பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 03, 2012

நீதிக்கு ஜே!! - யதிராஜ்

இந்ததேசம் உள்ள வரை, அல்லது இத்தேசத்தில் ஊழல் உள்ள வரை, நீதிபதி ஏ.கே.கங்குலியை யாரும் மறக்க இயலாது. அவ்வாறான ஒரு சரித்திரப் பிரசித்திபெற்ற ஒரு தீர்ப்பை தான் நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில் வழங்கியுள்ளார். ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக, வாரி வழங்கிய 122 இரண்டாம் அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து, டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிடியின் பரிந்துரையின் பேரில் மறு ஏலத்திற்கு விட வேண்டும் என அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை, ஒரு பைசா கூட ஊழலோ, அல்லது அரசிற்கு வருவாய் இழப்போ ஏற்படவில்லை என்ற காங்கிரஸ்/கபில் சிபலின் புரட்டு வாதத்திற்கு மரண அடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.இந்த தீர்ப்பு காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு மட்டுமல்லாது, இந்திய தொலைத்தொடர்புத் துறையிலும் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது. ரிலையன்ஸ், டாடா, வோடஃபோன், ஏர்செல் போன்ற தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவான்கள் துவங்கி, தொலைத் தொடர்புத் துறைக்கும் செய்யும் தொழிலுக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, அதை அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்று, கொள்ளை லாபமீட்டிய ஸ்வான் டெலிகாம், யூனிடெக் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களை முற்றாக நிராகரித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பில், தேசிய சொத்துக்கள் இது போன்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதான முறையில் வழங்கப்படக் கூடாது என கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், இரண்டாம் அலைக்கற்றை உரிமம் மறுபடியும் ஏலம் மூலமாக, TRAI – யின் பரிந்துரைப்படி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு TRAI – க்கு நான்கு மாத அவகாசத்தையும் அளித்துள்ளது. இவ்வாறு ஏலம் விடுவதன் மூலம் இத்துறையில் ஏற்கனவே முறைகேடாக உரிமம் ஒதுக்கீடு பெற்றுள்ள சிறிய, மற்றும் அனுபவமில்லாத நிறுவனங்கள் போட்டியிலிருந்து விலகக் கூடிய அல்லது விலக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம், தவிர ஏற்கனவே இத்துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் மேலும் லாபமடைய வாய்ப்புகள் உண்டு என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.இது ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு வெளியானவுடன் ஆளும் காங்கிரஸுக்கு பல தர்மசங்கடங்கள். முதலாவதாக, ஏற்கனவே ஊழலே நடைபெறவில்லை என சாதித்த ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றம் இவ்வாறான ஒரு தீர்ப்பின் மூலம், அரசின் அனைத்து அசட்டு, புரட்டு வாதங்களையும் ஒரேடியாக முச்சந்தியில் போட்டு உடைத்துவிட்டது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது புரியாத நிலையில் காலையிலிருந்து காங்கிரஸார் பிதற்றித் தள்ளி வருகின்றனர்.“முதலில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா, எனக்கு எதுவும் தெரியாது, எதுவாக இருப்பினும் கபில் சிபலைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.”“ அடுத்ததாக கபில் சிபல்! இவர் நேரடியாக செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல், பொதுவாக, இன்னும் தீர்ப்பைப் படிக்கவில்லை எனக் கூறிவிட்டு பிரதமருடன் அடுத்த கட்ட ஆலோசனைக்குச் சென்றுவிட்டார். மூத்தவர் பிரணாப் முகர்ஜியும், தீர்ப்பைப் படிக்கவில்லை என்று எதிர்பார்த்த பதிலையே கூறிவிட்டு சென்றுவிட்டார்.”மதியம் கபில் சிபல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பல வேடிக்கைகள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என அனைவரையும் ஒரு அரைமணி நேர பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தூக்கியடித்துவிட்டார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக பேச வந்த அவர், இன்னும் தீர்ப்பைப் படிக்கவில்லை என முதலில் கூறினார். பிறகு சுதாரித்துக் கொண்டது போல், முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வந்த முறை! அதைத் தொடர்ந்தே நாங்கள் அவ்வழியைக் கையாண்டோம்; எனவே அதனால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு பாஜகவே காரணம், எனவே பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார், சக காங்கிரஸாரே அசந்திருப்பர். 