பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 15, 2012

கொலைக்களம் - பத்ரி சேஷாத்ரி

இங்கிலாந்தின் ‘சானல் 4’ சில மாதங்களுக்கு முன்னர் Killing Fileds என்ற ஆவணப் படத்தை வெளியிட்டது. அதில் இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பான பல சான்றுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து நேற்று Killing Fileds 2 என்ற இரண்டாவது ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. இதில் மேலும் பல சான்றுகளும், முக்கியமாக பிரபாகரனின் 12 வயதாகும் இளைய மகன் பாலச்சந்திரனைச் சுட்டுக் கொல்லப்பட்டதும், உள்ளன.


இந்த ஆவணப்படங்களில் காட்டப்பட்ட விஷயங்கள் முற்றிலும் புதுமையானவை அல்ல. போர் இப்படித்தான் நடந்திருக்கும் என்று தமிழக மக்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். இந்திய ஆட்சியாளர்களுக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கூடத்தான். இந்திய அரசின் முழுமையான ஆதரவுடன்தான் இந்தப் போரே நடைபெற்றது. இந்தியா, இலங்கை ராணுவத்துக்குப் படை உதவி, தகவல் உதவி, லாஜிஸ்டிக்ஸ் உதவி, பயிற்சி ஆகியவற்றை அளித்தது.

இப்போது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை தன் போர்க்குற்றங்கள்மீது விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதற்கு இந்த இரு ஆவணப்படங்களும் மனித உரிமை அமைப்புகள் உருவாக்கியுள்ள ஆவணங்களும் ஐ.நாவின் சொந்த அறிக்கையும் வலு சேர்க்கின்றன.

இங்கு பிரச்னை இருவேறு தளங்களில் உள்ளது. ஒன்று அரசுகள், கட்சிகள் சம்பந்தப்பட்டது. இரண்டாவது பொதுமக்கள் சம்பந்தப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவும் இலங்கையும் ஒரே தரப்பில் இருந்தன. அதனால், இப்போது இந்தியாவால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடியாது. அதற்கு இந்தியா ஏதேதோ சாக்கு சொல்கிறது. இந்தியாமீது காஷ்மீர் அல்லது வடகிழக்கு தொடர்பாகப் பிற நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தால் என்ன செய்வது என்கிறது இந்தியா. கொண்டுவந்தால் என்ன பிரச்னை? இந்தியா மனித உரிமைகளை மீறியிருந்தால் பிற நாடுகள் இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது சரிதானே? எல்லாவற்றையுமே ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னை என்று சொல்வது இன்றைய உலகில் சாத்தியமே இல்லை. இதைப் புரிந்துகொள்ளாத இந்தியா தன் தலையை மணலுக்குள் இறுகப் புதைத்திருக்கிறது.

தமிழகக் கட்சிகளுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை. திமுகவின் கலைஞர் கருணாநிதிக்கு போரின்போது என்ன நடந்தது என்று தெரியவே தெரியாதா? அவருடைய மனம் திடீரென இளகி, கசிந்து உருகுகிறது. கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கிறார்கள். அஇஅதிமுகவின் ஜெயலலிதா ஏற்கெனவே ஈழத்தமிழர்களைக் காக்க வந்த தாயாக அவதாரம் செய்துவிட்டார். ஆனால் இவர்களுடைய கூக்குரலுக்கு இந்திய வெளியுறவுத்துறை செவி சாய்க்காது.

அமெரிக்கா இதில் என்ன ஆதாயத்தை எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை. அவர்களுக்கும் போரின்போது என்ன நடந்தது என்பது நன்கு தெரிந்ததுதான். ஈராக் முதல் ஆஃப்கனிஸ்தான் வரை இதுபோன்ற பலவற்றை அவர்களே நேரிடையாகவே செய்திருக்கிறார்கள்.

