பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 19, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-1-2012

ஹாய் முனி!

பொங்கல் நல்லாக் கொண்டாடினாயா? புத்தகக் கண்காட்சியில் சரக்கு நிறையக் கிடைச்சதா? என்ன புஸ்தகம் படிச்ச இந்த நாலு நாள் லீவுல?

புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா கடை சம்பந்தமாக பத்ரி பதிவு எழுத, அங்கே ஒரே ரகளை. சாரி ஆர்ப்பாட்டம். அங்கேயும் பின்னூட்டதிலும் ஆர்ப்பாட்டம் செய்த 'தமிழர்கள்' எல்லாம் டேம் 999 என்ற படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனைப் ப்ராத்திக்கிறேன் என்று சொன்ன ஏ.ஆர்.ரஹமான் பற்றி ஒன்றும் பேசவே இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் பதிவில் பின்னூட்டதிலும் ஃபேஸ் புக்கில் திட்டிய தமிழர்களும் இப்ப தமிழ்நாட்டில் இல்லை, வெளிநாட்டில் இருக்கிறார்கள். அது சரி ரஹ்மான் இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேச என்ன நிர்ப்பந்தம்? யாருக்காவது தெரியுமா? இல்லை மக்களின் கவனத்தை ஈர்க்க பரபரப்புக்குப் பேசினாரா?

தில்லி பத்திரிகை விழா ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘வாசகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பத்திரிகைகள் பரபரப்புக்கு முக்கியத்துவம் தருவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று அக்கறையுடன் அளித்திருக்கும் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இந்த ஆலோசனையை முதலில் திக் விஜய் சிங் பேசும் அபத்தங்களிலிர்ந்து ஆரம்பிக்கலாம். ஆனால் அன்னாவைப் பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ். என்று சொன்ன கருத்து மட்டும் உண்மை என்று நம்பத்தோன்றுகிறது. இல்லை என்றால் ஏன் அவருக்கு காங்கிரஸ் மீது இந்த கொலைவெறி?

ஒய்திஸ் கொலை வெறிடி’ இந்த அளவுக்கு தனக்குப் பேர் சேர்க்கும் என்று தனுஷே நினைத்திருக்கமாட்டார். இப்போது இப்பாடலைக் கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தமது ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பத்துக்காக, தனுஷை பாட வைக்க இருக்கிறார். தனுஷுக்கு முன்பு பாட இருந்தவர் கமல்.

கமல் பற்றி ஒன்று சொன்னால் ரஜினி பற்றி ஒன்று சொல்லியே ஆக வேண்டும் என்ற மரபின் படி ரஜினியின் பஞ்ச்தந்திரம் என்ற காமெடி நிகழ்ச்சியை ராஜ் டிவியில் பார்க்க நேர்ந்தேன். ரஜினியின் எல்லா பஞ்ச் வசனத்துக்கும் தொழிலுக்கும் எப்படி பொருத்திக் கொள்ளலாம் என்று பிதற்றும் நிகழ்ச்சி. கல்லூரி மாணவர்களை வைத்துக்கொண்டு. சோ எழுதிய சாதல் இல்லையேல் காதல் என்ற நாடகத்தில் சண்டே மண்டே கவிதைக்கு விளக்கம் சொல்லுவது போல இருந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மாணவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது +2விற்கு பிறகு என்ன செய்யலாம் என்ற புத்தகத்தில் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என்று இலவச இணைப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

லேட்டஸ்ட் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு ஆண் என் மனைவிக்கு நல்லா சமைக்க தெரியணும், வீட்டு வேலை செய்யத் தெரியணும் என்று அடுக்கிகொண்டே போனார். சில வாரங்களுக்கு முன் துள்ளுவதோ இளமை படத்தின் நாயகி ஷெரீன் தன் பேட்டியில் என் நாயை நன்றாக கவனித்துக்கொள்பவர்தான் எனக்குக் கணவராக வர முடியும் நான் அவரிடம் வேற எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டுள்ளார். ஆக பெண்கள் வேலைக்காரியாகவும், ஆண்கள் Veterinary டாக்டராகவும் மாறினால் நாட்டில் பல பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். இவை எல்லாம் உண்மையே என்றாலும் மைக் முன்னாடி சொல்லலாமா ?

