பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 19, 2011

சென்னை திரைப்பட விழா - A Separation

அந்த தாத்தாவிற்கு எப்போதும் வீட்டில் ஒரு மரியாதை உண்டு. டைட்டில் போட்டு முடிக்கும் போது அவர் இறந்து விட குடும்பத்தில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அப்போது இவருக்கு துணையாக ஒரு பெண்மணி தோழியாக படத்தில் நுழைகிறார்.


இந்த இடத்தில் இசையோடு வரும் "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..." என்ற பாட்டு தாளம் போட வைக்கிறது.

கொலைவெறியுடன் அடித்துக் கொண்ட குடும்பமும் கொஞ்ச நாளில் முன்பு போல ஒன்று சேர, குடும்பத்தில் தோழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறர் ஹீரோயின். இதனால் குடும்பத்தில் உள்ள சின்ன பசங்க கடும் கோபத்தில் இருக்க அதை எல்லாம் கவலை படாமல் ஹீரோயின் தோழியுடன் இருக்க பலர் விமர்சிக்கவும், கிண்டலுக்கும் பயப்படாமல் தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டுகிறார். கோவில் கோர்ட் குளம் என்று எங்கே போனாலும் சின்ன பசங்களை விட்டுவிட்டு தோழியுடனேயே போகிறார்.

ஒரு காட்சியில் பிடிவாதத்தைக் காட்டுவதற்கு தோழியின் உறவினரை தன்னுடைய பிள்ளையாகப் பாவித்துத் தத்து எடுக்கிறார். இந்த இடத்தில் இந்த தீடீர் திருப்பம் யாரும் எதிர்பார்க்காத போது வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்த திருமணத்தை காட்டியவிதம் பலரை ஆச்சரியப்பட வைக்கிறது. ஷங்கர் படம் போல பிரமாண்டமாக இந்த திருமணத்தை எடுத்துள்ளார். திருமணத்துக்கு போடப்பட்டிருக்கும் செட் பிரமாதமாக இருக்கிறது - ஆர்ட் டைரக்டருக்கு சபாஷ்!.
விதவிதமான நகை, செருப்பு என்று கம்பியூட்டர் கிராபிக்ஸில் காண்பித்துள்ளார்கள்.

சில வருடங்களுக்குப் பிறகு சின்ன சண்டை வர சில பல சின்னப் பசங்க எல்லாம் பக்கத்துவீட்டு மஞ்சள் துண்டு தாத்தாவை சப்போர்ட் செய்ய குடும்ப சொத்து அவருக்கு போகிறது. பிறகு அந்த வீடு அலங்கோலமாகிறது. வீட்டை காண்பித்துவிட்டு அப்படியே கூவத்தை காட்டியது பல வசனங்களுக்குச் சமானம்.

சில மாதங்களில் தாத்தாவின் பசங்கள் வீட்டை மூன்றாக பிரிக்க, சின்ன பசங்க விளையாடும் இடம், அவர்களுடைய பொம்மை செல்போன் ஆகியவற்றை இவர்கள் அபகரிக்க, மீண்டும் சண்டை வர குடும்பத்தில் ஹீரோயின் தலைவர் ஆகிறார். சுபம் என்று போடும் இடத்தில் இயக்குனர் யாரும் எதிர்ப்பாக்காத திருப்பதை வைக்கிறார். ஹீரோயின் தோழியை வீட்டை விட்டு விரட்டுகிறார்

குணசித்திர நடிகராக வரும் நம்பர் ஓபி சில காட்சியிலே வந்தாலும் தன் பார்த்திரம் உணர்ந்து அடக்கமாக நன்றாக நடித்துள்ளார். இவருக்கு தமிழ் திரைப்பட உலகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு. டென்ஷனான வில்லன் போல எப்போதும் நட நட என்று நடக்கும் ராஜனுக்கு சரியான ரோல் கொடுக்காமல் படத்தில் அவரை வீண் செய்துள்ளார்கள்.

வீடியோ கடை வைத்திருப்பது போல ஹீரோயினுடைய தோழியை காண்பித்தது லாஜிக்கில் பெரிய ஓட்டை. இந்த காலத்தில் எல்லோரும் டவுன்லேட் செய்து தான் படம் பார்க்கிறார்கள், அப்படி இருக்க வீடியோ கடை எல்லாம் வைத்திருப்பது என்ன லாஜிக் ?

காமெடி டிராக் என்று தனியாக படத்தில் இல்லை என்றாலும், அடிக்கடி எல்லோரும் எங்கோ இருக்கும் ஒரு சிங்கிற்கு தந்தியும், கடிதமும் எழுதுவது நல்ல தமாஷ்! படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது.

