பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 10, 2012

மாணவனின் கொலைவெறி

அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் "வகுப்பறையில் இந்திய மாணவன் சுட்டு கொலை" "பள்ளியில் ஆசிரியர் சுட்டு கொலை" பொன்ற செய்தி நேற்று சென்னையில் நடந்திருக்கிறது. பள்ளிக்கு பெற்றோர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகும் முன் மீடியா உள்ளே நுழைந்து இதை மேலும் பரபரப்பாக்கிவிட்டார்கள். எல்லா ஆங்கில சேனல்களிலும் பிளாஷ் நியூஸ் என்று அமர்க்களப்படுத்துவிட்டார்கள். நேற்று பள்ளியில் நுழைந்த பெற்றோர்கள், மீடியா தான் இந்த கொலைக்கே காரணம் என்று சொல்லுவேன்.

ஒரு வாரமாக டிவியில் வரும் 'செங்காத்து பூமியிலே' என்ற படத்தின் ட்ரைலரை பார்த்திருப்பீர்கள், அவ்வளவு ரத்தம் அந்த ட்ரைலரில். இந்த மாதிரி படங்களை பார்த்து வளரும் குழந்தைகள் தங்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும் போது, வீட்டில் இருப்பதை தூக்கி எறிவதற்கு பதில் சமையல் அறையில் இருக்கும் கத்தியை எடுப்பார்கள். முன்பு தாத்தா பாட்டி இருந்த இரவு நேரங்களில் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லுவார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி கதை சீரியல் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. சீரியலை மிஸ் செய்துவிட்டால் அடுத்த நாள் மத்தியானம் நினைவு வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். சின்ன பாட்டிகள் யூ டியூபில் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படி இருந்தால் குழந்தைகள் எப்படி உருப்படும்?

பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஆசிரியர்கள், இண்டர்னலில் கை வைத்துவிடுவேன், பிராக்டிகளில் கம்மி செய்துவிடுவேன் என்று மாணவர்களை பயப்பட செய்வது அவர்களுக்கு மன அழுத்ததையும் மனநிலை பாதிப்பையும் கொடுக்கும். சமீபத்திய சினிமா படங்களில் அழுக்காகவும் தாடி வைத்துக்கொண்டு பெண்கள் பின்னால் சுற்றும் பொறுக்கிக்களாகவும் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். வீட்டிலிருந்து திருடும் பணத்தை கொண்டு குடித்து கும்மாளம் போடும் பொறுக்கிக்கள். இவர்களை பாக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் ?

இந்த மாணவன் கடைசியாக பார்த்த `அக்னிபத்` என்ற இந்தி படத்தில் வரும் காட்சிகள் கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது என்று போலீஸில் தெரிவித்துள்ளான். நாம் பார்க்கும் சீரியல்களில் தினமும் விஷம் வைத்து கொலை செய்யும் காட்சி ஏதாவது ஒரு சீரியலில் வந்துவிடுகிறது. அவர்கள் பேசும் வசனங்கள் நல்ல ஒழுக்கமாக குடும்பத்தில் யாரும் பார்க்க, கேட்க மாட்டார்கள். நம்முடன் சீரியல் பார்க்கும் நம் குழந்தைகள் கொஞ்ச நாளில் அதே மாதிரி முகபாவம், வார்த்தைகள், வசனங்களை பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மாணவர்கள் தங்கள் வாழ்கைக்கு 99 மார்க் பின்னாடி ஓடுவதை காட்டிலும், ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் உபதேசிக்க வேண்டும். பெற்றோர்கள் ட்விட்டரிலும், பிளாகிலும் செலவு செய்யும் நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்ய வேண்டும். முதல் காரியமாக வீட்டில் சீரியல் பார்ப்பதை நிறுத்தினால் நல்ல சமுதாயம் உருவாகும்.

திருட்டு விசிடி என்றாலும் பரவாயில்லை. "I am Kalam" போன்ற படங்களை உங்கள் குழந்தைகளுக்கு போட்டு காண்பியுங்கள்.

நிச்சயம் 15 வயது மாணவன் தப்பு செய்ய மாட்டான், இந்த கொலைக்கு அவன் காரணம் இல்லை. நல்ல வேளை அது என் குழந்தை இல்லை என்று மற்ற பெற்றோர்கள் ஆறுதல் அடையலாம். இது தற்காலிகமான ஆறுதல் தான்.

படம்: செங்காத்து பூமியிலே என்ற படத்தின் ஸ்டில்! இது வீரம் இல்லை ரவுடித்தனம்.

27 Comments:

ராஜ சுப்ரமணியன் said...

