இந்த மாத போட்டி தற்கால தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்டது.
கேள்வி: இணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் ?
சுவாரஸியமான உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நல்ல பதிலுக்கு வழக்கம் போல புத்தகம் பரிசு..
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, February 08, 2012
இ'லக்கி'ய போட்டி
Posted by IdlyVadai at 2/08/2012 01:46:00 PM
Labels: போட்டி
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










76 Comments:
கூகிளும் இல்லை, நெட்டும் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் குடத்தில் இட்ட விளக்காக ஒளி(ர்)ந்து கொண்டு இருப்பார்கள்.
இணையத்தில் துண்டு விரித்துப் பழகியவர்கள், கோவில் வாசல் தேடி செல்வார்கள்.
*இரஜினிகாந்த் நிம்மதியாக இருந்திருப்பார்.
*’எழுத்தாளர்கள், எழுதுவதற்கு தேவையான காகிதங்களுக்காக அசோகர் நட்டு வைத்த மரங்கள் முதற்கொண்டு வெட்டிவிட்டாட்கள்’- என ‘யாராவது’ போராட்டம் செய்யக் கூடும்.
கூகிள 'சாட்' செய்து சுவை கண்டவர்கள், window shopping செல்வார்கள்.
பத்திரிக்கைகளில் போர் புரிந்துகொண்டு இருப்பார்கள்
போஸ்டர் அடித்து ஓட்டுவார்கள் :-)
கூகிளும் இல்லை, நெட்டும் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் அவங்களுக்குள்ள அடிச்சுக்குவாங்க, ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேட்டி அளிப்பாங்க
எழுத்தாளர் கருணாநிதி போலவே கடிதம் எழுதுவார்கள்.
நெட் ப்ராஃபிட் கம்மியாகும்!
மீண்டும் "டிரைவ் - இன் " ஐ , திறக்க வேண்டி ஏங்கியிருப்பார்கள் ..!!
நெட்டும் கூகுளும் இல்லேன்னா, வலை வீசி தேடவேண்டியதாகியிருக்கும்!
உண்மையான எழுத்தாளர்களுக்கு மதிப்பு கிடைதிருக்கும்.
இணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் ஆளுக்கொரு வார/மாத இதழையை தொடங்கி இருப்பார்கள்
அழிந்து வரும் தேசிய இனமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள்
இணையம் வருமுன் என்ன செய்து கொண்டிருந்தார்களே அதையே செய்து கொண்டிருப்பார்கள்
ஞானபீட பரிசை வாங்கியிருப்பார்கள்
வீட்டுச் சுவரிலேயே ஸ்டேட்டஸ் எழுதி..காரித்துப்பி..!
தமிழ்ப்படம் - இல் வருவது போல ஆளில்லாத ஊரில் நாட்டாமை தனியா உட்கார்ந்து தீர்ப்பு சொல்வது போல...!
தமிழ்ப்படம் - இல் வருவது போல ஆளில்லாத ஊரில் நாட்டாமை தனியா உட்கார்ந்து தீர்ப்பு சொல்வது போல...! எலக்கியம்டா!எழுத்துடா! உழைப்புடா!
மனைவிமாரால் விவாகரத்துச் செய்யப்பட்டிருப்பார்களா? :-)
நிறைய சிறு பத்திரிக்கைகள் வந்திருக்கும். அவ்ளோதான்.
என்ன பண்ணினா எனக்கு பரிசு தருவீங்க. எல்லா போட்டியிலேயும் கலந்துகிட்டு ஒரு பரிசு கூட நான் வாங்கலை. எனக்கு ஆறுதல் பரிசாவது அனுப்புங்க
எல்லா எழுத்தாளர்களும் ஒற்றுமையாய் இருந்திருப்பார்கள் !
நீங்க இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டீங்க!
