பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 09, 2012

டெல்லி வக்கீல்

தன்னை சட்டசபையிலிருந்து 10 நாள் சஸ்பெண்ட் செய்து விட்டதால் தொகுதிப் பணிகளைக் கவனிக்க முடியவில்லை. எனவே இந்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது பழைய செய்தி. ( அவர் வழக்கு தொடர்ந்து 10 நாட்கள் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம் ).

கோர்ட் கேஸ் என்று போய்க்கொண்டு இருக்கிறது... இன்னும் கொஞ்ச நாளைக்கு இது போகும்... கடைசி தகவல் என்னவென்றால் - அந்த வழக்கில் வாதாடுவதற்காக விஜய்காந்துக்கு டெல்லியில் இருந்து வக்கீல் வருகிறார்கள்.

அட்லீஸ்ட் எம்.பி என்றால் டெல்லியிலிருந்து வக்கீல் வரலாம், எம்.எல்.ஏ பதவிக்கு தமிழ் நாட்டில் ஒரு நல்ல வக்கீல் இவருக்கு கிடைக்கவில்லையா ? அட பாவமே!

வழக்கமாக இவர் சினிமாவில் இவர் டெல்லியில் இருப்பார், ஸ்பெஷல் ஆபிஸராக இவரை தமிழ்நாட்டுக்கு வரவைப்பார்கள்.. அது மாதிரி தான் இதுவும் :-)

5 Comments:

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் நன்னாயிட்டுண்டு.

இப்படிக்கு
மாதவன்

Anonymous said...

anonymous கமெண்ட் மொக்கையாயுட்டுண்டு

நாடி நாராயணன் (Nadi Narayanan) said...

டெல்லில இருந்து வக்கீலா ???
அமெரிக்கால இருந்து ஆள இறக்குவாங்க பாருங்க ...எத்தன படத்துல அவரு நாக்க துருத்தி பேசுறார் பாகிஸ்தான் தீவிரவாதிடே அப்டி பேசுவார் ...அந்த பழக்கதோஷதுல பேசியிருப்பார் ...

keyven said...

ஸ்ரீவில்லிபுத்தூர்: லட்சிய திமுகவின் ஆதரவு சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் யாருக்குமே கிடையாது என்று கூறியுள்ள அக்கட்சியின் தலைவரான விஜய டி.ராஜேந்தர் தனது பேச்சின்போது திமுகவை முழுக்க முழுக்க விமர்சித்துப் பேசி தனது மறைமுக நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

Madhavan Srinivasagopalan said...

டெல்லி வக்கீல்... அதுவும் சினிமாவுல வர்றமாதிரி தமிழ் பேசுவாரோ ?

Ps : இதுதான் உண்மையிலேயே மாதவனோட கமெண்டு..