பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 12, 2012

நண்பன் FIR

January 08, 2010 அன்று 3 இடியட்ஸ் படத்துக்கு எழுதிய விமர்சனம்.
இன்று நண்பன் படம் பார்த்துவிட்டு அதே விமர்சனத்தை கொஞ்சம் ரீமேக் செய்து உங்களுக்கு தருகிறேன். ரிமேக் விமர்சனம் பச்சையில்...

வழக்கமாக சினிமா விமர்சனம் எழுதும் போது முதலில் 'எச்சரிக்கை' என்று போடுவது தான் வழக்கம் ஆனால் இந்த படத்துக்கு பிராத்தனை என்று ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை படம் ஆனால் படம் முழுக்க நான் பயந்துக்கொண்டே பார்த்தேன். அந்த பயத்தினால் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கிறேன்...

பிராத்தனை: இறைவா, தயவு செய்து இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்கிறேன் என்று யாரும் சொதப்பாமல் இருக்கணும்.


ரீமேக்: என் பிராத்தனை பலித்துவிட்டது. ஷங்கர் கையில் கிடைத்த பூமாலை மணக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்துக்கு சென்றேன். நம்பிக்கை வீண் போகவில்லை. கதையை அப்படியே உள்வாங்கி எங்கே மெருகேற்ற முடியும் என்று யோசித்து ஒவ்வொரு சீனாக செதுக்கியுள்ளார் ஷங்கர். பல இடங்களில் ரீமேக்கில் 'லோக்கல்' வசனங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை படத்தில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. "Principalலின் பொண்ணு நீங்க தான் அவருக்கு Profit", "அரை மணியில ஃபீட்சா வந்துவிடுகிறது, ஆம்புலன்ஸ் வரமாட்டேங்குது"

3 இடியட்ஸ் என்று படம் பெயர் இருந்தாலும் படத்தில் எல்லோரும் செம இண்டெலிஜெண்ட். நல்ல இசைக்கு மொழி தேவையில்லை அதே போல ஒரு நல்ல திரைப்படத்துக்கும் என்று நிருபிக்கிறது இந்த படம்.

ரீமேக்: இசை ஓ.கே ரகம் தான். ஹிந்தியில் இருப்பது போல இல்லை. சில இடங்களில் அந்த விசில் சத்தம் மட்டும் நன்றாக இருக்கிறது.

திரைக்கதை: திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த திரைப்படம் எடுத்துக்காட்டு. டிவிஸ்ட், செண்டிமெண்ட், நகைச்சுவை இருக்க வேண்டும் என்று நினைத்து காட்சிகளை புகுத்தாமல் கதையோட்டத்திலே அவைகளை சொன்னதற்கு சபாஷ்!. போனஸாக நம் மனப்பாடம் செய்து தங்க மெடல் வாங்கும் கல்வியமைப்பு, டாக்டர், என்ஜினியராக வர வேண்டும் என்று பிறந்த பத்தாவது நிமிஷம் கனவு காணும் நம் பெற்றோர்களையும் ஒரு குட்டி குட்டி, குழந்தைகள் அவர்கள் விருப்பம் போல விடுங்கள் என்ற மெசேஜ் - அட !. பாடம் பார்த்துவிட்டு யோசித்தால் அமீர் கானை அலைந்து தேடும் படலம் நமக்கு கதை சொல்ல என்று புரியும், திரைக்கதை நுணுக்கம்!. ஒருவொரு சீனையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். !

ரீமேக்: அச்சு அசலாக அப்படியே இருக்கிறது, தமிழ் ரீமேக்கும்.

கதை: தமிழ் படம் என்றால் கதை சொல்லலாம் உங்களுக்கு புரியும். இது ஹிந்திப் படம், கதை சொன்னால் உங்களுக்கு புரியாது அதனால் சொல்லவில்லை. முழு கதையும் சொன்னால் படத்தை அனுபவிக்க முடியாது என்ற காரணத்தால் இரண்டு வரி - கல்லூரியில் சேரும் மூன்று பேர் சுற்றி நடக்கிறது கதை. எப்படி நண்பர்கள் ஆகிறார்கள். கறார் புரொஃபசர். அங்கே நடக்கும் கூத்துக்கள் தான் கதை. சில இடங்களில் ஸ்டூடண்ட்ஸ் ( தெலுங்கு ), முன்னாபாய் எம்.பி.பி.எஸ் ( ஹிந்தி ) படத்தை நினைவு படுத்தினாலும் கதை ஸ்டிராங்காக இருந்தால் ஹீரோ பற்றி கவலை பட வேண்டாம் என்று நிருபிக்கும் படம் இது! கட்டிபிடி வைத்தியம் மாதிரி, “ஆல் இஸ் வெல்” என்று இந்த படத்தில் வருகிறது

