பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 13, 2012

ராசிபலன் மார்ச் 15-31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம். உண்மையால் உயரும் மேஷ ராசி வாசகர்களே ராசியில் சுக்கிரன், குரு, இரண்டில் கேது, ஐந்தில் செவ்வாய், ஏழில் சனி, எட்டில் ராகு, பதினொன்றில் புதன், பன்னிரெண்டில் சூரியன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள். மார்ச் 14ம் தியதி 6ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி தனஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசிநாதன் செவ்வாய் ஐந்தில் இருக்க பாக்கியஸ்தானாதிபதி குரு ராசியில் இருக்கிறார்கள். துணிவும் உற்சாகமும் நிறைந்திருக்கும் காலமிது. தாங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. தங்களது இளைய சகோதரத்தால் நிறைந்த லாபம் கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்பிருக்கிறது. ராசியில் குரு சஞ்சரிப்பதாலும் ராசிநாதன் ஐந்தில் சஞ்சரிப்பதாலும் தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். ராசிநாதனின் ஐந்தாம் வீட்டு சஞ்சாரத்தால் விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. இரண்டு, ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் குருவுடன் இருக்க திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். கலைத் துறையினர் பெரும் புகழ் அடைய முடியும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவியினால் நெருக்கடி உண்டாகும். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பில் வெற்றியடைவர்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15, 16

பரிகாரம்: சிவ வழிபாடு வெற்றியை தரும். அடிக்கடி சிவன் ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மையை தரும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம் தனது கவர்ச்சியான பேச்சால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே ராசியில் கேது, நான்கில் செவ்வாய், ஆறில் சனி, ஏழில் ராகு, பத்தாமிடத்தில் புதன், பதினொன்றில் சூரியன், பன்னிரெண்டில் வியாழன், ராசிநாதன் சுக்கிரனுமாக நவநாயகர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மார்ச் 14ம் தியதி 5ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசிக்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

சுகஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் உடல்நலம் சிறக்கும். செவ்வாய் நான்கில் இருப்பதால் தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சனி வக்ரகதி பெறுவதால் இளைய சகோதரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். எட்டுக்குடையவர் பன்னிரெண்டில் இருந்து ஆறு, எட்டு ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

கலைத்துறையினர் வெளிநாடு பயணம் செல்வார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்கள் தொழிற்கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 15, 16

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை ஆராதனை செய்யுங்கள். பேசும் வார்த்தையில் நிதானமும் இனிமையும் தேவை.


மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) - நடத்தையில் சிரத்தையை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே மூன்றில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாமிடத்தில் ராசிநாதன் புதன், பத்தாமிடத்தில் சூரியன், பதினொன்றில் சுக்கிரன், வியாழன், பன்னிரெண்டில் கேதுவுமாக கிரக நாயகர்கள் அருளாசி வழங்குகின்றனர். மார்ச் 14ம் தியதி 4ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி விரையஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.


லாப ஸ்தானத்தில் குரு, ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் எனும் அமைப்பு உங்களது பொருளாதார நிலைமையை உயர்த்துவதாகும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். ராசி மற்றும் நான்காம் ஸ்தானத்திற்குரிய அதிபதி புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பது குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பேரக்குழந்தைகளை பெறும் பாக்கியமும் சிலருக்கு கிட்டும். பன்னிரெண்டுக்குரிய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருப்பதும், அவருடன் குரு இருப்பதும் நல்லது. பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். ஒன்பதுக்குரியவர் வக்ரகதியில் நான்காம் ஸ்தானத்திற்கு வருவதால் நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். தந்தையின் செல்வம் பெருகும். மேலும் யோகம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 17, 18, 19

பரிகாரம்: ஸ்ரீ கணபதியை பூஜித்து வர நன்மையுண்டு. கோவில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள். நன்மைகள் பயக்கும்.

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் - அனைவரையும் சமமாக நடத்தும் கடக ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் செவ்வாய், நான்காமிடத்தில் சனி, ஐந்தில் ராகு, எட்டாமிடத்தில் புதன், ஒன்பதாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் வியாழன், சுக்கிரன், பதினொன்றாமிடத்தில் கேது என கோள்கள் ஆதிக்கம் இருக்கிறது. மார்ச் 14ம் தியதி தைர்யவீர்ய ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி லாபஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். ஐந்திற்குரியவர் இரண்டில் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். நான்குக்குடையவர் நான்காம் ஸ்தானத்தைப் பார்ப்பதால் அழகிய வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். நண்பர்களிடம் கருத்து மோதல்களை தவிர்ப்பது அவசியம். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை பிரச்ச்னையின்றி வந்து சேரும். விரையாதிபதி ஆயுள்ஸ்தானத்தில் பயணிப்பதால் வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு பொருள்வரவும், தனவரவும் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகாரமிக்க பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.


சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 19, 20, 21

பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ) அடுத்தவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் சிம்ம ராசி வாசகர்களே ராசியில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் புதன், எட்டாமிடத்தில் ராசிநாதன் சூரியன், ஒன்பாதமிடத்தில் குரு, சுக்கிரன், பத்தாமிடத்தில் கேது என கிரக நாயகர்கள் பவனி வருகின்றனர். மார்ச் 14ம் தியதி தனஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் தொழில் ஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. எனினும் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் திடீரென வசூலாகும். மூன்றாம் ஸ்தானத்திற்குடையவர் அவ்வீட்டிற்கு ஏழாம் ஸ்தானத்திலும் அந்த ஸ்தானத்தை வியாழன் பார்ப்பதாலும் இளை சகோதரத்தின் திருமண ஏற்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெறும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு மக்களின் நன்மதிப்பும் நற்சான்றிதழும் கிடைக்கும். நான்காம் ஸ்தானத்திற்குரிய மங்கள்காரகன் செவ்வாய் ராசியில் அமர்ந்துள்ளதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. குழந்தைகள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளில் நாட்டம் செலுத்துவர். அந்நிய நாட்டு பயணங்கள் நீங்கள் எதிர்பார்த்திருந்த படியே கைகூடி வருகிறது. நண்பர்கள் உதவியால் மிகுந்த சிரமமான காரியம் ஒன்றை செய்து முடிப்பர். பணியில் உள்ளவர்களுக்கு இடமாறுதல்கள் வரலாம்.

கலைத்துறையினருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 21, 22, 23

பரிகாரம்: ஆதித்யஹ்ருதயம் சொல்வது மனநிம்மதியை தரும். ஸ்ரீ ராமபிரானை வழிபட செல்வங்கள் சேரும்.கன்னி: (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2) சுயகாலில் முன்னேறும் கன்னி ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சனி, மூன்றாமிடத்தில் ராகு, ஆறாமிடத்தில் ராசிநாதன் புதன், ஏழில் சூரியன், எட்டாமிடத்தில் குரு, சுக்கிரன், ஒன்பதாமிடத்தில் கேது, பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் என கிரக ஆதிக்கம்உள்ளது. மார்ச் 14ம் தியதி ஸ்வய ராசிக்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் பாக்கியஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

குடும்ப தன ஸ்தானத்தை குருவும், விரையஸ்தானத்தை குரு, ராசிநாதன் புதன் பார்ப்பதும், களத்திர ஸ்தானத்தில் விரையாதிபதி இருப்பதும், மங்களகாரகன் செவ்வாய் ராசிநாதன் புதனைப் பார்ப்பதும் இவ்வளவு நாட்களாக இருந்த திருமண தடைகள் நீங்கும். கல்யாண ஏற்பாடுகள் கூடி வரும். உங்கள் கவலைகள் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நான்காம் ஸ்தானாதிபதி தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சனியே ஆறாம் அதிபதியாகி அவர் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். எனினும் எட்டுக்குடையவர் பன்னிரெண்டில் உலவுவதால் பணியாளர்களால் பிரச்ச்னைகள் வரலாம்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்வாய்ப்புகள் காத்திருக்கிறது. அரசியலில் உள்ளவர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனக்குறைவு வரலாம். ஈடுபாடு அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 24, 25, 26

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை வழிபடுங்கள். பசுவுக்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3) அனைவரையும் வாழ வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, ராசியில் சனி, இரண்டாமிடத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் புதன், ஆறாமிடத்தில் சூரியன், ஏழாமிடத்தில் குரு, ராசியாதிபதி சுக்கிரன், எட்டாமிடத்தில் கேது, லாபஸ்தானமான பதினொன்றில் செவ்வாய் என கோள்கள் நிலை உள்ளது. மார்ச் 14ம் தியதி விரையஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் அஷ்டமஸ்தானத்திற்கு ராசியாதிபதி சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.இரண்டில் ராகு இருந்தாலும், ராசிநாதன் ஏழில் சஞ்சரிக்க அவருடன் குரு இருப்பதும் நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படாது. இரண்டாம் அதிபதியும் லாபஸ்தானத்தில் உலவுவதால் வங்கி இருப்பு உயரும். சுயமரியாதை மற்றும் மேன்மைக்கு சற்று பங்கம் வரலாம். கவனம் தேவை. மூன்றுக்குடையவர் ராசியைப் பார்ப்பதால் சகோதரத்திடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து நன்மைகள் ஏற்படும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை அதிகரித்து சந்தோஷ தருணங்கள் ஏற்படும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவதற்குண்டான கடன் வாங்குவதற்கான வேலைகள் தடையின்றி நடைபெறும். அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளில் தொய்வுகள் ஏற்படலாம். மிக முக்கிய பிரமுகர்கள் மூலம் அதை சரி செய்து கொள்வீர்கள். நேர்மையும் அறிவாற்றலும் மிக்கவர் என பாராட்டுதல்கள் பெறுவீர்கள். வாகனப்பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் செய்ய நேரிடலாம். ஏழுக்குடையவர் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணை மூலமாக லாபங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்கள் செல்வாக்கும் செல்வமும் உடைய வாழ்க்கைத்துணை அமையும். நிறைய நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதரத்தால் மிகுந்த ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

