பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 08, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 8-1-2012

ஹாய் இட்லி & வடை,

எப்படி இருக்கே ?
அன்னா பற்றி நீ ஒன்றும் புத்தகம் எழுதலையா ? நேற்று அன்னா பற்றி புத்தகம் வாங்கலாம் என்று புத்தகக் கண்காட்சிக்குப் போனால் எல்லாம் எக்கச்சக்க விலை. சரி என்று எனக்கு தேவைப்படும் சமையல் குறிப்பு, ஜோசியம் புத்தகங்கள் இரண்டை வாங்கிக்கொண்டு வந்தேன். அன்னாவிற்கே பணம் தேவைப்படும் போது அவர் பற்றிய புத்தகங்களை வாங்கும் எனக்குப் பணம் தேவைப்படாதா? "கூட்டம் ரொம்ப இல்லையே?" என்று மீடியா கேட்ட கேள்விக்கு "என்னிடம் பணம் இல்லை" என்று பதில் சொல்லுகிறார் ஹஸாரே. அப்படி என்றால் டில்லியில் கூடிய கூட்டம் பணம் கொடுத்து கூடிய கூட்டமா? எனக்கு தெரிந்து மோதி பிரதமராக வந்தால் தான் இந்தியாவிற்கு ஏதாவது நல்லது நடக்கும். லோக்பால் என்ற யானை குட்டி போடும் என காத்திருக்க அது லத்தி போட்ட கதையாய் முடிந்துவிட்டது தான் 2011ல் பெரிய ஏமாற்றம்.


யானை என்று சொன்னவுடன்தான் நினைவுக்கு வருகிறது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் ராஜ்யத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே இருக்கும் மாயாவதி சிலைகள் மற்றும் அவரது கட்சியின் சின்னமான யானை சிலைகளை அகற்ற வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. இதனால் தேர்தல் கமிஷன் மாயாவதி மற்றும் யானை சிலைகளைத் துணி போட்டு மூடுகிறார்கள். ஆனால் பல இடங்களில் இந்த சிலைகள் இருப்பதால் பெரிய துணியை கொண்டு மாநிலத்தையே மூடிவிடலாமா என்று யோசிக்க தொடங்கியுள்ளார்கள். அப்படிச் செய்தால் தேர்தலுக்கு முன்பே மக்கள் தலை மீது துண்டைப் போட்ட மாதிரியும் இருக்கும்.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று சொல்லுவார்கள். ஒரு காலத்தில் வில்லனாகப் பலரை போட்டு அடிச்ச நடிகர் மன்சூர் அலிகான் புழல் சிறையில் கொசுக்களிடம் சிக்கி படாதப்பாடு பட்டுவருகிறாராம். இப்போது எல்லாம் ஊழல், கொள்ளை அடிப்பதற்கு மக்கள் அஞ்சுவதில்லை, ஆனால் கொசு, மூட்டைப்பூச்சி போன்றவற்றுக்கு அஞ்சுவது நல்ல வேடிக்கை தான். கருப்பாக ஓடும் கூவம் நதிக்கரையில் கொசுக்கு அஞ்சாத ஏழைகள் இருக்கிறார்கள், ஆனால் கருப்பு பணம் நிறைய வைத்திருக்கும் ஏசி பங்களாவில் இருப்பவர்கள் கொசுக்காக அஞ்சுகிறார்கள்.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று ஹீரோயின்கள் பாடியது அந்த காலம், ஆனால் இப்போ நடிகைகளை மட்டும் அழகழகானவர்களாக அறிமுகப்படுத்துகிறீர்களே அதேபோல எங்களைப் போன்ற பெண்களுக்காக எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை அறிமுகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் நடிகை சுஹாசினி. இவர் தர்மத்தின் தலைவன்(ர்) படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார் என்பது பழைய தகவல்.