இப்படி இட்லிவடையில சட்னியாவற நிலைமைக்குலாம் வாராம தப்பிச்சிருப்பாங்க!
தமிழ் டைப் அடிக்க தெரிந்தவனெல்லாம் தன்னை எழுத்தாளன் என சொல்லிக்கொள்வது இருந்திருக்காது.
உண்மையான இலக்கியவாதிகள் எண்ணிக்கை விரலில் எண்ணக்கூடியதாகவும்,
படைப்புகளை படிப்பவர்கள் அதிகமாகவும் ஆகியிருக்கும்.
மரங்களை அழித்திருப்பார்கள்...பேப்பரில் எழுதியே எழுதியே...
கொஞ்சம் சீரியஸ் ஆன பதில் : இணையம், கூகிள் இல்லை என்றால் ஈ மெயிலும் இல்லை என்று எடுத்துக் கொள்கிறேன். எழுதுவோர்/ எழுத முயற்சிப்போர் எண்ணிக்கை இன்றிருப்பதை விடக் குறைவாகவும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் கண்டிப்பாகப் பல மடங்கு அதிகமாகவும் இருந்திருக்கும். எல்லோருக்கும் பெரிய இதழ்களில் இடம் கிடைக்காது என்பதால் பலரும் சிற்றிதழ்களை நோக்கிப் படையெடுத்திருப்பார்கள். சிற்றிதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து , அலுவலகங்களிலும் குடியிருப்புகளிலும் கையெழுத்துப் பத்திரிகைகளும் அதிகமாகியிருக்கும். ஜெராக்ஸ், பேக்ஸ் மூலமும் இவை பரவியிருக்கும். சனி, ஞாயிறுகளில் சிறிய அளவிலான இலக்கியக் கூட்டங்களும் நிறைய நடக்கும் . டிவியிலும் FM ரேடியோவிலும் புது எழுத்தாளர்கள் வாய்ப்புக்காக முட்டி மோதிய வண்ணம் இருப்பார்கள்! நாடகத் துறையிலும் சிலர் தங்கள் பங்களிப்பைக் காட்டியிருப்பார்கள், அதுவும் இவ்வளவு தூரம் நசிந்திருக்காது! கைப்பேசியில் பலரும் நண்பர்களிடம் தன் 'இலக்கியப்' படைப்புகளைப் பகிர்ந்த வண்ணம் இருப்பார்கள்!
சினிமா விரும்பி
They will fight each other through the SMS, letter, Kakka (not pura) vidu thoothu, Vaasagar vattam etc. - Ravi. Chennai
கேள்வி: இணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் ?
இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டார்கள்! நானும் கருத்து சொல்லியிருக்க மாட்டன்!
The best time in your life is whenever you don't have internet, mobile, tv, relatives, friends or anything. The time to understand yourself.
புத்தகங்கள் பெருகியிருக்கும்
சில செம்மொழி நூலகத்தில் உறங்கியிருக்கும்
இணையம் பரிணாமத்தின் ஒரு அங்கமே
அது இல்லையென்றாலும்
கல்வெட்டிலும், இலைகளிலும் , சுவடியிலும் வளர்ந்த தமிழ் மற்றுமொரு அறிவியல் கண்டுபிடிப்பில் வளர்ந்திருக்கும் என் தமிழ் மொழி
சாரு போன்ற எழுத்தாளர்கள் சரோஜாதேவி எழுதி பொழச்சுகுவாங்க, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் குறுநாவல் போட்டு துட்டு பாத்திருப்பாங்க.. நம்ம இட்லிவடை டீவிஎஸ்ல ஜல்லி அடிச்சுகிட்டு இருந்து இருப்பார்.
ரசிகர் மன்ற தலைவர் அல்லது வட்ட செயலாளர் அதுவும் இல்லையா இருக்கவே இருக்கு ஞானி போன்றவர்களின் இருப்பிடம் ! அதுபோக , நான் கேட்கிறேன் ..?
