பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 16, 2012

அல்வா - அருவா - சுபத்ரா(லே)

“நீங்க எந்த ஊரு?” யாரோ.
“திருநெல்வேலி” இது நான்.
“ஓ... தின்னவேலியா? (நக்கலாக) சரி சரி”
“இல்ல, திருநெல்வேலி” எரிச்சலுடன் நான்.
“நானும் அதைத் தான் சொன்னேன்.. தின்னேலினு தானே சொல்வீங்க?” இன்னும் சிரிப்புடன்.
“தின்ன எலியுங் கிடையாது.. திங்காத எலியுங் கிடையாது...எங்க ஊரு பேரு திருநெல்வேலி!” (ஹ்ம்க்கும்)

ஒரு தடவ ரெண்டு தடவயில்ல.. நெறைய தடவ இது நடந்துருக்கு. அது ஏன்னே தெரியல. திருநெல்வேலின்னாவே எல்லாருக்கும் எங்கயிருந்து தான் வருதோ ஒரு நக்கல் தெரியல. ஊருக்குள்ளயே இருந்தவரைக்கும் ஒன்னுமே தெரியாது. டிவியில விவேக்கு பேசுனாலும் வடிவேலு பேசுனாலும் விஜய் பேசுனாலும் விக்ரம் பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் ஜோக்கோடு ஜோக்கா பார்த்துச் சிரிச்சிக்குவோம். ஆனா பன்னெண்டாப்பு முடிச்சிக் காலேஜில சேரனும்னு வெளியூருக்குப் போவும்போது தான் தெரியும்.. நம்மளும் நம்ம ஊரும் எப்படியெல்லாம் அல்லோல கல்லோலப் படுதோம்னு. ஏன் அப்படிப் பண்ணுதாங்கன்னு நமக்கே வெளங்காது. என்ன பேச்சிப் பேசுனாலும் சிரிப்பு தான். பெறவு வேற வழியில்லாம நாம ‘அல்வா’, ‘அருவா’ன்னு செல்லமாப் பேசுனாத் தான் அமைதியாப் போவாங்க.

சென்னை, கோவை, மதுரைன்னா கூட பரவால்ல அவங்கவங்களுக்குத் தனித்தனியா பாசையிருக்கும். ஆனா இந்தத் திருச்சி, தஞ்சாவூர்க்காரங்க இருக்காங்களே.. அடடடடா.. உலகத்துலயே நாங்க ஒருத்தங்க தான் கலப்படமில்லாத தூயதமிழ் பேசுதோம்னு ஒரே பெரும பீத்திக்குவாங்க. சரி போனாப் போவுதுனு உட்டுக்குடுக்குறதுக்கு நமக்கு மனசு வராது. “என்னயிருந்தாலும் எங்க ஊரு தமிழ்தான் அழகாயிருக்கும் அம்சமாயிருக்கும்”னு என்னத்தையாவது சொல்லிட்டு ஆஸ்டல் ரூமுக்குள்ள போயி அன்னைக்கே ஒரு முடிவு எடுப்போம். இனிமே நாமளும் இவங்க பேசுதத மாரியே பேசனும்னு. அங்கயே முடிஞ்சிபோவுது திருநெல்வேலி பாசையெல்லாம்! பெறவு லீவுக்கு ஊருக்கு வந்தாக் கூட அம்மாவோ ஆச்சியோ எப்பவும் போலப் பேசயில “ஏன் இப்படிப் பேசுதாங்க”னு வித்தியாசமா நெனைக்கும் இந்தக் கூறுகெட்ட மனசு. ஆனா நாலு வார்த்த பேசுறதுக்குள்ள நாமளும் ஒன்னுக்குள்ள ஒன்னா அயிக்கியமாயிருவோங்கது வேற கத.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃப்ரெண்ட் கூடச் சேர்ந்து ‘ஒஸ்தி’ படத்துக்குப் போனேன். “ஏ... உங்க ஊரு பாஷை தான் டீ”னு அவ சாதாரணமாச் சொன்னாக்கூட நக்கலாத் தான் தெரிஞ்சிச்சி எனக்கு. ஒன்னுஞ் சொல்லாம படத்தப் பார்க்க ஆரம்பிச்சேன். காக்கிச் சட்டயில கதாநாயகன் பேசுதது கூடப் பரவால்ல. ஆனா சீரியஸான காட்சியில வில்லனும் திருநெல்வேலி பாசய பேசுதத மாரி காட்டும் போது தேட்டர் முழுசும் சிரிப்பாச் சிரிச்சிச்சே.. கடவுளே.. அதென்னமோ தெரியல.. டயலாக் ரைட்டருக்குக் கூட திருநெல்வெலின்னவொடனே காமெடி(மாரி) டயலாக் எழுதத்தான் கைவரும் போல. எப்பிடியும் போங்க..

