பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 22, 2012

கோயிலில் அடித்த மணி

பிஜேபி ரொம்ப கட்டுக்கோப்பான கட்சி, அதனுடைய வேர் ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லி அடித்த ஜல்லி எல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. தற்போது மோடியை அதிலிரிந்து நீக்கிவிட்டால் இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டன் என்று தன்னை சொல்லிக்கொண்டு எடியூரப்பா மீண்டும் கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்த லூட்டியை பார்த்து அத்வானியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் மன்மோகன் சிங்கை டம்மி என்று எப்படி கேலி செய்யலாம் ? எடியூரப்பா என்ற விஷ செடியை முன்பே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டுவிட்டார்கள். சதானந்தா கௌடா ஒரு முறை முதலவர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டு எழுந்துக்கொள்ள மறுக்கிறார். இந்நிலையில், உடுப்பி எம்.பி. தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ. வேட்பாளர் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதில் எனக்கு மகிழ்ச்சியே. இந்த தோல்வி எடியூரப்பாவிற்கு ஒரு விதத்தில் நல்லதாக போய்விட்டது. கர்நாடகா மாநிலத்தை கவனிப்பதை தவிர்த்து இப்போது மொத்த பிஜேபியினரும் ஒன்று ஊருக்கு வெளியே ஏதாவது ஹோட்டலில் இருக்கிறார்கள், அல்லது டெல்லியில் இருக்கிறார்கள். பிஜேபில் இருக்கும் தலைவர்கள் கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிடுபவர்களாக இருந்தால் எடியூரப்பாவை தூக்கிவிட்டு ஒரு நல்ல தலைவரை அங்கே போட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சுரங்க ஊழல் ரெட்டி சகோதரர்களிடம் நிறைய பணம் வேற நன்கொடையாக வாங்கியுள்ளார்கள். ஹிந்து கடவுள்களை கேலி செய்தால் போராட்டம் நடத்தும் இவர்கள், முதலில் தங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்துவிட்டு கோயில் மணி அடிக்க போகலாம்.

சங்கரன் கோவில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே அமைந்திருப்பதால் ஆச்சர்ப்படுவதற்கொன்றுமில்லை. இடைத்தேர்தல் அறிவித்த தினம் துவங்கியே போட்டி இரண்டாமிடத்திற்குத்தான் என்றாலும், கிடைத்த தோல்வியை ஒப்புக் கொள்ளும் பக்குவம் யாரிடமுமே இல்லை. ஆளாளுக்கு ஒரு சால்ஜாப்பு சொல்லி வருகின்றனர். தவிர, விழியைப் புரட்டி, பல்லைத் துறுத்தி, நாக்கை மடித்து, கையை நீட்டி சினிமா பாணி சவால் விட்ட விஜயகாந்த் அன்று சட்டசபையிலேயே தேர்தலில் தனது கட்சியின் கதியை நிர்ணயித்துக் கொண்டுவிட்டாலும், டெபாஸிட்டும் இழந்து, நாலாவது இடத்திற்கும் தள்ளப்பட்டு விடுவோமென்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். இரண்டாமிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட மதிமுக மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டாலும், அவர்களது தோல்வி மற்றைய இருவர்களதை விட கெளரவமானதாகவே நோக்கப்படுகிறது.

அழகிரி வழக்கம்போல் அள்ளி வீசிய ஓட்டு வித்யாசக் கணக்கு இம்முறையும் பலிதமாகவில்லையாதலால், கருணாநிதி, சென்றமுறை அதிமுக பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்ததை நினைவு கூர்ந்து தம்மைத் தாமே ஆறுதல் படுத்திக் கொண்டுள்ளார். பிரசாரம் ஓய்ந்த மறுதினம் ஆளுங்கட்சி சார்பிலும், திமுக சார்பிலும் பண விநியோகம் தாராளமாக நடைபெற்றதாக வைகோ கூறியுள்ளார். மற்றபடி இந்தத் தேர்தல் பற்றியோ, இத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி பற்றியோ ப்ரஸ்தாபிக்க பெரிதாக எதுவும் விஷயம் இல்லை. ஆனால் கருணாநிதி அவர்கள் தமது பிரசாரத்தின்போது வீராவேசமாக பேசிய பராசக்தி பாணி வசனம் ஒன்று இங்கு விஷயமாகிறது. ஜெயலலிதா, அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்று வீரம் பேசியுள்ளார். அரசியல் சட்டத்தை அவமதிக்கவில்லை, வெறும் பேப்பரைத்தானே கிழித்தோம் என்றவர்கள், தீ இல்லை டீ என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்.

காங்கிரஸ் வழக்கம் போல கூட்டணி தொடரும் என்கிறார்கள். ஓரின சேர்க்கை குற்றமாகாது என்று அரசு தரப்பு சொல்லிவிட்டதே!

16 Comments:

Madhavan Srinivasagopalan said...

//"கோயிலில் அடித்த மணி"//

மணிகிட்ட நல்லா அடி வாங்கிட்டு பேச்சைப் பாரு பேச்ச..
இதுக்குத்தான் மணிய கூட்டிக்கிட்டு கோவிலுக்கு போகாதனு அப்பவே சொன்னேன்.

benjamin david said...

மஞ்சள் கமெண்ட்....SUPERB.

kothandapani said...

