பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 19, 2012

சிக்கலில் சிதம்பரம்


ரீஸண்டாக நடந்த சனி பெயர்ச்சியில், சனி பகவானின் உக்கிரப் பார்வை அதிகமாகத் தாக்கியிருப்பது மத்திய உள்துறையமைச்சர் ப.சிதம்பரத்தைத்தான் போலும். ஏற்கனவே அலைக்கற்றை வழக்கில் சுப்ரமணிய ஸ்வாமி ரூபத்தில் சனி பகவான் சிதம்பரத்தை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் தலைக்கு மேல் தொங்கு கத்தி அறுந்து விழலாம் என்ற நிலை. இப்பொழுது இது போறாதென்று இன்னொரு பக்கமிருந்தும் புதிதாக சிக்கல் ஒன்று திக்விஜய் சிங் ரூபத்தில் கிளம்பியிருக்கிறது.

உத்திரப் பிரதேத்தில் எதிர்வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக உத்திரப் பிரதேச மாநிலம் ஆஸம்கார்க் பகுதியில் ராகுல் காந்தியும், திக்விஜய் சிங்கும் தீவிரமான பிரசாரத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இந்த ஆஸம்கார்க் பகுதி உத்திரப் பிரதேசத்திலேயே சற்று உக்கிரமான பிரதேசம். இது பற்றி ஏற்கனவே இட்லிவடையில் பார்த்துள்ளோம், தெரியாதவர்கள் இங்கு http://idlyvadai.blogspot.com/2010/03/blog-post_29.html தெரிந்து கொள்ளலாம். இங்கு நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திக்விஜய் சிங், 2008, செப்டம்பர் 19 ஆம் தேதி தில்லி பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டர் போலியானது என்றும், இது பற்றி மறுவிசாரணை செய்ய வேண்டுமென்று நான் பிரதமரிடமும், உள்துறையமைச்சர் சிதம்பரத்திடமும் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை என்றும் பேசினார்.முன்னதாக, 2008 செப்டம்பர் 13 ஆம் தேதி தில்லியில் ஐந்து தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டனர். இது இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பினுடைய சதி என்று தெரியவந்தது. இந்த அமைப்பின் தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் ஆஸம்கார்க்கைச் சார்ந்தவர்கள்; தவிர இந்த தீவிரவாத சம்பவத்தின் மூளையாக தெரிவு செய்யப்பட்ட அட்டிஃப் அமீன் என்பவரும் ஆஸம்கார்கைச் சேர்ந்தவர், பல தீவிரவாத சம்பவங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் என்று போலீஸாரால் தேடப்படுபவர். அவரும், மேற்கூறிய சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் நால்வரும் தில்லியின் ஜாமியா நகர் பகுதியிலுள்ள “பாட்லா ஹவுஸ்” எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தில்லி போலீஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மோகன் ஷர்மா என்ற தில்லி போலீஸின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தலைமையிலான குழு ஒன்று அந்த இடத்தை முற்றுகையிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அட்டிஃப் அமீன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர், வேறு இருவர் கைது செய்யப்பட, ஒருவர் தப்பியோடிவிட்டார். இந்த என்கவுண்டரில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் ஷர்மா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டார்.இச்சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் பாராளுமன்றத்தில் நீதி விசாரணை கோரின. பிறகு ஒரு NGO, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஆய்வு செய்த மனித உரிமை ஆணையமும், இந்த என்கவுண்டர் போலியானதல்ல என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, NGO வின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, பைசல் செய்யப்பட்டது.இப்போது இந்த விவகாரத்தைத்தான் திக்விஜய சிங் கையிலெடுத்துள்ளார். உள்துறையமைச்சர் சிதம்பரத்தையும் சந்திக்கிழுக்கிறார். திக்விஜய் சிங்கிற்கும், சிதம்பரத்திற்குமுண்டான புகைச்சல்கள் ஏற்கனவே காங்கிரஸில் பிரசித்தம். சிதம்பரம் ஒரு “இண்டெலெக்சுவல் அரோகண்ட்” என்று சில வருடங்களுக்கு முன்னர் ஒரு டெலிவிஷன் பேட்டியில் திக்விஜய் சிங் குறிப்பிடப் போக அது சர்ச்சைக்குள்ளானது. பிறகு மேலிடத் தலையீட்டின் பேரில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுது திக்விஜய் சிங்கின் பேச்சைக் கையிலெடுத்துக் கொண்டு பாஜகவும், இந்த என்கவுண்டர் வழக்கில் மறு விசாரணை வேண்டுமென்று கோருகிறது.