பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 19, 2012

மூன்று செய்திகள்

1. ஒரு வாரத்துக்கு முன்பு ஞாநி ஓ-பக்கங்களில்
"இன்னும் பத்து நாட்களுக்குள் ஜெயலலிதா யார் பக்கம் என்பது பகிரங்கமாகிவிடும். சங்கரன்கோவில் தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 18 அன்று முடிந்ததும், கூடங்குளம் அணு உலை பிரச்னையில் தில்லிக்கு ஆதரவா, தமிழக மக்களுக்கு ஆதரவா என்பதை ஜெயலலிதா சொல்லியே தீர வேண்டியிருக்கும்" என்று எழுதினார். அதே போல ஜெயலலிதா U Turn அடித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க உடனடி நடவடிக்கை என்று ஜெயலலிதா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல் சமயம் என்பதால் இந்த அறிவிப்பை கொஞ்சம் காலம் தாழ்த்தினார். இந்த முடிவுக்கு சிலருடைய எதிர்ப்பு இருந்தாலும், தமிழ் நாட்டில் பலர் இதை வரவேற்கவே செய்வார்கள். மின்சாரம் என்பது தற்போது எல்லோருக்கும் இன்றியமையாத தேவையாக ஆகிவிட்டது. Carry Bag உபயோகப்படுத்த கூடாது என்று சொன்னாலும் நமது சவுகரியத்துக்கு படித்தவர்களே உபயோகப்படுத்துகிறோம் அது போல தான் இதுவும்.


2. சேனல்-4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் என்ற இரண்டாம் பகுதி படத்துக்கு தமிழ் நாட்டில் எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகள், இலங்கை அரசுக்கும் நடந்த யுத்ததில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழர்கள் தான். இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு சத்ரு தான். டிவிட்டர், ஃபேஸ் புக், வலைப்பதிவு போன்றவற்றில் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டார்கள். மனித உரிமை அது இது என்று பேசினார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மனித உரிமை எப்படி இருக்கிறது பாருங்கள். தமிழ் நாட்டில் மக்களுக்கு சாலையில் கக்கூஸ் கூட இல்லாத போது இவர்கள் எங்கே மனித உரிமை பற்றி சிந்திப்பது ? ஐ.நா தீர்மானதுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் வலைப்பதிவில் பெட்டிஷன் போடுகிறேன் பேர்வழி என்று செய்வது எல்லாம் சுத்த காமெடி. படம் பாருக்கும் போது ஒன்று விளங்கியது - மனிதனிடம் இன்னும் மிருக குணம் மிச்சம் இருக்கிறது.

3. எடியூரப்பா பிஜேபிக்கு Pain in the ... என்பார்களே அதே தான். தன்னை மீண்டும் முதல்வராக்க எடியூரப்பா 48 மணி நேரம் கெடுவிதித்துள்ள நிலையில் ஐம்பது எம்.எல்.ஏக்களை கிட்டத்தட்ட கடத்திக்கொண்டு எங்கோ தங்க வைத்துள்ளார். இதில் சிலர் அமைச்சர்கள். அங்கே இவர்கள் கூத்தடித்தால் மக்கள் பணிகளை யார் கவனிப்பார்கள் ? எதில் என்ன வேடிக்கை என்றால் சதானந்தகவுடா தற்போது முதல்வர் பதவியிலிருந்து கீழே இறங்க மறுக்கிறார். இவர் எடியூரப்பாவின் ஆள் ! பதவி படுத்தும் பாடு. பிஜேபிக்கு உண்மையிலேயே கொஞ்சமாவது ... இருந்தால் எடியூரப்பாவை பிஜேபியை விட்டு வெளியே அனுப்பிவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர்செல்வம் மாதிரி எல்லோருக்கும் அமைவது கஷ்டம்.

குட்டி செய்திகள்:
சச்சின் 100 அடித்துவிட்டார், இனிமேல் திரும்பவும் பாரத ரத்னா கொடுக்க வேண்டும் ஆரம்பித்துவிடுவார்கள். வயதானவர்களுக்கு தான் கொடுப்பார்கள், சச்சினுக்கு கொடுக்கலாம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை ஒரு நாள் உண்ணாவிரதம் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். பிறகு மன்மோகன் சிங் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா அரசு ஆதரிக்கும் என்று சொன்னவுடன் உண்ணாவிரதம் தொடரும் என்றார் பிறகு என்ன நினைத்தாரோ .. உண்ணாவிரதம் ரத்து என்று அறிவித்துவிட்டார். ஐந்து நாள் டெஸ்ட் போட்டியை விட ஒரு நாள் போட்டிக்கு தான் இப்போது மவுஸ் :-)

மின்பற்றாக்குறை அடுத்த ஆண்டு இருக்காது - நத்தம் விஸ்வநாதன்
மின்பற்றாக்குறையா அல்லது மின்சாரமா ?

