பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 23, 2012

BarbarVsBarkha

கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் #Barkhabarks, #BarkhaDutt என்ற Tagல் ஒரு பெரிய யுத்தமே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை பற்றி எந்த நியூஸ் பேப்பர் டிவியிலும் வரவில்லை. சரி எதிராஜ் தான் சரியான ஆள் அவரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சாட்டில் பேசினேன். பேசிய பிறகு பார்த்தால் இதுவே மினி கட்டுரையாக எழுதலாம் போல இருக்கு அனுப்புங்க என்றேன். அது கீழே...


இரண்டு நாட்களாக ட்விட்டரில் நடந்து வரும் ஒரு பஞ்சாயத்து பற்றியது இவ்விஷயம். #Barkhabarks, #Barkha Dutt இவ்விரண்டு ஹேஷ் டேக்’களும் இரண்டு நாட்களாக போட்டி போட்டுக் கொண்டு முதலிரண்டு இடங்களில் ட்ரெண்டிக் கொண்டிருக்கின்றன. @Primary_red என்பவர் தனது வலைப்பக்கத்தில், கார்கில் யுத்தக்கள நிலவர செய்தியாக்கத்தில், செய்தியாளர் பர்கா தத், இந்திய வீரர்களின் யுத்த நிலைகளையும், போர்த் தந்திரங்களையும் அவ்வப்போது நேரடி ஒளிபரப்பில் தெரிவித்த்தால்தான் பெருமளவில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்று எழுதியிருந்தார். இதனை பிரபல ட்விட்டர் @barbarindian என்பவர் ஆமோதித்து, அதற்கு காரணம் பர்கா என்றும், அதனை ஒரு Manslaughter என்றும் வர்ணித்திருந்தார். இது போன்று ட்விட்டியதற்காக @barbarindian மீது வழக்கு தொடுப்பேன் என்று பர்க்கா ட்வீட்டியிருந்தார்.இதற்கு பதிலடியாக ட்விட்டரில் @barbarindian னின் ஆதரவாளர்கள் மேற்கூறிய இரண்டு # Tags மூலமாக போர் தொடுத்து, இரண்டு நாட்களாக இவ்விரண்டும் முன்னணியில் இருக்கின்றன. இதுதான் விஷயம். எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என ஸர்வ சுதந்திரங்களுக்கும் உரிமை கொண்டாடும் மீடியாக்கள், தங்களை யாரேனும் விமர்சனம் செய்தால் பொசுக்கென்று கோர்டுக்கு இழுக்கின்றனர். இதே பர்கா தத் ஏற்கனவே ஒருமுறை ஒரு வலைப்பதிவாளரை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறார். காரணம் இதேதான், மும்பை மற்றும் கார்கில் தாக்குதலின் போது நேரடி கவரேஜ் கொடுத்த்தை விமர்சித்ததற்காக.

2008 மும்பை தாக்குதலின்போது, தாஜ் ஹோட்டல் கடுமையாக தாக்குதலுக்காட்பட்டிருந்த சமயம், தொலைக்காட்சி செய்தியாளர்கள், இந்திய பாதுகாப்புப்படையின் ஒவ்வொரு அசைவையும் நேரடி ஒளிபரப்பில் காண்பித்துக் கொண்டிருந்தனர். ஹோட்டலினுள்ளிருந்த தீவிரவாதிகள் இதனைத் தொலைக்காட்சி மூலம் கண்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுத்ததால், இந்த தாக்குதல் சுமார் 36 மணிநேரம் வரை நீடித்தது. இம்மாதிரியாக மீடியாக்கள் அடித்த கூத்திற்கு அப்போதே பலத்த கண்டனக்குரல்கள் எழுந்தன. இத்தாக்குதலில் யூதர்கள் சிலர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்த்தோடு மட்டுமல்லாமல், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத், இந்தியா நடத்திய ஆபரேஷனின்போது, அங்கு மீடியாக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமத்தித்திருந்ததற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் நடக்கும் இவ்விஷயம் அவ்வளவாக ஒன்றும் பெரிதில்லை என்ற போதிலும், மீடியாக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து எதை எப்போது எப்படி கையாள வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கார்கில் யுத்தமாகட்டும், அல்லது மும்பை தாக்குதலாகட்டும், மீடியாக்கள் செய்தது அட்டூழியம், நிச்சயம் அங்கு நடந்த கொலைகளில் தீவிரவாதிகளுக்கு இணையாக அவர்களுக்கும் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. பரபரப்பாக செய்தி தருகிறேன் பேர்வழி என்று இவர்கள் அடித்த கூத்தினால் பல குடும்பங்கள் இன்று தெருவில் நிற்கின்றன. இதை யாரேனும் விமர்சனம் செய்யும்போது, அவர்களை அடக்குவதற்காக சட்டரீதியான நடவடிக்கை என்ற பெயரில் மிரட்டுகிறார்கள்.