இந்தியாவின் பழைமை வாய்ந்த பழைய பகவத் கீதை தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அதனால் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் ரஷ்யாவில் வழக்குத் தொடுக்கப்பட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்கள். உடனே இங்கே இருக்கும் பிஜேபி கட்சிக்காரர்கள் குதியோ குதி என்று குதிக்கக் கிளம்பியுள்ளார்கள். ரஷ்யாவில் கீதையை படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன? முதலில் இந்தியாவில் இருக்கும் மக்கள் படித்தார்களா என்று இவர்கள் கணக்கு எடுக்கட்டும். கூடவே அந்த கீதையை பிஜேபிகாரர்கள் ஒழுங்காப் படித்து இருந்தாலே அவர்கள் நல்ல அரசியல்வாதிகள் ஆக சான்ஸ் இருக்கே. ஆனால் வருடம் ஒன்னாம் தேதி போடும் நக்கல் படத்துக்கு ஆபாசமாக கமெண்ட் எழுதுவதே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கு. புலி தூங்கும் போது அதை நீ எழுப்பினாலும், நீ தூங்கும் போது உன்னை புலி எழுப்பினாலும் பிரச்சனை உனக்குத்தான் என்று எந்த ஆசாமியோ சொல்லியிக்கிறார்.

சாமி என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருகிறது, இந்தியாவில் ஆங்கிலேய புத்தாண்டு அன்று எல்லா ஹிந்து கோயில் சாமிக்களும் ஓவர்டைம் செய்துள்ளார்கள், திருவேற்காடு கருமாரி அம்மன், வடபழனி , மைலாப்பூர் முதல் பார்த்தசாரதி பெருமாள் வரை மக்கள் கூட்டம் அலை மோதியுள்ளார்கள். அதுவும் ட்விட்டரில் போகிறேன் தன் followersஸிடம் என்று சொல்லிவிட்டு ( உஷார் இந்த ட்விட்டர் கூட நாளை புத்தகமாக வரலாம் ) அங்கே கூட்டத்தை ஃபாலோ செய்ய போய்விட்டார்கள். இந்த வழக்கம் தமிழக கோயில்களுக்கு புதுசு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். சுமார் 20 வருடம் முன் வந்த வழக்கம் தான் இது, அதற்கு முன் கோயில்களில் ஆங்கில புத்தாண்டுக்கு இவ்வளவு கூட்டம் கிடையாது, அதற்காக அன்று சிறப்பாக நடை எல்லாம் திறக்க மாட்டார்கள்.
சிறப்பு பூஜை அலங்காரம் எல்லாம் கிடையாது, வேண்டும் என்றால் அர்ச்சனை செய்வார்கள். மார்கழி மாதம் என்பதால், சில கோவில்களை சீக்கிரம் மூடிவிடுவாகள். ஆனால் ஆங்கில புத்தாண்டுக்கு மட்டும் Exception கொண்டு வந்துவிட்டார்கள். அதே போல தான் தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலமும் 25-30 வருடம் முன் பிஜேபினார் வடக்கிலிருந்து கொண்டு வந்தது, அதற்கு முன் கலர் அடிக்காத களிமண் புள்ளையாரை வாங்கி கிணற்றில் போடுவது தான் தமிழர்களின் வழக்கம். காதலர் தினமான வேலண்டைன்ஸ் டே போன்ற தினங்கள் 20 வருடம் முன் யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் எப்படி உருவாகிறது? எப்படிப் பரவுகிறது? அது சரி. சாதாரண கொலைவெறி பரவும் போது இது எல்லாம் பரவியது ஒன்றும் வியப்பு இல்லை.

