பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 31, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 1-4-2012

அன்புள்ள முனிக்கு,

ரொம்ப நாள் பிரிந்து இருந்த நாம் இனி ஒன்றாக இருக்கலாம் என்று முடிவு செய்ததின் விளைவாக இந்த கடிதம். எப்படியோ ஏப்ரல்-1 தமிழர்களுக்கு நல்ல நாளாக இருந்தால் நல்லது. அப்பறம் நாம் ஒன்று சேந்த இந்தக் கடிதத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவும். இது ராணுவ ரகசியம் போல பொதுவில் வரக் கூடாது. நாம் இரண்டு பேருக்கும் மட்டுமே இந்த உடன்பாடு.

இரண்டு முறை பிறந்த தேதிக்கு உச்ச நீதிமன்றம் உங்க கேஸ் நிலைக்காது, விலகிக்கொள்ளவும் என்று சொன்னவுடன் இது தான் என் பிறந்த தேதி, நான் ரிடையர் ஆகிவிடுகிறேன் என்று ராணுவ தளபதி மரியாதையாக வெளியே போய் இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு நம் நாட்டில் இருக்கும் துப்பாக்கி எல்லாம் தீபாவளி துப்பாக்கி என்ற அவரின் கடிதத்தை லீக் செய்துவிட்டு பரபரப்பாக்கிவிட்டார்கள் மீடியா.மீடியாவிற்கும் பொறுப்பு இல்லை, இந்த மாதிரி மிக முக்கியமாக ரகசிய கடிதத்தை எல்லாம் வெளியிடலாமா? இட்லிவடை யார் என்று நாளைக்கே சரக்கு மாஸ்டர் லீக் செய்தால் உடனே வெளியிட்டுவிடுவார்கள் போல... எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பாம்பு வாலைப் பிடிக்க குரங்கான கதையாகிவிடும்.


பாம்பைக் கட்டிக்கொண்டு குரங்காட்டம் குத்தாட்டம் ஆடும் மல்லிக்காவிற்கு என்ன குறைச்சல்? பாவம் அம்மையார் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்டு அவமானப்பட்டுவிட்டார். புக் செய்த கடைக்கு போனால், "எங்கள் காரை உங்களுக்கு விற்க முடியாது" என்று சொல்லிவிட்டார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பின்னணி மற்றும் இமேஜ் ஆகியவற்றைப் பார்த்து தான் விற்பார்களாம். அது அவர்கள் கொள்கை. வரவேற்க வேண்டிய விஷயம்.


வரவேற்கவேண்டிய இன்னொரு விஷயம் குமுதத்தில் கொஞ்ச நாளாக சிறுகதைகள் பிரசுரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இலக்கிய மாற்றத்தைத் தொடர்ந்து திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதை விட்டுவிட்டு அதிமுகவிற்கு ஜால்ரா அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சங்கரன் கோவிலில் கம்பீர வெற்றி, வெற்றி செல்வி என்று பக்கம் பக்கமாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். குமுதமே கடைசியில் ஒரு அதிர்ச்சி தரும் சிறுகதையாகவே மாறிவிட்டது.


தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு குழுமம் ஆரம்பித்து அம்பது பேர் வால் பிடிக்க ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தலை கால் புரிவதில்லை. மேதாவி மாதிரி எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு சகட்டு மேனிக்கு எல்லோரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டுவிட்டார்கள். சமீபத்தில் காந்தி, சங்கராசாரியார், பெரியார் என்று செயமோகன் ரொட்டேஷன் போட்டு விமர்சித்து வருகிறார். இவர்கள் யாரும் இதற்கு மறுப்பு தெவிக்க முடியாது, கேள்வி கேட்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் இறந்துவிட்டார்கள். கடைசி வரவு கூடங்குளம். அதுவும் கிட்டத்தட்ட செத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாமல்லன் போன்றவர்கள் இணையத்தில் இல்லை என்றால் இந்த மாதிரி தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் திருநீறு பூசிவிடுவார்கள்.