***

இந்த இரண்டாம் ஆவணப்படத்தில் ஓரிடத்தில் (இந்தியா, இலங்கை அல்லாத நாட்டின்) ஒரு பெண்மணி முதல் ஆவணப்படத்தைப் பார்ப்பதுபோன்ற காட்சி வரும். அதைப் பார்க்கும் அவருடைய முகத்தில் ஒரு கலக்கம். கண்களில் கண்ணீர். அதிர்ச்சி. முதல் ஆவணப்படம் காட்டப்பட்டபோது பிரிட்டன், ஆஸ்திரேலியா முதற்கொண்டு உலகின் பல நாடுகளில் மக்களிடையே பெரும் தாக்கம் இருந்தது. என் கணிப்பில் இந்தியாவில், தமிழகம் தவிர, அந்த அளவுக்குத் தாக்கம் இல்லை. தமிழகத்திலும்கூட, இந்தப் பிரச்னை தமிழ் பேசும் மக்கள் சார்ந்தது என்பதால்தான்.

இதற்கு என்ன காரணம்? மனித உரிமை பற்றியும் மனித சுதந்தரம் பற்றியும் இந்தியர்களுக்கு இன்னமும் சரியான உணர்வும் அறிவும் இல்லை. மேலை நாடுகளின் மனித உரிமை என்ற கொள்கை பொதுமக்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ, எண்ணற்ற மக்கள் ஏதோ ஒருவிதத்தில் ஆதிக்கக் கும்பல்களாலும் அரசாலும் தொடர்ந்து வதைபட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். இதனை எதிர்த்துப் போராடி நிர்வாகத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மாற்றம் கொண்டுவருவது எப்படி என்று இந்தியர்களுக்குத் தெரியவில்லை. கூடவே பெரும்பாலான பலர், பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஆதரிக்கவே செய்கின்றனர்.

உதாரணமாக, என்கவுண்டர் என்பதை இந்தியப் பொதுமக்கள் பெருமளவு ஆதரிக்கின்றனர். சிறு குழந்தைகளை வன்கலவி செய்து கொன்றவன், கடத்திச் சென்று கொலை செய்தவன் என்று ஆரம்பித்து வங்கிக் கொள்ளையர்கள் வரை, ‘போட்டுத் தள்ளு!’ என்று சொல்ல மக்கள் அஞ்சுவதில்லை. போஸ்டர் அடித்துக் கொண்டாடுகிறார்கள். தமக்கு வேண்டியபடி சட்டத்தை வளைத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்பது இந்திய வாதம். இந்த மனோபாவம் பல மேலை நாடுகளில் இருப்பதில்லை. அப்படிப்பட்ட நாட்டின் மக்கள்தான் மனித உரிமைகளை முன்னெடுக்கிறார்கள். அவர்களிடம் பொதுவாக சந்தர்ப்பவாதம் இருப்பதில்லை. அதுபோன்ற பண்பட்ட ஒரு சமூகமாக இந்தியச் சமூகம் மாறவேண்டும்.

அப்படி மாறாதவரை, Killing Fileds (1|2) போன்ற ஆவணப் படங்களால் இந்தியாவில் பெரும் மாறுதலை ஏற்படுத்திவிட முடியாது. ட்விட்டரில் மூத்த இந்திய பத்திரிகையாளர்கள்கூட விடுதலைப் புலிகள் இப்படிப்பட்டவர்கள், அப்படிப்பட்டவர்கள் என்கிறார்கள். விடுதலைப் புலிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஒரு போரில் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு ராணுவம் எவ்வளவோ செய்திருக்கலாம். சிறு குழந்தைகளைக் கொல்வது, செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து பெற்ற தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தி குண்டுபோட்டு அப்பாவிகளைக் குறிவைத்துக் கொல்வது, வெள்ளைக்கொடி ஏந்திச் சரணடைய வந்தவர்களைக் கொல்வது, பெண் போராளிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்வது போன்ற போர்க்குற்றங்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது. அப்படித் தொடர்ந்து நியாயப்படுத்துபவர்களுக்கு மனித உரிமை என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையாக உள்ளது.