துக்ளக் ஆண்டுவிழாவில் சோ கூட தான் பேசினார் ஆனால் மைக் முன்னாடி சில விஷயங்களை அவர் பேசவே இல்லையே! விழாவில் ஹிந்து பத்திரிகையைப் போட்டு சாத்தினார் சோ. சில நாட்களுக்கு முன் தினத்தந்தியில் வந்த தலையங்கத்தை பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். அது கீழே......

இது நல்ல மாற்றம். ஆனால் பிஜேபியின் மாற்றம் கேவலமானது. பாபுசிங் குஷ்வாஹா என்ற ஊழல் அரசியல்வதியை தங்களுடன் சேர்த்துக்கொண்டு வெட்கம் இல்லாமல் பேட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். லோக்பால் மசோதா பற்றி வாய் கிழியப் பேசுகிறவர்கள், அத்வானி ரத டூர் எல்லாம் டுபாக்கூர் ஆகும் வகையில் இதைச் செய்துள்ளார்கள். ஊழல் புகாரில் சிக்கியவரை ஏன் சேர்த்தார்கள்? இதை பற்றி சோ ஏன் துக்ளக் நிகழ்ச்சியில் வாயே திறக்கவில்லை? எடியூரப்பா கூடத் தப்பித்தார். பாஜக இந்த மாதிரி 'கேடி'களை அழைத்தால் 'மோடி'வித்தைகள் பலிக்காது என்று யாராவது அவர்களுக்குப் புரியவைத்தால் நல்லது. சோ இவர்களை பற்றி பேசாதது மறதி என்று நினைக்கிறேன்.

மறதியினால் ஏற்படும் விபத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்த நியூஸ் கொஞ்சம் வித்தியாசம். திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கூட்டுக்கு செல்ல வேண்டிய விமானத்தைத் தவறுதலாக கொச்சியில் இறக்கிவிட்டுள்ளார் ஒரு பைலட். இந்திய கிரிக்கெட் அணியை ஜிம்பாப்வேவிற்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் இறக்கிவிட்ட மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

ஆஸ்திரேலியாவுக்கு நல்ல காலம் ஆரம்பம் ஆகி விட்டது போல, சனி பெயர்ந்தவுடன். இந்தியக் கிரிக்கெட் அணியை நிமிர விடாமல் போட்டுக் கும்முகிறார்கள். சச்சினோ, முன்னொரு காலத்தில் கபில்தேவ் அந்த 434-க்கு நாக்குத் தள்ளியதைப் போல, நூறாவது நூறுக்கு முக்குகிறார். முரளிதரன் மாதிரி அடுத்த மேட்ச்தான் கடைசி என்று தைரியமாச் சொல்லி, முரளி 800 விக்கெட்டுகள் எடுத்ததைப் போல, நூறடிச்சுச் சாதனை செய்தால்தான் இது வரை செய்ததெல்லாம் சாதனை என்று சச்சின் ரசிகர்களே குமுறுவதைக் கேட்க முடிகிறது. இது இப்டி இருக்க, இன்று சீனு மாமாவோ கொஞ்சம் லக் இருந்தா இன்றைய இந்திய அணி உலகின் எந்த அணியையும் தோற்கடிக்கும் என்று காமெடியாப் பேசி இருக்காரு. ஒருவேளை பதினெட்டு டிகிரி மெட்ராஸ் குளிரில் உளரறாரோ என்னவோ.