சரி நமக்குத் தான் இந்தக்கதன்னா ஊருக்குள்ளப் போயி பார்ப்போம்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல கூட பிள்ளைங்க எல்லாம் திருநெல்வேலி ஸ்லாங்குல பேச மாட்டேங்குதுங்க. “ஏல.. வால.. போல”ன்னு பேசிட்டிருந்தது எல்லாம் “ஏடா.. வாடா.. போடா”ன்னு ஆயிட்டு. “ஏபிள்ள வாபிள்ள”ன்னு பேசுனதுங்க எல்லாம் “ஏடி.. வாடி.. போடி”ன்னு தான் பேசுதாங்க.

பொங்கல் சமயத்துல காய்கறி வாங்கனும்னு வண்டிய உட்டுட்டு மினிபஸ் புடிச்சி மார்க்கெட்டுக்குப் போயி நிக்கும் போது அங்குன கூட்டம் நம்மள நவுலவுடாது. கரும்பு, காய், மஞ்சளுனு மூட்ட மூட்டையாத் தூக்கிட்டுப் போற கிராமத்து ஆளுங்க பேசுவாங்கப் பாருங்க.. “ஏல.. அங்குன சீட்டப் போடு.. இங்குன எடத்தப்புடி.. இத ஒருகையி தூக்கிவுடு.. ஆ.. அம்புட்டுத்தான்” “காருக்கு(பஸ் தான்) ருவா எடுத்துவையி..” “என்னது டிக்கெட்டு ஏழாருவாய்யா? என்னத்த தான் அலுவசமா பஸ்ஸு ஓட்டுதானோ தெரியல.. நாய்வெல பேய்வெல சொல்லுதான்.. காரவுட்டுட்டு நடந்துதான் போவனும்பொலுக்க”னு நம்ம ஊரு மக்கள் பேசுற பேச்ச வீட்டுக்குத் திரும்பிவராம கூட கேட்டுகிட்டேயிருக்கலாம். ஆனா என்ன, வீட்டுக்கு வாறதுக்கு முன்னாடியே யாராது “உங்க மவள மார்க்கெட்டுல பார்த்தேன். அந்தக் கரும்புச்சாறு கடைக்கு முன்னாடி நின்னுகிட்டு போற வாறவகுள எல்லாம் வாய்ப்பார்த்துகிட்டு நின்னா”ன்னு போட்டுக்குடுத்துருப்பாங்க.