நேற்றும் இன்றும் நக்கீரன் பத்திரிக்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் அதிமுகவினர். கிட்டத்தட்ட பத்திரிக்கைக்கு தர்மம் நடந்துவிட்டது என்று சொல்லலாம். நக்கீரனுக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது. ஏன் என்றால் அவர்கள் நடத்துவது பத்திரிக்கை இல்லை. கலைஞர் விடுவாரா? உடனே அதை கண்டித்து அறிக்கை விட்டுவிட்டார். வழக்கமாக பழைய கதையை தேதியுடன் மேற்கோள் காட்டி அறிக்கைவிடுவார் ஆனால் பாவம் தினகரன் பத்திரிகை ஆபீஸ் கொளுத்தியது அதில் 3 உயிர் போனது பற்றி எல்லாம் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. வயதாவிட்டது இல்லையா ? இந்த மாதிரி சம்பவங்களை பாருக்கும் தமிழர்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பது தான் நல்லது. இப்ப இந்தியா ஆஸியிடன் அடிவாங்குவதை நாம் வேடிக்கை பார்க்கவில்லையா? அதே மாதிரி தான். இந்த மாதிரிப் பிரச்சனைக்கு எல்லாம் தீர்வே கிடையாது.

பா.ம.க.வைப் போல் எல்லாப் பிரச்னைகளுக்கும் போராடி, தீர்வு சொன்ன கட்சி வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் காமெடி கிங் ராமதாஸ். காவிரி, முல்லை பெரியாறு, கல்பாக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சொல்லியிருக்கார் என்று பார்க்க வேண்டும். அன்புமணி ராமதாஸை மினிஸ்டராக்க வேண்டும் என்று தீர்வு சொன்னாலும் சொல்லுவார். பாவம் அவருக்கு இப்ப அரசியலில் யாரும் நண்பர்கள் கிடையாது.

பொங்கலுக்கு வரும் படங்களில் 'நண்பர்களுடன்' சேர்ந்து பார்க்க தகுதியான படம் சமீரா ரெட்டியும், அமலாபாலும் நடித்துள்ள வேட்டை படம்தான். படத்துக்கு 'யூ' சர்ட்டிபிகேட் வேற கொடுத்துள்ளார்கள். இந்தப்படத்தில் ஆர்யாவும் - மாதவனையும் பார்த்து சர்டிபிகேட் கொடுத்திருப்பார்களோ?

இந்த சர்டிபிக்கேட் கூட பரவாயில்லை, ஆனால் கனிமொழிக்கு அவர் அம்மா கொடுத்திருக்கும் சர்டிபிக்கேட் பாருங்க - கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் கலைஞர் தொலைக்காட்சியின் வாசலைக்கூட அவர் மிதித்ததில்லை என்று சர்டிபிக்கேட் கொடுத்துள்ளார். எல்லோரும் கிளம்பி போங்கப்பா அவங்களே சொல்லிவிட்டாங்க.

மனசுக்குள் ஆயிரம் விஷயம் இருக்கும் ஆனால் எழுத வராது அது லவ்-லெட்டர்
மனசுக்குள் ஒண்ணுமே இருக்காது ஆனா எழுத வரும் அது செமஸ்டர் அப்பறம் முனி லெட்டர்
இப்படிக்கு
(3 பட விழாவை சன் டிவியில் பார்த்துக்கொண்டு இருக்கும்)
முனி

பலர் கேட்டுக்கொண்டதால் 2012 காலண்டர் படம் இல்லாமல், தேதி மட்டும் கீழே...எல்லா மதமும் நமக்கு சம்மதம் தான்!...

29 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

"அறியப்படாத அண்ணா ஹசாரே" என்ற டைட்டிலில் நான் எழுதின புக் கிழக்கு பதிப்பித்திருப்பதும் அது 75 ரூபாய் தானென்பதும் அது கிழக்கு ஸ்டாலில் F 007 ல் இருக்கிறதென்பதும் இட்லி வடைக்கு நன்றாகவே தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்

ஆனால் 75 ரூபாயே இட்லி வடைக்கு ஜாஸ்தியாக இருப்பது தான் அதிர்ச்சியாக இருக்கு

வாழ்க இட்லி
வாழ்க வடை

Anonymous said...

///"கூட்டம் ரொம்ப இல்லையே?" என்று மீடியா கேட்ட கேள்விக்கு "என்னிடம் பணம் இல்லை" என்று பதில் சொல்லுகிறார் ஹஸாரே. அப்படி என்றால் டில்லியில் கூடிய கூட்டம் பணம் கொடுத்து கூடிய கூட்டமா?////

:D :D :D

Anonymous said...