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்த முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கோட்பாட்டை வகுத்த சமயம், இந்தியாவில் அப்போதுதான் தொலைத் தொடர்புத் துறையானது வளரத் துவங்கிய தருணம், தவிர செல்பேசி அப்போதுதான் அறிமுக நிலையிலிருந்தது. அதனால், தொலைத் தொடர்புத் துறையில் ஒரு போட்டியைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், அம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 ற்குள் அலைபேசி நிறுவனங்களும், அவற்றின் சந்தாதாரர்களும் மிகப்பெரிய அளவில் பெருகிவிட்டனர். அப்படி இருந்தும், பாஜக கையாண்ட வழியைப் பின்பற்றி 2008 ஆம் ஆண்டும், 2001 ஆம் ஆண்டின் முறையையே பின்பற்றி, 2001 ஆம் ஆண்டின் விலைக்கே விற்றது சற்றும் நியாயமல்ல; அதற்கு பாஜகவின் மீதே பழியைத் திருப்புவது அதைவிட வேடிக்கையான விஷயம். இதைத்தான் அறிவுஜீவியான கபில் சிபல் செய்தார். இவ்விடத்தில் இன்னொரு விஷயமும் கூறியாக வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடைபெறவில்லை, அரசிற்கு வருவாய் இழப்பும் இல்லை, லாபம்தான் என முதலில் வாதிட்டது இதே கபில் சிபல்தான்; இன்று அரசின் வருவாய் இழப்பிற்கு பாஜகதான் காரணம், பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று கோருவதும் கபில் சிபல்தான். அதெப்படி ஏற்படாத ஒரு வருவாய் இழப்பிற்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என கபில் சிபல் வாதிடுகிறார்? லாபம்தான் என்று இவர்தானே கூறினார், அப்படியாயின் இவர்கள் பாஜகவிற்கு நன்றியல்லவா கூற வேண்டும்?அடுத்ததாக வெளியான தீர்ப்பு, ப.சிதம்பரம் பற்றியது. அலைக்கற்றை ஒதுக்கீடு விலை நிர்ணயத்தில் ராஜாவும், சிதம்பரமும் சேர்ந்தே முடிவெடுத்திருப்பதால், இவ்வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சு.ஸ்வாமி ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன்னதாக அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர் வைத்த போது, சிபிஐ மறுத்துவிட்டது. எனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதற்காக தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த அலைக்கற்றை வழக்கை இந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நீதிபதி ஓ.பி.சைனி தலைமயில் தனியாக விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பதற்கான தீர்ப்பு ஃபிப்ரவரி 4 ஆம் தேதி வரவிருக்கின்ற நிலையில், உச்சநீதிமன்றம், சிதம்பரத்தை அலைக்கற்றை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கும் விவகாரத்தையும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் வசமே ஒப்புவித்து, இவ்வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.மேற்கூறிய இரண்டு தீர்ப்புகளுமே இவ்வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக நோக்கப்படுகிறது. இவ்விரண்டு வழக்குகளுமே ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் ஸ்வாமியினால் தாக்கல் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரத்தில் சிதம்பரத்தின் தொடர்பினை நிரூபிக்கும் விதமான ஆவணங்களை ஸ்வாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆயினும், கபில் சிபல் தொடர்ந்து சிதம்பரத்திற்கு எதுவுமே தெரியாது என்று வாதிடுகிறார். தவிர இவ்விவகாரத்திலுள்ள முறைகேடுகள் பற்றி பிரதமருக்கும் எதுவும் தெரியாது என்கிறார். பிரதமருக்கு, தான் பிரதமர் என்பதைத் தவிர எதுவுமே தெரியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.ஆக சரித்திரப் பிரசித்தி பெற்ற தீர்ப்புகள்!! நீதிபதி கங்குலி இன்றோடு ஓய்வு பெற்ற போதிலும், இந்த மெகா ஊழல் விவகாரத்தில் நீதிபரிபாலனம் தன் கடமையை செவ்வனே செய்து, ஊழல் பேர்வழிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று நம்புவதோடு, இவ்வாறான நம்பிக்கை வித்தை விதைத்த சுப்ரமணியன் ஸ்வாமி அவர்களுக்கும், இந்திய உச்சநீதி மன்றத்திற்கும் ஒரு ராயல் ஸல்யூட்!!

