பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 22, 2012

Angry Salman Rushdie
( படம் உதவி : http://www.techno18.com/2011/05/how-to-play-angry-birds-online-for-free/
)

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீஸார் பொய் சொல்லியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் ராஜஸ்தான் போலீஸார் அவர் மீது வழக்கு தொடர வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

4 Comments:

பித்தன் பெருமான் said...

சல்மான் ருஷ்டி கலந்து கொள்ள முடியாததால், இலக்கியத்துக்கும் அதன் சார்பான இந்தக் கூட்டத்துக்கும் ஒரு பாதிப்பும் இல்லை. இவருடைய தலைக்கு விலையை சில வருடங்களுக்கு முன்பு சில அமைப்புகள் நிர்ணயம் செய்த போது, இவரும், இவருடைய சார்பில் குரல் கொடுப்போரும் எங்கு போயிருந்தனர். காரணம் விலையை நிர்ணயம் செய்தவர்கள் குரல் கேட்டவுடன் விரைந்து வந்து குரலை நசுக்கிவிடுவார்கள் என்ற பயம். இந்தியா என்றவுடன் இவருக்கு எப்படிப் பட்ட எகத்தாளம்.
இதையெல்லாம் நாம் கேட்கக் கூடாது, நாம் காந்தி பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஹூம்.

பித்தன்.

பாரதி மணி said...

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் இங்கிருந்து போனவர்களை விட பட்டையை கிளப்பியவர்கள் விழாவுக்கு வராத சல்மான் ரஷ்டியும், வந்திருந்து கலக்கிய ஆப்ரா வின்ஃப்ரீயும், பர்க்கா தத்தும் தான்!

உலகத்திலேயே ‘சிறந்த’ பேச்சாளியை சுமார் ஒரு மணிநேரம் கையில் எந்தக்குறிப்பும் டெலிப்ராம்ப்டரும் இல்லாமல், கச்சிதமாக பேட்டி கண்ட பர்க்கா தத்தை பலமுறை வின்ஃப்ரீ பாராட்டினார்.

பர்க்காவைப்பற்றி நீரா ராடியா டேப் உட்பட எனக்கு பல எதிர்வினைகளிருந்தாலும், பேட்டி காண்பதில் வல்லவர் தான்!

பூட்ட கேஸ் said...

சாலையில் நடமாடும் சாதாரண இந்தியனிடம் சல்மான் ருஷ்டியை பற்றி கேட்டு பாருங்கள். அவர் யாரென்றே முக்கால்வாசி பேருக்கு தெரிந்திருக்காது. இவர் இந்திய நாட்டு குடிமகனே இல்லை. இந்தியாவுக்கு இவர் வந்து பெரிதாக ஒன்றும் வெட்டி முறிக்க போவதும் இல்லை. இவர் ஏன் வரவில்லை என்று இங்கு யாரும் அழவும் இல்லை. பிறகு எதற்காக நமது வரிப்பணத்தை விரயமாக்கி இவரை போன்ற வெட்டி ஆட்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்?

ஜெகன்னாதன் said...

ராஜஸ்தான் போலீஸ் கமிஷனர் சொதப்பிவிட்டார். ருஷ்டிக்கு இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு புதிதல்ல. யாரும் அவரைத் தாக்கப்போவதாக சொல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ருஷ்டியை வரவேண்டாம் என்றதில் தவறில்லை. ஒருக்கால் அவர் வந்திருந்து, யாராவது கல் / முட்டை எறிந்திருந்தால் இதே ‘மாக்கள்’ ராஜஸ்தான் போலீஸையும், கெஹ்லாட்டையும் ஒரு வழி பண்ணியிருப்பார்கள். இவர்கள் எந்தப் பக்கமும் போக விடமாட்டார்கள். - ஜெ.