ரீமேக்: ஆல் இஸ் வெல் :-)

நம்ம கோலிவுட் மக்கள் "இவர் தான் ஹீரோ" இவருக்கு ஏற்ற கதை சொல்லுங்க என்று கேட்பதை எப்போது விடுவார்களோ அன்று தான் இவர்கள் உருப்புடுவார்கள். அதே போல "சார் இந்த சீன் இருந்தா நல்லா இருக்கும் என்று ஹீரோ ஃபீல் செய்கிறார்" என்று ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சீன் வடிவமைத்து SMS-இல் வசனம் வந்து.. இவை எதுவும் இல்லாமல் இந்த படத்தை செய்திருக்கிறார்கள்.


நடிப்பு: எப்படி எல்லோரும் நடிக்கிறார்கள் என்று ஹிந்திப் படம் வியக்க வைக்கிறது. 44 வயதில் காலெஜ் சேரும் மாணவனாக எப்படி இவரால் முடிகிறது ? வந்தவுடனேயே சுவிங்கமை மேலே போட்டு, இரண்டு மொட்டை தலையை அடித்துவிட்டு திரும்ப சுவிங்கமை வாயில் வாங்கி தலையில் இருக்கும் கூலிங் கிளாஸ் வந்து விழும் எண்டரி, அல்லது 'ஆழ்வார் பேட்டை ஆண்டவா' என்று ஹீரோ வர்ஷிப் செய்யும் பாடல் என்று எதுவும் இல்லாமல், ஒன்றும் தெரியாத குழந்தை மாதிரி வந்து போகிறார் அமிர்கான். படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் கூட பேசாமல் எப்படி இவர்களால் படம் எடுக்க முடிகிறது ? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்களேன் ?

காலேஜ் ஸ்டுடண்ட் எப்படி பையை மாட்டிக்கொள்வார், எப்படி நடப்பார், எப்படி ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்வார், டிரஸ் செய்துக்கொள்வார் என்று அழகாக எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறார்.

ரீமேக்: விஜய்க்கு ஓபனிங் சீனில் பாட்டு, ஃபைட் இல்லாத முதல் படம் என்று நினைக்கிறேன். விஜய்யும் சங்கர் சொன்னவற்றை 'சரிங்கண்ணா' என்று சொல்லி கேஷுவலாக நடித்திருக்கிறார்.

அமீரின் நண்பர்களாக வரும் மாதவன், ஷர்மான் ஜோஷியும் ஓவர் ஆக்ட் செய்யாமல் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள். ஜப் வி மெட் படத்தில் பார்த்த கரீனா கபூர் மாதிரி இல்லை என்பது கொஞ்ம் வருத்தம். வயது அதிகமாக தெரிகிறது அம்மனிக்கு!.

ரீமேக்: ஸ்ரீகாத்தா இவர் ? காச்சேரியில் பக்கவாத்தியம் பாக்கா வாத்தியமாக இருக்க வேண்டும் என்பதை போல மிக சிறப்பாக நடித்துள்ளார். ஜீவாவும் சளைத்தவர் இல்லை என்று பல காட்சியில் 'அட' போட வைக்கிறார். ஸ்ரீகாந்த் தன் அப்பாவிடம் மனம் திறந்து பேசும் காட்சியும், ஜீவா இண்டர்வியூவில் பேசும் காட்சியும் பலரை அழ வைக்கிறது.

இலியானா நல்ல தேர்வு. இவர் போல பெண் கிடைத்தால் காலேஜில் தேர்வு எழுதவே மறந்துவிடும் :-). அவர் அழகிற்கு அவர் வரும் முதல் காட்சியியிலேயே கைத்தட்டல் கிடைக்கிறது. நிச்சயம் கரீனா கபூரின் தங்கை மாதிரி இருக்கார்!. ஜிவாவின் சகோதரியாக வருபவர் சிவாஜி படத்தில் வரும் அங்கவை சங்கவை நினைவுப்படுத்துகிறார்கள். இதை நிச்சயம் இந்த படத்தில் காமெடிக்கு கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். தவிர்த்திருக்கலாம்.முசுடு, கிடுக்கிப்பிடி புரொஃபசராக வரும் போமன் இரானி முதலில் பார்க்க கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் சம்பவங்களின் தோரணத்தால் அவர் கேரக்டர் அழுத்தம் பெருகி நாடகத்தன்மை மறைந்துவிடுகிறது.