அப்பவும் இவங்க ஏதாவது செஞ்சிக்கிட்டேதான் இருக்கனுமா ..? என்ன ஒரு துர்சொப்பன கேள்வி இது .. ச்சை...!!
ரசிகர் மன்ற தலைவர் அல்லது வட்ட செயலாளர் அதுவும் இல்லையா இருக்கவே இருக்கு ஞானி போன்றவர்களின் இருப்பிடம் ! அதுபோக , நான் கேட்கிறேன் ..?
அப்பவும் இவங்க ஏதாவது செஞ்சிக்கிட்டேதான் இருக்கனுமா ..? என்ன ஒரு துர்சொப்பன கேள்வி இது .. ச்சை...!!
எழுதுபவர்கள்: தங்கள் தமிழ் பதிவுகள் (நல்ல இதழ்களில்) வெளி வர காத்து கொண்டு.... முயற்சித்து பல தரமான படைப்புகளை செய்வார்கள். கூகிளால் என்னை போன்ற மண்டுகளின் கையில் 'தமிழ்' மாட்டிகொண்டது. பாவம் பல குப்பைகளையும் சேர்த்து வங்கி கொட்டி கொள்கிறது. அதில் சில மாணிக்கங்கள் கூட ;-)
தொலைக்காட்சிகளில் தங்கள் நிகழ்சிகளின் TRPக்காக வெகு பாடுபட்டு இருப்பார்கள்....
இப்போது இணையத்தில் கிடைக்கும் பல விசயங்களுக்கு நடுவே, நல்ல கருத்துக்கள் கூறும் வெகு சில வலை'பூக்கள்' மலராமேலேயே இருந்து இருக்கும்
ஒரு வேளை சினிமாவில் வேஷம் கட்ட வந்து இருப்பார்களோ???
ஒரு வேளை சினிமாவில் வேஷம் கட்ட வந்து இருப்பார்களோ???
எழுத்தாளர்கள் கதி என்னவாகும் என்பது இருக்கட்டும், இட்லிவடையும், அவர் கேள்விக்கு வரிந்துகட்டிக்கொண்டு பதில் சொன்னவர்களும் என்னவாக இருந்திருப்பார்கள்?
தங்கள் செலவில் போஸ்டர் அடித்து, பட்டம் கொடுத்து வழக்கம் போல மகிழ்ந்து கொண்டும், காறி துப்பி கொண்டும் இருப்பார்கள். பத்திரிகைகள் எப்போதும் போல அவ்வப்போது பேட்டி வெளியிட்டு கல்லா கட்டியிருக்கும்!
பழைய ஓலை சுவடிக்காக இரும்பு கடை தேடி செல்வர் :-))))
பழைய ஓலை சுவடிக்காக இரும்பு கடை தேடி செல்வர் :-))))
ஏராளமான கையெழுத்துப் பத்திரிககள் வந்திருக்கும்.
ஆணி, கோணி,காற்று, ஊற்று என்று ‘இலக்கிய’ இதழ்கள் வந்திருக்கும். கூகிள் உதவியால் ஐடியாக்கள் சுடுபவர்கள் எழுத்துலகில் ‘கர்ச்சீஃப்’ போட முடியாமல் தத்தளித்து விட்டு அம்பேல் ஆகி இருப்பார்கள்.
-கபாலி
கூகிள், இணையம் இல்லை என்றால் முதற்கண் இந்த மாதிரி கேள்வியே கேட்க இடமில்லாமல் போகும்!
பழைய பேப்பர்க் காரர்களுக்கு நிறைய வியாபாரம் நடக்கும்.
I would say, if google isnt there, since common man cant cross check whatever they say, they ll let their imagination out and tell "idhu dhaan olaga ilakkiyam" or "shakespeare said blah blah balh" or "jduissaj said Wow wow wowo wowow" etc...