திருநீறு கூட வரவாயில்லை, ஆனால் ராமநவமி வரும் சமயம் விஜயகாந்த் நீர்மோரில் மேலும் நீர் என்று தண்ணி பற்றி பேசியதைப் பலரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் சங்கரன்கோயில் தோல்வியாகக் கூட இருக்கலாம். சங்கரன்கோயில் முடிவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார். சங்கரன் கோயிலில் போட்டியிட்டவர்களில் ஒரு கட்சிக்கு கூட டெபாசிட் கிடைக்கவில்லை என்பது தமிழ்நாட்டுத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாம். இதற்கிடையே ஜெயலலிதா சேது சமுத்திரத்தில் உள்ள ராமர் பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்ல, உடனே டி.ஆர்.பாலு உட்பட திமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சனைக்கே மனு கொடுத்தவர்கள் இவர்கள். ஆஹா!

ஆஹா என்று சொல்லுபவர்கள் 91.9 ஆஹா ஃஎப் எம் கேட்கவும். 'சோவின்' முகபது பின் துக்ளக் 1-4-2012 முதல் கேட்கலாம். ஆஹா குமுதம் குழுமத்தின் ரேடியோ என்று நான் சொல்லத் தேவை இல்லை. அப்டியே நான் சொல்லி அறிந்து இருந்தாலும் ஆஹா என்று இட்லி வடையை பாராட்டத் தேவையில்லை. சோவிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் - ஜெயலலிதா சசி ஒன்று சேர்ந்ததற்கு துக்ளக் முதல் பக்கத்தில் காட்டூன் உண்டா ? கடந்த ஒரு வருடமாக ஒரு கார்ட்டூன் கூட ஜெயலலிதாவை பற்றியது இல்லை என்பதை யாராவது கவனித்தார்களா ? புது பொலிவுடன் துக்ளக் வருமா ?


கர்ணன் புது பொலிவுடன் வந்திருக்கிறது. அதே போல திரும்ப அக்கா தங்கை படம் ஒன்று புது பொலிவுடன் வந்துவிட்டது. . நாடகப்பிரியா நடிகர் தான் என்ன செய்வது என்றறியாமல் என்று குழம்பி இருக்கிறார். பேசாம இரண்டு மாதம் அதிமுகவில் சேர்ந்திருக்கலாம். நாடகப்பிரியா நண்பரை காட்டிலும் வெட்டி பேச்சு பேசும் காடுவெட்டியின் கடைசி ஸ்டேட்மெண்ட் இது "அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலை சந்தித்தால் தமிழ்நாட்டில் பா.ம.கா தான் ஆட்சியை பிடிக்கும்" எனக்கு தெரிந்து பஸ்ஸில் சீட் பிடிக்க கூட இவர்கள் லாயக்கு இல்லை.

ஸ்டார்ட் மியூசிக் "வாரயோ தோழி வாரயோ...."
இந்த உருக்கமான கடித்ததை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்

இப்படிக்கு பாசமுள்ள,
இட்லிவடை


20 Comments:

Anonymous said...

ஐயோ பாவம் சேகர் அண்ணாச்சி. காமெடி நடிகர்னு பேரெடுத்தவரை இப்படி சுத்த காமெடி பீஸாக்கிட்டாங்களே. எங்க போனாலும் கிட்ட சேர்க்க மாட்டேங்கறாங்களே! சுத்த காமெடி கட்சி என்பதால் பா.மா.க வில் சேருவதுதான் இந்த காமெடி நடிகருக்கு சரிப்பட்டு வரும்.

Anonymous said...

சங்கரன் கோயிலில்போட்டியிட்ட என்பதை சங்கரன் கோயிலில்தோல்வியுற்ற என்று மாற்றவும்---
--பணிவரையன்

Anonymous said...

இரண்டும் ஒன்றானபின் இனி முனிக்கு / முனியின் அந்தாதி கடிதம் படிக்க முடியாதே என்றுதான் கவலையாக இருக்கிறது!

சரக்கு மாஸ்டர் யார் என்று சொல்லும், இட்லி வடை யாரென்று நான் சொல்லுகிறேன்!

விமர்சனம் செய்ய மேதாவியாக இருக்கவேண்டுமா? அப்போ நானெல்லாம் விமரிசிக்கக் கூடாதா?

- ஜெ.

ஜெ. said...

இரண்டும் ஒன்றானபின் இனி முனிக்கு / முனியின் அந்தாதி கடிதம் படிக்க முடியாதே என்றுதான் கவலையாக இருக்கிறது!

சரக்கு மாஸ்டர் யார் என்று சொல்லும், இட்லி வடை யாரென்று நான் சொல்லுகிறேன்!