சரியாக எழுதினீர்கள். இன்றைய தினம் சீரியல்களும், சினிமாக்களும் இளம் சிறுவர்களை கெட்டு சீரழிக்கின்றன. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சீரியல் பார்ப்பதை ஒரு பெரிய கட்மையாகவே நினைத்து யார் என்ன எழுதினாலும், சொன்னாலும், விடாமல் சீரியல் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்; முதலில் அவர்கள் திருந்த வேண்டும்; பின்னர் நல்ல இனிமையான் சூழ்நிலை உருவாகும். பெரியவர்கள் இனியாவது திருந்துவார்களா?

jaisankar jaganathan said...

அந்த மாணவன் அடிப்படையில் ஒரு மன நோயாளியா இருக்கலாம். பெற்றோர் கவனிப்பு இல்லாத பையன்

Ratan said...

வன்முறை எல்லாக் காலத்திலும் நடக்கத்தான் செய்கிறது. தற்போது மீடியா வெளிச்சம் இது போன்ற விஷயங்களுக்கு அதிகமாகக் கிடைப்பதால், ஏதோ உலகமே இருண்டுவிட்டது போல் நமக்குத் தோன்றுகிறது. dont worry.. all is well

வழிப்போக்கன் said...

அட்சர லக்ஷம் பெறும் பதிவு.
பிரதி செய்து ஒவ்வொரு பள்ளிக்கூட வகுப்பறையிலும், பஸ்ஸிலும், ஆட்டோவிலும் ஒட்டவேண்டும்.
வசதி படைத்த சமூக ஆர்வலர் யாரேனும் போஸ்டராகச் சுவர்களில் ஒட்ட ஏற்பாடு செய்யலாம்.

MURALI said...

Counselling is a must for all the TEACHERS, AT FIRST

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

sury said...

//ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் உபதேசிக்க வேண்டும்.//

Say it Loud.
In our days,(six decades ago) there used to be a moral science class, both in the school as well as in the College I studied. The school is run by Hindu orthodox people and the college is by Catholic Jesuit Fathers. At both places, we students received the same message: I still remember the voice of Fr.Sequiera ringing in my ears: Choose your Teacher and
Obey the Teacher.
For, he shows Him, who leads one to the inner intellect.
I am not sure whether there are any moral instruction classes conducted nowadays in schools and college.
subbu rathinam.
http://pureaanmeekam.blogspot.comsubbu rathinam

ர.விஜய் said...

//மாணவர்கள் தங்கள் வாழ்கைக்கு 99 மார்க் பின்னாடி ஓடுவதை காட்டிலும், ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் உபதேசிக்க வேண்டும். //

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்...

benjamin david said...

பெற்றோர்கள் மனதில் அழுத்தமாக "இந்த வரிகளை பதிந்து வைத்து கொள்ளுங்கள் ".

ஆனால் தற்போது அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி கதை சீரியல் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. சீரியலை மிஸ் செய்துவிட்டால் அடுத்த நாள் மத்தியானம் நினைவு வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். சின்ன பாட்டிகள் யூ டியூபில் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படி இருந்தால் குழந்தைகள் எப்படி உருப்படும்?

kg gouthaman said...

கல்விப் பாட அமைப்புகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப் பட்ட சில மாற்றங்களும் இந்த விபரீதங்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆசிரியையை கொலை செய்யும் அளவுக்குச் செல்கின்றான் என்பது மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க, ஒரு நிபுணர் குழு அமைத்து, கல்வித் துறையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்.

R Sathyamurthy said...

After sometime all are going to forget this. North media would have dragged it for long if it had happened in Delhi. This is a rarity and we need not paint the picture as though every child is getting into such problems. It's not the case, as proved other children in the same class.

ConverZ stupidity said...

கொல வெறிடி பாட்டெல்லாம் ஹிட்டாகிற தேசத்துல கொல வெறிடி பாடின ஆளெல்லாம் முன்னணி கல்வி நிலையத்துல லெக்ச்சர் குடுக்குற தேசத்துல இதெல்லாம் நடக்காம பாலும் தேனுமா ஓடும்... வந்துட்டானுங்க வருத்த படுறதுக்கு... போய் வேலைய பாருங்க சார்...

Anonymous said...

KGG அண்ணா சொல்லுவது போல கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப் பட்ட சில மாற்றங்களும் இந்த விபரீதங்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

// கல்வித் துறையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்.// - KGG அண்ணா , loop holes இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

Anonymous said...

no ஹெப்சிபா ஜேசுதாசன் update?

Thilip said...

Not just serials and movies sow violence in teens. Another major part goes to computer games. Full of violence: shot down your enemy, wrestling all them psychologically get registered in these young hearts.

Jagadeesan R said...

//hot down your enemy, wrestling all them psychologically get registered in these young hearts.//
100% correct!

Anonymous said...