பாகிஸ்தானிலுள்ள ஒஸாமாவைத் தீர்த்துக்கட்ட சிஐஏ, பாகிஸ்தானுக்கே தெரியாமல், கச்சிதமாக ஆபரேஷனை நிகழ்த்தி வெற்றி கண்டது. ஆனால் நம்மூரிலோ, கட்டெறும்பை நசுக்கினால் கூட மீடியாவிற்கு எப்படியோ தெரிந்து வந்து விடுகிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள், மீடியாக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்; சரியோ, தவறோ அடுத்தவர்களை விமர்சனம் செய்ய நாம் தயங்காத போது, நம்மீதான விமர்சனங்களையும் அதே போலவே எதிர்கொள்ள வேண்டும்.

மீடியாவிற்கு பரபரப்பு வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு யானை சிலைகளும் அதற்கு போடும் முக்காடுகளும்.

18 Comments:

Madhavan Srinivasagopalan said...

Yellow highlighted end punch was very nice.

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் படு மொக்கை.

ஏனுங்க மாதவன் உங்கட மொக்கையான கமெண்ட்-க்கு இ.வடை
புக் கொடுத்தவுடன தலை கால் புரியலையா ?

கோவிந்தன்

Madhavan Srinivasagopalan said...

Hey.. anony.. u understand english also ? Try the following then.

"अरे यार, तुम हिंदी भी जानते हैं?
हमें बताओ, अपने आप को क्यों छुपा रहे हैं? "

Anonymous said...

வாத்யாரே....இதெல்லாம் இன்னா கேள்வி? இதுக்கு அந்த அனானி பதில் சொல்லி இன்னா பண்ணப்போறிங்க...

"Hey man, you also know Hindi?
Tell us why you're hiding?

-இப்படிக்கு
இன்னொரு அனானி.

Anonymous said...

ரொம்ப சிம்பிள். இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கும்போது, இதுபோன்ற ஜந்துக்களை "பக்கத்திலிருந்து இன்ச் பை இன்சாக இன்னும் துல்லியமாக கவர் செய்து நாட்டு மக்களுக்கு காண்பிக்கவும்" என்று சொல்லி தாக்குதல் நடக்கும் இடத்திற்குள்ளேயே அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

அன்புடன்
முத்துக்குமார்

Anonymous said...

One of your best article and yellow comment.

Anonymous said...

குழந்தைக்கு ஸ்பைடர் டிரஸ் போட்டு அழகு பார்க்கிற ஆளுங்க எல்லாருமே இப்படி தான் இருப்பாங்களா..... உஸ் அப்பா...... ரொம்ப கண்ணைக் கட்டுதே!! ( என்ன ரசனைடா சாமி...)

அடுத்த கமெண்ட் குஜராத்தில போடுப்பா கொழந்தே!!

Madhavan Srinivasagopalan said...

@ Anony.. who said
//அடுத்த கமெண்ட் குஜராத்தில போடுப்பா கொழந்தே!!//

I am sorry, I don't know Gujarati.

