பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 18, 2012

சம்மந்தமில்லா ரெண்டு செய்திகள்

(1) பெங்களூரு கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று ஆஜரான சசிகலா வங்கிக் கணக்குகளை தானே பார்த்ததாகவும், ஜெயலலிதாவுக்குச்சம்மந்தம் இல்லை என்று சன்னமான குரலில் கூறி அழுதுள்ளார்.
(2) காங்கிரஸ் தயவு (ஆதரவாமாம்!) இருப்பதால்தான் தான் அமைச்சராக இருப்பதாக முக அழகிரி கூறியுள்ளார்.படம் மட்டும் ஏன் சம்மந்தமா இருக்கணும்? :-)

அப்டேட்:
சற்று முன் வந்த சம்மந்தமான செய்தி: சசிகலா கணவர் நடராஜன் கைது, நில அபகரிப்பு ஊழல் சம்மந்தமாக.


25 Comments:

பொன்.பாரதிராஜா said...

வாங்கி கணக்கா?இல்ல வங்கி கணக்கா?

ஜெகன்னாதன் said...

சரியாத்தான் எழுதியிருக்கீங்க! “வாங்கி(ய)” கணக்கு சின்னம்மாக்குத் தான் தெரியும்! வங்கிக் கணக்காவது பெரியம்மாவுக்குத் தெரியுமா?

அழகிரி காங்கிரசில் சேருவாரா?

-ஜெ.

Anonymous said...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு கதறியழுத சசிகலா

ராஜீவ் said...

"சம்மந்தமில்லா ரெண்டு செய்திகள்"

(1) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு பின்புலமாக அமெரிக்காவே செயற்பட்டது

(2)மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேல்வியை சந்தித்தனர்

Anonymous said...

mfœthiu¤ jh§F« ãy«nghy¤ j«ik

Ïfœth®¥ bghW¤jš jiy.

- FwŸ: 151, mÂfhu«: bghiwÍilik,
»is: Ïšywéaš, ÃçÎ: mw«.

j‹ÛJ Fê g¿¥nghiuna jh§F»‹w óäia¥ nghš j«ik ÏfœªJ ngR»wt®fë‹ braiyÍ« bghW¤J¡ bfhŸtnj jiyÁwªj g©ghF«.

- fiyP® K. fUzhãÂ

Anonymous said...

சம்மந்தமில்லா செய்திகள்
1) மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பரப்புரை செய்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தப் பாடுபடுவேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசினார்.மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
2)மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேல்வியை சந்தித்தனர்.

சந்தேகம் said...

அவர் குற்றமற்றவர், தவறுக்கு நான்தான் பொறுப்பு" என்று கூறி அழுவதை பார்க்கும்போது இவ்வாறு சொல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது.

ஆச்சார்யா said...

ஆஹா என்னே செட்டப். கண்ணாம்பா தோற்று விடுவார். நாடகத்தின் முதல் கட்டம் ஆரம்பம். எத்தனை ஆச்சார்யா வந்தாலும் சோ. விடம் பருப்பு வேகாது. அடுத்தடுத்து சோ. வின் வசனங்களை பார்க்கலாம்.

அதிகாரி said...

"சம்மந்தமில்லா ரெண்டு செய்திகள்"

(1) அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த கோவிலுக்கு வந்தார். அவருடன் ஒரு பெண் உதவியாளர் வந்திருந்தார். சாமி கும்பிட்டு விட்டு இரவு 9 மணியளவில் கோவிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், சீருடை அணியாமல் மப்டியில் அவரது காரில் வந்து சென்றார்.

2)ஜெயலலிதா கூட்டாளிதான்; ஆனால் தவறுக்கு நானே பொறுப்பு:

பட்டை நாமம் said...

அருமையான நாடகம் , பொது மக்களே எழுதி வைத்து கொள்ளுங்கள். ஜெ ,சசி இருவரும் சேரும் நாட்கள் வெகு விரைவில், பட்டை நாமம் மக்களுக்கே . எலி அம்மணமாக ஓடியது எதற்கு என்று புரிந்து விட்டது

பிசிராந்தையார் said...

