பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 06, 2012

சரித்திர புனைவு

தமிழ் இலக்கியத்தில் யார் என்ன வேண்டும் என்றாலும் எழுதாலம், பேசலாம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்த வரிசையில் இரண்டு பதிவுகளை இங்கே உங்களுக்கு தந்துள்ளேன்.

முதல் பகுதி :

"படித்ததைப் படித்தபடி அல்லது தான் படித்ததை இன்னமும் மெருகேற்றி உண்மைக்கு அருகில் நின்று சொல்பவராய் யார் இருப்பார்கள் அல்லது இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம்? இலக்கியவாதியையா?......எஸ்.ரா போன்ற ஆழ்ந்த வாசிப்பை அவரிடம் எதிர்பார்க்க அவரென்ன இலக்கியவாதியா?"
மாமல்லன் எழுதிய பதிவை நிச்சயம் படிக்க வேண்டும்.

பகுதி இரண்டு:

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல் பற்றிய விமர்சனத்தில் எஸ்.ரா எழுதியது...

சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னை காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.

நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது. சரித்திரத்தினை எப்படி உள்வாங்கியிருக்கிறோம். எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே. முன்பு எழுதப்பட்ட சரித்திர குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.

வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள் சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணகாப்பக தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கபட்டதும் தவிர்க்கபட்டதையும் வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்க துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.

நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்த கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.தமிழ் இலக்கிய சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும். ( இதை சொன்னவரும் எஸ்.ரா தான் அவருக்கு நன்றி ). இந்த இரண்டு பதிவுகளில் எது சரித்திர புனைவு ?

4 Comments:

sury said...

பல வருடங்களுக்குப்பின் ஒரு இலக்கியத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது.

சுப்பு ரத்தினம்.

வழிப்போக்கன் said...

அது என்ன “சரித்திரப் புனைவு”. சரித்திரம் என்பது நிஜமான நிகழ்வுகளின் வர்ணனை; புனைவு என்பது நாவல். பாமரனாகிய என்னைப் போன்றவர்களுக்கு இது விசித்திரமாகப் படுகிறது.

R. Jagannathan said...

Dear IV, Thank you for referring to Mamallan's post. I really enjoyed reading the article on 'Mata-Pita-Guru-Deivam' - a speech by Mr. T.T.Rangarajan & 'The story of a mother' by Hans Christian Andersen. Though I had to spend about half-an-hour to read them, I felt very good on reading them and have forwarded the links to my friends and relatives. Thanks again. - R. J.

எதையாவது சொல்லி புஸ்தகம் வித்துறுங்க... said...

ரஜினி --- சாரு -----

இப்படி ஏதோ ஒரு கொக்கியினால் இன்று இந்த பிரச்சனை!!!! (இதுல என்ன பிரச்சனை) ஹாட் டாப்பிக் ஆகி விட்டது.....

இந்த காவல் கோட்டம் நாவலை பின்புலமாக வைத்து தானே அரவாண் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது....
அப்போ... இதென்ன ஓசி மார்க்கெட்டிங்கா.....

இந்த சல்லிகளும் கப்பிகளும் கும்மியடித்து.. பேசுவது சில்லியாக இருக்கிறது...

அரிசியில் குருணையை எடுக்கும் அந்த ஃபில்ட்டரிங் ப்ராஸ்சின் பெயர் சலிப்பு ....

சரித்திரம் சலிக்காதது தான்... எப்படி சர்ச்சைகள் சலிக்காதது போல...