பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 08, 2012

மகளிர் தின அரசியல் பதிவு

மகளிர் தின வாழ்த்துகள் என்று சொல்லி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் இந்த கட்டுரைக்கும் மகளிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவர்கள் இதைப் படித்துவிட்டு சோப், கிரீம் போன்ற வஸ்துக்களை வாங்கப் போகலாம்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. என்னைப் போலவே மற்றவர்களும் அதிகம் கவனித்த இடம் உத்திரப்பிரதேசம். முலாயம்சிங் கட்சி ஜெயித்தபின் உத்தரபிரதேச கவர்னர் ஜோஷியை முலாயம்சிங் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதல்-மந்திரி பதவி ஏற்கப்போவது முலாயம்சிங்கா, அவரது மகன் அகிலேஷ் யாதவா என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது.

முலாயம் சிங் புத்திசாலியாக இருந்தால் தன் மகனை முதல் மந்திரி பதவியில் உட்கார வைத்துவிடுவார். இது தான் சரியான சமயம். இல்லையென்றா>ல் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அதே நிலமை தான் அகிலேஷுக்கும் ஏற்படும். இன்னும் கொஞ்ச காலம் கழித்து முலாயம் தம்பி மற்றும் சிலர் வந்து அகிலேஷுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முலாயம் சிங் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் போதே அவர் மகனை முதல்வர் பதவியில் உட்கார வைக்க வேண்டும். அகிலேஷ் என் தந்தை தான் முதல்வர் என்று சொல்லியுள்ளார், ஆனால் தமிழ் நாட்டில் பிளைட்டிலிரிருந்து இறங்கிய பின் பதவி கொடுத்தால் நான் ரெடி என்று சொல்லுகிறார்கள். ஏன் என்று யோசித்தால் அண்ணன், தம்பிகள் பேரன் பேத்தி எடுத்துத் தாத்தாவாகவே ஆகிவிட்டார்கள்!


மாயாவதி தன்னுடைய தோல்விக்குத் தன்னை தவிர எல்லோரும் காரணம் என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா இவரை இப்போதே பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படித்தான் புலம்ப வேண்டியிருக்கும். கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் எல்லோரும் டெண்டுல்கரைக் குற்றம் சாட்டுவது போல காங்கிரஸ் தோல்விக்கு எல்லோரும் ராகுல் காந்தியைக் குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கு நாடு தழுவிய ஊழலும், அன்னாவும் தான் காரணம் என்று தோன்றுகிறது. ராகுல் காந்தி ஏழைகளின் வீட்டில் டீ குடித்து அவர்களை மேலும் ஏழையாக்கிவிட்டார். மைனாரிட்டி சமுகத்துக்கு கோட்டா சிஸ்டம் என்று பிதற்றினார்கள், ஆனால் இவர்களே இப்போது மைனாரிட்டி ஆகி பார்லிமெண்டில் நுழையக் கோட்டா கேட்டாலும் கேட்பார்கள்.

ஹோலி பண்டிகையின் போது பலரின் உண்மையான வண்ணங்கள் தெரிய வந்திருக்கிறது.

மகளிர் தின சிறப்பு செய்தி:


Ananda Marchildon என்ற ஹாலாண்ட் நாட்டு மாடல் அழகி தன்னுடைய இடுப்பு அளவு 2cm அதிகம் என்று நிராகரித்த கம்பெனி மீது கேஸ் போட்டு வென்றுவிட்டார். மகளிர் தினத்துக்கு ஏற்ற நியூஸ் இது என்பதால் இங்கே. (படத்தில் இருப்பது அவர் தான், இந்த மாதிரி நியூஸ் போடவில்லை என்றால் இட்லிவடையை 'ஹிந்து' பத்திரிக்கை என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த நியூஸ் )

6 Comments:

R.Gopi said...

// ராகுல் காந்தி ஏழைகளின் வீட்டில் டீ குடித்து அவர்களை மேலும் ஏழையாக்கிவிட்டார். //

ஹா ஹா ஹா...

வந்து வந்து போகுதம்மா, எண்ணமெல்லாம் மாறுதம்மா... எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுதம்மா.....

ஜெகன்னாதன் said...

//காங்கிரஸ் தோல்விக்கு நாடு தழுவிய ஊழலும், அன்னாவும் தான் காரணம் என்று தோன்றுகிறது// இட்லிவடைக்கு நகைசுவை பொத்துக்கொண்டு வருகிறது. அன்னாவுக்கே தோன்றமுடியாத கற்பனை! அப்போ நீங்க என்ன சொல்றீங்க? முலாயம் கட்சி ஊழல் செய்ததில்லை / செய்யாது என்றா? ஐயோ பாவம் நீங்க! - ஜெ.

Anonymous said...

அதனால் அவர்கள் இதைப் படித்துவிட்டு சோப், கிரீம் போன்ற வஸ்துக்களை வாங்கப் போகலாம்.

I highly condemn these lines.Ladies have already come out of these... Don't see them just as fashion models.Please Idlyvadai u at least try to come out of this idea

Anonymous said...

மகளிர் தின வாழ்த்துகள் என்று சொல்லி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் இந்த கட்டுரைக்கும் மகளிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவர்கள் இதைப் படித்துவிட்டு சோப், கிரீம் போன்ற வஸ்துக்களை வாங்கப் போகலா"

There is no better way to insult women. cheap.

kg gouthaman said...

காங்கிரஸ் தோல்விக்கு யார் காரணம்? உ பி மக்கள், கையை நம்பாமல், தும்பிக்கையை நம்பாமல், தாமரையையும் நம்பாமல்,சைக்கிளை அதிக அளவில் நம்பியிருக்கிறார்கள். காரியவாதிகள்!

Kayal said...

இதை விட கேவலமா பெண்களை சித்தரிக்க முடியாது. இட்லிவடைக்கு இன்னும் கற்காலத்துல வாழறதா நெனப்போ. பெண்கள் இழிவு படுதுரதல தான் ஆண்களோட comedy sense aa project பண்ணனுமா. படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. இன்னும் எத்தனை நாள் இப்படியே பேசுவீங்க. இப்படி ஒரு public forum la ye இப்படி பேசுற உங்களையெல்லாம் என்ன சொல்றது. நம்ம நாட்டோட தல விதி அது.