Adhellam sari.. Neengalum yedhuku kadasila (sorry! Modhalla)vanmuraiya thoondura padam potrukinga? Oru Abdul Kalam, oru buddhar, oru ghandhi, ippadi nalla padatha potrkulame?

kg gouthaman said...

அனைத்துப் பள்ளிகளிலும், எல்லா வகுப்பு மாணவர்களுக்கும், குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோர் + ஆசிரியர்கள் சந்திப்பு அவசியம் என்றும், பெற்றோர் அல்லது கார்டியன் ஆசிரியர்களை சந்தித்து, தங்கள் குழந்தைகளின் அட்டெண்டன்ஸ், நடத்தை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், தகுந்த காரணமின்றி, பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்கு வராத பெற்றோர்களின் குழந்தையின், இன்டர்னல் அசெஸ்மென்ட் மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கவேண்டும். பெ - ஆ கூட்டத்திற்கு வராத பெற்றோர்களை, பள்ளி நிர்வாக அலுவலர்கள் யாராவது நேரில் சந்தித்து - அந்த மாணவனின் நடவடிக்கைகள் பற்றி கூறலாம். பெற்றோர்களின் அலைபேசிக்கு - அவ்வப்பொழுது குறுஞ்செய்தி - பள்ளி நிர்வாகம் அனுப்பலாம். இன்றைய கால கட்டத்தில், (அதுவும் பள்ளிகள் வசூலிக்கும் பயங்கர கட்டணங்களில்) இதுவெல்லாம் சுலபமாக செய்யலாம்.

Anonymous said...

It is too difficult to confine the reason for the murder is cinema and TV. As a community we failed emphasis on importance of play grounds. Idle mind is devil mind.Lack opportunity to play outside lead the student to watch a movie 30 times. Recent survey says crime rate has come down in slums of Rio de Jeniro after building gyms and sports centre. - Rajesh

சுபத்ரா said...

Well said..

R. Jagannathan said...

I, for one, am unable to agree with your highlighted comment that a 15 year old will not err. Every child displays some attitudes and it is difficult where they pick them up. Even 2, 3 year olds create tantrums in nursery.

In this particular case, the media nd IV have taken a biased stand as if the boy is not to blame. It is clear from the news that the boy's parents have given him a long leash and pampered him with money and luxuries and did not bother to monitor him and correct him when he went wrong. It was because of a worried / perhaps, hassled / teacher's stead fast intention to correct him, the boy's parents finally saw that their son is spoiling his life and cut his pocket money. Perhaps, they failed to do it subtly and advise him with affection and care to mend his ways in his own interest. This is a case of failure by the parents rather than the ill effect of Cinemas / serials. - R. J.

Anonymous said...

neengalavadu indhe trilor photo virkku bhadil i'm kalam padathin photo pottu irukkalam?!

Sundu+eli said...

நல்ல பதிவு.டி.வி யில் வரும் பாட்டு போட்டிகள் கூட சின்னஞ்சிறுவர்கள் மத்தியில் ஒரு மன அழுத்த்தை ஏற்ப்படுத்தி விடுகிறது.அதை பார்க்கும் பெற்றோர்கள் அந்த பையன் பார் எவ்வளவு நன்றாக பாடுகிறான் நீயும் இருக்கிறாயே என ஒப்பிட்டு பேசுகிறார்கள்.கடந்த வாரம் இது போன்ற நிகழ்ச்சியில் ஒரு ஆறு வயது சிறுமி காஞ்சனா படத்தில் வரும் இறுதி பாடலை அதேப்போன்ற பயங்கர முக பாவத்துடன் பாடி ஆடினாள் அவள் இதை பாட எவ்வளவு முறை அந்த காட்சியைப்பார்த்திருப்பாள்.
அதே போல பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் வேறு.
இந்தியா அருமையான இள சமுதாயத்தை கொண்டிருக்கும் நாடு.அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோரது கடமை

hayyram said...

///சமீபத்திய சினிமா படங்களில் அழுக்காகவும் தாடி வைத்துக்கொண்டு பெண்கள் பின்னால் சுற்றும் பொறுக்கிக்களாகவும் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். வீட்டிலிருந்து திருடும் பணத்தை கொண்டு குடித்து கும்மாளம் போடும் பொறுக்கிக்கள். இவர்களை பாக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் ?////

உண்மையான சரியான கேள்வி, ரவுடித்தனம் தான் ஹீரோயிஸம், ரவுடியை காதலிப்பது தான் ஹீரோயினியிஸம் என்று பரப்புகிறார்கள். அப்படி ரௌடியாக இருப்பது தான் தமிழ் கலாச்சாரம் என்கிற தோற்றத்தையும் உண்டாக்குகிறார்கள். பருத்திவீரனால் பாதிக்கப்பட்டு வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இளம் பிள்ளைகள் இன்னும் கத்தியை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். காத்திருப்போம்!