சுற்றியுள்ள நண்பர்களிடம் பேசும்போது, இந்தப் பிரச்னையின் தீவிரம் இன்னும் அதிகமாகவே புரிகிறது. இந்தியாவில் மாற்றத்தைச் சட்டென உருவாக்கிவிட முடியாது. இரண்டு மூன்று தலைமுறைக்குள்ளாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட நாம் முயற்சி செய்யவேண்டும்.

- பத்ரி சேஷாத்ரி
( http://www.badriseshadri.in/ )

24 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

முற்றிலும் சரி. ஒரு பனிரெண்டு வயது பாலகனை இம்மாதிரியாக அரக்கத்தனமாக தாலிபன்கள் கூட கொல்வார்களா என்பது சந்தேகமே.

இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்களுக்காகக் கொந்தளிக்கும் அதே வேளை, விடுதலைப் புலிகள் தங்களது ராணுவத்திற்காக சிறார்களைப் பயன்படுத்தியதும், கடைசிக் கட்டப் போரின்போது அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதையும், பலர் விவாதிக்கத் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விடை சொல்வார்தான் எவருமிலர்.

பாலச்சந்திரனின் பெற்றோர் உயிருடனிருந்தால் என்ன வேதனை அடைந்திருப்பார்களோ, அதே அளவு வேதனையை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெருந்தலைகளைக் காக்க வேண்டி உயிர்த் தியாகம் செய்த சிறார்களின் பெற்றோர்களும் அனுபவித்திருப்பர் என்பதை புலி அனுதாபிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

jaisankar jaganathan said...

40,000 தமிழர்கள் இறந்த பின்பும் யதிராஜ சம்பத் குமர் இப்படி எழுதுவார் என்று நினைக்கவில்லை. அவருக்கு தென்கலை ஐய்யஙகார் இறந்தால் மட்டுமே புரியும் போல இருக்கு

யதிராஜ சம்பத் குமார் said...

http://www.un.org/apps/news/story.asp?NewsID=9533&Cr=child&Cr1=soldiers

http://www.hrw.org/news/2004/11/09/sri-lanka-tamil-tigers-forcibly-recruit-child-soldiers

http://www.spur.asn.au/childwar.htm

யுனிசெஃப்லயும் தென்கலைப் பார்ப்பான்கள் இருப்பாங்க போலருக்கு ஜெய்சங்கர்.

Anonymous said...

Tamils all over the world are concerned on 1. any meaningful rehabilitation by the displaced Tamils by the Sri Lankan Govt. There are reports that even the assistance offered by India has not been used to the extent desired, and 2.There has never been in the post war period any effort to get reconciled with the aspirations of the Tamil people.
In these circumstances, the resolution by the USA offers some hope and solution so as to compel the Sri Lankan Govt to look into areas where it should act decisively, honestly and transparently.
It is baffling why India should feel shy of backing the efforts of Unites States in this direction. The reasons adduced so far are not convincing. At best, the Govt is not prepared to come out with what exactly the compulsions are in siding with those who sponsor the resolution. One thing however is very clear that it cannot be as the Foreign Minister so subtly speaks that the Indian Govt looks forward to a good dialogue between the Tamil groups and the Govt paving way for a lasting solution. On the other hand, it appears that the Indian Govt would not want the Govt of Sri Lanka also to go a little hostile and also be more influenced by countries such as China and Pakistan, whose programmes in SriLanks are already manifest.
Tamils would therefore appeal to the PM to state in plain language why the Govt is fighting shy of shouldering the responsibilities, the Tamils expect of him.

jaisankar jaganathan said...

யதிராஜ சம்பத் குமார் கொஞ்சமாவது புரிஞ்சு எழுதுங்க. இலங்கையும் சிறுவர்களை ராணுவத்துக்கு எடுத்தது. புலிகளை மட்டும் சொல்லுவது தப்பு

Anonymous said...

விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தியமைக்கு எந்த ஆதாரமும் இல்லை. பொதுமக்களே விரும்பி அவர்கள் பின் சென்றனரே தவிர புலிகள் செய்தார்கள் என்று நிருபீக்க ஆதாரம் என்ன? இதுவும் சிங்கள அரசின் ஒரு திட்டமிட்ட பிரச்சாரமே. விடுதலைப்புலிகள் சிறார்களை படையில் சேர்த்தை ஏற்றுக் கொள்கின்றேன். அது அவர்கள் தவறல்ல. சந்தர்ப்பம் அவர்களை அப்படிச் செய்ய வைத்தது. அந்த சீறார்கள் வி,பு அமைப்பில் இருந்த போது பாதுகாப்பாக இருந்தார்கள். வீட்டிற்கு வீடு தேடுதல் வேட்டை என 13 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவரை சிங்கள கொலைவெற ஆக்கிரமிப்பாளன் சுட்டுக் கொன்றானே அப்போது அவர்ள் சிறார்கள் என்று தெரியவில்லையா?

Anonymous said...

Whatever things happened is responsible for both LTTE and Srilankan government. 40,000 people killed in war. Mostly due to air strikes. If one part of land is not control under government. Then government should try to catch by field force not by air force. This is the worst mistake by Srilankan government.

In the war itself, People are used by LTTE as shield. This has been proved by google satellite images on that time. I dont have any link now. As per my history knowledge, it is the first time that one army (they referred them as army) used people as shield. Armless people used as shield for arms people. LTTE, a tamilians, use a sheild as another tamilians.

If one tamilian cannot show mercy with another tamilian, how the same thing you can expect from sinhalese. All of us know, how the psychology / mentality for soldiers. Inside the war field, you cant expect one to think. They need victory, victory, victory only. They can do anything for their victory. Inside the warfield, man is turned to wild.

I am not defending the srilankan government. But here all are forgot the mistakes from LTTE. We need to get equal rights for srilankan tamil people with sinhalaese. Separate Eezham is not at all possible. They are just shouting due to losing mentality. But our tamil people should take them to positive side and try to get equal rights from srilankan government.

Wholeheartedly, Am wellwisher for Srilankan Tamils. Even if you dont think so, dont waste your time to blame me. Try to do some positive things for srilankan tamils.

ravi-chennai

Anonymous said...

சானல் 4 வீடியோவின் பாகம் 1 மற்றும் 2 இரண்டும் விடுதலைபுலிகளின் மனித உரிமை மீறல் பற்றியும் பேசுகின்றன. குறிப்பாக முதல் பாகத்தில் ஒருகாட்சியில் இந்த கொலைகளத்திலிருந்த தப்பி ஓடிய அப்பாவி ஈழத்தவர் மீது வி.பு கள் துப்பாகி சூடு நடத்தியதாக காட்டுகிறார்கள். இரண்டாம் பாகத்தில் விடுதலைபுலிகள் ஒரு டெர்ரிஸ்ட் அமைப்பு என்பதினால் அவர்களைவிட ஓரு சட்டபூர்வமான அரசின் ராணுவத்திற்கு பொறுப்பு அதிகம் என கூறுகிறார்கள். இது சரிதான். ஆனால் தமிழரின் உயிரிழப்பில் புலிகளின் பங்கு குறித்து பேசாமல் வீரவணக்கம் வைத்து பலர் தமாஷ் பண்ணுகிறார்கள். இவ்வளவு அழிவிற்கும் புலி தலைவர்கள் பதவி வெறி மற்றும் முட்டாள்தனமும் ஒரு காரணம். அதற்கு அவர்கள் தண்டனை பெற்றுவிட்டார்கள். இனி ராசபட்சேயும் அவர் ராணுவமும் பதிலளித்தே ஆக வேண்டும்.


சானல் 4 வீடியோப்படி ஐநாவும் அமெரிக்காவும் போரின் கடைசி நாட்களில் நடை பெற்ற அழிவு குறித்து செயற்கோள் மூலம் தகவல் பெற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு இப்போது ஏன் சீன் போடுகிறார்கள் எனவும் சந்தேகமாயுள்ளது. மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் எரிவாயுவை தோண்டி எடுக்கும் கான்ராக்ட்-க்கு அமெரிக்க சீன, ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

Anonymous said...