இருக்கவே இருக்கே :
நமக்கு நாமே திட்டம்.... தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்வது... அதாவது முக்கியமா ஏடாகூட கேள்வி, ஏடாகூட பதில்கள்...
தினம் ஒரு அறிக்கை விடலாம்
பபபபபழைய்ய்ய்ய்ய கதைகள் எல்லாம் 1938, 1949 என்று ஆரம்பித்து தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதலாம்...
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் புத்தகங்கள் எண்ணிக்கை அதிகமாகும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிக வேலை இருக்கும், என்ன கதைகள் இன்னும் கொஞ்சம் குழப்பமாக இருக்கும், ஒரிஜினல் எழுத்தாளரே பார்த்தாலும் குழப்பமாகும். நோபல் பரிசு என்பது சிறந்த தமிழ் புத்தகத்தை ஆங்கிலத்தில் காப்பியடிப்பவர்களுக்கு தருவது என்று சாரு எழுதலாம், மாமல்லன் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு, அதைப் பற்றி பல நூலகங்களில் தேடி ஏதாவது கையெழுத்து பத்திரிக்கையில் எழுதலாம். ஆனால் முக்கிய விஷயம், நாம் அனைவரும் இந்த நகைச்சுவையை அனுபவத்திருக்க முடியாது
என்னைப்போல் தமிள் தொன்டு செய்பவர்கல் வந்திருக்கமாட்டார்கள்
(தமிழ்த்தாயே என்னை மன்னித்தருள்வாய்)
ஏதேனும் நூலகத்தில் கூகிளித்து அதை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி நான் தான் முதலில் அனுப்பினேன் இது என்னுடைய படைப்புன்னு தொலைக்காட்சி வாயிலாக பிரபல எழுத்தாளர்களும், ஒரு போது பூங்காவில் பிரபலமாகத்துடிக்கும் எழுத்தாளர்களும் சொல்வீச்சு நடத்திக்கொண்டிறுப்பர். நாங்கதான் பாவம் இப்படி பின்னூட்டம் எழுத முடியாம நொந்து இடியாப்பம் ஆகியிருப்போம் :p
இணையமது மட்டுமிங்கு இல்லாது ஆனால்
பணயமாய் ஆவார் பாவம்!
இலக்கியத்தின் மேல் உண்மையிலேயே காதல் உள்ள எழுத்தாளன் நூலகங்களை தேடி செல்வான்.(தஞ்சை சரஸ்வதி மகால், கன்னிமாரா நூலகம்). தன் இலக்கிய தாகத்தை தீர்ப்பதற்காக எத்தகைய முயற்சியையும் எடுப்பான்..அவன் அனுபவித்ததை எல்லோருக்கும் நூல்கள் எழுதி பகிர்வான்.அவனே இலக்கியவாதி ....
உங்கள் கேள்விகளுக்கு இது போன்று என் அழகிய தமிழில் பதில் எழுதிருக்க முடியாது. இன்னும் கணினி கூட இல்லை என்று வைத்துக்கொண்டோமானால்... தமிழ் எழுத்தாளளின் கையெழுத்தும் அழகாவே இருந்திருக்கும் அவன் எழுத்தை போல..!!
நீங்களும் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டீங்க... இந்த கேள்விக்கு பதில் சொல்ல அவசியம் இருந்திருக்காது :)
இன்றைய நிலையில் இணையம்,கூகிள் இல்லதாது உப்பு,காரம்,புளிப்பு இல்லாத பத்தியஉணவு போன்றது. அது தமிழ் எழுத்தாளர்கள்க்கு மட்டும் இல்லை நமக்கும் தான்.
book prize ன்னு சொன்னதுக்கே இத்தன அக்கபோரா? அப்போ Booker prize க்கு எப்படி இருக்கும்?