கலைத்துறையினருக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.


சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 27, 28, 29

பரிகாரம்: ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வணங்குவதும், மஹலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்வதும் நன்மையை தரும்.விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே ராசியில் ராகு, நான்காமிடத்தில் புதன் ஐந்தாமிடத்தில் சூரியன், ஆறாமிடத்தில் குரு, சுக்கிரன், ஏழாமிடத்தில் கேது, பத்தாமிடத்தில் செவ்வாய், பன்னிரெண்டாமிடத்தில் சனி என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். மார்ச் 14ம் தியதி லாபஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் களத்திரஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசிநாயகன் பத்திலும், தனஸ்தானாதிபதி தனவாக்குகுடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 29, 30, 31

பரிகாரம்: கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள் தீர ஸ்ரீ கணபதி மற்றும் துர்க்கையை வழிபடுங்கள். மது மாமிசத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) விழ விழ மீண்டும் முளைக்கும் தன்னம்பிக்கையை உடைய தனுசு ராசி வாசகர்களே மூன்றாமிடத்தில் புதன், நான்காமிடத்தில் சூரியன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு, சுக்கிரன், ஆறாமிடத்தில் கேது, ஒன்பதாமிடத்தில் செவ்வாய், பதினொன்றில் சனி, பன்னிரெண்டாமிடத்தில் ராகு என கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மார்ச் 14ம் தியதி தொழிற்ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் 6ம் இடத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

உடல்நலம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வீட்டில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பதும் அவருடன் களத்திரகாரகன் சுக்கிரன் இருப்பது நன்மையான காலகட்டம் என்பதை உணருங்கள். தனஸ்தானாதிபதி சனி ராசியை பார்ப்பதால் பொருளாதார பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கும். காரியங்கள் யாவும் துரிதமாக தங்குதடையின்றி இனிதே நடைபெறும். புகழ்மிக்கவர்கள் உங்கள் பின்னால் இருந்து பொருளாதாரம் பெருக வழிவகைகள் செய்வார்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த தடைபட்ட சுணக்க நிலை மாறும். பொன் பொருள் சேர்க்கையால் சந்தோஷம் அதிர்ஷ்டம் ஏற்படும். பொதுமக்களால் போற்றப்படுவீர்கள். தர்மகாரியங்களிலும் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். மூன்றுக்குடையவர் லாபத்தில் சஞ்சரிப்பதால் தனங்களில் தன்னிறைவு அடைவீர்கள். உடன்பிறப்புகள் தங்கள் தொழிலில் மிகுந்த மேன்மை அடைவார்கள். வீடு வாகனம் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். தங்களது வெளிநாட்டுப் பயணத்தால் நன்மைகளை அடைவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புனித செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன. நிலம் மனை போன்றவற்றில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அந்திய தேச பயணம் ஏற்படவும், அதனால் லாபம் அடையவும் வாய்ப்புகள் உண்டு. அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். மாணவர்கள் நன்கு தேர்ச்சி அடைவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 31, ஏப்ரல் 1, 2

பரிகாரம்: ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தியையும், முருகனை வழிபடுங்கள். நன்மைகள் அடையலாம்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) எடுத்த வேலைகளை திறம்பட செய்து முடிக்கும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் புதன், மூன்றில் சூரியன், நான்காமிடத்தில் குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பவனி வருகிறார்கள். மார்ச் 14ம் தியதி பாக்கியஸ்தானத்திற்கு வக்ரகதியில் ராசியாதிபதி சனியும், 29ம் தியதி ராசியின் பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.


குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். ராசிநாயகன் ஒன்பதிலும் சுகஸ்தானத்தில் சுக்கிரனும் இருப்பதால் உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். சிலருக்கு பொருள்வரவும், தனவரவும் உண்டாகும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, இடமாறுதல் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கலைத்துறையினருக்கு வீண் வதந்திகள் ஏற்பட்டு மறையும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தாவை வழிபடுங்கள். ஏகாதசி விரதம் கடைபிடியுங்கள்.

கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) சுகங்களை முழுமையாக அனுபவிக்கும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் புதன், இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றாமிடத்தில் குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக நிலவரம் காணப்படுகிறது. மார்ச் 14ம் தியதி அஷ்டமஸ்தானத்திற்கு வக்ரகதியில் ராசியாதிபதி சனியும், 29ம் தியதி ராசியின் சுகஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்கள் குருவினால் பார்க்கப்பட்டு புனிதமடைகின்றன. உபரி வருமானங்களால் மிகுந்த தன சேர்க்கை ஏற்பட்டு வீண் செல்வுகளை சமாளிப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளால் பொருள்வரவு அதிகரிக்கும். இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள். அண்டை அசலாருடன் இருந்து வந்து பிணக்கு நிலை மாறும். தாயாரின் உடல் நலம் சீரடையும். மகிழ்ச்சியான செய்திகள் உங்களை வந்தடையும். வீடுகட்டும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். ஏழில் செவ்வாய் வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். எனவே விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆகார நியமங்களை அனுசரித்து செல்வதும் நல்லது. சொந்தமாக வீடு கட்டி குடியேறும் யோகம் உண்டு. குழந்தைகளிடம் சற்று கண்டிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது. கடன் சுமைகள் பூரணமாக குறையும்.
திருமணம் கூடி வருகிறது. வாழ்க்கைத்துணைவரால் தனவரவு அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணையும் பொன்னான காலமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெரிதும் பாராட்டுகள் கிடைக்கும். அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.


சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மையை தரும். ராம நாம ஜெபம் செய்வதும் நல்லது.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அடுத்தவரின் நிலையை எளிதில் புரியும் மீன ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் ராசிநாதன் குரு, சுக்கிரன், மூன்றாமிடத்தில் கேது, ஆறாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் சனி, ஒன்பதாமிடத்தில் ராகு, பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் என கிரக அமைப்பு உள்ளது. மார்ச் 14ம் தியதி களத்திர ஸப்தம ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் 3ம் இடத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

தன வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும் தனஸ்தானாதிபதி செவ்வாய் ஆறாமிடத்தில் உலவுவது சிறப்பில்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும்.தனஸ்தானாதிபதி விரையஸ்தானத்தை பார்ப்பதால் சில விரையங்களை கொடுக்கத்தான் செய்யும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. மிகுந்த நன்மை உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.


சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்வது மிகுந்த நன்மையை தரும்.


---
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில் , கிராமம் பரம்பரை ஜோதிடர் இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/


தொடரும்... :-)

4 Comments:

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

பின்னிப் பெடலேடுக்கும் பின் நவீனத்துவப் படிமங்கள் - அளிப்பவர் கவி "கும்மாங்குத்து" சே.சோ.சொய்.டர்ர்ர்ர்.

1 . "வீர தீரன்"

கப்ட்டான்
கப்பித்தான்
டுப்பாககியைத் தூக்கிச்
சுட்டு வீழ்த்த,
செத்து வீழ்ந்தன
சில கொசுக்கள்.

2 . "நிறப் பிரிகை"

நல்ல பௌர்ணமியில்
உலா வரப்போந்தார் கப்பித்தான்.
பௌர்ணமி, அமாவாசையானது காண்!
மேலும்,
நல்ல வெய்யில் நாளில்,
கப்பித்தான்,
மெல்ல வெளியில் செல்லும் வேளையே
சூரிய கிரகணமாம் சொல்!

3 . "தமிளா தமிளா"

தமிளைக் காக்க
தமிளனைக் காக்க
மருதையிலிருந்து
குருதையில் ஏறிவரும்
கப்ட்டான் ,
கப்பித்தான்,
மணவாடு!
மன்ச்சிவாடு!
இக்கடச் சூடு!

(இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்....தமிழ்நாட்டில் கோமாளிகளுக்கா பஞ்சம்? எனிவே, கவிதை எழுதியதற்காக என்னை மன்னித்துவிடு இட்லி. உடனே கடையை சாத்திக்கொண்டு போய்விடாதே என வேண்டுகிறேன்)
பெருங்குளத்தாருக்கும் என் மன்னிப்புகள்...தவறான இடத்தில் கமன்ட் கொடுத்ததற்கு....

Anonymous said...

தொடரும்ன்னு ஒரு மஞ்ச கமெண்டா ?

சோஸ்யரே ரயில் விலை ஏத்திட்டாங்க பாத்தீங்களா

இப்படிக்கு
மாதவன்

பகுத்தறிவு பகலவன் said...

ஐயா டுபாக்கூர் ஜோஸ்யரே

உங்க வீட்டுக்கு எப்ப ஆட்டோ அனுப்புவாங்கன்னு சரியா கணிச்சு சொல்ல முடியுமா?