அப்படிச் செய்தால் தேர்தலுக்கு முன்பே மக்கள் தலை மீது துண்டைப் போட்ட மாதிரியும் இருக்கும்

:)))))))))))

Anonymous said...

கருப்பாக ஓடும் கூவம் நதிக்கரையில் கொசுக்கு அஞ்சாத ஏழைகள் இருக்கிறார்கள், ஆனால் கருப்பு பணம் நிறைய வைத்திருக்கும் ஏசி பங்கலாவில் இருப்பவர்கள் கொசுக்காக அஞ்சுகிறார்கள்///

:)))))))))))))

Anonymous said...

ஆனால் வருடம் ஒன்னாம் தேதி போடும் நக்கல் படத்துக்கு ஆபசமாக கமெண்ட் எழுதுவதே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கு. புலி தூங்கும் போது அதை நீ எழுப்பினாலும், நீ தூங்கும் போது உன்னை புலி எழிப்பினாலும் பிரச்சனை உனக்குத்தான் என்று எந்த ஆசாமியோ சொல்லியிக்கிறார்//

sooperu....

IdlyVadai said...

கௌத்தமன் சார் நன்றி. சரி செய்துவிட்டேன். 3 பாத்துக்கொண்டு எழுதினதால் இருக்கலாம் :-)

Siddharth said...

ஹேண்ட்சம் ஹீரோக்களை அறிமுகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் நடிகை சுஹாசினி 'என்ற காலி பெருங்காய டப்பா'

Siddharth said...

/*பலர் கேட்டுக்கொண்டதால் 2012 காலண்டர் படம் இல்லாமல், தேதி மட்டும் கீழே...எல்லா மதமும் நமக்கு சம்மதம் தான்!..*/
இட்லி இன்று இணையத்தில் வாசகர்களிடம் சரணடைந்தார். அவரது வெள்ளைக்கொடி, சாரி (படமில்லாத) வெள்ளை காலண்டர் பட்டொளி வீசி பறந்தது :)

Prakash said...

எதோ ஒரு உணவு பொருளை ஜெயா சாப்பிட்டார் என்று எழுதியதற்கே இந்த பொங்கு பொங்கும் நடுநிலை வியாதிகள், கனிமொழி மற்றும் ராசா குறித்து அருவருப்பாகவும், ஆபாச தொனியிலும் செய்திகளை கிசுகிசு பாணியில் தினமலம், ரிபோர்ட்டர் , ஜுவி போன்றவை செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டபோது, இந்த பத்திரிகைகளை கேள்வி கேட்காமல், நடுநிலை வியாதிகள் வாயில் என்ன சாப்பிட்டு கொண்டிருந்தனர் ????
அது என்ன பத்திரிகை சுதந்திரம், தனி நபர் தாக்குதல்.. கலைஞர் பத்தி தினமலர், தினமணி எழுதும் போதும்,சோ எழுதும்போதும் இனிக்குது... தனிநபர் தாக்குதலா தெரியல.. ஆனா ஜெயலலிதாவ பத்தி எழுதினா மட்டும் தனிப்பட்ட வாழ்கைய தாக்கி எழுத கூடாதுன்னு சொல்லுறது.. இந்த நடுநிலைமை தான் எனக்கு புரியல.

Prakash said...

கருணாநிதி தினகரன் கேசை சிபிஐ இடம் அப்போதே ஒப்படைத்தார்...இப்போது ஜெயா இருபதுபோல கண்டுகொள்ளாமல் இல்லை...

Anonymous said...

nadippu en thozhil endru sachin eppodhu sonnar endru theriya villai. Aanal criket veerarglileye migavum ozhukkamagavum , nermaiyaagavum ullavar , indhiya makkal elloralum nesikkappadubavar schin . idhai maraikavum mudiyathu marukkavum mudiyathu

Anonymous said...