நேற்று பேட்டியளித்த உள்துறையமைச்சர் சிதம்பரம் இதனை முற்றாக மறுத்துள்ளார். தாம் ஏற்கனவே இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்து விட்டதாகவும், இது போலியல்ல எனவும், இதில் மறுவிசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.இப்பொழுது கேள்வி என்னவெனில், ராகுல்காந்தி இருந்த மேடையில், திக்விஜய சிங், பகிரங்கமாக ப.சிதம்பரத்தை வம்பிற்கிழுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆஸம்கார்க் தீவிரவாதிகளின் நதிமூலம்; திக்விஜய் சிங் அவர்களுக்கெல்லாம் ஆதரவாளர்; சிறுபான்மையினர் வீட்டில் எலி செத்தால் கூட ஆர்.எஸ்.எஸ்தான் காரணம் என்று கூறும் திக்விஜய் சிங், இச்சம்பவத்தில் குறிப்பாக சிதம்பரத்தை வம்பிழுக்கும் நோக்கம்? காரணங்கள் இரண்டு இருக்கலாம் என்பது யூகம். ஒன்று, உத்திரப் பிரதேசத்தை ஐந்தாண்டுகள் எங்கள் கையில் கொடுங்கள், ஊழலை ஒழித்துக் கட்டுகிறோம் என்று ராகுல் காந்தி கங்கணம் கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார். உங்கள் கட்சியிலேயே ஊழல்கார்ர்கள் இருக்கிறார்களே என்பது பாஜக, பகுஜன் சமாஜ் உட்பட அனைத்து கட்சிகளின் பதிலடி. இப்பொழுது பிரதானமாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள காங்கிரஸ் பிரபலம் ப.சிதம்பரம். அலைக்கற்றை வழக்கில் சிக்கிக் கொண்டு காங்கிரஸுக்கு தர்ம சங்கடத்தை விளைவித்து வருகிறார். தவிர சிவகங்கை தேர்தல் வெற்றி குறித்த வழக்கும் இவர்மேல் இருக்கிறது. ஆகவே சிதம்பரத்தை ஓரங்கட்டுவதன் மூலம் தாங்கள் ஊழலுக்கெதிரானவர்கள் என பெயர் பெறலாம் என்பது ஒரு நோக்கமாக இருக்கலாம். இரண்டாவது, அடுத்த பிரதமர் யார் என்பது என்ற போட்டியில் பதவிக்கான குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசு ராகுல் நீங்கலாக, மூத்தவர் பிரணாப் மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் உள்ளனர். இதில் இப்போது அதிக சங்கடம் தோற்றுவிப்பவர் சிதம்பரம்தான், எனவே அவரை முதலில் ஏறக்கட்டுவது என திக்விஜய் சிங் மூலம் காங்கிரஸ் காய் நகர்த்துகிறது என்று எண்ணமிட வழியிருக்கிறது.இவ்விரண்டு நாட்களாக நடைபெற்று வருகிற இந்த சர்ச்சைகள் தொடர்பாக ராகுல், சோனியா ஆகிய இருவரும் இதுவரை மூச்சு விடவில்லை என்பதுவும், திக்விஜய் சிங் பேச்சிற்கு மேலிட ஆதரவு இருக்குமோ என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. திக்விஜய் சிங் பேசி முடித்தவுடன் பேசிய ராகுல் காந்தியும் இது குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் ஏன் இன்னும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என பாஜகவும் கேள்வியெழுப்பியுள்ளது. இதிலும் காங்கிரஸுக்கு தர்மசங்கடம்தான். மேலிடம் திக்விஜய் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், சிதம்பரத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்; திக்விஜய் சிங்கைக் கண்டித்தால் மைனாரிட்டி ஓட்டுகள் பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது. இதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தைத்தான் பகுஜன் சமாஜும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, மெளனம் சர்வார்த்த சாதகம் என்பதுதான் இவ்விஷயத்தில் காங்கிரஸின் நிலைபாடு.இதில் மற்றொரு அபாயகரமான அம்சம் என்னவெனில், ஆட்சியைப் பிடிப்பதற்காக, காங்கிரஸ் எவ்வளவு கீழ்த்தரமான வேலையையும் முனைந்து செய்யும் என்பதற்கு இந்த பேச்சு மற்றுமொரு உதாரணம். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று ஒருபுறம் பிரசாரம் செய்து கொண்டே, இன்னொருபுறம் தீவிரவாதிகளின் பிறப்பிடத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆதரவாக, ஏற்கனவே ஊத்தி மூடப்பட்ட ஒரு வழக்கில், தீவிரவாதிகளுக்கு ஆதரவான வகையில் மறுவிசாரணை கோருவது பச்சை தேசத் துரோகம். இதே துரோகத்திற்கு பாஜகவும் துணை போவது பச்சை சந்தர்ப்பவாத அரசியல்.தீவிரவாதமும், அதனை ஊக்குவிக்கும் தீவிரவாதிகளையும் என்ன விலை கொடுத்தேனும் ஒழித்துக் கட்ட வேண்டும். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள், அவர்கள் எவ்வகையில் கொல்லப்பட்டாலும் அது நியாயமே! ஓட்டிற்காக இதுபோன்று தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பேசுவது தேசத்திற்கு நல்லதல்ல. இத்தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படுவதே தேசத்திற்கு நன்மை பயக்கும்.