BTW.. why are you taking, hiding under (spiderman) mask ?

& also please note that I am not going to respond anymore, for your anonymous comment(s).

To.. IdlyVadai can you please disable 'anonymous' option ? It really hurts some of your fans at times.

kothandapani said...

இந்த கட்டுரையில் வந்துள்ளதை பார்த்தல் ஏதோ எதேச்சையாக நடந்தது போல் இல்லை................மீடியா உரிமை என்ற சாக்கில் சோரம் போனது போல் உள்ளது.............இவ்வளவு முக்கியமான கட்டுரையை பற்றி விவாதிக்காமல் , வாசகர்கள் அந்த கமெண்ட் மொக்கை, ஹிந்தி தெர்யுமா என்று விளையடுவது, இரண்டு நிகழ்வுகளிலும் உயிர் நீத்தவர்களுக்கு காட்டும் ஏளனமாக உள்ளது.............

Anonymous said...

டே அனானி, நான் குஜராதிலையும் போடுவேன், குச்சிப்பிடியும் ஆடுவேன்.. கனகாவுக்கு கரகாட்டம் சொல்லித்தந்தவங்க நாங்கெல்லாம்.. - இப்படிக்கு ஆண்டவன்.

R.Ramanan said...

அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........

தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.

தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)

தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!

நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!

அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???

சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........

சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.

நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.

விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...

Anonymous said...

கோதண்டபானி!

நீங்க சொல்றதிலும் விஷயமிருக்கு.

ஆனாலும் என்ன பன்ன சொல்றீங்க!! இந்தியாவில் நடக்கிறதை எல்லாம் பார்த்தா கண்ணீர் விட்டு தான் அழனும்.

சீனா காரன் அக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் ரோடே போட்டுக்கினுகிறான். அதை கண்டிக்கறதுக்கு கூட பயந்துகினு கிடக்குது நம்ம கவர்மெண்டு.

தேசத்துக்கு எது கெட்டதோ அதை மட்டும் சிரத்தையா பன்னுறானுவ இந்த காங்கிரஸ்கார்னுவ.

செக்யூலர் மன்னாங்கட்டின்னு மறுபடி மறுபடி அந்தக் கழுதைங்க தான் வரப்போவுது, இதில நாம் வருத்தப்பட்டு என்னா ஆகப் போகுதுன்னு தான் இப்படி ரிலாக்ஸ்ஸா இருக்கப் பழகிட்டோம்.

இப்ப சொல்லுங்க கமெண்ட் மொக்கையா இல்லையா?

கோவிந்தன்
கோரக்பூர்

Anonymous said...

// குச்சிப்பிடியும் ஆடுவேன்.. கனகாவுக்கு கரகாட்டம் சொல்லித்தந்தவங்க //

அடச்சே ! இந்த அவனாடா.....!!!!.நீ.....

Sankarapandi said...

Dear Madhavan,
Don't fall in to this anony trap.
Remember what happended to cricket commentary Bala. Avary thundai kaanom thuniya kaanomnu oditaru.
Be careful!

Anonymous said...

India madiri idathukku mediavai allow pannavanai mudhaey Adi. Appa mediayavai rendavadhaa adi.

Anonymous said...

The latest trending hashtag in twitter is #ndtvibncwgscam. Good to see these corrupt channels getting exposed

Anonymous said...

அட்சிக்காதிங்கடே.....புட்ச்சி கட்ச்சி வெச்சிடுவேன் ஆமா...

லக்ஷ்மிராஜன் said...

பத்திரிக்கைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம்.
அதே சமயம் அரசாங்கமும் பத்திரிக்கைகளை விட சாதுர்யமாக நடந்து கொள்வது மிக மிக அவசியம். அதாவது பத்திரிக்கைகள் இன்னத்தை தான் செய்வார்கள் என்று தெரிந்து அதற்கேற்றவாறு செயல் படுவது.

-www.piramu.tk