பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 01, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 1-3-2012

இந்த வாரம் கல்கியில் ஞாநி ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதத்தை அம்மா பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். உடனே கூடங்குளம் அணு நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் உதயகுமார் தலைமையில் நேற்று சந்தித்துள்ளார். ஞாநி தன் கடிதம் சூடாக இருக்கிறதே என்று படிக்கும் போது உடனே அங்கே காமெடி பீஸ் ஒன்று வந்துவிட்டது.....அந்த பகுதி கீழே...["இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது.

நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம்.]

காவிரிப் பிரச்சனை, வீரப்பன் பிரச்சனை எல்லாம் விஸ்பரூபம் எடுத்ததற்கு காரணம், சினிமாக்காரர்களும், எழுத்தாளர்களும் உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்வழி என்று மைக் முன்னாடி காமெடி செய்தததால் தான்.

ஜெயலலிதாவிற்கு இருக்கும் சமூகநலம் மற்றும் பொது மக்களின் மீதுள்ள மிகுந்த அக்கறை காரணமாகத்தான் பவர் கட்டே நடந்துக்கொண்டு இருக்கிறது. இல்லை என்றால் இந்த எழுத்தாளர்கள் இன்னும் எழுதித்தள்ளி இருப்பார்கள்!


நல்ல வேளை இந்தப் பவர் கட் வெயில் காலத்தில் வந்தது. வெயில் காலத்தில் வந்த பவர் கட் குளிர் காலத்தில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். பவர் இல்லாத போது தொப்பமாக நனைந்தவர்கள் அப்போது மின் விசறி போட்டால் குளிரில் நடுங்குவார்கள். இதை யோசிச்சுதானோ என்னவோ திமுக அடுத்த தேர்தலில் எல்லா பார்பனக் குடும்பத்துக்கும் ஏசி கொடுக்கப்போகிறார்களாம். அப்போது தான் கருணாநிதி சொன்னது போல பார்ப்பனக்கூட்டம் நடங்கும். இதை பார்த்துக்கொண்டு வாழும் வள்ளுவன் சந்தோஷப்பட்டால் நமக்கு சந்தோஷம்தான். பவர் கட் ஆனால் கரண்டு திரும்ப வரும், ஆனால் ஃப்யூஸையே புடுங்கிவிட்டால்?


தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஃப்யூஸ் போய்விட்டது. ஆனால் பக்கத்து மாநிலத்திலோ லே பேட்டரியில் இருக்கும் எடியூரப்பா தினமும் லோ லோ என்று கத்திக்கொண்டு இருக்கிறார். எப்படியாவது சிஎம் பதவியை பிடிக்க வேண்டும் என்ற அவர் விடா முயற்சியை பாராட்ட வேண்டும். யாகம், சாமியார் சந்திப்பு, பாம்பு பூஜை என்று எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டார். ஊழல் செய்யாமல் இருந்த்திருக்கலாம். தலையெழுத்து !

கர்நாடக பா.ஜனதாவில் இருக்கற பிரச்சனை உங்களுக்குத் தலைவலியாக இல்லையா? என்று கட்காரியிடன் கேட்டதற்கு "எனக்கு எப்போதும் தலைவலி வராது. தலைவலி வந்தால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக நான் மாத்திரைகளை எடுத்துச் செல்வதும் கிடையாது. மேலும் எந்த பிரச்சினையும் என் தூக்கத்தைக் கெடுப்பது இல்லை." என்கிறார். ஆக இவருக்கு தலைவலி வருகிறது கூடவே தூக்கமும் போய்விட்டது. வடிவேலு சொல்லுவதைப்போல ".... எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்கடா.. " என்பது பிஜேபிக்கு நன்றாக பொருந்தும்.


அடுத்த எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அணி இந்திய கிரிக்கெட் அணி. மற்ற அணிகளிடம் வாங்கும் உதை போறாதென்று முகவின் நமக்கு நாமே திட்டம் போல தங்களுக்குள்ளேயே அடித்து விளையாடிக்கொண்டு நமக்கு எண்டர்டெய்ன்மெண்ட் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கே நடப்பது திமுக குடும்ப சண்டைய விட மோசமானதா இருக்கும் போல இருக்கு. இருந்தாலும், ஸ்ரீகாந்த் மாமாவோ அசட்டுச் சிரிப்போட அடி மேல் அடி வாங்கிண்டே இன்று அர்நாபுக்கு ஒரு மழுப்பல் இன்டர்வியூ குடுத்துட்டுப் போறாரு. இப்டி எல்லாம் சீட்டைத் தேய்ப்பதற்கு பதில் பேசாம பொறந்த வீட்டுக்குப் போய் பாத்திரம் கழுவலாம்.

