பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 16, 2012

முனி மலர் 15-2-2012


தமிழருக்கு நோபல் பரிசு!
ப.சிதம்பரத்துக்கு நோபல் பரிசு. நேற்று முன் தினம் டெல்லியில் இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் கார் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என கண்டுபித்த இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாமா என்று நோபல் பரிசுக் குழு தீவிரமாக யோசிக்கிறது. இந்தப் பரிசு அடுத்த பிலிம் பேர் அவார்ட் கொடுக்கும் நிகழ்ச்சியில் பல நடிகர்கள் முன்னிலையில் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

பார்லிமெண்ட்டில் சோனியா அழுகை!
தன் மூத்த அமைச்சர் ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும் செய்தி கேட்டு சோனியா ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று குர்ஷித் தெரிவித்தார். ஆனால் இந்த செய்தியை முழுமையாக மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், வெடிகுண்டு வெடிப்பு நடந்த போது புகை வந்தது. அதனால் கண் எரிச்சலில் தண்ணீர் வந்தது என்று எரிச்சலுடன் தெரிவித்தார்கள்.

சோனியா அழுகை, கலைஞர் ஆறுதல்!
சோனியா பார்லிமெண்டில் அழுத செய்திக்கேட்டு கலைஞர் போஸ்ட் கார்ட் ஒன்றில் ஆறுதல் கவிதை எழுதி அனுப்பினார்.
"நேரு" பரம்பரை அழலாமா?
வேர்பட்டுப் பிளக்கின்ற பூமியிலே மழை
நீர் அழுத குடிதண்ணீர் உப்பு கரிக்கும்
தேர்தல் நாடகம் நடத்திப் பார்த்து; ஏமாந்த காரணத்தால்
இரு விழி மூடிக் கொண்டு அழுதுவிட்டார்!
நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்
உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்ததம்மா!
நீ அழுததைப் பார்த்து நாடு அழுதது
அதனால் கொடுத்தேன்
உங்கள் நினைவாக
இலவச கர்சீப்
அன்பு உடன்பிறப்புகாள், அதற்குள் துள்ளிக் குதிக்காமல் -
அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!
கொடுத்த கர்சீப்பில் மூக்கைச் சிந்தித் தூக்கிபோடுங்க.தோனி சிக்ஸர் அடித்த ரகசியம்!
போன கிரிக்கெட் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்துப் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். நீங்கள் கடந்த இரண்டு போட்டிக்களில் அபாரமாக விளையாடும் ரகசியத்தை சச்சினிடம் சொன்னால் அவரும் அடிப்பார் இல்லையா என்று கேட்டதற்கு தோனி சொன்ன பதில்: "விளையாடும் போது பிசிசிஐ-ஐ நினைத்தேன். அவர்கள் மீது உள்ள கோபத்தில் அடித்தேன்" என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட சச்சின் பிசிசிஐ படத்தை கிரிக்கெட் மட்டையில் ஒட்டி விட்டு விளையாடலாம என்று யோசிக்கிறார். மட்டையில் பிசிசிஐயின் படத்தை இந்திய அணியினர் மட்டுமே ஒட்டலாம் என்றும் மற்றவர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஆங்கில ஹிந்து மீது முட்டாள்கள் அமைப்பு போராட்டம் தமிழ் ஹிந்து ஆதரவு?
ஆங்கில நாளேடான ஹிந்து தன் விளம்பரத்தில் டைம்ஸ் பத்திரிக்கை படிப்பவர்கள் முட்டாள்கள் என்று கூறியுள்ளது. ஆங்கில ஹிந்துவை அதிகமாக படிக்கும் தமிழகள் அடிக்கடி போராட்டம் நடத்தும் நடிர்களுடன் முட்டாள்கள் அமைப்பு என்ற அமைப்புடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளார்கள். இதற்கு இடையில் தமிழ் ஹிந்துவிற்கும் ஆங்கில ஹிந்துவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது மற்ற மதத்தினர் செய்யும் சூழ்ச்சி என்று கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். கூடிய சீக்கிரம் இந்த மாதிரி கட்டுரையின் தொகுப்பை ஆங்கிலத்திலும் பிறகு தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்தப் புத்தகத்தின் விமர்சனத்தை சரக்கு மாஸ்டர் ஆழம் இதழில் எழுதுவார். அது தான் மரபு.

உலகில் பெரிய பணக்காரர் ஆனார் மிஸ்டர் குடிமகன்!
உலக பணக்கார தரவரிசையில் குடிமகன் என்ற தமிழன் அம்பானியை விட 100 கோடி அதிகம் சம்பாதித்து முதல் இடத்தை பெற்றார். இவர் உலகில் 7ஆம் இடத்தில் இருக்கிறார். 1992ல் இவர் ஒரு பைக் வைத்திருந்தார், பிறகு 2002ல் கார் வாங்கினார், பிறகு 2012 இவர் வீட்டில் 24மணி நேரம் கரண்ட் இருந்த காரணத்தால் இவர் தான் பெரிய பணக்காரர் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் தொடர்ந்து கரண்ட் கட் நடைபெற்றால் இந்த குடிமகன் உலக வரிசையில் முதல் இடத்தை பெற்றிவிடுவார் என்று சொல்லுகிறார்கள்.