- எதிராஜ்

13 Comments:

Kamesh said...

Yathiraj,

தீவிரவாதமும், அதனை ஊக்குவிக்கும் தீவிரவாதிகளையும் என்ன விலை கொடுத்தேனும் ஒழித்துக் கட்ட வேண்டும். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள், அவர்கள் எவ்வகையில் கொல்லப்பட்டாலும் அது நியாயமே! ஓட்டிற்காக இதுபோன்று தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பேசுவது தேசத்திற்கு நல்லதல்ல. இத்தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படுவதே தேசத்திற்கு நன்மை பயக்கும். === NACH.

Kamesh

kg gouthaman said...

// சிக்கலில் சிதம்பரம் //
அப்படியே அந்தணப்பேட்டை, தாண்டி வந்தார் என்றால், என்னுடைய ஊரு நாகப்பட்டினம். வரச் சொல்லுங்க.

ஜெகன்னாதன் said...

திக்விஜய் ஒரு மட்டமான அரசியல்வாதி. வேறு வேலை இல்லாமல், தினம் பேப்பரில் பேர் வர என்ன வேணுமானாலும் பேசுவார். இன்று இ.வ.வும் இவர் பேச்சைப் போட்டு முக்கியத்துவம் கொடுப்பது அனாவசியம்.

ராகுல், திக்விஜய் பேச்சுக்கு ஒன்றும் சொல்லவில்லை என்பதை, இக்னோர் செய்தார் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

ராகுலுக்கு ப.சி. / ப்ரணாப் போட்டி என்பது நகைப்புக்குரியது. காங்கிரஸ் பரம்பரை வாரிசு கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டால் இப்படி எழுத முடியாது.