விமர்சனம் செய்ய மேதாவியாக இருக்கவேண்டுமா? அப்போ நானெல்லாம் விமரிசிக்கக் கூடாதா?

- ஜெ.

ஜெ. said...

இரண்டும் ஒன்றானபின் இனி முனிக்கு / முனியின் அந்தாதி கடிதம் படிக்க முடியாதே என்றுதான் கவலையாக இருக்கிறது!

சரக்கு மாஸ்டர் யார் என்று சொல்லும், இட்லி வடை யாரென்று நான் சொல்லுகிறேன்!

விமர்சனம் செய்ய மேதாவியாக இருக்கவேண்டுமா? அப்போ நானெல்லாம் விமரிசிக்கக் கூடாதா?

- ஜெ.

கபாலி said...

பக்கத்துல போட்டோல மொட்டை தலையோட ரொம்ப நாளா ஒருத்த்தர் சிரிச்சிக்கிட்டு இருக்காரே ... சோ அய்யரு ... அவரு கருத்து இன்னவாம் ?

Anonymous said...

pirivu ennbadhe uravukkaaga thaan kanneee!!! va va anbee...

kothandapani said...

MUMMY RETURNS PART II ... இந்த PRODUCTION HOUSE படங்கள் நூறு நாட்கள் மட்டும் தான் ஓடும். என்ன ..சசிபெயர்ச்சி என்று சொன்ன வாய் எல்லாம் சசிஎழுச்சி என்று மாத்தி பாடும். ரொம்ப சாமர்த்தியமா நாம சசி விவகாரத்தில் அமுக்கியே வாசிச்சோம். தன மகளே ஜெயிலுக்கு போனாலும் தமிழகத்துக்காக காங்கிரேச்சொடு கூட்டணி வைத்த கருணா
தியாகம் பெரிசா , தன குடும்பமே கூண்டோடு ஜெயிலில் இருந்தாலும்
தமிழர்களுக்காக ஜெயாவோடு இணைந்த சசியின் தியாகம் பெரிசா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

NAGARAJAN said...

Don't expect any 'attaippadam', cartoon, sathya katturai on Jayalalitha.

hayyram said...

///மேதாவி மாதிரி எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு சகட்டு மேனிக்கு எல்லோரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டுவிட்டார்கள். சமீபத்தில் காந்தி, சங்கராசாரியார், பெரியார் என்று செயமோகன் ரொட்டேஷன் போட்டு விமர்சித்து வருகிறார். ///

ஜெயமோகன் செய்வது ஒரு எழுத்து அரசியல்.

பொதுவாக அவர் பிறரால் உயர்வாக மதிக்கப்படுபவற்றையும், உயர்வாக மதிக்கப்படும் நபர்களையும், நம்பப்படும் விஷயத்தையும்,
எப்பொழுதும் கீழாக விமர்சித்து மிதித்து தன்னை விட அவைகள் அல்லது 'அவர்கள்' பற்றிய மதிப்பீடுகள் கீழானவையே என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் அல்லது அதற்கு முயல்கிறார் என்று கொள்ளலாம்.

எம் எஸ் சுப்புலக்ஷ்மி முதல், ஆன்மீக குருக்கள், மக்கள் தலைவர்கள் எனப் பலரை அவர் விமர்சிக்கிறார். போட்டு மிதிக்கிறார். மதிப்பீடு செய்கிறார். அந்த மதிப்பீடுகள் தான் சரி என வாதிடவும் செய்கிறார். அதனை ஏற்காதவர்களை அதற்கும் கீழாக காலில் போட்டு மிதித்து
வசைபாடுகிறார். உனக்கென்ன தெரியும் என்று எக்காளமிடுகிறார். இது அவரது பாணியாகவே போய்விட்டது. ( நானறிந்தவரைப் பெரும்பாலும்
இறந்தவர்களைப் பற்றியே விமர்சிக்கிறார்!).

ஒரே நபரை புகழ்வதும், அவரையே வேறொரு இடத்தில் இகழ்வதும் செய்து அற்புதமாக அரசியல் செய்கிறார். 'நீங்கள் திட்டுகிறீர்கள்' என்று
கோபித்தால் நான் புகழ்ந்தேனே என்பார். 'நீங்கள் புகழ்கிறாரீர்களே?' என்று விமர்சித்தால் 'நான் திட்டினேனே' என்பார்.
பெரியவர் கருணாநிதிக்கும் இவருக்கும் இந்த வகை அரசியலில் பெரிய வித்யாசமில்லை.