## தனி நபர் தாக்குதல்.. கலைஞர் பத்தி தினமலர், தினமணி எழுதும் போதும்,சோ எழுதும்போதும் இனிக்குது##
துக்ளகில் ஒரு கட்டுரை காட்டுங்க கலைஞரை ஆபாசமா தாக்கி. நீங்க தி,மு.க வா இருக்கலாம்.அதுக்காக பொத்தாம் பொதுவா இந்தமாதிரி சொல்லக்கூடாது

Anonymous said...

"காளையன பாத்துபுட்டா
சல்லிக்கட்டு காளை எல்லாம்
துள்ளிக்கிட்டு ஓடுமடி
புல்லுகட்ட தேடிக்கிட்டு
புல்லுகட்ட தேடிக்கிட்டு......"

ஹி..ஹி...எங்கைய்யா போயிருந்தீரு இத்தன நாளா? பதரிட்டோம்ல...

Anonymous said...

**கருணாநிதி தினகரன் கேசை சிபிஐ இடம் அப்போதே ஒப்படைத்தார்**ஒப்படைச்சு என்ன ஆச்சு? மூணு பேரு கொலைக்குக் காரணமானவர் இன்னும் உலாத்திட்டுதானே இருக்கார்?

Anonymous said...

மஞ்சள் பத்திரிக்கைக்கு ஆதரவு தரும் மஞ்சள் துண்டாருக்கு ஆதரவு கருத்துக்கள் (உதாரணம் பிரகாஷ்) மஞ்சள் பெயிண்டில் வெளியிடலாமே?

Anonymous said...

well said......

இரா. சத்தியமூர்த்தி said...

அந்தாதி அற்புதம்.

இரா. சத்தியமூர்த்தி said...

சந்திரமௌளீஸ்வரன்,

ரூ.75 இட்லிவடைக்கு அதிகம்தான். ஒரு காலத்தில் 75 பைசாவுக்கு இட்லிவடை சாப்பிட்டிருக்கிறேன். ஒரே ஒருமுறை மட்டும் (சொன்னால் நம்பணும்) மறந்துபோய் பில்லுக்கு பணம் கட்டாமல் நடைகட்டியிருக்கிறேன். 1975 என்று ஞாபகம். இப்பொழுது வட்டியும் முதலும் கொடுக்கலாம் என்றால், திருவல்லிக்கேணி தேரடித்தெருவில் சீனிவாசா இன்ஸ்டியூட்டுக்கு அருகில் இருந்த ஹோட்டல் ஃப்ளாட்டாகி, ஃப்ளாட்டாகி நிற்கிறது.

Ramesh said...

ஆங்கில வருடம் பிறக்குதுன்னு சொல்லி நட்ட நாடு ராத்திரில ஆண்டவன டிஸ்டர்ப் பண்றது நம்ம ஊர்ல மட்டும்தானா? பக்தர்களுக்கு ஏன் இந்த கொலவெறி?

Roaming Raman said...

கண்ணுல படாத கௌதமன் கமென்ட்டுக்கு பதில் இருக்கு.. மத்ததுக்கெல்லாம் எங்கே! எங்கே! எங்கே!(ஹி.ஹி.. echo)
-ரோமிங் ராமன்.

Prabu said...

WHen did Cho denigrate karunanidhi personally in Thuglak? Useless and baseless comments as usual from people suffering from identity crisis.

Anonymous said...

BOOK FAIR UDATE ELLAM ENNACHI IDLYVADAI

Anonymous said...

யூ சர்டிபிகேட் ஆர்யாவையும் மாதவனையும் பார்த்து‍ கொடுத்திருப்பார்கள் என்ற உங்களின் செய்தி சிரிக்க வைத்து‍ சிந்திக்கவும் வைத்தது!
ஜெ.பாபு,
கோவை

jaisankar jaganathan said...

மாயாவதிக்கும் யானைக்கும் 6 வித்தியாசம் இருக்கு. என்ன அது?