வீட்டுக்கு வந்து வலது கால உள்ளயெடுத்து வைக்கதுக்குள்ள “உனக்கெல்லாம் அறிவியே கெடையாது.. ஒரு கூறுவாடு கெடையாது.. எதுத்தவீட்டுப் பிள்ள (போட்டுக்குடுத்தவங்களோட மக) எப்படிக் கட்டும் செட்டுமாயிருக்கு?”ன்னு அம்மா ஏசும்போது நம்மளே கெஸ் பண்ணிகிடவேண்டியது தான். ஒடனே நாமளும் “நான் டென்த்துல டிஸ்ட்ரிக்ட் ஃபோர்த் எடுத்தேன். அவ எடுத்தாளா? நான் காலேஜுல இத்தன கப் வாங்கிருக்கேன். அவ என்னத்த வாங்கிருக்கா?”ன்னு கேப்போம். “ஆமா.. ஒலகத்துல இல்லாத சாதன படச்சிருக்கா.. ஏட்டுச் சொரைக்கா கறிக்கு ஒதவாது.. வாழ்க்கைக்கி எது ஒதவுதுனு பாரு.. அந்தக் கப்பையெல்லாம் தூக்கிக் குப்பையில போடு”னு ஒரு சொலவடையச் சேர்த்துச் சொல்லும்போது “ச்ச்ச..” அப்படின்னு இருக்கும். அதெல்லாம் தனிக்கத...

சமீபத்துலஃபேஸ்புக்குல திருநெல்வேலியோட புராதான போட்டோஸ் நெறைய ஷேர் பண்ணியிருந்தேன். ஒடனே ஒரு பிரபல எழுத்தாளர் வந்து, “திருநெல்வேலிக்கு இலக்கிய உலகத்துல முக்கிய பங்கு இருக்கு.. புபி” அப்படின்னு ஒரு காமெண்ட் போட்டிருந்தார். பெறவு தான் யோசிச்சுப் பார்த்தேன்.. புதுமைப்பித்தன்ல இருந்து சாகித்ய அகாதமி விருது வாங்குன தி.க.சிவசங்கரன், தொ.மு.சி ரகுநாதன், வல்லிக்கண்ணன், ரா.பி. சேதுப்பிள்ளை, வண்ணநிலவன், வண்ணதாசன்னு, சுகா.. எத்தன எழுத்தாளர்கள் பொறந்திருக்காங்க.. சாதனையாளர்கள் வாழ்ந்துருக்காங்க.. நம்ம பாளையங்கோட்டைய ‘ஆக்ஸ்ஃபோர்ட் ஆஃப் சவுத் இண்டியா’னுலாச் சொல்லுதாங்க.. நம்ம பேரும் ஒருகாலத்துல இந்தமாரி லிஸ்ட்டுல எல்லாம் வரனூனு நெனைச்சு மனச ஆறுதல்படுத்திக்கிட வேண்டியதுதான்.

‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’னு பாடுன பாரதியார மாரி என்னையப் பாடவுட்டாங்கன்னா, ‘அந்தக் காணிநெலமும் திருநெல்வேலில ஒரு கிராமத்துல வேணும்..’ ‘சீக்கிரமா குஜராத்த உட்டுட்டுத் திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிகிட்டுப் போவனும்’ ‘எங்க அம்மா அப்பா திருநெல்வேலிலயே எனக்குவொரு 'ஒஸ்தியான' பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கனும்’னு வேண்டிக்கிடுவேன் ;-)

படிக்கிறவுக உங்க மனசுக்குள்ள இப்பம் என்ன விசயம் ஓடுதுன்னு எனக்குத் தெரிஞ்சிப் போச்சி.. நான் சொல்லுதேன் கேளுங்க.. இந்த இட்லிவடையைப் பாத்தா திருநெல்வேலிக்காரர் மாரிலாம் தெரியல.. வெறும் எலைய போட்டுப் பேருக்கு ரெண்டுமூனு இட்லியையும் வடையையும் மட்டும்தான் வச்சிருக்காரு.. நாங்க எங்க ஊருல சட்னியும் சாம்பாரும் தொட்டுக்கூடு சேத்துத் தான் சாப்புடுவோம் :-)

பின்குறிப்பு : என்னமோ இவ்வளவு நாளா குஜராத் குஜராத்துனு பேசுன இந்தப்பிள்ள இன்னைக்குத் திருநெல்வேலி திருநெல்வேலினு பேசுதே.. என்னலேன்னு யோசிக்காதீய. திருநெல்வேலி உட்பட இந்தியா ஃபுல்லா குஜராத் மாரியே ஆட்சி வரப்போவுதுலே அதான் ;-)

28 Comments:

kg gouthaman said...