Anonymous said...

in the last few days 3 reported incidents involving students community has taken as storm in the minds of people in chennai
1. school boy killing his teacher
2. degree/diploma/eng students planned sexual assualt/molestation of commons friends school mate
3.Poisoning by school girl
first on law treat s Juvenile case,other one under IPC (rape)&last attempt sucide.
root cause of 1st & 2nd is crimial intent/planned & premeditated one.
source: Moives- ist one Agnavesh & Eeesan ( if am right) for the second one.
younger gen mind are corrupted by movies/TV Serials and media which give importance to this.
where is remedy-first all the 5 rapist should be hanged with a summary trial & school boy should not be shown leniency due his age.
he should made to realize his act.all this should be lesson for the society
censor board should be strict in giving permission to movies like Eeesan etc.

Anthanan said...

வீட்டில் முன்னறையில் பிளே ஸ்டேஷன் என்ற அசிங்கமான கருவியை வாங்கி வைத்து விட்டு அதன் மூலம் வீடியோ கேம்ஸ் ஆடும் சிறுவர்களைப் பார்த்திருந்தால் இந்த கொலைக்கான காரணங்களில் அதையும் ஒன்றாக சேர்த்திருப்பார்கள். காட்சி அமைப்பு, காமிராக் கோணம், வசனம் (நிறைய ஆங்கில நாலெழுத்து சொற்களுடன்!) எல்லாவற்றிலும் ஒரு முழு நீளப் படத்தை ஒத்திருக்கும் இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் அந்தஸ்து பெற்றால் வெற்றி பெரும் இந்தியக் குழந்தைகளுக்கு தங்கப் பதக்கங்களை பரிசளிக்க ஒலிம்பிக் கமிட்டியினர் திக்குமுக்காடிப் போய் விடுவார்கள்!

வித விதமாக வன்முறையை மையக் கருத்தாக கொண்டவை இந்த விஷ விளையாட்டுகள்: நியு யார்க் நகரின் மையப் பகுதியில் சிவனே என்று காரில் பயணிக்கும் ஒருவரை வழி மறித்து, அடித்துக் கையை முறுக்கி காரிலிருந்து வெளியே தள்ளி விட்டு அந்தக் காரை திருடி செல்வது; துரத்தி வரும் போலீஸ் ரோந்து வண்டியிடம் இருந்து தப்ப சிக்னலுக்கு பணியாமல் தாறு மாறாக கார் ஒட்டுதல்; வழியில் குறுக்கிடும் எந்த நபரையும் கொன்றிட தகுந்த ஆயுதங்களை தேர்ந்தெடுத்தல், ரத்தம் சிதறித் தெறிப்பது போல் அடித்து நொறுக்குதல் இது போன்ற காட்சிகள் ஏராளம்! எவ்வளவு பேரை கொல்கிறோமோ அவ்வளவு மதிப்பெண்கள்!- இது எப்படி இருக்கு?

வன்முறையில் ஈடுபடும் முக்கிய கதாபாத்திரத்தை இயக்கும் ரிமோட்டை கையில் பற்றி கொண்டு கண்கொட்டாது திரையை பார்த்துக் கொண்டு பசி தாகமில்லாது இந்த கேம்களை விளையாடும் சிறார்களின் முக பாவத்தைப் பார்த்தால் அதில் தென்படும் கொலை வெறி ...வயிற்றைக் கலக்கும்!

பிளே ஸ்டேஷன் என்ற இந்த ஆபாசமான் உபகரணம் இன்று மதிய தர வர்க்கத்தினரின் புதிய அந்தஸ்து அடையாளம். இவற்றை குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பது அவர்களோடு சேர்ந்து விளையாடி மகிழ்வது இன்றைய பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்று!

நமது அரசு நிச்சயம் இந்த கேமை தடை செய்யாது என்பது நமக்கு தெரிந்ததே; என்னுடைய கவலை என்ன வென்றால் நமது அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலில் அவர்களது இலவச லிஸ்டில் இதை சேர்த்து விடக் கூடாது என்பதுதான்!

Kathiravan said...

Andru cinema indru serial cinemavilaavathu thedi poi paarka vendum thavirkavendumaanaal thavirkavum mudium. Aanan serial nam veetu varaverpu araike vanthu anaithu tharapinaraium kavarnthuvidugirathu. Sameebathil oru serialil oru garbini peninin 9 matha karuvai kalaika aval kanavanin chithi aal vaithu kattaiyal adikum pothu aval akka vanthu thaduthu than karuvai kalaithuk kolgira maathiri oru kaatchi padamaaka pattu oli parapi irrukiraargal. Enna solvathu.