பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 02, 2012

வாழ்த்துகள் சுவாமி(2)ஜி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படவில்லை என்று ராஜா பதவி விலகிய போது பேசிய டெலிகாம் துறை அமைச்சர் கபில் சிபல் தன் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார் ? காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை முழுவதும் படித்து ஆராய்ந்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என்று பேத்துகிறார்கள். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை முழுவதும் படித்தால் அவர்களுக்கு உச்சா தான் வரும். மனசாட்சி இருந்தால் பிரதமரும், ப.சிதம்பரமும் ராஜிநாமா செய்ய வேண்டும். நிதி அமைச்சகத்தின் அறிவுரையை ஆ. ராசா கடைப்பிடிக்கப்படவில்லை என்று சொல்லும் சிபில் ஏன் ராசாவை மந்திரிப் பதவியில் நீடிக்க வைத்தார் ? அவர் தலித் என்ற காரணத்தாலா ? ராசாவிற்கு பாஸ் யார் மன்மோகன் சிங் என்ற மௌனகுருவா இல்லை திமுக தலைவரா ? ராசா சொன்ன பேச்சை கேட்கவில்லை என்று விரலை உயர்த்தி பேசும் சிபில் அவர் தப்பு செய்யும் போது என்ன செய்துக்கொண்டு இருந்தார் ? இவர்கள் நடத்துவது பாராளுமன்றமா அல்லது பைத்தியக்கார மடமா ?

நிச்சயம் இந்திய மக்கள் உச்ச நீதிமன்றத்துக்கும், சு.சாமிக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். பல கேடிகள் பல கோடிகள் ஊழல் செய்த இந்த இந்த வழக்கை தனி ஒருவர் எப்படி சமாளிக்கிறார் என்று வியப்பே ஏற்படுகிறது. அவரை ஜோக்கர் என்று சொன்ன படித்த அறிவுஜிவிகள் இப்போது என்ன செய்வார்கள் ? வேற என்ன சு.சாமி புத்தகம் போடுவார்கள்

19 Comments:

Gopal said...

Zero sibal (Kapil) and emptysingh (ourPM) should hang their heads in shame and get out of the cabinet.. PC should give company to A Raja. This is the dream of the billion people of Bharath.

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

இவனுக மானங்கெட்டவனுக தானே..கர்ச்சீப்பை எடுத்து மூஞ்சிய துடைச்சிட்டு...வேற வேலைய பார்ப்பானுக..ராஜீனாமாவா...கடைசி டைம் வரை சும்மா உட்கார்ந்து பெஞ்சை தேய்ச்சுட்டு அடுத்தவனையும் நன்மை செய்யவிடாம தானும் நல்லது செய்யாம கிடைச்ச வரை சுரண்டுவதுதான் இவர்கள் வேலை..காங்கிரஸ் கூடாரத்தை அன்னிக்கே இழுத்து மூடாத காந்திதான்,,இத்தாலிக்காரம்மா இந்தியாவை ஆளும் கேவல நிலைக்கு முக்கிய காரணம்!!

jaisankar jaganathan said...

நல்ல நேரம் சதீஷ்குமார் - காந்தி எப்பவோ காங்கிரஸ கலைக்க சொன்னார். அத நேரு கேக்கலை

kg gouthaman said...

எனக்கு என்னவோ நாடாளுமன்றத்துக்கு கூடிய சீக்கிரம் தேர்தல் வரும் என்று தோன்றுகிறது.

Narayanan said...

Su. Swamy can make a better PM than Modi.. Wat say?

Anonymous said...

Manja comment super.. We can understand who they are who is waiting to publish book of swamy..

R. Jagannathan said...

//அவரை ஜோக்கர் என்று சொன்ன படித்த அறிவுஜிவிகள் இப்போது என்ன செய்வார்கள் ?// I have commented in the same vein in one of your earlier blogs. We should all be thankful to S.Swamy for his courageous one-man war against the almighty corruption. He is better than Anna in my opinion. - R. J.

Anonymous said...

Today's verdict (?!) has more questions than answers. Ofcourse it is only for those who look deep into it.

It didn't say anything about PC's involvement - it simply says that the CBI court is "competant" enough to decide that. What does the competancy factor do here ? For a moment they completely forgot that they are hierarchically above the CBI court. Unless these judges wanted to buy time there is no point in referring back to the CBI court.