ரீமேக்: சத்தியராஜ் குரல் மட்டும் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. மற்றபடி ஹிந்தியை காட்டிலும் நாடக தன்மை தமிழில் கொஞ்சம் கம்மி என்றே சொல்ல வேண்டும்.

அப்பறம் சொல்ல மறந்துவிட்டேன் இவர்களுடன் இன்னொரு மாணவர் சத்தூர் வருகிறார், முக்கியமான கதாப்பாத்திரம் ஆனால் படம் முடிந்த பின்பு தான் அது நமக்கு தெரியும்!.

ரீமேக்: சத்யன் ஷங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும். அருமையான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததற்கு. சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் நன்றாகவே செய்துள்ளார். ஆனால் இந்த கதாபாத்திரம் ஹிந்தியில் இன்னும் நன்றாக இருந்தது.

எடிட்டிங், ஒலிப்பதிவு, இசை: படம் ஆரம்பித்து 10 நிமிஷத்தில் இசை பிரமாதம் என்று சொல்ல வைக்கிறது. பாடல்கள் எப்ப வருகிறது ( ஒரு பாடல் தவிர ) எப்ப போகிறது என்று தெரிவதில்லை. இயற்கையை இயற்கையாக காண்பிக்கும் ஒளிப்பதிவு, தேவையிலாமல் டார்ச் லைட் அடித்தும், நீல கலர் ஃபில்டர் போட்டு இருட்டு செய்தும் எதையும் காண்பிக்கவில்லை. ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு செல்வதை நம் உணரமுடியாத எடிட்டிங். தேவையில்லாமல் ஹீரோவை ஸ்டில் செய்தும், வில்லனுக்கு பஞ்ச் வைக்கும் போது ஹீரோவை ஒரே ஸ்கிரீனில் ஐந்து ஹீரோவாக காண்பிக்கும் மாயாஜாலம் போன்ற செலவு எதுவும் செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்.

ரீமேக்: முதல் பாதி ஏனோ கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. "இருடா கண்ணா இதோ இண்டர்வெல் வந்துவிடும் பாப்கார்ன் வாங்கி தரேன்" என்று கேட்க முடிந்தது. அந்த தற்கொலை செய்துக்கொள்ளும் மாணவன் கிட்டார் வைத்துக்கொண்டு ஒரு சின்ன சோக பாடல் எல்லாம் இந்த கதைக்கு தேவையே இல்லை. அதனாலோ என்னவோ அந்த மாணவன் எப்போது தூக்கு போட்டு தொங்கும் காட்சி வரும் என்றாகிவிட்டது.

தமிழில் இதை நிச்சயம் ரீ-மேக் செய்வார்கள். மூன்று ஹீரோ சப்ஜட் அதனால் ஹீரோவுடன் டம்மியாக இரண்டு பேர் நடிக்க ஒத்துக்கொள்ளுவார்கள். அவர்கள் இரண்டு பேரும் ஹீரோவுக்கு கூஜா தூக்குவார்கள், காதலுக்கு ஹெல்ப் செய்வார்கள், தியாகம் செய்வார்கள். அப்படியே செய்தாலும் அமீர் கான் ரோலை யார் செய்வார்கள் ? விஜய், அஜித், சூர்யா, விகரம், ரஜினி, (மேக்கப் போட்ட) கமல், பரத் என்று யாரை யோசித்தாலும் பயமாக இருக்கிறது. யாராவது இருக்கிறார்களா ? இருந்தால் சொல்லுங்க நீங்க "இண்டலிஜண்ட்" என்று நான் ஒத்துக்கொள்கிறேன்!

ரீமேக்: விஜய் இந்த படத்தில் அமீர்கானுக்கு போட்டியாக நடித்திருக்கிறார். சபாஷ். ஆனால் விஜயை தூக்கி நிறுத்துவது ஸ்ரீகாந்த், ஜீவாவின் நடிப்பும் ஒத்துழைப்பும் தான். ஷங்கர் தான் பெரிய டைரக்டர் என்றாலும் ஒரு பாட்டை தவிர வேறு எங்கும் அவருடைய பிரமாண்டத்தை காண்பிக்காதது பெரிய பிளஸ். இலியானா இடுப்பை கூட ஒல்லியாக தான் காண்பித்துள்ளார். தமிழிலும் சிலர் ஒழுங்காக ரீமேக் செய்வார்கள் என்பது நமக்கு பெரிய ஆறுதல்.

