பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 07, 2012

ஹே லெக்ஷ்மன் !!

கர்நாடகாவில் இரண்டு பிஜேபி அமைச்சர்கள் சட்டசபையில் செல்போனில் செக்ஸ் படங்களை பார்த்து ரசித்த காட்சியை மீடியா வெளிச்சம் போட்டு காட்ட அவர்களை என்ன செய்யலாம் என்று பிஜேபி யோசித்துக்கொண்டு இருக்கிறது. அதில் ஒருவர் பெயர் லக்ஷ்மண் இன்னொருவர் சிசி.பாட்டீல் இவர் கொஞ்ச நாளுக்கு முன் "பிறரை கவர்ந்து இழுக்கும் ஆடையை பெண்கள் அணிவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் எதிரானவன். பெண்கள் தாங்கள் அணியும் ஆடையைக் குறித்து பூரண விழிப்புணர்வு உடையவர்களாக இருத்தல் அவசியம். தங்களின் கலாச்சாரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற கண்ணியமான ஆடையை தேர்வுச் செய்யவேண்டிய பொறுப்பு பெண்களுக்கே உள்ளது" என்று சொல்லியுள்ளார். இவர் தான் கர்நாடகாவின் குழந்தைகள்-மகளிர் நலதுறைஅமைச்சர்!.

சட்டசபையில் பரபரப்பாக கர்நாடகாவில் எங்கோ பாகிஸ்தான் கொடியை ஏற்றியதை பற்றி விவாதம் நடந்துக்கொண்டு இருந்த போது இவர்கள் சைலண்டாக பார்த்துள்ளார்கள். இவர்களுடைய அடிபொடிகள் பெண்களை காதலர் தினம், அல்லது பப்புக்கு போனால் அடிப்பது என்று தங்கள் வீரத்தை நிருபிக்க தான் லாயக்கு.

ஆபாசப் படம் பார்ப்பது தப்பில்லை, ஆண்களில் 95% பேர் பார்க்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது, ஆனால் அதை எங்கு பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. அவர்களும் என்ன செய்வார்கள், வீட்டில் பார்த்தால் அடி விழும், சட்டசபையில் பார்த்தால் பிரச்சனை இல்லை என்று பார்த்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரை தான் இனிமேல் கையை வைத்து மறைத்துக்கொண்டு பாருங்கள். காங்கிரஸ் சின்னம் சில சமயம் உபயோகப்படும்.

14 Comments:

நிலவன்பன் said...

அவர்கள் பார்த்த வீடியோக்களைப் போட்டிருக்கலாம்! :)

Subramanian said...

Comment of Nilavanban is very relevant. I would like to second the same.

Anonymous said...

சாவடி சொல்லியிருக்கார் - அதாவது, சபையில் ரேவ் பார்ட்டி பத்திய விவாதம் நடந்த்தால அது சம்பந்தமான வீடியோவைப் பார்த்தாராம்! இது எப்படி இருக்கு? அதோட சபைக்கு செல் எடுத்து வரத்தடை இருக்கே அப்படின்னா, பேசத்தானே கூடாது... நான்தான் பேசலையே அப்படிங்கறார்! நல்ல கூத்து! பேசாம அமைச்சர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு பண்ணலாம். அவருக்கு வீட்டில் மனுஷனுக்கு என்ன பூசை நடந்ததோ..!

Anonymous said...

Please some one shoot them on their...p.......

Shame...shame...

இரா. சத்தியமூர்த்தி said...

இட்லிவடையும் 95ல இருக்கா? 95 ஆண்கள்னா மீதி 5 பெண்களா? ஏன் இந்த கொலவெறி? 33 கொடுங்க ப்ளீஸ்.

ConverZ stupidity said...

Karnataka ministers are dyslexic - don't know the difference between election and erection

khaleel said...

only 6 comments!!! surprise

Bharathis said...

அன்னா ஹஜாரே ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வரும் முன் கர்நாடகா ஆபாச video புகழ் மந்திரிகள் மாதிரி ஆட்கள், குற்றப் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தேர்தலில் நிற்க முடியாதபடிக்கு தேர்தல் விதிகளை மாற்ற போராட்டம் நடத்துவது தான் இப்போது அவசியம்!

Bharathis said...

அன்னா ஹஜாரே ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வரும் முன் கர்நாடகா ஆபாச video புகழ் மந்திரிகள் மாதிரி ஆட்கள், குற்றப் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தேர்தலில் நிற்க முடியாதபடிக்கு தேர்தல் விதிகளை மாற்ற போராட்டம் நடத்துவது தான் இப்போது அவசியம்

D. Chandramouli said...

Your yellow shaded comment on the use of 'hand symbol' (of the Congress party) is apt.

Anonymous said...

"இனிமேல் கையை வைத்து மறைத்துக்கொண்டு பாருங்கள்" - "எதை மறைத்துக்கொண்டு ?"

Kannan said...

நமது பாராளுமன்றம் இப்படி ஆபாச படம் பார்க்கும் இடம் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது......

"நன்றி,
கண்ணன்

http://www.tamilcomedyworld.com"

டகிள் பாட்சா said...

இந்த BJP அமைச்சர்கள் அரசியலுக்கு novices போலிருக்கு. மாட்டிக்கொண்ட பிறகு நம் தமிழக அரசியல்வாதிகளிடம் consult பண்ணியிருந்தால் ‘ எப்படியெல்லாம் கர்நாடக இளம் பெண்களை ஆபாச படங்கள் எடுத்து SMS மூலம் பரப்புகிறார்கள், இதை சட்டமன்றத்தில் விவாதித்து இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்க்காகத்தான் நாங்கள் cell Phone ல் research பண்ணிக் கொண்டிருந்தோம். இந்த meediaக்கள் இதை பரபரப்பிற்காக out of context உபயோகித்தது கண்டிக்கத்தக்கது. ஆகவே மீடியாக்களின் செயலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்னு’ அறிக்கை விட்டிருந்தாங்கன்னா தப்பிச்சு இருக்கலாம். கோட்டை விட்டுட்டாங்களே மாங்கா மடையனுங்க.

Prabu said...

ஆபாச படம் பார்த்ததற்கே இப்படி என்றால், இனி காங்கிரஸின் சின்னத்தை பயன்படுதியுருந்தால் என்ன நடந்திருக்கும்.
அதுவும் சட்டசபையில், அபச்சாரம் அபச்சாரம்