ஜெகன்னாதன் said...

எல்லாம் ஓகே, முனி இன்று டைம்ஸ் பார்க்கவில்லையா? 2040-ல் தாடி வைத்த பெரியவர் பேட் செய்துகொண்டிருக்கிறார் - தன் 100-ஆவது சதத்துக்காக!

ஆமாம் ர.ர.ங்கள் திமிறுவது சரி, இந்த போலீஸ் நக்கீரன் அலுவலகத்திலும், ஆசிரியர் வீட்டிலும் என்னத்தை தேடினார்கள்? என்ன கிடைத்தது?

இப்ப சொல்லுங்க, ஜெ நான்வெஜ் சாப்பிடுவாரா / சாப்பிட்டிருக்கிறாரா, இல்லையா? (நான் பாகற்காய் சாப்பிடமாட்டேன், ஆனால் நான் சாப்பிட்டதாக யாராவது சொன்னால் கோபிக்க மாட்டேன்!)

-ஜெ.

Gomathi said...

\\ஆனால் வருடம் ஒன்னாம் தேதி போடும் நக்கல் படத்துக்கு ஆபாசமாக கமெண்ட் எழுதுவதே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கு. \\

தைரியம் இருந்தால் மற்ற மதத்தவர்களின் கடவுளை பற்றி படம் போட வேண்டாம். போட போகிறேன் என்று சொல்லி பாருங்கள். அப்பொழுது தெரியும். யார் கெட்டவர்கள் யார் நல்லவர்கள் என்று.

அது என்னது பாஜாக காரர்களை பகவத்கீதை படித்தாய என்று ஒரு கேள்வி. லூசு தனமாக இல்லை. ஒரு மதத்தின் புத்தகத்தை ஒரு நாடு அவமதிக்கிறது. அதை தட்டி கேட்பது ஒரு அரசியல் கட்சியின் கடமை. இது கூட தெரியாத அரை வேக்காடுகள் எல்லாம் பேச வந்துவிட்டார்கள்.

Gomathi said...

\\சதுர்த்தி ஊர்வலமும் 25-30 வருடம் முன் பிஜேபினார் வடக்கிலிருந்து கொண்டு வந்தது, அதற்கு முன் கலர் அடிக்காத களிமண் புள்ளையாரை வாங்கி கிணற்றில் போடுவது தான்\\

இதை விட அரைவேக்காட்டு தனம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. பொது இடத்தில் பிள்ளையாரை வழிபாடு செய்வது என்பது திலகர் சுதந்திர போராட்டதிற்காக கொண்டு வந்த முறை... அதுவும் தவிர இந்த பேப்பர் தொழில் மூலம் பெரிய பிள்ளையார் செய்யும் முறை சதுர்த்தில் வந்தது. சும்மா லூசு தனமாக எதாவது எழுத வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

Gomathi said...

\\ஆனால் ஆங்கில புத்தாண்டுக்கு மட்டும் Exception கொண்டு வந்துவிட்டார்கள்.\\

இதை செய்தது பணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்து சமய அறநிலை துறை. ஹிந்து அமைப்புகள் இதை எதிர்த்து தான் போராடி கொண்டு இருக்கின்றனர்.

Gomathi said...

\\பிஜேபிகாரர்கள் ஒழுங்காப் படித்து இருந்தாலே அவர்கள் நல்ல அரசியல்வாதிகள் ஆக சான்ஸ் இருக்கே. ஆனால் வருடம் ஒன்னாம் தேதி போடும் நக்கல் படத்துக்கு ஆபாசமாக கமெண்ட் எழுதுவதே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கு\\

கேன தனமான பதில். ஏன் ஹிந்து உணர்வு உள்ளவர்கள் காங்கிரஸ் கட்கியிலோ, அதிமுக, பாமாக, தேமுதிக கட்கியிலோ இருக்க மாட்டார்களா? இதில் இருந்தே தெரிகிறது எழுதுவது ஒரு அரை லூசு என்று