காங்கிரஸும் சரியில்லை, பா.ஜ.காவும் சந்தர்ப்பவாதி. அப்ப, மாயாவே மீண்டும் வரவேண்டியது தான்!

-ஜெ.

Anonymous said...

ஓட்டுக்காக காங்கிரஸ் எது வேண்டுமானாலும் செய்யும்,ஒரு கல்லில் இரண்டு மாங்காய்,ஒன்று சிதம்பரம்,அடுத்து உ.பி அரசாங்கம்...என்னதான் செய்தாலும்...காங்கிரஸ் தோற்பது உறுதி....வினோத்,திருவண்ணாமலை

Anonymous said...

காங்கிரசில் மதம் மாறிய கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகம். அநேகமாக சோனியாவின் ஆதரவுடன்தான் இவர்கள் கொட்டமடிக்கிறார்கள்.

திக் விஜய் சிங்
அம்பிகா சோனி
ஷீலா தீக்சித்
அஜீத் ஜோகி
....
....
என்று ஒரு பெரிய கிறிஸ்தவர்களின் பட்டியலே இருக்கிறது.

சிதம்பரத்தால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால் அவர் ஒரு ஹிந்து. சோனியா தன்னைச் சுற்றி ஒரு ஹிந்துவையும் ஆலோசகராக வைத்துக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தோனியும், அகமது படேலுமே சோனியாவின் ஆலோசகர்கள்.

வாழ்க செக்குலரிசம்.

ஆமென்.

sury said...

இந்த இட்லி வடை வலையை எப்ப திறந்தாலும் வலப்பக்கத்தில் ஜோக்ஸ் ஜோதிகாவில்
டாக்டர் யோசனைப்படி மனைவியை ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு அனுப்பப்போவதாக‌
இருக்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார்.

இன்னுமா அனுப்பவில்லை ? சொல்லி 2 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதே !!

சுப்பு தாத்தா.

Dagil Patcha said...

Yathiraj

Your closing statements are fantastic. Good job. Keep it up

Sundar said...

தீவிரவாதமும், அதனை ஊக்குவிக்கும் தீவிரவாதிகளையும் என்ன விலை கொடுத்தேனும் ஒழித்துக் கட்ட வேண்டும். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள், அவர்கள் எவ்வகையில் கொல்லப்பட்டாலும் அது நியாயமே! ஓட்டிற்காக இதுபோன்று தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பேசுவது தேசத்திற்கு நல்லதல்ல. இத்தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படுவதே தேசத்திற்கு நன்மை பயக்கும். இந்த வார்த்தைகள் அட்சர லட்சம் பெறும்.

D. Chandramouli said...

kg gouthaman: Enjoyed your "Sikkalil Chidambaram". I think my native place Odachery village (from where Nagapattinam gets water supply) should be comparatively closer to Sikkil!

Cinema Virumbi said...

Azamgarh என்பதை ஆஸம்கர் என்று உச்சரிப்பார்கள். 'ஆஸம் கோட்டை' என்று பொருள் கொள்ளலாம்.

நன்றி!

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.com

Anonymous said...

// ஊத்தி மூடப்பட்ட ஒரு வழக்கில், தீவிரவாதிகளுக்கு ஆதரவான வகையில் மறுவிசாரணை கோருவது பச்சை தேசத் துரோகம். இதே துரோகத்திற்கு பாஜகவும் துணை போவது பச்சை சந்தர்ப்பவாத அரசியல். //

Wish BJP also eliminated along with this congress

Anonymous said...

Idly Vadai.....

Neenka Nallavara Kettavara?

Anonymous said...

there is no second thought in wiping out of terrorists, but the fact is, our investigation & detectives want to get fame n close the case instead of finding the real culprits... we have several proofs for this in recent times... all the so call muslim terrorists behind many bomb-blasts are acquitted. So there has to be a thorough investigation by an agency that cannot be influenced by power/money.. but i doubt if he have one ...

-Martin.
suresh.martin007@gmail.com