புலிகள் பல தமிழர்களையும், அமிர்தலிங்கம் போன்ற தமிழீழ தலைவர்களையும் கொடூரமாக போட்டுத் தள்ளியபோது யாரும் படமெடுக்கவுமில்லை, இது போல கண்டனம் தெரிவிக்கவும் இல்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். சரியான சமயங்களில் சமாதானத்துக்கு இறங்கி வராமலும், இந்தியாவிலேயே வைத்து முன்னாள் இந்திய பிரதமரை கொடூரமாக கொன்ற கும்பலின் விளைவுகள் பின் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.

இலங்கையை ஆதரிப்பதுதான் இந்தியாவுக்கு புத்திசாலித்தனமானது.

Anonymous said...

புலி ஆதரவாளர்கள் உளறுவது என முடிவுகட்டிவிட்டார்கள். பதிலுக்கு ராசபட்சே உளறினால் இப்படித்தானிருக்கும்.....

//விடுதலைப்புலிகள் சிறார்களை படையில் சேர்த்தை ஏற்றுக் கொள்கின்றேன். அது அவர்கள் தவறல்ல. சந்தர்ப்பம் அவர்களை அப்படிச் செய்ய வைத்தது.//

ராசபட்சே: சிங்கள ராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களை கொன்னதை ஏற்றுக் கொள்கின்றேன். அது அவர்கள் தவறல்ல. சந்தர்ப்பம் அவர்களை அப்படிச் செய்ய வைத்தது.

//அந்த சீறார்கள் வி,பு அமைப்பில் இருந்த போது பாதுகாப்பாக இருந்தார்கள். //


ராசபட்சே: மக்கள் செத்து மடிந்தால் அவர்களுக்கு எல்லா கஷ்டமும் நிவர்த்தியாகிவிட்டது.

Ramesh said...

I seriously doubt anything will come out of this. The international community has failed people in such situations so many times in the last few decades (Cambodia, Croatia, Palestine, Rwanda, for instance). The same story will be repeated. No one will be punished.

Sri Lanka and Rajapaksa enjoy enormous clout in the global stage. Even India, for some reason, doesn't give a damn what happens to Tamils in Lanka.

Maybe I'm just too cynical!

என்.ராமதுரை / N.Ramadurai said...

ஈழப் போர் முடிந்து விட்ட பிறகும் கூட இலங்கை அரசானது மீதி இருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் புலிகளாகவே பார்க்கிறது. முடியுமானால் அத்தனை தமிழர்களையும் மெல்லக் கொல்லத் தயங்காது. உலகில் எவ்வளவோ நாடுகளில் ஓர் இனம் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு இப்போதாவது கடிவாளம் போடாவிட்டால் தமிழர்கள் மிஞ்சுவது சந்தேகமே. மற்ற எந்த நாட்டையும் விட இலங்கையின் அண்டை நாடான இந்தியா இதில் எப்படி நடந்து கொள்கிறது என்பதை உலகம் உன்னிப்பாக கவனிக்கும்.இலங்கையைக் கண்டித்து ஓட்டுப் போட்டால் இலங்கை சீனா பக்கம் சாயும் என்ற கணக்கெல்லாம் தவறு.இலங்கை பின்னர் ஒவ்வொரு தடவையும் சீனா பக்கம் போய்விடுவேன் என்று இந்தியாவை மிரட்டி தனது போக்கைப் பின்பற்றிக் கொண்டிருக்கும்.
ராமதுரை

Anonymous said...

//இலங்கையை ஆதரிப்பதுதான் இந்தியாவுக்கு புத்திசாலித்தனமானது.//

இலங்கை இந்தியாவை செருப்பால் அடித்தாலும்....

Kodumpavi said...

இந்தியா இலங்கையை ஆதரித்தால்.. மனித உரிமை என்பதை புதைத்து விட வேண்டும்.. அதே சமயம் எதிர்த்தால் இந்தியாவிற்கு ஒரு பங்கமும் ஆகாது.. பிரிவினையை ஆதரிக்கவில்லையே போர் குற்றங்களைதானே எதிர்க்கிறது.. அதுவும் அமைதியை விரும்பும் நாடு என்று பாருக்குள்ளே சொல்லி மார்தட்டி கொண்டிருப்பதற்கு அர்த்தம் வேண்டும்.