சொந்த மாவட்டம் பற்றி ஓரளவு பிடிப்பு, ஈடுபாடு எல்லாம் இருக்கும்தான். ஆனாலும் இது கொஞ்சம் ஓவர். நான் என்னுடைய சொந்த மாவட்டம் விட்டு வந்தவுடனேயே சென்னையை என் சொந்த ஊராக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.

durai said...

குஜராத்த பத்தி ஒரு வார்த்தை சேர்த்துட்டா இட்லி வடைல போடுவாங்கன்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்காங்க.

ஜெகன்னாதன் said...

ஐயா இட்லி, மஞ்ஜ கமென்ட் சரிதான்ல, அந்த பிள்ள முக்கியமா என்ன சொல்ல வருதுன்னு பாத்து அத மஞ்ஜளா போட்டா அதோட அப்பா, அம்மால்லாம் புரிஞ்ஜுப்பாஹ இல்ல! அதான் - “எங்க அம்மா அப்பா திருநெல்வேலிலயே எனக்குவொரு 'ஒஸ்தியான' பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கனும்”. சுகா விகடன்ல தின்னவேலியைப் பிழிஞ்ஜு காய வச்சுட்டாரில்ல, பின்ன வேற எதுக்கு இந்த பிள்ள எழுதுதுன்னு நினச்ச?! ஏதோ புண்ணியம் பண்ணப்பு! - ஜெ.

Roaming Raman said...

நல்லா எழுதியிருக்கீயளே! அங்கிட்டு, குசராத்துல எப்பிடி பேசுராகன்னும் எளுதுவீயளா?

nellai அண்ணாச்சி said...

ரொம்ப நல்லா இருக்குதுளா இன்னும் எழுதுளா

muthukumara Rajan sk said...

we can live a commmercial life anywhere. but the soul of life will always in birth place. it will be more if it village or town.

Idly vadai have read Mungil muuchu of suga.

Ravi said...

I think when people have such distinct tongue - they stand out - for the good!
Though friends/others might mock at it - they do it out of fascination and I think
mockery - not always - is an indication of deameaning something. So I think
people should retain the native tongue/dialect. Sadly, that is getting lost.
In Coimbatore, where I studied, you don't get it hear it in the city areas like
Saibaba colony, R.S.Puram and such place. Probably a little of Kovai Thamizh around
suburbs and more in the surrounding villages.

siddharth said...

/*“நீங்க எந்த ஊரு?” யாரோ.
“திருநெல்வேலி” இது நான்.*/

இது ஒரிஜினல் அல்வா மாதிரி தெரியல... "திருநவேலி" தான் சரியான அக்மார்க் திருநவேலிகாரன் சொல்றது.

- திருநவேலிகாரன்

கணேஷ் said...

திருநவேலியில ஸ்ரீபுரம்-ங்கற வார்த்தைய சிரிபுரம்-னுதானே சொல்லுதாக! நானே கேட்ருக்கனே... பொறவு தின்னவேலின்னு சொன்னா என்ன கொறைஞ்சுடுதாம்? ஆனாலும் அவுக பேசுறது ரசிக்கற மாதிரில்லா இருக்கும்! நினைவுபடுத்தினதுக்கு நன்றிங்க...

Dhas said...

//நாங்க எங்க ஊருல சட்னியும் சாம்பாரும் தொட்டுக்கூடு சேத்துத் தான் சாப்புடுவோம் :-)//

ப்ளீஸ்! இந்த சட்னியும் சாம்பாரும் சேத்து அந்த படத்தை அப்டேட்டட் வெர்ஷன் ஒண்ணு போட்டுடுங்க. நீங்க நல்லாயிருப்பீங்க!!