நாளைக்கே, ஹிந்துக்கள் பெரிதும் மதிக்கும் ராமகிருஷ்ண மடத்தை அவமதிக்கும் விதமாக அதனை 'சீழ்கட்டி' என்று ஏசினாயே!'
என்று கேட்டால்! 'நான் அதே மடத்தை எப்படிப் புகழ்ந்திருக்கிறேன் தெரியுமா?' என்பார்.

பிறரை கீழாக விமர்சிப்பது மூலமாக தன்னை அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டுவிட்டதாக அவர் நினைக்கிறார் போலும். அவரால் விமர்சிக்கப்படுபவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விட அவர்களை விமர்சிப்பதால் ஜெயமோகன் தான் உயர்ந்து நிற்பதாக உணர்கிறார் என்று தோன்றுகிறது. அல்லது அப்படி உணர முயற்சிக்கிறார்.

சுஜாதாவை விமர்சித்து அவர் 'ஒன்றுமில்லை' என்று அவர் மீது இருக்கும் உயர் மதிப்பை போட்டுடைத்து அந்த இடத்தைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறார். இப்படி பிறரை கீழாக மதிப்பீடு செய்து தன்னை அவர்களை விட உயர்ந்தவன் என்கிற நிலைக்கு படிப்பவர்களை
நினைக்கச் செய்துவிடும் அரசியல் செய்கிறார்.

இப்படி பல்வேறு விதமாக நாமும் அவரை மதிப்பீடு செய்யலாமே!

Rajesh kumar said...

இட்லி வடை கண்டிப்பாக ஜெயமோகன் எழுதும் விமர்சனங்களை ஒரு வரி கூட படித்துப் பார்த்ததில்லை என நினைக்கிறேன். எங்கேயோ எவனோ டேய் ஜெயமோகன் இந்தவாட்டி சங்கராச்சாரி பத்தி எழுதிருகாருடா ன்னு சொன்னத மட்டும் கேட்டுட்டு உடனே ஜெயமோகன் என்ன பெரிய மேதாவியானு எழுதியிருப்பீங்க போல. அய்யா மொதல்ல என்ன எழுதியிருக்காருடான்னு படிச்சுப் பாருங்க... அப்புறமா உங்க தரப்பு என்னன்னு தெளிவா சொல்லுங்க. உங்களுக்கு கசப்பா இருந்தாலும் இன்னைக்கு தமிழ் நாட்டுல அவர் அளவுக்கு வீரியமா ஒரு கதையோ கட்டுரையோ அர்ப்பணிப்போட எழுத ஆள் கிடையாது. எஸ் ரா கூட கொஞ்சம் கம்மிதான். மொதல்ல போயி கட்டுரைய படிங்க. அப்புறம் அவர் மேதாவியா இல்லியான்னு கமன்ட் போடலாம். அவ்வளவு எழுதுற அவர் மேதாவிதான். சும்மா வெட்டி அரட்டை அடிக்கிற இட்லி வடைக்கு தான் அவர பத்தி கமன்ட் போடுற தகுதி இல்லை.
போங்க சார் போயி புள்ள குட்டிய படிக்க வைங்க..!

Rajesh kumar said...

இட்லி வடை கண்டிப்பாக ஜெயமோகன் எழுதும் விமர்சனங்களை ஒரு வரி கூட படித்துப் பார்த்ததில்லை என நினைக்கிறேன். எங்கேயோ எவனோ டேய் ஜெயமோகன் இந்தவாட்டி சங்கராச்சாரி பத்தி எழுதிருகாருடா ன்னு சொன்னத மட்டும் கேட்டுட்டு உடனே ஜெயமோகன் என்ன பெரிய மேதாவியானு எழுதியிருப்பீங்க போல. அய்யா மொதல்ல என்ன எழுதியிருக்காருடான்னு படிச்சுப் பாருங்க... அப்புறமா உங்க தரப்பு என்னன்னு தெளிவா சொல்லுங்க. உங்களுக்கு கசப்பா இருந்தாலும் இன்னைக்கு தமிழ் நாட்டுல அவர் அளவுக்கு வீரியமா ஒரு கதையோ கட்டுரையோ அர்ப்பணிப்போட எழுத ஆள் கிடையாது. எஸ் ரா கூட கொஞ்சம் கம்மிதான். மொதல்ல போயி கட்டுரைய படிங்க. அப்புறம் அவர் மேதாவியா இல்லியான்னு கமன்ட் போடலாம். அவ்வளவு எழுதுற அவர் மேதாவிதான். சும்மா வெட்டி அரட்டை அடிக்கிற இட்லி வடைக்கு தான் அவர பத்தி கமன்ட் போடுற தகுதி இல்லை.
போங்க சார் போயி புள்ள குட்டிய படிக்க வைங்க..!