Subramanian said...

India will abstain from this vote as it always does.Does anyone care a damn for all the human rights violations committed by LTTE.Dont the IPKF peace keeping soldiers who were hunted by LTTE & Lanka army have any human rights.We are always symathetic to the loser.India if it really cares can force Srilanka to treat the remaining tamils humaanely.But to the people in Delhi Tamil people are so far removed that they do not actually care what happens here.

Anonymous said...

பத்ரி கற்றறிந்த ஒரு பன்முக கலைஞர். விபு அமைப்பினர் செய்த எண்ணற்ற கொலை, கொள்ளைகளில் எத்துணை முறை இத்தகைய மனித உரிமையாளர்களின் ஆவணப் படங்கள் வெளியாகின? அப்பொழுதெல்லாம் பத்ரி அவர்களுக்கு இப்பொழுது இருக்கும் அறிவு இல்லாமல் இருந்திருக்கும் என நாமே புரிந்து கொள்ள வேண்டியது தான். விபு ஒரு தீவிரவாத இயக்கம். இந்தியா உட்பட பல நாடுகளில் ஆயுதமேந்தி அப்பாவிகளை கொன்ற இயக்கம்.சர்வதேச, ஐநா விதிமுறைகளையோ, சட்ட விதிகளையோ என்றுமே மதிக்காமல் பண, ஆள் மற்றும் ஆயுத பரிவர்த்தனைகள், கடத்தல்களில் ஈடுபட்ட ஒரு இயக்கம். மக்களில் சிலர் அல்லது பலர் அவர்களது பின்னால் போனதினால், போரில் இறந்ததிருந்தால் அதற்கு மனித உரிமை என்ற கேடயத்தை பயன்படுத்துவதும், அதனை எதிர்ப்பவர்கள் அறிவற்றவர்கள் என்பதும் எத்துணை தூரம் சரியானது என்பது விவாததிற்குறியது. சர்வதேச உதவிக்காக இலங்கை இறைஞ்சிய போது நார்வே தவிர வேறு எவரும் வரவில்லை. இப்போது அந்நாடு ஒரு களையெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது. இறந்தவர்களை கொண்டாடுவதை விடுத்து, இருப்பவர்கள் நன்கு வாழ் வழிமுறைகளை ஆராய்வதே இப்போதைய கடமை. இந்த வீடியோ படம் சிறுவர்களின் சடலத்தினை காட்டுகிறது - புலிகளாலேயே கொல்லப்பட்டிருக்க முடியாதா என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. யார் கொன்றார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை. no-fire-zone-ல் தாக்குதல் நடத்தியது புலிகளா அல்லது ராணுவமா என்பதும் தெரியாது. காண்பிக்கப்படும் வீடியோ ஆவணங்கள் எதையுமே நிரூபிக்கவில்லை.

Senthil said...

First, everyone has to understand clearly that LTTE and Srilankan tamils are two different sets of people. Srilankan government can't torture and kill all Srilankan tamils for the misdeeds of LTTE, a pro-tamil eelam outfit. Ms.Indira Gandhi was assassinated by her own sikh bodyguards due to her Operation Bluestar at Golden Temple, Amristar to kill sikh separatists. In such a case, what is the necessity for Congress (I) party to keep a sikh as PM of India eventhough they constitute just 4% of our total population?. We shouldn't relate the common citizens for the misdeeds of a people group. So, now it's the time for India to show its secular nature to the world.