குளிர் காலம் வந்தவுடன், டெல்லியில் அதிக குளிரால் பலர் இறந்து போனார்கள் என்று நியூஸ் போடுவது போல, ஜல்லிக்கட்டுப் போட்டி வேண்டுமா வேண்டாமா என்ற வழக்கு டிசம்பர்-ஜனவரியில் கோர்ட்டுக்கு வந்து ஜல்லிக்கட்டு முடிந்த பின் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் அடுத்த ஆண்டு கோர்ட்டுக்கு வருவது ஒரு சடங்காகிவிட்டது. இந்த வருஷம் போட்டி ஒருவழியா நடத்தினாங்க, அதை தமிழ்க் குடிதாங்கி டிவில ரொம்ப சந்தோஷமாக் காமிச்சாங்க. ஆங்கில சேனல் ஒன்றில் குஷ்பு, ஹேமாமாலனி இதை பற்றி விவாதித்தார்கள். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வரும் குஷ்பு கலைஞரிடம் நல்ல டியூஷன் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரே வழ வழ கொழ கொழ.. பாவம் ஒரே கேஸுக்கு பல கோர்ட்டுக்கு அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்.
( வீடியோ பார்க்க இங்கே செல்லவும் )

அடுத்த நூடுல்ஸ் செய்தி சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொடுத்த பேட்டி தான். இதே மாதிரி எந்த காங்கிரஸ் முதலமைச்சரும் எம்.எஃப்.ஹூசேனுக்கு பேட்டி கொடுத்ததாக ஞாபகம் இல்லை. சல்மான் ருஷ்டியின் மீது ஷூ வீசினால் அவருக்கு பரிசு வழங்கப்படும் என ஒரு அமைப்பு அறிவித்துள்ளது. இலக்கிய விழா என்றால் இது கூட இல்லாமல் எப்படி ?வடக்கிலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வரலாம் சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது பற்றி உயிர்மையில் வந்த தலையங்கம். இரண்டு விதமான வயிற்றெரிச்சல் நம் தமிழ் இலக்கியவட்டதில் இருக்கிறது என்று தெரிகிறது. ஒன்று இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருதை எப்படி ஒருவருக்கு கொடுக்கலாம். இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. இப்ப சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை, ஆனால் தனுஷுக்கு கிடைக்கிறது உடனே சிவாஜிக்குக் கோபம் வரலாமா? ஆனால் இலக்கிய வட்டத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிக்கு போன்ற ஓவர் ஆக்டிங் நடிகர்களுக்குக் கோபம் வருகிறது. இலக்கிய பஜனோஸ்தவம் நடத்தும் ஒரு பழம் பெரும் தமிழ் இலக்கிய நடிகர் இந்த புத்தகம் ஆயிரம் பக்க அபத்தம் என்று விமர்சனம் எழுதியது நினைவிருக்கும். விளாசுவதற்காகவே முழு விஜய் படத்தையும் இட்லிவடை முதல் நாள் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவதை போல எழுதியுள்ளார். முருகனிடம் சொல்லி இவருக்கு அரை டஜன் டைஜின் கொடுக்க சொல்லணும். அவரிடம்தான் நிறைய ஸ்டாக் இருக்கும். கஷ்ட காலம்!

கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, 'எனக்கு எல்லாமே என் உடன்பிறவா தோழிதான்’ என்று கூறிவிட்டு வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல என்று கலைஞர் ஜெ-சசிகலா பற்றி கூறியிருக்கார். அவருக்கு இந்த வயசிலும் `லொள்ளு ஜாஸ்தி.

நடிகர் மன்சூர் அலிகான், `லொள்ளு தாதா பராக் பராக்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சும்மா இல்லாமல் மன்சூர் அலிகான், எருமை மாடு மீது ஊர்வலமாக வருவதுபோல் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூட்டத்தைப் பார்த்து எருமை மாடு மிரண்டு ஓடியதால், கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டார். லொள்ளு பேசி பின்பு தன் கையையும் மற்றவர்கள் 'கை'யும் உடைத்துக்கொள்வது இவர்களுக்கு வாடிக்கை தானே!


