பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 13, 2012

ஒபாமா வாழ்த்தும், நக்கீரன் மன்னிப்பும் !

ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு, நக்கீரன் வாரப்பத்திரிகையின் முதல் பக்கத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விபரம் கீழே...


நேற்று நடந்த விசாரனையில் விசாரணையில் நடந்த விவாதம்

(ஜெயலலிதா தரப்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன், கோபால், காமராஜ் தரப்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜரானார்கள்)

பெருமாள்:- ஜெயலலிதா பற்றி வெளியிட்ட செய்தியை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம். எங்கள் தவறை உணர்ந்து கொண்டோம்.

நவநீதகிருஷ்ணன்:- இவர்கள் இங்கு தெரிவிக்கும் வருத்தத்தை நக்கீரன் பத்திரிகையில் வெளியிட வேண்டும். அதுவும் அந்த செய்தியைப் போலவே வெளி அட்டையில் வெளியிட வேண்டும்.

பெருமாள்:- பத்திரிகையில் முக்கிய பக்கத்தில் அதை வெளியிடுகிறோம்.

தலைமை நீதிபதி:- ஜெயலலிதா பற்றி ஏற்கனவே வெளியிட்ட செய்தி, முன் அட்டையில்தான் வெளியிடப்பட்டது. ஆகவே அதற்கு வருத்தம் தெரிவிக்கும் செய்தியையும் முன்அட்டையில்தான் வெளியிட வேண்டும். அதுவும் வரும் இதழில் அந்த செய்தி இடம் பெற்றிருக்க வேண்டும்.பெருமாள்:- வரும் இதழுக்கான அச்சடிப்புப் பணி முடிந்துவிட்டது. 21/2 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இதழில் இல்லாமல் அடுத்த இதழில், கோர்ட்டு உத்தவின்படி வருத்தம் தெரிவிக்கும் செய்தியை வெளியிடுவோம்.

நவநீதகிருஷ்ணன்:- அலுவலகத்துக்கு மின்சார இணைப்பு இல்லை என்றுதான் நேற்றெல்லாம் வாதிட்டனர். ஆனால் இவ்வளவு புத்தகத்தை அச்சடித்திருப்பதாக இப்போது தெரிவிக்கின்றனர்.

தலைமை நீதிபதி:- மின்சாரம் இல்லாமல் எப்படி பத்திரிகைகளை அச்சடித்தீர்கள்?

குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நக்கீரன் கோபாலும், காமராஜ×ம் தங்களது தவறை உணர்ந்ததாகவும், இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்து அடுத்த இதழில் முன் அட்டையில் (கவர் பேஜ்) செய்தி வெளியிடுவதாகவும் அவர்கள் தரப்பு வக்கீல் பி.டி.பெருமாள் மிகுந்த நேர்மையுடன் தெரிவித்தார்.

மேலும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அவர்கள் தரப்பில் பெருமாள் கூறினார். இது சம்பந்தமாக அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும், பிரதிவாதிகளின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். வழக்கு விசாரணை 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
தற்போதைய இதழில் வந்த அட்டைப்படமும், முதல் பக்க செய்தியும்.

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியிடம் காட்டப்பட்ட நக்கீரன் பத்திரிகையின் தற்போதைய இதழின் முதல் பக்கத்தில் வருத்தம் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் முன் அட்டையில் அதுபற்றிய தகவல் இடம் பெறவில்லை.
உடனுக்குடன் செய்தியும் படமும் போடும் நக்கீரன் வலைப்பக்கத்தில் இதை பற்றி ஒன்றும் வரவில்லை, பாவம் பவர் இருந்திருக்காது. ஒபாமாவிடம் வாழ்த்து பெற்ற அவர்களுக்கு தேவை ஒரு இன்வர்டர்

7 Comments:

Anonymous said...

பொறி வைத்து பிடித்த மாதிரி தோன்றுகிறது . எலி வசமாக சிக்கி விட்டது !!!!!

ஜெகன்னாதன் said...