ஐபிஎல் இல்லை என்றால் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி எப்படி விளையாடியிருப்பரொ அது போல் இந்த எழுத்தாளர்கள் அவர்களது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருப்பர்..
i will get the book prize
கூகிளும், நெட்டும் இல்லை என்றால் படைப்பாளிகளின் வாசகர் வட்டம் சுருங்கிவிடும், படைப்புகளின் விளம்பரங்களுக்கு தினசரி, வார இதழ்களை அணுக வேண்டிவரும், முக்கியமாக படைப்பாளர்களும்,வாசகர்களும் தங்களுக்குள் வரும் கருத்து மோதல்களுக்கு மேடையை மட்டுமே பயன்படுத்த முடியும்.Mail:cccsankar@gmail.com
கூகுளின் வளர்ச்சிக்கு சரியான எடுத்துகாட்டு ....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
No idlyvadai ...
- Sp
நாங்கலாம் இட்லிவடைய சாப்பிடும் இடத்தில மட்டும் பாத்துட்டு இருப்போம் ;-)
நூலகங்களைத் தேட வேண்டியது தாண்
ஒன்னும் ஆயிருக்காது.. ஏதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் "காகிதமும், பத்திரிக்கையும் இல்லாவிட்டால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்திருப்பார்கள். சுவாரஸியமான உங்கள் பதில்களை போஸ்ட் கார்டு-இல் 'இட்லி வடை பக்கம் , வார இதழ், சென்னை ' என்ற முகவரிக்கு அனுப்பவும் ... நல்ல பதில் அனுப்புவர்களுக்கு பர்தா போட்ட இட்லி வடையுடன், இட்லி சாம்பார் வடை சாப்பிடும் வாய்ப்பு" - அப்படின்னு வந்திருக்கும்..
[பி.கு: இ.வ. ஒரு வேளை இந்த பதில் பிடித்திருந்தால், எனக்கு பதிலாக 5 ஆவது பாஸ் பண்ணின அரசியல் வாதிக்கு 6 வது புத்தகம் அனுப்புமாறு கேட்கிறேன் ]
சாரு என்னும் இம்சை இல்லாமல் இருந்திருக்கும்...
கூகிள் இல்லை எனில் வேறு இணையத் தேடல் தளங்களுக்கு தாவி இருப்பார்கள்.
குவார்ட்டர் அடித்டுவிட்டு குப்புற படுப்பார்கள்
ஹலோ ஜெயிக்க போவது யாரு?
கலைஞர் மாதிரி குடும்பத்துக்குள்ளேயே கும்மியடிச்சுட்டீங்களா?
வெற்று காகிதத்தை மடித்து நாக்கு வழித்துக் கொண்டிருப்பார்கள்.
தகுதியுள்ள எழுத்தாளர்களுக்கு இணையமோ கூகுளோ தேவையில்லை. ஒரு பேனா பேப்பர் போதும். அந்த எழுத்து நிச்சயம் அனைவரையும் சென்றடையும்.
காமராஜர் அரங்கத்துக்கு அவ்ளோ கூட்டம் வந்து இருக்காது.
காமராஜர் அரங்கத்துக்கு அவ்ளோ கூட்டம் வந்து இருக்காது.
இட்லி வடைக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.
எட்டு மணி நேரம் என்ன பத்து மணி நேரம் கூட கரண்ட் கட் பண்ணிக்குங்கன்னு இருப்பாங்க ல
சனி ஞாயிற்றுகிழமை மாதிரி எல்லா நாளும் இருக்கும்...இது எப்படி இருக்கு....
இது என்ன அபத்தமான கேள்வி.........பேட்டி..............கூகிள் இணையம் வருவதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தார்களோ அதையே தான் செய்துகொண்டு இருந்திருப்பார்கள் .................. எப்பிடீஈஈஈஈஈஈஈஈ ...
இணையம் இல்லை என்றாலும் சரி கூகுள் இல்லை என்றாலும் சரி ...
சுடுபவர்கள் சுட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
Post a Comment