வாடிக்கையாக போகும் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் "சார் நல்ல தமிழ் புத்தகத்துக்கும் டைனோசருக்கும் என்ன ஒற்றுமை?" என்று கேள்வி கேட்டார். நான் தெரியாது என்று முழித்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் "ரெண்டுமே இப்போ இல்லை, பல வருஷத்துக்கு முன்னாடியே அழிஞ்சாச்சு" என்றார் வாஸ்துவம் தானே !


இப்படிக்கு,
இட்லிவடை

கடைசியாக ஒரு கேள்வி: இளையராஜா நிகழ்ச்சியில் மனோ ஏன் பாடவில்லை ?

12 Comments:

Anonymous said...

தமிழகத்தின் ஆட்சிமொழிகள் வருமாறு :

ஆங்கிலம்
ஆர்யம் கலந்த மொழிகள்
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
மெட்ராஸ் பாஷை

அதிகாரி said...

கண்டதையும் புதிய தலைமை செயலகத்துக்கு கொண்டு போவதற்கு, இந்த துறைகளை எழிலகத்திலிருந்து அந்த புதிய கட்டடத்துக்கு கொண்டு போகலாம். வசதியான இடமும்கூட்.

umesh said...

Rahman was asked "What do you think about Dam 999 oscar nominations?" . Since Rahman happens to be an Indian and Dam 999 happens to be an Indian film,he told that he prays for it to get an Oscar as an Indian composer will be getting a global award.

Rahman did not know abt our Kerala/TN troubles . He later tweeted also about it. He asked sorry also if he had hurt Tamil sentiments.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=528456&SectionID=141&MainSectionID=141&SEO&Title

Anonymous said...

you asked about a.r.rehman, but you forgot to ask why ilayaraja did the concert for jaya tv under the sponsorship of malabar golds.
A week before the concert he said that he will try to avoid the concert.
Thanks idlyvadai for your nadunilamai.

kg gouthaman said...

ஏ ஆர் ரஹ்மான் அநேகமாக டேம்999 படத்துக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று சொல்லி இருப்பார். தேசிய விருது படம் என்றால் தியேட்டரில் பார்க்க ஆட்களே இருக்க மாட்டார்கள். எந்த தியேட்டரிலாவது தேசிய விருது பெற்ற படம் போடுகிறார்கள் என்றால் - ரசிகர்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓடிவிடுவார்களே!

Anonymous said...

//கடைசியாக ஒரு கேள்வி: இளையராஜா நிகழ்ச்சியில் மனோ ஏன் பாடவில்லை ?//

அதுதான் எனக்கும் புரியவில்லை. ராஜாவால் முன்னுக்கு வந்தவர் மனோ. அவரைக் காணோம். இன்னும் ராஜாவின் சாதனைப் பாடல்களான நிற்பதுவே நடப்பதுவே, அந்தி மழை, சிந்து பைரவி போன்ற படப் பாடல்களையும் பாடவில்லை. மனோ, வைரமுத்து எல்லாம் ஒதுக்கப்பட்டது ஏனோ?

D. Chandramouli said...

I remember that Cho, during last year's Thuglak anniversary, said that Eddiyurappa was an embarrassment to BJP, meaning that BJP should ask Eddy to step down from CM-ship. That has now materialized by some way or the other. So, Cho must have felt not to raise this topic again this year.

ஜெகன்னாதன் said...

முனிக்கு நீங்கள் எழுதிய கடிதம் / விஷயங்கள் திக்விஜய் பேச்சைப் போல,ரஜினி பன்ச் பற்றிய நிகழ்ச்சி போல, சச்சின் தடவல் போல, குஷ்பு/ஹேமா வழ,வழ, கொழ, கொழ போல, மன்சூர் அலி கான் படம் போல, உயிர்மை வயிற்றுக் கடுப்பு போல - ஒரே சவ சவ, கொழ கொழ என்று இருந்தது. கடந்த 3, 4 பதிவுகளில் இருந்த ஸ்வாரசியம் போய் விட்டது. சீனியர் கிரிக்கெட்டாளர்களைப் போல் உங்களுக்கும் கொஞ்ஜம் ரெஸ்ட் அவசியம். - ஜெ.