படத்தில் கதை தான் ஹீரோ, நடிகர் ஹீரோ இல்லை என்று அழுத்தமாக சொல்லும் படம். இது மாதிரி தமிழ் படங்களை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள், இல்லை என்றால் கோலிவுட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மஸ்லி பவர் எக்ஸ்டரா இட்லிவடை செலவில் தருகிறேன்.

ரீமேக்: நல்ல கதையை ஒழுங்காக எடுத்தால் வெற்றி பெறலாம் என்பதை நிருபிக்கும் படம். பரதம் என்ற நல்ல மலையாள படத்தை சீனு என்று சொதப்பியதை போல சொதப்பாமல் அப்படியே தமிழில் கொடுத்த ஷங்கர் & டீமுக்கு வாழ்த்துக்கள்.

இட்லிவடை மார்க்: படத்தில் மார்க் வாங்குவதை பற்றி மெசேஜ் சொல்லுகிறார்கள். அதனால் நானும் திருந்திவிட்டேன். இந்த படத்துக்கு( மட்டும் ) மார்க் கிடையாது !


ரீமேக் மார்க்: நமக்கு பின்னாடி உட்கார்ந்து காப்பி அடிக்கும் நண்பன் சில சமயம் நல்ல மார்க் வாங்குவதில்லையா ? அதே போல சில காட்சியில் ஹிந்தியைவிட நல்ல மார்க் நம் நண்பன் வாங்குகிறான்.

14 Comments:

ilavarasan said...

அருமையான விமர்சனம்.

jaisankar jaganathan said...

படம் பாத்துடுறேன். உங்க மேல நம்பிக்கை வச்சு

Prem said...

Really Great..for turning around so fast..now I want see this soon..

மோகன் குமார் said...

Fantastic & intelligent review. Enjoyed it fully.

R.Gopi said...

அப்போ பார்க்கலாம்னு சொல்றீங்க!!

Thomas Ruban said...

[hi="yellow"]நண்பன் - All is Well[/hi]

sugi said...

wow! Fab review :)

ஜெகன்னாதன் said...

விமர்சனம் கூட ரீமேக் தானா! சன்கர் ஏமாற்றிவிட்டார் என்று தான் படுகிறது!//படத்தில் கதை தான் ஹீரோ, நடிகர் ஹீரோ இல்லை என்று அழுத்தமாக சொல்லும் படம்// அப்போ நடித்த யாருக்கும் அடுத்த படத்திற்கு அதிக சம்பளம் கிடைக்காது!
அந்த மனப்பாட மாணவனாக சத்யன் என்பது உறுத்துகிறது. ஹிந்தியில் அந்த நடிகர் முப்பெரும் நடிகர்களுக்கு ஈடு கொடுத்து இம்ப்ரெஸ் செய்திருந்தார். ம்ம்ம்.. பார்க்கவேண்டும். - ஜெ.

Anonymous said...

Indha padathula Vijay rasihargala kollurara? Padam paathutu uyiroda vandhu vasanam ezhudurinngale!! Periya vishayam. Appo tharkola pannika indha padam sari pattu varadhu!! Yena, idhu SHANKAR padam! Vijay is only 1/3 of the Hero.

sagar said...

3 இடியட்ஸ் பார்த்துட்டு இந்த படம் பார்த்தால் கொஞ்சம் போர் (எல்லா சீனும் காபீ).
ஆனா வசனம் சூப்பர். (சுஜாதா இருந்துருந்தா கொஞ்சம் பெட்டார்னு தோணுச்சு).

இது நார்மல் விஜய் படம் இல்ல, EG - படத்துல விஜய் எல்லார்கிட்டயும் அடி வாங்குரார்.

Anonymous said...

"காப்பின்னா
அது சங்கர் அடிக்கிற காப்பிதான்.
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்"

கோடம்பாக்கத்துல ஒரு பயலுக்கும் ஒரிஜினாலிட்டி கிடையாது. இது கேட்ட கேட்டுக்கு இட்லிவடையின் "கட் அண்ட் பேஸ்ட்" விமரிசனம் மிகச் சரியானது என்று இந்த அநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது.

safi said...

nalla padam yedtha yellam paratuvanga varaverpanga namalum varaverpom atha vijay panunathu than spl...

safi said...

niceeeeeeeeeeeee

Anonymous said...

Good story but not handled properly.