பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 18, 2012

மா(டு)யா(னை)வதி போட்டி முடிவுகள்மேலே உள்ள படத்துக்கு நல்ல கமெண்டுக்கு பரிசு என்ற பதிவை போன வாரம் போட்டிருந்தேன்.

ஒருவருக்கு தான் பரிசு என்றாலும், பலர் நல்ல கமெண்ட் கொடுத்திருந்தார்கள். பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கமெண்ட் கீழே

1. மாட்டுக்கு யானை வேஷம் போட்டாலும், அது 'மா... மா...' னுதான் கத்தும்.. ஏன்னா.. எல்லாமே 'மாயா'தான, இந்த பாடா'வதி' உலகத்துல. - Madhavan Srinivasagopalan

2. இது யானைதானுங்க. மன்மோகன் சிங் ஆட்சியில எருமையா இளைச்சுப் போச்சுங்க. - kg gouthaman


2. தப்பி தவறி மாயாவதி கண்ணுல பட்டுட போகுது, பாவம் மாடுங்க.
அப்புறம் எல்லா மாட்டுக்கும் இந்த மாதிரி பண்ண சொல்லி சட்டம் போட்டுடுவாங்க கோடி கணக்குல செலவாகும் - Prabu

இவர்கள் மூவருக்கும் புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.
( மாதவன், கௌத்தமன், பிரபு எனக்கு உங்கள் முகவரியை idlyvadai2007@gmail.com என்ற முவரிக்கு அனுப்புங்கள். நன்றி )

கலந்துக்கொண்ட் அனைவருக்கும் வாழ்த்துகள் !

அடுத்த போட்டி விரைவில்...

23 Comments:

Anonymous said...

Indha mokka comments'ku poi parisu tharingale!!

kg gouthaman said...

ஹய்யா! ஜாலி ஜாலி!! மிக்க நன்றி. முகவரி அனுப்புகின்றேன்!

Madhavan Srinivasagopalan said...

எனது கமண்ட்டை முதலாவதாக தேர்ந்தெடுத்தது கண்டு மகிழ்ச்சி.
உங்களுக்கு எனது நன்றிகள். எனது முகவரியை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

Madhavan Srinivasagopalan said...

வெயிட்.. வெயிட்..

எந்த வரிசையில(Sl. No / Chronological order) கமென்ட் போட்டாங்களோ அந்த வரிசையில இங்க சொல்லி இருக்கீங்கபோல.. மத்தபடி தேர்ந்தெடுத்த மூணுமே சமமான தரம்தாம் போல. அது தெரியாம முந்திரிக் கொட்டையா 'எனன்னோட கமெண்ட்டு முதல் பரிசுன்னு' அவசரப் பட்டு முடிவுக்கு வந்துட்டேன். இப்ப புரியுது.

:-)

ஜெகன்னாதன் said...

வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! என்னைப் போன்றவர்களுக்கு, ஏதோ கொஞ்ஜம் கொறைச்சு ( முதல் / கடைசி பக்கம் கிழித்து) அநுப்பக்கூடாதா?! - ஜெ.

Anonymous said...

பரிசுக்குரிய கமெண்டுகள் சூப்பர், குறிப்பாக எங்கள் தங்கதலைவர், கே.ஜி ஜி அண்ணாவின் கமென்ட் சூப்பரோ சுப்பர்.

ந.லோகநாதன் said...

விரைவில் அடுத்த போட்டி எதிர்பார்க்கிறேன்

vikram said...

congrats to the ones that have been selected!
can you please drop a comment after you receive the parisu - just for confirmation :)

Anonymous said...

//பரிசுக்குரிய கமெண்டுகள் சூப்பர், குறிப்பாக எங்கள் தங்கதலைவர், கே.ஜி ஜி அண்ணாவின் கமென்ட் சூப்பரோ சுப்பர்.//

vanja pukazhchi mathiriya ?

Anonymous said...

மூனும் சகிக்கலை....

அநங்கன்

Anonymous said...

ஒரு அனானிக்கும் பரிசு தராத இட்லிவடையின் அழுகுணி ஆட்டத்தை அனானிகள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

kg gouthaman said...

// பரிசுக்குரிய கமெண்டுகள் சூப்பர், குறிப்பாக எங்கள் தங்கதலைவர், கே.ஜி ஜி அண்ணாவின் கமென்ட் சூப்பரோ சுப்பர்.//

பாராட்டுக்கு நன்றி. (பாராட்டுவதற்குக் கூடவா பெயரிலியாக வரவேண்டும்!! )

Lakshmi said...

பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.

நீச்சல்காரன் said...

வாழ்த்துகள்

முகவரிக்கு புத்தகத்தை மட்டும் அனுப்புங்கள் ஆட்டோ எல்லாம் அனுப்பிடாதீங்க :)

Anonymous said...

// பரிசுக்குரிய கமெண்டுகள் சூப்பர், குறிப்பாக எங்கள் தங்கதலைவர், கே.ஜி ஜி அண்ணாவின் கமென்ட் சூப்பரோ சுப்பர்.//

பாராட்டுக்கு நன்றி. (பாராட்டுவதற்குக் கூடவா பெயரிலியாக வரவேண்டும்!! )

அடி ஆத்தா! தன்னை தானே புகழ்ந்து அனானியாக கமெண்ட் போட்டுகிட்டு இப்ப இன்னொரு ஒண்ணும் தெரியாத கமெண்ட் போடும் KGG யின் ராஜதந்திரமே நாஜதந்திரம்

Anonymous said...

புத்ததத்தின் பெயர் என்ன என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே. ‘யானையும் எறுமை மாடும்’ பாப்பா கதையா?

kg gouthaman said...

// அடி ஆத்தா! தன்னை தானே புகழ்ந்து அனானியாக கமெண்ட் போட்டுகிட்டு இப்ப இன்னொரு ஒண்ணும் தெரியாத கமெண்ட் போடும் KGG யின் ராஜதந்திரமே நாஜதந்திரம்//

வேணுண்டா வேணும. உனக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலும் வேணும்.

Anonymous said...

nalla thaan irukku....anaaa...

kg gouthaman said...

தம்பி - இன்னும் டீ வரலை.

kg gouthaman said...

சுஜாதா எழுதிய 'ஊஞ்சல' புத்தகம் வரப் பெற்றேன். மிக்க நன்றி.

Prabu said...

சுஜாதாவின் தங்க முடிச்சு கிடைத்தது - மிக்க நன்றி

Madhavan Srinivasagopalan said...

____(a)_______ எழுதிய ____(b)________ தலைப்பிலமைந்த புத்தகம் _(c)____வருடம், __(d)_____மாதம், ____(e)_______ ம் நாள் கிடைத்தது.. மிகுந்த நன்றி..
(எதுக்கும் இப்பவே சொல்லிடலாம்.. புத்தகம் வராமலா போயிடும்.... அப்புறமா a to e ஃபில்லப் பண்ணிக்கலாம்..)

நாங்கலாம் எதுலயுமே அட்வான்ஸ்.... ஆமாம்....

Madhavan Srinivasagopalan said...

a) திரு. சுஜாதா
b) சிவந்த கைகள்
c) 2012
d) பிப்ரவரி
e) 17

Thanks once again.
---Madhavan S
17th Feb. 10:00 PM (IST)