ஜெ. said...

ரஜினி ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி; நான் 3 தடவை சொன்னால் தான் ஒரு தடவை சொன்ன மாதிரியா! - ஜெ.

ஆஷ்லி said...

குமுதமும் ஆனந்த விகடனும் இல்லை என்றால் இட்லிவடை சரக்குக்கு எங்கே போவாரோ... இதுல தனியா சரக்கு மாஸ்டர் வேறா?

Anonymous said...

YOUR COMMENTS ABOUT JEYAMOHAN CAN NOT BE ACCEPTED. THERE IS NO PERSONAL VENGENCE IN HIS WRITINGS ABOUT THOSE PEOPLE. HE IS WRITING WITH DEDICATION.

GOPALASAMY SAUDI ARABIA

Ratan said...

விமர்சனம் தவறு என்று சொல்லலாம்... விமர்சிப்பதே தவறு என்று சொல்லி, கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறீர்கள்... ஒருவேளை, முகம் தெரியாமல் blog-ல் எழுதும் நபர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு போலும்...

விஜய் said...

எல்லாவற்றையும் எல்லோரையும் (அம்மாவை தவிர?) எள்ளலுடன் விமர்சனம் செய்யும் முனி கடிதத்தில் ஜெயமோகன் பற்றி எழுதியதில் ஆச்சிரியமில்லை. ஆனால் விமர்சனம் என்பது திராவிட கட்சிகள் செய்வது போன்று வசைபாடுவதாக மாறியதுதான் வருத்தமளிக்கிறது.

இன்றுள்ள பிரபல எழுத்தாளர்களில் துணிவுடன் நீங்கள் வெறுக்கும் பெரியாரை போது தளத்தில் விமர்சிக்க ஆளில்லை. அதற்கு நீங்கள் நன்றி கூறவேண்டும்.

Anonymous said...

'குஞ்சு' கோயிந்தனின் "மங்காத்தா மணலைக் கயிறாய்த் திரிக்கிறாள்!"


ஆம்; மங்காத்தா ஒரு மந்திரவாதி.

மங்காத்தா,
'இம்'மென்றால் இடி விழுமாம்.
'பெய்'யென்றால் மழை பொழியுமாம்.
பேசிக் கொண்டார்கள் அழுக்கு தேசத்தில்.

"ஆற்று நீரில் நடந்து செல்வேன்
அயிரை மீனைக் கையால் பிடிப்பேன்
காற்றில் மிதந்து வந்து,
உன் வீட்டு
ஓட்டைப் பானையிலும்
பொன்னாய் ஒழுக வைப்பேன்!"
என்றாள் மங்காத்தா.

You see,
கேட்பவன்
கேணப்பயலென்றால்
கேழ்வரகிலும்
நெய் வடியுமாம்.

மங்காத்தா இன்னும்
மணலைக் கயிறாய்த் திரித்துக் கொண்டிருக்கிறாள்.
முடிவேயில்லாமல்.


(ஏம்லே, 'குஞ்சு' கோயிந்தன்னு பேரு இருக்கப்பிடாதாலே?)

Anonymous said...

//போங்க சார் போயி புள்ள குட்டிய படிக்க வைங்க..!// முதலில் இந்த அபத்த கமெண்டை நிறுத்துங்கள். கேட்டு கேட்டு( படித்து படித்து) வெறுத்துவிட்டது. இதை கூறுபவர்கள் அதை மட்டும் செய்வது நலம்

Renga

Rajesh kumar said...

//@ Renga //
அப்டீங்களாண்ணா! ரொம்ப சந்தோசம்.. போயி வேலையைப் பாருங்க.. பெரிய நக்கீரர் பரம்பர... வந்துட்டாரு...!