ரஞ்சன் said...

//மனோ ஏன் பாடவில்லை ?// ஷைலஜா ஏன் எப்போதும் பாடுவதில்லை என்று தெரியவில்லை.

Anonymous said...

சு வெங்கடேசன் சாகித்ய அகாதெமி விருது பற்றி மனுஷ்ய புத்திரன் சொல்வதைப்பார்த்தால் ஏஆர் ரெஹ்மான் கொடுப்பதைக்காட்டிலும் என் பக்கத்து வீட்டில் இரண்டு 60 வயது அல்சேஷன் மனிதர்களுக்கு தான்ஆஸ்கார் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது .பாவம் என் பக்கத்து வீடு இரண்டு அல்சேஷன் மனிதர்களுக்கு 'உயிர்மை' போன்ற பத்திரிகை இல்லை . ஜெமொ , எஸ்ரா , சாரு , மனுஷியப்புத்திரன் போன்றவர்களில் படைப்புகளை அவர்களும் அவர்கள் கூட்டாளிகள் மட்டும் அல்ல எல்லோரும் 'க்லாசிக்' என்று சொல்ல வேண்டும் . எஸ்ரா எழுதின காந்தி பற்றிய கட்டுரையில் பல அபத்தங்கள் உள்ளதாக கடந்த வாரம் தினமணி இல் ஒரு காந்தியவாதி எழுதிருந்தார் . 200 வார்த்தை உள்ள கட்டுரையில் கூட 'ஆபபத்தங்களை' 6ஆம் வகுப்பு மாணவர்களே தங்கள் கால் பரிட்சையில் எழுதுவர் . இத்தகைய அப்பதங்களை சரி செய்யல்மால் எஸ்ரா போன்றவர்கள் ' 1000 பக்கம் அபத்தங்கள் ' என்று எழுதுவதும் , லாடக்கில் உள்ள டீ கடையில் வாழைக்காய் பஜ்ஜி சப்பிட்டடேன் என்று புளகாங்கிதம் அடைவதும் , அன்னா ஏன் தற்கொலை செய்தால் ? உண்ணாவிரதம் ஏன் இருக்கவில்லை என்று இவர்களாகவே 'பேருறை' ( நாங்கள் சத்தியமாக அப்படி சொல்லவில்லை) ஆற்றினால்
நல்ல படைப்பாளிகளுக்கு மட்டுமே விருது போகும் எஸ்ராவுக்கு கெடைக்காது . இவர்களை விட்டு விடலாம் . ஜெமொ போதை வஸ்து , சாரு போதை வஸ்து , எஸ்ரா போதை வஸ்து போன்ற வஸ்துவை உடம்பில் ஏற்றி இவர்கள் எழுதும் எல்லாவற்றிற்கும் ' ஆ ஆஹா !! ஆனந்தம் !! க்லாசிக்!! என்று கூப்பாடு போடும் ஜந்துக்கள் இருக்கிறார்காளே அவர்களின் விலாசங்களை கண்டுபிடித்து அந்த ஜந்துக்கள் பற்றி அவர்களின் பெற்றோர் , மனைவி , மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று வெளியிட்டால் பல லட்சணம் வெளியே வரும் .. மனுஷியப்புத்திரன் , எஸ்ரா போன்றோருக்கு ஒரு வேண்டுகோள் .உங்களிடம் நல்ல திறமை இருக்கிறது . ஆதித்யா , சிரிப்பொலி போட்டியாக ஒரு காமெடீ சேனலை விரைவில் ஆரம்பிகவும் .

Anonymous said...

கிழக்கின் புத்தகத்தை விமர்சித்து இட்லிவடையில் எழுதப்படுவது எதைக்
குறிக்கிறது.

Anonymous said...

>>>கடைசியாக ஒரு கேள்வி: இளையராஜா நிகழ்ச்சியில் மனோ ஏன் பாடவில்லை ?>>>>

கங்கை அமரன், அவரது புதல்வர்களையும் காணவில்லையே?