பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 14, 2012

வேட்டை FIR

லிங்குசாமியின் அடுத்த ரன். மாதவன், ஆர்யா கூட்டணியில்.

கதை: டிரைலர் பார்த்தவுடன் நினைத்த அதே கதை தான், மசாலாவுடனும் இரண்டு அழகான ஹீரோயின்களுடன் கொஞ்சம் காமெடி கலந்து தந்திருக்கிறார். லாஜிக், அறிவுஜீவித்தனம் எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு பார்த்தால் நல்ல மசாலாப் பொங்கல்!.

திரைக்கதை: படம் ஆரம்பித்தவுடன் 30 நிமிடத்தில் 3 பாட்டு, ஏதோ தப்பாக இருக்கிறதே என்று நினைத்தால் மீதி கதை வேகமாக பயணிக்க வேண்டும் என்று லிங்குசாமியின் டெக்னிக் என்பது புரியும். அண்ணன் போலீஸ் தம்பி வேலை வெட்டி இல்லாத முரடன். நிச்சயம் அண்ண்ன் போலீஸ் தம்பியை கடைசியில் கைது செய்ய போகப் போகிறார் என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றமே!. திரைக்கதையில் முழு கவனம் செலுத்தி காமெடி, சண்டை என்று கலக்கியிருக்கார் என்றே சொல்ல வேண்டும்.

இசை பிரமாதம் என்று சொல்ல முடியவில்லை, ஆனால் இந்த படத்துக்கு ஏற்ற அளவு செய்துள்ளார். Especially சண்டை காட்சிகளில். பாடல்கள் இரண்டு பரவாயில்லை ரகம். படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது எடிட்டிங். கச்சிதம். காமெடி என்று தனியாக சந்தானம் வகையரா யாரும் வரவில்லை, மாதவனும், ஆர்யாவுமுமே செய்துவிடுகிறார்கள். "எனக்கே ஷட்டரா?" என்ற மாதவனின் வசனத்துக்குப் பலர் கைத்தட்டுகிறார்கள். பட இடங்களில் கேமரா நன்றாக இருக்கிறது. கடைசிப் பாட்டு "வாடி வாடி நாட்டுக்கட்டை" என்ற லொக்கேஷனை நினைவுப்படுத்தினாலும், கலர்புல்லாக இருக்கிறது.

அமலா பால் கல்யாணத்தில் ஆர்யா, மாதவன் காமெடியை வேட்டை ஆடுகிறார்கள். தியேட்டரில் பலர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.


'தல' அஜித் மங்காத்தா காட்சியில் வர்ற 'தல ஃபைட்' என்று சொல்லும் காட்சியில் மக்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். எல்லா சீனிலும், ஆர்யா, மாதவன் மாறி மாறி வருவதால் இதில் முதல் ஹீரோ யார் செகண்ட் ஹீரோ யார் என்று தேர்ந்தடுப்பது கஷ்டமாக இருக்கிறது. மாதவனுக்கும் சமீரா ஆன்டிக்கும் கெமிஸ்டரி இருக்கோ இல்லையோ மாதவனுக்கும் ஆர்யாவுக்கும் நல்ல கெமிஸ்டரி. சமீராவின் தங்கையாக அமலா பால் வருகிறார். பால் விலை போல இவர் கவர்ச்சியும் எகிறிவிட்டது. மசாலா படத்தில் அக்கா தங்கை வந்தால் அண்ணன் தம்பியை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற விதியின் படி இவர்களும் செய்துக்கொள்கிறார்கள்.


அக்கா முழுகாமல் இருந்தால், கடைசி காட்சியில் வில்லன் உதைக்க மோதிக்கொண்டு விழும் சமயம் ஹீரோ வந்து காப்பாத்த வேண்டும் என்ற அடுத்த விதியும் இதில் நடக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேனே இதிலும் வில்லன் திருநெல்வேலி பாஷை பேசிக்கொண்டு அடியாட்களுடன் வந்து அடிவாங்குகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் மாதவன், ஆர்யாவாக வரும் அந்த சிறுவர்கள் படத்துக்கு பிளஸ். பெரிய பிளஸ் - மசாலா படத்தை தன்னுடைய கதை சொல்லும் திறமையால் நம்மைப் பார்க்க வைப்பது லிங்குசாமியின் 'ரன்' திரைக்கதை.

எவ்வளவு நாள் தான் வெண் பொங்கலையே சாப்பிடுவது, ஒரு மாறுதலுக்கு வேட்டையாடிய பிரியாணியையும் சாப்பிடணும், கொஞ்சம் மசாலா தூக்கலுடன்.

இட்லிவடை மார்க் - 6/10


கூடிய சீக்கிரம் இந்தி, தெலுங்கு என்று இந்த வேட்டை தொடரும்...

5 Comments:

jaisankar jaganathan said...

இவ்ளோ மார்க் குடுத்துருக்கீங்களே. படம் நல்லா இருக்கா?

சுபத்ரா said...

இப்பமெல்லாம் திருநெல்வேலி பாசை பேசுதேன்னு சொல்லிட்டு சீரியஸான சீனையெல்லாம் காமெடி சீன் ஆக்கிருதாங்க.. :(

ஜெகன்னாதன் said...

முதல் ஹீரோ ஆர்யாதான். இதுவரை வந்த எல்லா விளம்பரன்களிலும் ஆர்யாதான் இருக்கிறார். மாதவனைக் காணவில்லை!

படம் சுறு சுறு என்று இருந்தால் போதும், லாஜிக்காவது மண்ணாவது!

-ஜெ.

ஜெகன்னாதன் said...

முதல் ஹீரோ ஆர்யாதான். இதுவரை வந்த எல்லா விளம்பரன்களிலும் ஆர்யாதான் இருக்கிறார். மாதவனைக் காணவில்லை!

படம் சுறு சுறு என்று இருந்தால் போதும், லாஜிக்காவது மண்ணாவது!

-ஜெ.

ஜெகன்னாதன் said...

முதல் ஹீரோ ஆர்யா தான். எல்லா விளம்பரன்களிலும் அவர் தான் இருக்கிறார், மாதவனைக் காணோம்!

படம் சுறு, சுறு என்று இருந்தால் போதும், லாஜிக்காவது, மண்ணாவது!

-ஜெ.