்கெட் இல்லாத காஸ்டியூம் நன்றாகவே பொருந்துகிறது இவருக்கு. டப்பிங் குரல் மைனஸ். காதல் காட்சியில் கூச்சமே இல்லாமல் நடித்திருக்கிறார்!. பசுபதி இந்த படத்தில் கிட்டத்தட்ட ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.

இசை மட்டும் தனியாக தெரியாதவாறு படத்துடன் சேர்ந்தே செல்கிறது. இந்த மாதிரி இசை அமைப்பது உண்மையிலேயே கஷ்டம் என்று நினைக்கிறேன்.

படத்தில் சில காட்சிகள் இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம் என்பதை தவிர, படம் நிச்சயம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று சிபாரிசு செய்கிறேன். வசந்தபாலன் டீமுக்கு வாழ்த்துக்கள்.

படம் முடிந்த பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மரண தண்டனையை ரத்து செய்து விட்டது. இன்னும் உலகில் உள்ள 83 நாடுகள் அதை அமலில் வைத்திருக்கிறது. என்ற பிரச்சாரம் இந்த படத்துக்கு தேவை இல்லை. ஊர் மக்கள் பலிக்கும் அரசாங்க மரண தண்டனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இட்லிவடை மார்க் - 6.5/10


கூடுதல் கதை: வசந்தபாலன் என்று டைட்டிலில் வருகிறது இது நம்மூர் இலக்கியவாதிகள் கண்களில் படாமல் இருக்க வேண்டும்!

14 Comments:

மோகன் குமார் said...

//ஊர் மக்கள் பலிக்கும் அரசாங்க மரண தண்டனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.//

Excellent. No other review mentioned it. Good catch Idli vadai !

Indian's Voice said...

IdlyVadaiயின் கூர்மையான அறிவுக்கு எனது வணக்கங்கள். அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து விமர்சம் செய்யும் அழகே தனி.

வசந்தபாலனின் முயற்சிகள் என்றுமே நம்மை ஈர்க்கும். வெள்ளித்திரையில் மட்டுமே காண வேண்டிய திரைப்படமாக என்னை ஈர்க்கிறது. உங்களைப்போன்ற மனிதர்களால் தான் தமிழ் சினிமா வளருகிறது.

http://thevoiceofindian.blogspot.com/

நன்றி.

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

விமர்சனத்தை மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்...

சரத்சந்திரன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல திரை விமர்சனம். வாழ்த்துக்கள்.
இட்லி வடை திருந்தி விட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லை..!
சன் பிக்ச்சர்ஸ் / ரெட் ஜயன்ட் /க்ளவுட் நைன் (பெயர்களில் ஒன்று கூட தமிழ் இல்லியே )நிறுவனங்கள் தயாரித்திருந்தால் விமரிசனம் திசை மாறியிருக்கும் என்பது கண்கூடு..!

ராம்லக்ஷ்மண சாஸ்திரி said...

<< இட்லி வடை திருந்தி விட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லை..!
சன் பிக்ச்சர்ஸ் / ரெட் ஜயன்ட் /க்ளவுட் நைன் (பெயர்களில் ஒன்று கூட தமிழ் இல்லியே )நிறுவனங்கள் தயாரித்திருந்தால் விமரிசனம் திசை மாறியிருக்கும் என்பது கண்கூடு..! >>

இட்லி வடையைப்பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். கழகங்கள் மாவட்டச்செயலாளரை விட்டு அறிக்கை விடுவது போல, யாரையாவது விட்டு கன்னா பின்னா வென்று சோ மாதிரி எழுதச்சொல்வார். ரொம்ப நேர்மையா மஞ்சள் கமென்ட் போட்டு பாவ மன்னிப்புச்சீட்டு வாங்கி விடுவார்.
ப்ளாக் உலகில் இந்த மாதிரி அறிவு ஜீவி சாணக்யங்கள் சர்வ சாதாரணம். நீங்க இட்லி வடைக்கு புதுசா சரத்சந்திரன் ( நீங்க ஒன்னும் கலைஞர் டிவி சரத் இல்லியே)

Subramanian said...

Dear IV,

The review was a true assessment of the film. The film did sag a bit in the first half but made up for it in the second half. A different film but good. Definitely worth a watch on the big screen.

Anonymous said...

வசந்த பாலன் நல்ல இயக்குநர்தான்... நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆறாத தாகம் கொண்டவர்தான். தன்னை வருத்திக் கொண்டு படமெடுப்பதிலும் அவர் சிறந்தவரே. ஆனால் நினைவிருக்கட்டும், தன்னைத் தானே வருத்திக் கொண்டு சினிமா பார்க்க வேண்டும் என்ற தலையெழுத்து ரசிகனுக்கு இல்லை!

Anonymous said...

Not upto the mark.In my point of view this movie is just average. Music and Graphics work is very poor. The length of the movie should be reduced.

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் சூப்பர்.

இப்படிக்கு
மாதவன்

Anonymous said...

Capital punishment abolished in Britain in 18th century? Is this a typo? Capital punishment was in force in Britain until 20th century

நல்லூரான் said...

http://www.athishaonline.com/2012/03/blog-post.html

my comment:

18ம் நூற்றாண்டு தமிழைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே.!
இப்போ வார மதுரை படங்களில் கூட நல்ல மண்மொழி பேசுகின்றனர்.
இந்தப் படத்தில் தன்ஷிகா பேசும் வசனம் "உன்ன எனக்குப் ப்டிச்ருக் டா" (பிடிச்சிருக்குடா அல்ல)..
நீங்கள் சொன்னது போல passion for christலிருந்து சிலுவை சுமக்கும் காட்சிகளும், அருவியில் குதிப்பது மண்டை உடைவது போன்ற காட்சிகளை apocalypto லிருந்தும் சுட்டிருக்கிறார்.

apocalyptoன் பலி சீனில் வரும் அதே பின்னணி இசை இங்கும் வருகிறது.

காவல் கோட்டம் நல்ல நாவல் ... அதில் மாயாண்டி-சின்னான் கதை உணர்ச்சி மிக்க நல்ல சிறுகதை ...
வஸந்தபாலன்,அங்காடித் தெரு மூலம் கிடைத்த நல்ல பேரை இதில் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை.
மார்க்கெட்டிங்குக்காக மரண தண்டனையையும், பலிச் சடங்கையும் போட்டுக் குழப்பி உள்ளார் ..
climax ல் சீக்கிரம் சின்னானை வெட்டி கதையை முடிங்கப்பா என்று ஆகி விட்டது .
கடைசியில் சு.வெங்கடேசனை தான் பலி கொடுத்து விட்டனர்.

எஸ். இராமகிருஷ்ணனுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும்!!

Anonymous said...

அரவானை அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு என்கிறாரே இந்த விமர்சனத்தில்.

http://www.tamilhindu.com/2012/03/aravaan-film-review/

Anonymous said...

good attempt in trying to portray life of tamil people who lived long back.It is not a entertaining movie.

Anonymous said...

Not an entertaing tamil movie.But definitely a different tamil movie.