பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 05, 2012

ரஜினி-எஸ்.ரா :: சாரு-த்ரிஷா

இன்றைய செய்தி:
தமிழ் எழுத்தாளர்(?) சாருவின் ’எக்ஸைல்’ நாவலின் விமர்சனக் கூட்டம் சென்னை, தேவநேய பாவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

"நடிகர்களைக் கொண்டு, பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள்’’ என, ரஜினி எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் கலந்துக்கொண்டத்தை சாடினார். மேலும், "ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

நேற்றைய வரலாறு: டிசம்பர் 2, 2011 அன்று சாரு எழுதியது...
எக்ஸைல்: த்ரிஷாவுக்கு ஒரு வேண்டுகோள்… - சாரு
சமீபத்தில் ஷாருக் கானின் ஒரு படத்துக்காக அவர் செய்த விளம்பர யுத்திகளைப் பற்றி நண்பர்கள் ஆச்சரியத்துடனும், எரிச்சலுடனும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாவலுக்கும் அந்த அளவுக்கு விளம்பரம் தரப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு நாவல் வாசிப்பில் கலந்து கொண்ட ப்ரியங்கா சோப்ரா அதன் ஒரு அத்தியாயத்தை வாசித்தது பற்றி பத்திரிகைகளில் படித்தேன். மும்பையில்தான் இப்படி நடக்கும். மலையாள சேனலில் கூட எக்ஸைல் பற்றி ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நடந்தது. யோசித்துப் பாருங்கள். ஒரு தமிழ் நாவலுக்கு மலையாள சேனல் கொடுக்கும் மரியாதை இது. இங்கே?

ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா போன்றவர்கள் இங்கே தமிழில் செய்யலாமே? ப்ரியங்கா சோப்ராவே தமிழ் கற்றுக் கொண்டு சென்னை வந்து இலக்கிய வாசிப்பு செய்வதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாதது என்பதால் சொல்கிறேன். த்ரிஷாவின் தமிழை கமல்ஹாசனே பாராட்டியிருப்பதால் த்ரிஷாவுக்குக் கூடுதல் தகுதி உள்ளது.

விளம்பரம் வேண்டும். இல்லாவிட்டால் எக்ஸைல் என்ற நாவல் வரப் போவது பற்றி யாருக்குத் தெரியும்? சில கல்லூரிகளில் எக்ஸைல் நோட்டீஸ் விநியோகிக்கலாம் என்று நினைத்தேன். கைவசம் இருந்த நோட்டீஸ்கள் தீர்ந்து விட்டன. கல்லூரி மாணவ மாணவிகள் பலரும் இன்று சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற சிலரின் எழுத்துக்களும் அதற்கு ஒரு காரணம். ஆனால் இந்த இளைஞர்களுக்கு எக்ஸைல் என்ற நாவல் வெளிவர இருக்கும் செய்தியை யார் சொல்லுவது? எப்படிச் சொல்லுவது? இதுதான் என் அக்கறை.

தமிழின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சீனு. ராமசாமி எக்ஸைலைப் படித்து விட்டேன். ட்ரைலருக்கு நான் தயார் என்று நேற்று போன் செய்தார். ட்ரைலர் இயக்குனர் கோவா ஃபில்ம் ஃபெஸ்டிவலில் இருக்கிறார். அவர் வந்ததும் சினிமா கலைஞர்களிடம் கருத்துக் கேட்டு ஒரு ட்ரைலர் தயாரிக்க வேண்டும்.

தில்லியில் நடந்த கருத்தரங்கில் எக்ஸைல் ட்ரைலர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது சந்தோஷம் அளிக்கிறது. ட்ரைலரின் நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
( நன்றி: http://charuonline.com/blog/?p=2669)
தமிழ் நாட்டில் கொஞ்ச நாளாக இலக்கியவாதிகள் ஹார்மோனிய பெட்டியை வைத்துக்கொண்டு கூட்டம் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களால் ஆர்ஜெலுசில் மருந்து எந்த கடையிலும் ஸ்டாக்கில் இல்லை.. முருகா எல்லோரையும் காப்பாத்துப்பா

படம்: தற்போதைய இலக்கிய மரபின்படி இலக்கிய கூட்டங்களுக்கு லூஸ் மோகனே வந்தாலும் அவர் படத்தை பெரிதாக போட வேண்டும்...எங்கேயும் அது கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது...

17 Comments:

மோகன் குமார் said...

மனுஷ்ய புத்திரன் தன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்ததை அப்படியே இங்கே காப்பி அடித்தது இட்லி வடைக்கு அழகா?

IdlyVadai said...

//மனுஷ்ய புத்திரன் தன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்ததை அப்படியே இங்கே காப்பி அடித்தது இட்லி வடைக்கு அழகா?//

நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன் மனுஷ்யபுத்திரன் பக்கத்தை பார்த்தேன். நிச்சயம் இந்த பதிவு அதை பார்த்த பின் எழுதவில்லை....