Anonymous said...

badri,

for once you have written something sensible. happy to read the support from badri, idlyvadai (excl. yathiraj) and most comments.
lets hope and pray that srilankan govt is punished for its warcrimes and shamed and isolated out of the international community. lets hope that rajapakse and his army suffers a worst death and not good death. - kalil

Anonymous said...

badri,

for once you have written something sensible. happy to read the support from badri, idlyvadai (excl. yathiraj) and most comments.
lets hope and pray that srilankan govt is punished for its warcrimes and shamed and isolated out of the international community. lets hope that rajapakse and his army suffers a worst death and not good death. - kalil

ssr sukumar said...

chennai choolaimettil thuppaakki soodu nadaththivittu thappi odiyathu eppadi? thamizh nattil aatchiyil irunthavarkalukku onrume theriyaathaa?Padmanaabaa manaithar illaiyaa?amirthalingam kolai seyyappattathu nyaama??kolai yaar seythaalum athu thandanaikkuriyathe!!!aatchiyil iruppavarkal athu tamilnadu aanaalum delhi aanaalum,sri lanka aanaalum ore mathirithaan irukkiraarkal!!!oru viththiyaasamum illai.ellame thavaruthan!!!ellaarume thandikka pada vendiyavarkale!!!!eppadi enpathuthaan kelvi!!!

VenusMurugesan said...

பெரிய அறிவாளி போல

Anonymous said...

//jaisankar jaganathan said...
யதிராஜ சம்பத் குமார் கொஞ்சமாவது புரிஞ்சு எழுதுங்க. இலங்கையும் சிறுவர்களை ராணுவத்துக்கு எடுத்தது. புலிகளை மட்டும் சொல்லுவது தப்பு//
மிகவும் தவறான தகவல். அப்படி ஒரு குற்ற சாட்டு கூட வந்ததில்லை. புலிகள் பெற்றோரை தாக்கி விட்டு சிறுவர் சிறுமிகளை தூக்கி சென்றது 2009 வரை சாதாரணமாக நடந்த புலி கொடுமைகள்.பொதுமக்கள் பெருமளவில் கொல்லபட வேண்டும் அதன மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதிற்காக புலிகள் மக்களளுக்கிடையில், மருத்துவ மனைகளுக்கு அருகில் இருந்து ராணுவத்தை நோக்கி செல் அடித்தது.ராணுவம் பதிலுக்கு செல் அடிக்கும் போது புலிகளின் திட்டபடி மக்கள் கொல்லபட்டனர்.

Anonymous said...

திரு.Badriseshadri கவனிக்க வேண்டியது புலிகள் அழிக்கபட்டதினால் இன்று இலங்கையில் தமிழ் பிள்ளைகள் புலி பிடித்து விடும்என்ற பள்ளிக்கு பயமில்லாமல் போக முடிகிறது. புலிகளின் குண்டுகள் வெடித்து யாரும் இறக்கவும் இல்லை உடல் ஊனமாகவும் இல்லை. புலிகளின் போர் வெறியினால் பாதிக்கபட்ட மக்களுக்கு மறு வாழ்வு அளிப்பதே அவசிய தேவை. அதை பற்றி தமிழ்நாட்டில் அக்கறைபடாமல் புலி அழிக்கபட்ட மிக சிறந்த செயலுக்கு பழிவாங்கும் புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைக்கு துணை போவது நியாயம் அற்ற செயல்.
உலகில் இப்படி ஒரு பிரசாரம் நடந்திருக்குமா தெரியவில்லை புலி ஆதரவாளர்களின் இனவெறி பொய் பிரசாரங்கள் தூள் பறக்கிறது.

saravanan said...

புலிகளும் மக்களுக்கு தீங்கிழைத்தார்கள் என்று இங்கே குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அவர்களின் ஊகத்தின் பேரிலேயே எழுதுகிறார்கள். உண்மையில் ஈழத்தில் வாழ்ந்த - இன்னும் முள்வேலி கம்பிகளின் பின்னே வாழும் மக்களே - இதுபற்றி கூறத் தகுதியானவர்கள்.

எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால் மக்கள் ஆதரவில்லாமல் வெறுமனே மக்களை மிரட்டி வீட்டுக்கு ஒரு பிள்ளையை பறித்துக் கொண்டு சென்று 20 ஆண்டு காலம் ஈழப்பகுதியை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்க முடியாது.

அவர்கள் தீவிரவாத இயக்கம் என்பதில் சந்தேகமில்லை...ஆனால் ஒரு ஒழுங்குமுறைக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.