- யதிராஜ்

14 Comments:

Anonymous said...

/// இந்த தீர்ப்பில், தேசிய சொத்துக்கள் இது போன்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதான முறையில் வழங்கப்படக் கூடாது என கடுமையாகச் சாடியுள்ளது. ///

இதைச் சொல்ல நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர நீதி மன்றம் அல்ல! இப்படிக் கொள்கையில் நீதி மன்றம் தலையிடுவது மிகவும் ஆபத்தான போக்கு. இந்தத் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது.

மேலும் காண்க- இது தொடர்பான பத்ரி பதிவு.

Anonymous said...

atlast something is moving against politician & corp biggies who could fine tune the system to their advantage.
atleast now mr kapil should comeout with the loss figure to the nation& he should step down alongwith our law minister immediately

ssr sukumar said...

//பிரதமருக்கு, தான் பிரதமர் என்பதைத் தவிர எதுவுமே தெரியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.//// avar oru aiyo paavam!raghul gandhiya kooppiraaru! avarthaan vara maattengiraaru! 2 thadava by-paas(heart surgery)seythu kondavar!!!!

ConverZ stupidity said...

ராயல் ஸல்யூட்!!!

R. Jagannathan said...

டெலிகாம் ஊழல் பெருசாளிகளால் செய்யப்பட்டது. சிபல் போன்ற ஜகஜ்ஜாலக் கில்லாடி வக்கீல்கள் சட்டத்தின் ஓட்டையை மட்டும் இது வரை பார்த்துக் கொண்டிருந்தனர்.ஜட்ஜ் கங்கூலியும், சைனியும் இல்லையென்றால் இந்த கேஸ் எப்ப்ஓதோ ஊத்தி மூடப் பட்டிருக்கும். கடைசி தீர்ப்பில் நான் எதிர் பார்க்கும் முக்கியமான பாய்ன்ட் என்னவென்றால், லீகலாக செய்தது சரி என்றாலும், நாட்டுக்கு கேடு நடந்தது என்பது நிரூபிக்கப் பட்டால் சம்பத்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்னும் நீதி. இதில் தகிடு தத்த வாதம் செய்யும் வக்கீல்களும், சொலிசிடர் ஜெனரலும் சேர்க்கப்பட்டு உள்ளே தள்ளப்படவேண்டும். அனைவரது ஆஸ்தியும் கைப் பற்றப்படவேண்டும்.

அடுத்து லைட் பாய்ன்ட்: (அப்படியா அருணாசலம்) ஜனலோக்பால் இன்று சட்டமாகிவிட்டது! தோனியும் கம்பீரும் கடைசி 4 ரன் எடுக்காமல் எவ்வளவோ முயன்றும் இந்தியா ஜெயிச்சாச்சு! - ஜெகன்னாதன்.

பெங்களூர் பிஸ்கோத்து said...

பாவம் காங்கிரஸ். எடியூரப்பா பதவியில் இருந்த பொழுதெல்லாம், இரண்டு ஜி அலைக் கற்றை ஊழல காற்று கிளம்பும் பொழுதெல்லாம், எடியூரப்பாவை கை காட்டி, 'உங்க ஆளு ஊழல, ஊ ஊ ட்டி ...' என்று பெருங்குரலில் கத்தினார்கள். இத்தாலிய அன்னை கூட என் டி டி வி பேட்டியில் ஆக்ரோஷமாக அதை சொன்னார். உடனே ஜால்ரா சானல்கள் அதை திரும்பத் திரும்பக் காட்டி சந்தோஷப் பட்டனர். இப்போ காங்கிரஸ் கூட்டம் மொத்தமும் திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி, முழிச்சுகிட்டு இருக்காங்க!

சந்திரமௌளீஸ்வரன் said...

2 ஜி வழக்கில் சுப்ரமண்யன் ஸ்வாமி மட்டும் புகழப்படுகிறார்

ஆனால் இந்த தீர்ப்பு இரண்டு வழக்குகளின் சங்கமம்

முதல் வழக்கு 2010 லேயே தொடரப்பட்டது

தொடர்ந்தது Centre for Public Interest Litigation and others

ஸ்வாமி தொடர்ந்தது 2011 ல்

Centre for Public Interest Litigation and others என்பதில் இருக்கும் அதர்ஸ் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்

The important questions which arise for consideration in these petitions, one of which has been filed by Centre for Public Interest Litigation, a registered Society formed by Shri V.M. Tarkunde (former Judge of this Court) for taking up causes of public interest and conducting public interest litigation in an organised manner, Lok Satta, a registered Society dedicated to political governance, reforms and fight against corruption, Telecom Watchdog and Common Cause, both Non-Governmental Organisations registered as Societies for taking up issues of public importance and national interest, Sarva Shri J.M. Lingdoh, T.S. Krishnamurthi and N. Gopalasamy, all former Chief Election Commissioners, P. Shanker, former Central Vigilance Commissioner, Julio F. Ribero, former member of the Indian Police Service, who served as Director General of Police, Gujarat, Punjab and C.R.P.F. and Commissioner of Police, Mumbai, P.R. Guha, an eminent Senior Journalist and visiting faculty member of various institutions including IIMs, IITs, FTII, IIFT, Delhi University, Jawaharlal Nehru University and Jamia Milia Islamia University and Admiral R.H. Tahiliyani, former Chief of Naval Staff, former Governor and former Chairman of Transparency International India and the other has been filed by Dr. Subramanian Swami, a political and social activist

சந்திரமௌளீஸ்வரன் said...