Another one is about the SIT. The court has said that it is not needed. In effect this means that they are happy with what CBI is doing or that the CVC is better equipped to monitor that. They have simply overruled their own recent observation on the political involvement in the CVC appointments.

And then comes about the Raja-part. The court is ready to affirm that he has erred. Charge is that the fee fixed was not appropriate and then the last date was advanced. If the fee is not appropriate re-fix it. Who object and who stops ? And what the BS about the last date issue ? What it has to do in a case of first-come-first-served basis ? Instead of thinking about these obvious questions we are ready to write the final chapters of politicians of our choice.

Great ethics there!

PS: I've decided not to disclose my identity since this is a moderated site. If my comment appear and in full I can consider revealing my identity. But wait, I'm not a great personality as you might have thought just now. My only concern is that I do not want to get branded which may end up in people reading my comments thro' colored glasses. Let us see!

sriram said...

சொன்ன பேச்சு கேக்காத நேருவை ஏன் பிரதராக்கினார் காந்தி?

Siddharth said...

நான் ஒரு வேளை அமைச்சரானால் இந்த மாதிரி "தலையில கை வச்ச போஸ்" கொடுக்க மாட்டேன்பா ! ச்சே ! ரொம்ப கேவல படுத்துராங்க மீடியா காரங்க

Siddharth said...

நான் ஒரு வேளை அமைச்சரானால் இந்த மாதிரி "தலையில கை வச்ச போஸ்" கொடுக்க மாட்டேன்பா ! ச்சே ! ரொம்ப கேவல படுத்துராங்க மீடியா காரங்க

BalajiS said...

அப்பா அனானி
நீ ரேஷன் கடைல சீனி வாங்கி இருக்கியா!

நான் நேத்து வாங்க போனேன்பா
அன்ன கட் ஆப் தேதி முடிஞ்சுது-ன்னு சொல்லிட்டன்கப்பா

ஒருவேளை நீ கடைக்கரண்ட சொல்லி இல்ல கடைக்காரன் உன்கிட்ட முன்னாடியே சொல்லி வச்சு ....

ஓ! இத தன நம்ம ராஜா அங்கன செஞ்சிருக்கருப்பா!

நீ யாருன்னு சொல்லவே வேண்டாம்பா ..

Anonymous said...

@ நல்ல நேரம் சதீஷ்குமார் - இதுக்கு புலிப்பாணி சோசியதுல எதுனாச்சும் பரியாரம் இருக்கா?

Anonymous said...

swamy is the tool. the key is - dissatisfied/oozhal paarthu manam veruthu pona central govt staffs. they pass the reqd docs to swamy through journalists. - this is true news.

Anonymous said...

@ Balaji,

Is life too difficult at Bangalore ration shops ? It is sad. BTW, ration shops are more meant for people down the line. Personally I wouldn't regret if I don't get items there. I will worry only if it isn't available for their intended customers.

Coming to the great Ganguly's verdict, he knew that this case will get diluted post his period and thence ensured to pronounce his verdict (?!) on the last day of his office.

If he thinks that all 122 licenses were illegal why didn't he pronounce that all other cases in this regard as redundant ?

Atleast 6 mln subscribers in TN will be affected becoz of this verdict. Considering a nominal fee of Rs. 100 for number portability, the minimum business volume emerges atleast in TN is not less than 60 crorers. Just imagine the overall size of the business in the entire country that will be enjoyed by the existing players and possibly the offer they could have placed on Ganguly's table. Mind boggling!

BalajiS said...

@anony,
Precisly,

If Ganguly could have been offered,
think how much could have been offered to PC & Raja in first place?

Could you give statistic for that also?

Thanks!

BalajiS said...

@anony,

You had a LOOK at my profile/location just to answer a question in a blog.

I can understand how you would do business!

Anonymous said...

SIX MILLION CUSTOMERS IN TAMIL NADU?
YOU CAN SAY SIX HUNDRED MILLION ALSO?
YOU WANT TO GIVE SOME STATISTICS. PLEASE GIVE IT "BIG"

GOPALASAMY

Anonymous said...

2G licences were not cancelled because of Swamy's petition... it is because of Prashant Bhushan's petition