அல்வா கொடுத்தால் சாப்பிடுவீர்களா?
நேற்று மத்திய அமைச்சர் ஒருவர் மலேசியாவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பிறகு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். அவரிடம் பிளைட்டில் என்ன சாப்பிட கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு "நூடுல்ஸ், மற்றும் ஜாங்கிரி" என்றார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் "அல்வா" கொடுத்தால் சாப்பிடுவீர்களா என்று கேட்டதற்கு "கொடுத்தால் சாப்பிடுவேன்" என்றார். மாம்பழம் என்றால் தம்பியுடன் பங்கு போடலாம் அல்வாவை பங்கு போட முடியுமா? என்று பதில் கேள்வி கேட்டுவிட்டுப் போனார்.


எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் -குரங்குகள் போராட்டம்!

இந்து முன்னணி மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் முன்னிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கழுதை, நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைப் பார்த்த ஹிந்துக் குரங்குகள் எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் சில குரங்குக் குட்டிகளையும் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் பால்ய விவாகம் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


கோச்சடையானிலிரிந்து ஏன் சிநேகா நீக்கம்?

வை திஸ் கொலைவரி டியின் மாமனார் நடிக்கும் கோச்சடையானிலிரிந்து நடிகை சிநேகா ஏன் நீக்கம் என்ற கவலையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பட கதை விவாதத்தின் போல பலர் 'புல்'லாக இருந்த போது நடிகை சிநேகவிடம் நீங்கள் நடிக்கும் விளம்பரத்தில் அந்த சப்பாத்திக்கு பேர் என்ன என்று அசிஸ்டண்ட் கேட்க அவர் அது 'புல்'கா என்று பதில் சொல்லியுள்ளார். மூத்த இயக்குனர் காதில் வெறும் புல் மட்டும் காதில் விழ தன்னை தான் கிண்டல் அடிக்கிறார் என்று நினைத்து அவரை நீக்கியுள்ளார். கோச்சடையான் படம் வர இன்னும் பல வருடங்கள் ஆகும். அதனால் நான் நிச்சயம் அதே ஹீரோவுக்குப் பாட்டியாகவாவது நடிப்பேன் என்று சிநேகா நம்பிக்கை தெவித்துள்ளார்.


விஜயகாந்த் அதிர்ச்சி!

அதிமுக தொண்டர் ஒருவருக்கு நேற்று ஒன்பது மாசத்தில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "ஜெயா" என்று பெயர் வைத்த அந்தத் தொண்டர் அளித்த பேட்டி "அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்" என்று சில நாட்களுக்கு முன் சட்டசபை முன்பு விஜயகாந்த் பேட்டி அளித்தார். இப்போது எனக்கு 9 மாசத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு விஜயகாந்த் என்ன பதில் கூறுவார் என்று ஆவேசமாக கேட்டுள்ளார். பன்னும் ரொட்டியும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த விஜயகாந்திடம் இதை பற்றி கேட்டதற்கு "அதிர்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் மின்வெட்டால் நடந்த விபரீதம் இது" என்று கூறியுள்ளார்!


பச்சை சைடில்..

13 Comments:

Anonymous said...

சரியான அரை வேக்காட்டுத்தனமா இருக்குய்யா இந்த முனி மலர் இதழ். அடுத்த முறையாவது நல்லா பாத்து நிதானமா எழுதவும்

Kamalaganesh chellappa said...

Nethi adi. Pudinga sir avana, Pudichu jaila podunga sir avana.

Krish said...

Only saw the last picture...everything is waste

ரிஷபன்Meena said...

எப்படி இருந்த இட்லி இப்படி ஆயிடுச்சு.

இங்கே சிரிக்கவும் என்று எதாவது ஸ்மைலி போட்டு எழுதினால் தான் சிரிக்க, ரசிக்க முடியும் போலருக்கு.

இட்லி ,பழைய சரக்கு மாஸ்டர்கள் யாரும் இல்லையா ?

yevano said...

மொக்கை தாங்க முடியல.

Anonymous said...

இட்லி...

இது தேவையா?

ஆறின இட்லியும் வடையும் ருசிக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாயிருக்கிறது.

சொல்வது ஒன்று; செய்வது மற்றொன்று.

வாழ்க வலமுடன்

அநங்கன்

ConverZ stupidity said...

பொந்து பின்னணி மாதிரி பதிவுகளுக்கு இந்த மொக்கைய சகிச்சிக்கலாம்

Anonymous said...

vayasaaiyiduchulla

Kannan said...

அருமை..........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Subramanian said...

Dear IV,

Why quality of writing has become so poor. A urgent revamp of your team required in my opinion. Except the last picture nothing else was intersting.

Anonymous said...

எல்லாருமே இப்படி டபுள் கொட்டு கொட்டினா இதை எழுதிய தம்பி எவ்வளவு கஷ்டப்படும்

அதற்காக...........

அருமை

மஞ்சள் கமெண்ட் எங்கே ?

இப்படிக்கு
மாதவன்

Anonymous said...

இந்த முறை முனிமலர் எழுதியது யாரு. சடைத்தனமாக இருப்பதால் இது அநங்கன் எழுதியது என்று நினைக்கிறேன். கிச்சுகிச்சு மூட்டிகிட்டே படிச்சா கூட சிரிப்பு வரல்லியா. இந்த மாதிரி சொரித்தனமா ஒரு போஸ்டிங் போடறதுக்கு சும்மா இருந்திருக்கலாம். கண்றாவி!

jaisankar jaganathan said...

முனிமலர் அருமை. அற்புதம் அபாரம்.

(எல்லோரும் திட்டினா முனி பீல் பண்ண மாட்டாரா?)