வீடு என்றதும் ஞாபகத்துக்கு வருவது சின்ன வீடு டைரக்டர் பாக்யராஜும், வண்ண வண்ணமாக் கோலம் போட்ட நடிகர் எஸ்.வி.சேகரும் தான். இவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர போகிறார்கள் என்று செய்தி ஓடுகிறது. பாக்யராஜ் முன்பு சன் டிவியில் சொன்ன குட்டி கதை "அதிமுக என்பது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு மிகவும் சீரழிந்து விட்டது. அதற்கு முழு பொறுப்பும் இப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்". சேகரோ சமீபத்தில் ஒரு திமுக தொலைக்காட்சி விழாவில் அம்மாவை அசிங்கப்படுத்தி வசனம் பேசி கைத்தட்டல் வாங்கினார். இதையும் மீறி இவங்களை கட்சியில் சேர்ப்பார்கள். என்ன செய்வது? நம்ம ஊரில் உப்புக்கு கொஞ்சம் பஞ்சம் ஜாஸ்திதான். ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயதில் எதற்கு அரசியல் ?

தற்போது ஷேவாகுக்கு ஓய்வு என்று கூறினாலும் உண்மையிலேயே அவர் நீக்கப்பட்டார் என்பது தான் உண்மை. டோனியுடன் இணைந்து அறிக்கை கொடுக்க இயலாது என்று சொன்னதால் அவர் நீக்கப்பட்டார் என்று சொல்லுகிறார்கள். சச்சின் 100 அடித்த பின் (அடிப்பாரா?) அவரும் ஓய்வு எடுப்பார் என்று நம்பப்படுகிறது.அவருக்கும் வயசாகிறது இல்லையா?

எவ்வளவு வயதானாலும், பழைய படங்கள் பழைய படங்கள் தான். சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் புதுப்பொலிவுடன் வெளிவரவிருக்கிறது. கர்ணன் படத்தின் டிரெய்லர்... இந்த மாதிரி படங்கள் எப்போதும் எவர்கீர்ன் தான்.சாரு, ஜெயமோகன், எஸ்.ராவிற்கு தன் சொந்த செலவில் ஒரு போர்டல் ஆரம்பித்திருக்கிறார் ஒரு பழைய எழுத்தாளர். அவர் பெயர் விமலாதித்த மாமல்லன். ஓசி விளம்பரம் வேண்டும் என்று விரும்பும் எழுத்தாளர்கள், இவரிடம் விண்ணப்பிக்கலாம். நிச்சயம் எழுதுவார்.

கடைசியாக ஒரு புதிர்: மாமியார் எப்போது மருமகளை 'மகளே' என்று கூப்பிடுவார்? மருமகள் எப்போது மாமியாரை 'அம்மா' என்று கூப்பிடுவார்.

விடை: கரண்ட் கட் போது புழுக்கத்தில் இருக்கும் மாமியாருக்கு/மருமகளுக்கு விசிறி விடும் போது..

9 Comments:

Anonymous said...

Mother in law would call the daughter-In-law as DAUGHTER lovingly and vice versa when 'KALIGNAR WILL CALL JJ AS PURTCHI THALAIVI AND JJ WOULD ADDRESS KARUNANIDHI AS KLAIGNAR'

SUPPAMANI

Avinash Srinivasan said...

தமிழனுக்கு தமிழனே எதிரி என்று பலர் சொல்லி கேள்வி பட்டாலும், இப்பொழுது இந்த பதிவின் தொனியில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஆதி மனிதன் said...

மாமியார், மருமகளை தலை முடியை பிடித்து இழுத்து அடிக்கும் போது, "மவளே" என்று கூறுவார் (உறுமுவார்). அப்போது முடியை பிடித்து மாமியார் இழுக்கும் போது வலி தாங்க முடியாமல், மருமகள் "அம்மா" என்று கூறுவார் (கத்துவார்).

பரிசு ஏதும் உண்டா? அட அட் லீஸ்ட் பஸ்ட் கமெண்ட் போட்டதற்கு...?

Kannan said...

நன்று.........."நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

பெசொவி said...

//மாமியார் எப்போது மருமகளை 'மகளே' என்று கூப்பிடுவார்? மருமகள் எப்போது மாமியாரை 'அம்மா' என்று கூப்பிடுவார்.//

I have read the answer in your post itself
:))

pongalvadai said...

சூரியன் மேற்கே உதிக்கும்போது.................. ADMK & DMK கூட்டணி அமைக்கும் போது............... இட்லி வடை முகாவை பாராட்டும்போது.................... ஜாக்பாட் ப்ரோக்ராம் ஒரு தமிழ் நடிகையால் நடத்தப்படும்போது.............. தினத்தந்தியில்
கன்னித்தீவு முடியும்போது................... நீங்கள் சொன்னது தாரளமாக நடைபெறும்

jaisankar jaganathan said...

நான் எதுவுமே படிக்கலை. ஆனா கமெண்ட் போடுறேன்

Madhavan Srinivasagopalan said...

விடை: கரண்ட் கட் போது புழுக்கத்தில் இருக்கும் மாமியாருக்கு/மருமகளுக்கு விசிறி விடும் போது..

Anonymous said...

விடை: கரண்ட் கட் போது புழுக்கத்தில் இருக்கும் மாமியாருக்கு/மருமகளுக்கு விசிறி விடும் போது..