நக்கீரன் மன்னிப்பு கேட்டது ப்ரமாதம்! “ஆளும் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் சாதகமாக இருக்கும் என்று, வெள்ளந்தியாக” செய்தி வெளியிட்டதாம்!!
அடுத்த இதழ் முன் அட்டையில், பழைய அட்டையை முக்கால் பக்கம் போட்டு, “மேற்கண்ட அட்டை வந்த இதழில் இருந்த செய்திக்காக, போன இதழில் வருத்தம் தெரிவித்தோம்” என்று வருமா?

-ஜெ.

Anonymous said...

"நவநீதகிருஷ்ணன்:- அலுவலகத்துக்கு மின்சார இணைப்பு இல்லை என்றுதான் நேற்றெல்லாம் வாதிட்டனர். ஆனால் இவ்வளவு புத்தகத்தை அச்சடித்திருப்பதாக இப்போது தெரிவிக்கின்றனர்." - அப்படியானால், மின்சாரம் இல்லை என்று பொய் தான் சொன்னார்களா? குற்றச்சாட்டு திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டால், இவர்கள் பொய் சொன்னது இல்லை என்று ஆகிவிடுமா? அதற்கு ஒரு கண்டனம் கூட இல்லையா?(கண்டனம் கூட நக்கீரனைப் பொறுத்தவரை எருமை மாட்டில் மழைதான்). அப்படியானல், நீதிமன்றத்தில் 'அவன் என்னைக் கிள்ளிட்டான்' என்று சொல்லிவிட்டு பின்னர் 'சும்மானாச்சுக்கும் சொன்னேன்' என்று சொல்லிவிட்டால் சரியாகி விடுமா?

சரி நக்கீரன் தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டால், மற்றும் வருத்தம்(மறுப்பு அல்ல) தெரிவித்து விட்டால் 'மாட்டுக்கறி' மேட்டர் அனைவர் மனதிலிருந்தும் நீங்கிவிடுமா? சரி அது அவர்களுக்குள் சொந்த விஷயம். ஆனால் அது தொட்டு நடைபெற்ற வன்முறைக்கு யார் பொறுப்பு? நக்கீரன் அலுவலகம் உடைக்கப்படதற்கு அவர்கள் கவலைப்டாவிட்டாலும் பரவாயில்லை; அந்தத் தெருவிலுள்ள மற்றவர்களும் பாதிக்கப்பட்டார்களே? அதற்கு யார் பொறுப்பு? அதிமுகவினர் தான் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று படத்துடன் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டனவே? அதெல்லாம் பொய்யா?

ங்கொய்யாலெ நம்மள வச்சு காமெடிதான் பண்றாய்ங்ய.

pudukai selva said...

மீசையில் மண் ஒட்டவில்லை .....

ஜெகன்னாதன் said...

குமுதம் - தனுஷ், ஸ்ருதி பற்றி எழுதியதற்கு கேஸ் வருமா என்று நினைத்திருந்தேன். இன்று தினமலரில் செய்தி** வந்துவிட்டது. குமுதம் டர்ர்ர்ர் தான்!

** “நடிகர் தனுஷ்சுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். தனுஷ்-சுருதி ஹாசன் ஜோடி 3 படத்தில் நாயகன் & நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டியொன்றில், `என்னையும், தனுஷையும் இணைத்து வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதை படித்தபோது, காமெடியாக இருந்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்த சாட்சியும் இல்லை. ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல் எழுதுவது சட்டப்படி குற்றம். எனவே அப்படி எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மரியாதை இருக்கிறது. அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரை பற்றி மட்டரகமான வதந்திகளை பரப்புவது, நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்த விஷயம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.”
-ஜெ.

R Sathyamurthy said...

Media including so considered reputed like Vikatan now stoop to very low levels for circulation. In that scenario, the actions of very third rate magazines like Nakeeran should come as no surprise.

R.Gopi said...

யப்ப்பாஆஆஆஆஆஆஆஆ

முறுக்கின தொங்கு மீசைக்காரரும், காமராஜும் “வெள்ளந்தி”யாமாம்...

மக்காஸ்.... படிச்சீங்க இல்ல, இனிமே எது வழியா வேணும்னாலும் சிரிச்சுக்கலாம்...

இதெல்லாம் ஒரு பொழைப்பாடா கோபாலா!!!