Senthazal Ravi said...

இட்லி வடைய நான் நம்புறேன். குட் ஷாட்.

சீனு said...

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா...

kg gouthaman said...

ரொம்ப நாளாக ஒரு டவுட்டு. சாரு எழுதியிருப்பது மைக்ரோசாப்ட் எக்செல் பற்றிய புத்தகமா?

பார்வையாளன் said...

ஒரு நாவலுக்கும் அந்த அளவுக்கு விளம்பரம் தரப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்”

விளம்பரத்துக்காத்தான் த்ரிஷாவை அழைக்கிறேன் என நேரமையாக சாரு சொல்லி இருக்கிறாரே. இதே போல விளம்பரத்துக்காக ரஜினியை அழைக்கிறோம் என கேவலபுத்திரன் சொன்னால் பிரச்சினை இல்லையே.. ரஜினி பேச்சை கேட்டு கண் கலங்குவது போன்ற ஓவர் ஆக்டிங் , எழுத்தாளனை விட விருந்தினர் போட்டோவை பெரிதாக போட்ட நீசத்தனம் , கூட்டத்தை தக்க வைத்து கொள்ள ரஜினியை கடைசியில் பேச வைத்த ஈன புத்தி- இதைத்தானே சாரு கண்டித்தார்,,, சாரு நிக்ழ்ச்சியில் சாருவுக்காகத்தான் கூட்டம் வரும்... கடைசியில் அவர் பேசுவதை கேட்டு விட்டுத்தான் கூட்டம் கலையும்,.. ஏச் ரா என்றால் யார் என்றே தெரியாமல் , ரஜினிக்காக மட்டுமே கூடிய கூட்டத்தை வைத்து, இலக்கிய பம்மாத்து செய்வதைத்தான் சாரு கண்டித்தார்

Anonymous said...

@gouthaman Exile'kum Excel'kum vithyaasam theriyaatha nee ellam comment adika vanta..poi pillaingala padikka vaikra valiya paaru :(

Anonymous said...

Charu is a piece of shit and always ready to do anything for cheap publicity. Now he is trying to use Rajini's name to get some mileage. He is just jealous of ESRA. His mouth piece pichai is another joker and doesn't have even an ounce of brain.

Anonymous said...

மாமல்லன் வேறு பேதி மாத்திரையை கலக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்... அவரால் ஜே மோ , எஸ் ரா, சாரு ரசிகர்களுக்கெல்லாம் வயிற்றுக் கலக்கல். ஜெலுசிலோடு இப்போது டயோரியாவுக்கான மாத்திரையும் கிடைப்பதில்லையாமே

கிருஷ் said...

//முருகா எல்லோரையும் காப்பாத்துப்பா

இரா.முருகனையா அழைக்கிறீர்கள்?

IdlyVadai said...

//இரா.முருகனையா அழைக்கிறீர்கள்?//

தமிழ் இலக்கியம் அதனால் தமிழ் கடவுளை அழைத்தேன்... :-)

Ma. Senthil Kannan said...

//poi pillaingala padikka vaikra valiya paaru :(//

This comment looks like it came from Cricket commentary puli Bala and his jalra rasigar mandram. Freeya vudu mame, they are dubakoor partinga.

ஜெகன்னாதன் said...

இட்லி வடைக் கடைக்கு ஃபீடிங் பாட்ட்டிலில் பால் சாப்பிடும் வெள்ளந்திக் குழந்தைகளும் வருகிறார்களே! # ‘ரொம்ப நாளாக ஒரு டவுட்டு. சாரு எழுதியிருப்பது மைக்ரோசாப்ட் எக்செல் பற்றிய புத்தகமா? ஹா..ஹா! - ஜெ.

இரா. சத்தியமூர்த்தி said...

எனக்கு ரொம்பநாளாக புரியாதது, தமிழ் எழுத்தாளர்களுக்கு இடையில் இருக்கும் பொறாமை, மோதல்! இது கலைஞர் - ஜெ. மோதலையும் (இப்போது, ஜெ.-விஜே. மோதலையும்) விட காழ்ப்பு அதிகமானது போல தெரிகிறது. தமிழை படிக்கிறவனும், தமிழில் படிக்கிறவனும் குறைந்து கொண்டிருக்கும் நாளில், இந்த பிரிவினையும், பொறாமையும் தேவைதானா?

kg gouthaman said...

ஆதரவளித்தோர் அனைவருக்கும் நன்றி. பெயரிலி / முகம் காட்ட பயப்படுபவர்கள் கருத்துகளுக்கெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை.

jaisankar jaganathan said...

// பெயரிலி / முகம் காட்ட பயப்படுபவர்கள் கருத்துகளுக்கெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை.//

வருங்கால ஜெயலலிதா வாழ்க

Sethu said...

Exile - a tamil novel with a English name....and Charu wants certification from Tamil people ??