Anonymous said...

kg gouthaman //சொந்த மாவட்டம் விட்டு வந்தவுடனேயே சென்னையை என் சொந்த ஊராக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.// - It is not good!!

Ravi //I think
people should retain the native tongue/dialect.// - Salute for you!!

willi said...

ஆனா இந்தத் திருச்சி, தஞ்சாவூர்க்காரங்க இருக்காங்களே.. அடடடடா.. உலகத்துலயே நாங்க ஒருத்தங்க தான் கலப்படமில்லாத தூயதமிழ் பேசுதோம்னு ஒரே பெரும பீத்திக்குவாங்க


:)))
- I am from Thanjavur

Suresh V Raghav said...

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல் பாண்டிதுரை அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

Erode Nagaraj... said...

By prefixing a 'lay' to most of the words, you never get a colour of thirunelvEli, but the slang actually gets 'laid', OK?

#osthi mudhal dusty varai

suppamani said...

" ENTHA OORU AANALUM SONTHA
OORU POLA AAHUMAA '' ?

SUPPAMANI

அல்வா said...

ஏலே.. இட்டிலிவட...

சான்சே இல்லலே...திருநவேலில இருந்து ஒரு பெரிய எழுத்தாளர் ரெடி லே.. என்னா நாஞ்சொல்றது?

Anonymous said...

ஸம்ம்ம்ம்ம்ம்ம
ஸ்லாங்...
யூ
ஆல்வேஸ்
ராக்க்க்க்க்க்க்க்க்
சுபத்ரா...!!

Arumugam said...

Eventhough it looks like mockery, it is the desire for many to hear dialogue in Tirunelveli slang.

D. Chandramouli said...

What would you say of Singaporeans who say, "Sit la", "Go la", "Eat la" etc. Without adding this 'la', they, particularly ethnic Chinese, cannot speak English. Have you also noticed that the current generation in Tamil Nadu use the word, "vandhu" umpteen times in a sentence? Even the North Indians settled in Tamil Nadu cannot speak Tamil without this word "vandhu".

Anonymous said...

குஜராத் முதல்வர் தமிழ்நாட்டுக்கு வந்துடு போகிறார்,அதனால் தமிழ்நாடும் குஜராத் போல ஆகிவிடும்னு நினைக்கிறார் போல.....

சாமக்கோடங்கி said...

எங்கூரு பாஷ கூட இப்பெல்லாம் அதிகமா பேசறதில்லீங்ணா... நெறைய பேரு வெளியூரு போயிர்ராணுக... இந்தூர்க்காரணுக யார்னே தெரியறதில்ல.. சரி.. அவிங்கவிங்க ஊர் மேல அவிங்கவிங்களுக்கு பாசம் தான்.. அது இருக்கோணும்....

mohan baroda said...

good article please keep it up

mohan baroda said...

good article please keep it up

சுபத்ரா said...

இங்க கமெண்ட் போட்டவுங்க எல்லாம் என் மெயில் ஐ.டி.க்கு அட்ரஸ் அனுப்பி வச்சீங்கனா நான் அடுத்த தடவ ஊருக்குப் போவும்போது அல்வா அனுப்பிவைப்பேன் ;-)

Radha said...

:-)

CRT the Greaaaaaattttt.. said...

Hmmmm.... Subathra.... Super.....ah... namma ooru basha pinnuthu po....

kutha said...

சொந்த மாவட்டம் பற்றி ஓரளவு பிடிப்பு, ஈடுபாடு எல்லாம் இருக்கும்தான்லே.. என்னா நாஞ்சொல்றது?ஊர் மேல பாசம் தான். அது இருக்கோணும்....

kutha said...

ஊர் மேல அவிங்கவிங்களுக்கு பாசம் தான்.. அது இருக்கோணும்....