9 Comments:

Madhavan Srinivasagopalan said...

// ஐந்து நாள் டெஸ்ட் போட்டியை விட ஒரு நாள் போட்டிக்கு தான் இப்போது மவுஸ் :-) //

எந்த உலகத்துல இருக்கீங்க சார்..
அதுகூட ஓல்ட்..
இப்பலாம் டி-ட்வென்டி..
புரியலேன்னா இன்னும் ரெண்டு வாரம் பொறுங்க..
----------------
& எப்பவுமே கம்பியூட்டருக்குத்தான் மவுஸ்..

Anonymous said...

நியாயமாக பார்த்தால் சச்சின் பற்றின உங்கள் கமெண்ட் மஞ்சள் கமெண்டாக இருந்திருக்கனும். மஞ்சள் மகிமை புரியாத ஆளாக இருக்கிறீரே நீர்.

cho visiri said...

@ madavan............
Then does it mean T20 is not a one day match?

kothandapani said...

1 ஜெயலலிதா கூடங்குளத்தை இழுத்து அடித்ததே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத்தான். உதயகுமார் போன்ற ஆட்களோடு அவர் உட்காந்து பேசினதே பெரிய புண்ணியம். இனி உதயகுமார் பட போகும் அவலத்தை அனைவரும் ரசிக்கலாம்.
2 இலங்கையின் கொளைகலங்கள் என்ன கோச்சடையானா..தமிழகத்தில் வரவேற்பில்லை என்று கமெண்ட் போடா. கொத்து கொத்தாக பிணங்கள் விழுவதை ககுசோடு ஒப்பிடுவது வேதனையின் உச்ச கட்டம். ஆமாம் இன்னும் மனிதனிடத்தில் மிருக குணம் உள்ளது.
3 எடியுரப்பவிர்க்கு சதானந்த கெளட ஜெயாவிற்கு சசிகலா மாதிரி...ஜெயா விழித்து கொண்டார் பிழைத்து கொண்டார்.
4 மன்மோகன் புண்ணியத்தில் கருணா தப்பித்தார். இல்லை என்றால் அவருக்கு உண்ணா விரதம் இருக்க ஆந்திராவில் தான் இடம் கொடுத்து இருப்பார்கள் நாம காவல்துறை..

keyven said...

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த கடைசி நாட்களில், இப்படித்தான் கருணாநிதி ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து மெரீனா பீச்சில் போய் படுத்தார். வெறும் 3 மணி நேரமே அந்த உண்ணாவிரதம் நீடித்தது. காலையில் வாக்கிங் போனவர் நேராக பீச்சுக்குப் போய் கட்டிலில் படுத்து விட்டார். கூடவே மனைவி தயாளு அம்மையார், துணைவி ராசாத்தி அம்மையார், மகள் கனிமொழி, திமுக தலைவர்கள் என தடபுடலாக தொடங்கியது போராட்டம்.
ஆனால் 3 மணி நேரத்திலேயே போராட்டத்தை முடித்து விட்டார்கள். மத்திய அரசு ராஜபக்சேவிடம் நேரடியாகப் பேசி விட்டது. போர் நிறுத்தப்பட்டு விட்டது. குண்டு வீச்சு நின்று விட்டது. தமிழர்கள் அத்தனை பேரும் பத்திரமாக உள்ளனர் என்று கூறி பேட்டியளித்து விட்டு கிளம்பிப் போனார் கருணாநிதி.

ஆனால் அதற்குப் பிறகுதான் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொத்து குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்று குவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இப்போதும் ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து அதை தொடங்கக் கூட வாய்ப்பில்லாமல் முடித்தும் விட்டது

Anonymous said...

Poda Idly...

Madhavan Srinivasagopalan said...

@ Chovisiri

Conventionally 'ஒரு நாள் போட்டி' means 50 overs limited cricket match.

What I said is must shorter form of cricket like 'fast-food' (may be 'junk food' but a type of 'food')

R.Gopi said...

//ஐந்து நாள் டெஸ்ட் போட்டியை விட ஒரு நாள் போட்டிக்கு தான் இப்போது மவுஸ் :-)//

காலையில டிஃபன் முடிச்சுட்டு, ஏர் கூலர், ஏசி, பெட்டி, படுக்கை, மெத்தை எடுத்துட்டு பீச் போய் கட்டில் போட்டு மெத்தை விரித்து, மத்யானம் லஞ்ச் ரெடியாகற வரைக்கும் தூங்கிட்டு தன் “உண்ணும் விரதம்” தொடருவதால் - 5 நாள் டெஸ்ட், 1 நாள் போட்டி இவற்றை விட 20/20 போட்டிக்கு தான் இப்போ ரெம்ப மவுசு.....

Kannan said...

எல்லாம் அரசியல்...........இன்னுமா உலகம் உங்களை நம்புது ?????ஐயோ !!! ஐயோ !!!ஐயோ !!!................"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"