மோடியை பற்றி நீங்க நியூஸ் போட்ட வேளை ரொம்ப நல்ல நேரம் தான்....
இடைதேர்தலில் பிஜிபி மண்ணை கவ்வி உள்ளது.(ஆமா இடைதேர்தலில் ஆளும் கட்சிகூட தோற்குமா என்ன ) இனிமே அவரும் கோவிலில் மணி ஆட்ட தயார் ஆக வேண்டியதுதான்.

Anonymous said...

I like yellow comment

mak said...

No news for Gujarat by election and feature business(MD) prime minister!!!?

டகிள் பாட்சா said...

என்ன வர வர மஞ்ச கமெண்ட் பச்ச பச்சையான கமெண்டா மாறிக்கிட்டிருக்கு?

jaisankar jaganathan said...

//காங்கிரஸ் வழக்கம் போல கூட்டணி தொடரும் என்கிறார்கள். ஓரின சேர்க்கை குற்றமாகாது என்று அரசு தரப்பு சொல்லிவிட்டதே!//

ரொம்ப கண்றாவியான கமெண்ட். நாளைக்கு டிஎம்கே பிஜெபிகூட கூட்டனி வச்சா என்ன ஆகுறது

ConverZ stupidity said...

இட்லி...மஞ்சள் கமெண்ட் எனக்கு நீல கலரா தெரியுதே...உனக்கு எப்படி... ஹாம்ம்ம்

ConverZ stupidity said...

//jaisankar jaganathan said...

ரொம்ப கண்றாவியான கமெண்ட். நாளைக்கு டிஎம்கே பிஜெபிகூட கூட்டனி வச்சா என்ன ஆகுறது//

பொருத்தமில்லாத கணவன் மனைவி-ன்னு சொல்லலாமா

ConverZ stupidity said...

//kothandapani said...
இடைதேர்தலில் பிஜிபி மண்ணை கவ்வி உள்ளது.(ஆமா இடைதேர்தலில் ஆளும் கட்சிகூட தோற்குமா என்ன ) //

ஸோ, தேர்தல் நேர்மையான முறையில மோடி நடத்தி இருக்கார், நோ திருமங்கலம் பார்முலா...

ConverZ stupidity said...

// kothandapani said...
மோடியை பற்றி நீங்க நியூஸ் போட்ட வேளை ரொம்ப நல்ல நேரம் தான்....
இடைதேர்தலில் பிஜிபி மண்ணை கவ்வி உள்ளது.(ஆமா இடைதேர்தலில் ஆளும் கட்சிகூட தோற்குமா என்ன ) இனிமே அவரும் கோவிலில் மணி ஆட்ட தயார் ஆக வேண்டியதுதான்.//

இப்போ குஜராத்-ல அஜால் குஜால் படம் பார்த்திருக்கானுங்க. இவனுங்க அஜால் குஜால் படம் பார்த்தே கட்சிய காலி பண்ணிடுவானுங்க போல இருக்கே.

mak said...

seen by ajal gujal bit, OMG they didn't try it in assembly. Ayio pavam Bharata Matha?

cho visiri said...

Shree Kothandapani said...
மோடியை பற்றி நீங்க நியூஸ் போட்ட வேளை ரொம்ப நல்ல நேரம் தான்....
இடைதேர்தலில் பிஜிபி மண்ணை கவ்வி உள்ளது.(ஆமா இடைதேர்தலில் ஆளும் கட்சிகூட தோற்குமா என்ன ) இனிமே அவரும் கோவிலில் மணி ஆட்ட தயார் ஆக வேண்டியதுதான்.//

While the defeat in Mansa Bye Election must serve as a caution against a probable "Complancency in taking success in Dec'12General Elections (Gujarat)for granted, one must understand that in Gujarat, in most of the constituencies, Congress would find it difficult to convince any of their members to contest the Election, given the drubbing they got at the hands of Electorate in 2007 Elections.

Secondly, according to TOI, the CM is hoping to get 150 plus seats (out of 182 seats) in what is seen as a walk in the partk for CM.

All these points indicate that there may not be any chance for Congress to wrest power from the present CM. Javing said that, it may be important for Modiji to ensure Local Factionalism however small its magnitude may be.

As a resident of Gujarat I can tell more in due course.

Ganpat said...

@cho visiri..

இந்தியா முழுவதும் பரவலாக சொல்லப்படுவது..குஜராத்தில் மோடி ராம ராஜ்யம் நடத்தி வருகிறார்.அனைத்து மக்களும் மிக சந்தோஷமாக வாழ்கின்றனர்..என்பதே
அதே போல காங்கிரஸ் மத்தியிலும்,மாநிலங்களிலும் தன் செல்வாக்கை வேகமாக இழந்து வருகிறது என்பதும் எல்லாரும் அறிந்ததே!
அப்படி இருக்கையில் குஜராத் இடைதேர்தலில காங்.டெபாசிட் இழ்ந்திருக்கவேண்டுமே?எப்படி வெற்றி பெற்றார்கள்?எங்கயோ இடிக்கிறதே??மன்சா தொகுதியில் எந்த மதத்தினர் மெஜாரிட்டி?
இதற்கெல்லாம் யாருக்காவது பதில் தெரியுமா?

R.Gopi said...

//ஜெயலலிதா, அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்று வீரம் பேசியுள்ளார். அரசியல் சட்டத்தை அவமதிக்கவில்லை, வெறும் பேப்பரைத்தானே கிழித்தோம் என்றவர்கள், தீ இல்லை டீ என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்.//

haa haa haa....

Thaleeeeeeeeeevar appadi thaan solvaar!!! Dont take it seriously....