2 ஜி வழக்கில் சுப்ரமண்யன் ஸ்வாமி மட்டும் புகழப்படுகிறார்

ஆனால் இந்த தீர்ப்பு இரண்டு வழக்குகளின் சங்கமம்

முதல் வழக்கு 2010 லேயே தொடரப்பட்டது

தொடர்ந்தது Centre for Public Interest Litigation and others

ஸ்வாமி தொடர்ந்தது 2011 ல்

Centre for Public Interest Litigation and others என்பதில் இருக்கும் அதர்ஸ் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்

The important questions which arise for consideration in these petitions, one of which has been filed by Centre for Public Interest Litigation, a registered Society formed by Shri V.M. Tarkunde (former Judge of this Court) for taking up causes of public interest and conducting public interest litigation in an organised manner, Lok Satta, a registered Society dedicated to political governance, reforms and fight against corruption, Telecom Watchdog and Common Cause, both Non-Governmental Organisations registered as Societies for taking up issues of public importance and national interest, Sarva Shri J.M. Lingdoh, T.S. Krishnamurthi and N. Gopalasamy, all former Chief Election Commissioners, P. Shanker, former Central Vigilance Commissioner, Julio F. Ribero, former member of the Indian Police Service, who served as Director General of Police, Gujarat, Punjab and C.R.P.F. and Commissioner of Police, Mumbai, P.R. Guha, an eminent Senior Journalist and visiting faculty member of various institutions including IIMs, IITs, FTII, IIFT, Delhi University, Jawaharlal Nehru University and Jamia Milia Islamia University and Admiral R.H. Tahiliyani, former Chief of Naval Staff, former Governor and former Chairman of Transparency International India and the other has been filed by Dr. Subramanian Swami, a political and social activist

Santhose said...

Do you think that BJP was not involved any scandal regarding this issue. Since it was the first time no body cared or doubt about it.

BJP also involved in this scandle

Anonymous said...

proud of justice

பாரதி மணி said...

ஒரு சப்-இன்ஸ்பெக்டராக தன் வாழ்க்கையைத்தொடங்கிய பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்ற ஜட்ஜ் ஓ.பி. ஸெய்னி இன்று இந்தியாவின் உள்துறை மந்திரி ப. சிதம்பரத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிறார். இப்போது டைம் பகல் 12.50.

இன்னும் தீர்ப்பு வெளியிடப்படவில்லை.
இந்தியாவே இந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறது! எழுபதுகளில் அலகபாத் நீதிமன்ற ஜட்ஜ் சின்ஹாவின் தீர்ப்பு இந்திரா காந்தியின் தலையெழுத்தை மாற்றியது போல!!

R. Jagannathan said...

What happened to my comment sent on 3/2? - R. J.

gopal said...

Zero sibal is again and trying to prove that he is the greatest joker . That he has lost his sense is proved again and again.

ஜெகன்னாதன் said...

//இதைச் சொல்ல நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர நீதி மன்றம் அல்ல! இப்படிக் கொள்கையில் நீதி மன்றம் தலையிடுவது மிகவும் ஆபத்தான போக்கு. இந்தத் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது// ரொம்ப நல்லது! திருந்த மாட்டோம் என்பவர்களை என்ன செய்வது! அரசில் இருந்த அரசியல்வாதி அமைச்சர் குழுவைக் கூட கலந்தாலோசிக்க மாட்டேன் என்று தான் மட்டும் தனியாக, தெரிந்தே தவறான முடிவு எடுத்திருக்கிறார். செயலற்ற பிரதமரும், கூட்டணி தர்மத்திற்கு வளைந்து கொடுத்த UPA தலைவியும் இந்த ஊழலை தடுக்கவில்லை. அதைவிட, இன்னும் மோசம் - அந்த ஊழலை மறைக்கப் பார்க்கிறார்கள். பொறுப்பு வாய்ந்த பெரிய மனிதர்கள் கோர்ட்டுக்குப் போன பின்னும் நீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது என்பது ....த்தனம். கொஞ்ஜமாவது நாட்டைப் பற்றியும் கவலைப் படுங்கள். அடித்த கொள்ளை போதும். - ஜெ.