இதை சொல்ல உங்களுக்கு 11 வருடங்கள்? இதை ஏன் ஜெயலலிதா உடன் இருக்கும் போதே நீங்கள் சொல்ல வில்லை? நான் அடிக்கற மாதிரி அடிப்பேன் நீ அழற மாதிரி அழு என்பது இதுதானோ. அப்படியே ஜெயலலிதாவுக்கு ஒன்றும் தெரியாது என்றால் அவர் பெயரை உபயோகதித்து தானே சொத்துக்களை வாங்கினீர்கள்? இது எதுவுமே தெரியாமலா இவ்வளவு வருடங்கள் ஒருவர் இருப்பார்? தனது வீட்டில் நடப்பதையே தெரிந்து கொள்ளாமல், ஆர்வம் காட்டாமல் இருக்கும் ஒருவர் எப்படி தமிழகத்தில் நடப்பதை தெரிந்து கொள்வார்? நீதிமன்றத்தை ஏமாற்ற முடிந்தால் சொத்துக்கள் முழுவதும் ஜெயலலிதாவுக்கு இல்லை என்றல் எதுவும் அவருக்கு தெரியாது செய்தது அனைத்தும் தான்தான் என்று ஒத்துகொள்ளும் சசிகலா. இதுவல்லவோ நட்பு. இதுவல்லவோ தோழமை. பிசிராந்தையார் கூட இவர்களிடம் அல்லவா நட்பை கற்று கொள்ள வேண்டும்.

ராணி said...

தோட்டத்தில் இருந்து விரட்டல் ஒரு நாடகம் என எல்லோரும் இப்பொது உணர்வார்கள். வழக்கை இழுத்தடிக்க வாய்தா ராணி நடத்தும் நாடகம்.

முஹம்மது மீரான் said...

ஜே ஜே டிவி இன் மெகா சீரியல் ஆரம்பம் ஆகி விட்டது. heroine சசிகலா. நடிப்பதற்கு கோடிகள் கிடைக்கும். கொஞ்சம் கிலிசிரின் உபயோகம் செயதால் நன்றாக கண்ணீர் வரும். வரும் வைதாக்களில் அதை உபயோகபடுத்தினால் நன்றாக காண்பதற்கு தத்ரூபமாக இருக்கும். நடிப்பிற்கு நன்றி.

தியாகி said...

கேக்கறவன் கேனையனாக இருந்தால் ...எருது எரோப்லேன் ..ஓட்டறேன் ..என்று சொல்லுமாம் .இந்த வழக்கு எத்தனை வருசமா நடக்குது ?இதே ஆரம்பதிலேயே ஏன் சொல்லவில்லை ? இத பாரு அம்மா ..ஊழல் வழக்குலே தியாகி பட்டம் எல்லாம் வாங்க முடியாது .கம்பி எண்ணியே ஆக வேண்டும்

கண்ணீர் said...

<<'ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறியழுத சசிகலா >>

சசிகலா கண்ணீர் குறித்து துக்ளக் அட்டைப்படம் போடுமா?

Anonymous said...

இந்தக்காட்சிக்கு துக்ளக்கில் கார்ட்டூன் எதிர்பார்த்தால் நாம் தன் மடையர்கள்.

kg gouthaman said...

ஆமாம் ஆமாம், எங்க அம்மாவும் நான் சின்னப் பையனா இருந்தப்போ அதைத்தான் சொன்னாங்க.

(சம்பந்தமில்லாத செய்திகள், சம்பந்தமில்லாத படம், கமெண்ட்டும் அப்படித்தானே இருக்கவேண்டும்!)

NAGARAJAN said...

துக்ளக்கில் ஜெயலலிதா பற்றி அட்டைப்படமோ கார்ட்டூனோ சத்யா கட்டுரையோ வரவே வராது.
ஜெவின் 'கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்' என்ற நாகரீகமற்ற பேச்சிற்கு சோவின்
கண்டனத்தை எதிர்பார்த்தேன். சோ 'இரு தரப்பும் பொறுமை காட்டியிருக்க வேண்டும்' என்று எழுதியது
அவருடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

தே மு தி க கூறிய 'உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பால் மற்றும் பஸ் கட்டண உயர்வை ஏன் செய்யவில்லை?' கேள்விக்கு
இன்று வரை சோ சால்ஜாப்பு கூட சொல்லவில்லை.

ஸ்ரீராம். said...

ஜாங்கிரிக்கும் ஜிலேபிக்கும் எதாவது சம்பந்தம் உண்டோ இல்லையோ பால்கோவா வேற மைசூர் பாகு வேற...அது மட்டுமல்ல நேத்து ஊர்லேருந்து வந்த மாமா அவங்க ஊர்லயும் மழை பெய்யலை என்றுதான் என்னிடமும் சொன்னார்.

R.Gopi said...

1) நான் திருமணம் செய்து வைத்த நடராஜன் கைதாகி இருப்பதில் எனக்கு வருத்தமே (விஜயகாந்துக்கும் “தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” தான் கண்ணாலம் கட்டி வச்சாருங்கோஓஓஓஓ!!!!)

2) சசிகலா அழுது புலம்பும் நாடகத்தை நான் நம்பவில்லை (எனக்கு பிடித்தது எல்லாம் உளியின் ஓசை, பொன்னர் சங்கர் திரைப்பட வசனங்களே!!!!)

சூனிய விகடன் said...

சோ போன்ற ஒப்பிலா வசனகர்த்தாக்கள்...தேவரீயம்....பார்ப்பனீயம்.. என்று லாவணி பாட ஊடகங்கள்....உன் குத்தமா...அவ குத்தமா....வகையில் பாடல் வரிகள்...சட்டப்படி விடுதலை, மனசாட்சிப்படி வருந்துங்கள் என்ற உச்ச நிலை உபதேசம், அவர் பண்ணினதுக்கு இவர் பொறுப்பா வாக்குவாதங்கள் - அவருக்கு தெரியாம இவர் எப்படி பண்ணுவார் பிரதிவாதங்கள் - நடவடிக்கைதான் எடுத்தாச்சே திருப்திகள்.- உலகமே ஒரு காமெடி நாடக மேடை என்னும் இட்லிவடை கமெண்டு - அப்புறம் இரண்டு வருஷம் கழிச்சு கூடப்போறது யாருப்பா...அவர் மாதிரியே இருக்கு ..இப்ப கொஞ்சம் வயசாயிடுச்சு ..விசாரிப்புகள் - தூங்கும்போது கரண்ட்டை நிறுத்திட்டானே படுபாவி சாபங்களுடன் புரண்டு படுத்து விடும் உலகத்துக்கு இதைவிட நிறைய கவலைகள் இருக்கு

Anonymous said...

அம்மா எதோ இட்டிலி கத சொன்னங்கலாமே?

kothandapani said...

வெகு விரைவில் ,,,,,கண்கள் பணிக்கும் இதயம் கணக்கும்......காட்சி ஒன்றுதான் கதா பாத்திரங்கள் மட்டும் வேறக இருக்கும்............தமிழன் தலை எழுத்து ..........

R. Jagannathan said...

//mfœthiu¤ jh§F« ãy«nghy¤ j«ik

Ïfœth®¥ bghW¤jš jiy.

- FwŸ: 151, mÂfhu«: bghiwÍilik,
»is: Ïšywéaš, ÃçÎ: mw«.

j‹ÛJ Fê g¿¥nghiuna jh§F»‹w óäia¥ nghš j«ik ÏfœªJ ngR»wt®fë‹ braiyÍ« bghW¤J¡ bfhŸtnj jiyÁwªj g©ghF«// இட்லிவடைக்கு Mars-ல் கூட வாசகர்கள் இருக்கிறார்கள் போல! - ஜெ.

thiru2011 said...

thuglak admk yin arivikkapadatha athikaara poorva yeadu.
Cho arivikka padatha kolkai parappu seyalaalar.