பாலிவுட் கிழவர் 6 விக்கெட் எடுத்தால் கோலிவுட் அம்மா 12 விக்கெட்டை எடுக்க முடியும் என்ற வசனத்துக்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல் !


இட்லிவடை மார்க் - (-)/(:>)
A separation - விரைவில் கூடல் :-)

26 Comments:

jaisankar jaganathan said...

//A separation - விரைவில் கூடல் :-)
//
அங்க நிக்குறாரு இட்லிவடை.

Sh... said...

Enjoyed the review. And I expect the thing highlighted in yellow to happen very very soon.

Anonymous said...

Tamilnadu has seen separations and unifications...IN DMK Maran brothers and the latest is AIDMK.


Super Comedy and no thrill.


Murali

Anonymous said...

/*தாத்தாவின் பசங்கள் வீட்டை மூன்றாக பிரிக்க, சின்ன பசங்க விளையாடும் இடம், அவர்களுடைய பொம்மை செல்போன் ஆகியவற்றை இவர்கள் அபகரிக்க.....*/

Classic! Idli Vadai you Rock!

Anonymous said...

எந்த தியேட்டரில இந்த படம் ஓடுது ?
தமிழ்நாடு முழுக்கவா ?

மோகன் குமார் said...

A separation - விரைவில் கூடல் :-)

அது !!!!

kothandapani said...

இது தான் சனி பெயர்ச்சி என்பதோ.............

Anonymous said...

என்னாது‍ விரைவில் கூடலா, ஙொய்யால அப்ப இது‍ வரைக்கும் நடந்தது‍ எல்லாம் உலவாக்காட்டிக்கா?

பாபு
கோவை

ConverZ stupidity said...

இந்த படம் வெள்ளி விழ, வைர விழ தாண்டி ஓடுமா இல்ல இதயம் இனிச்சு கண்கள் பணிக்கிரதொட சுபம் போடுவாங்களா...

SARAVANA KUMAR.M said...

A different view and a good one.....
my site:
tipsfortechviewers.blogspot.com

Hemamohan said...

காமெடி டிராக் என்று தனியாக படத்தில் இல்லை என்றாலும், அடிக்கடி எல்லோரும் எங்கோ இருக்கும் ஒரு சிங்கிற்கு தந்தியும், கடிதமும் எழுதுவது நல்ல தமாஷ்! படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது.


superb !

நிலவன்பன் said...

///படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது. - இந்த காட்சியில் நானும் குலுங்கி குலுங்கி சிரித்தேன்!

Arun Chandrasekaran said...

இட்லியா கொக்கா..

புரட்சித்தலைவன் said...

சசி'ப் பெயர்ச்சி: எஸ்வி.சேகர் கருத்து

First Published : 20 Dec 2011 12:29:48 PM IST

சென்னை, டிச.20: அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதை எஸ்வி.சேகர் வரவேற்றுள்ளார்.
சசிகலா நீக்கம் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், ஜெயலலிதா அவர்கள் உற்ற தோழி, நெருங்கிய தோழி என்ற பதவியை எடுக்கவில்லை. உற்ற தோழியாக இருக்கலாம். நெருங்கிய தோழியாக இருக்கலாம். அவர்கள் அறிவித்திருப்பது என்னவென்றால், அதிமுகவில் இருக்கக் கூடிய பதவியை பறித்திருக்கிறார்கள். இல்லத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற்றப்படவில்லை.
இல்லத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பே வெளியே போய்விட்டதாக சொல்லுகிறார்கள். அதைப்பற்றி நாம் பேசத் தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரை அதிமுகவில் ஒரு அதிகார மையமாக இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இது என்றைக்கோ நடக்கும் என்று பலபேர் எதிர்பார்த்தார்கள். பலபேர் சாபமிட்டார்கள். பலபேர் இதுநடக்காதா என ஏங்கினார்கள். அது இன்று நடந்திருக்கிறது. நாளைக்கு சனி பெயர்ச்சி. அது சசி பெயர்ச்சியாகிவிட்டது எனக் குறிப்பிட்டார்.

Anonymous said...

a real belly laugh

R Sathyamurthy said...

ஆத்தா நான் (கன்)ஃப்யூஸாட்டேன்!

பி.கு.: அம்மாவை ஆத்தா என்றும் அழைக்கலாம்தானே?

R.Gopi said...

உட்டாலங்கடி கிரிகிரி.... கோபா....புரத்து வடகறி.....

இதயம் இனிக்க... கண்கள் பனிக்க....

படுக்காளி said...

பட்டைய கிளப்பிட்டீங்க...

இத.... இத..... இதத்தான் இட்லிவடைக்கிட்ட எதிர்ப்பார்த்தோம்....

அடேயப்பா... மிளகாப்பொடி, காரச்சட்னி, சாம்பார்ன்னு ரவுண்டு கட்டி விருந்து படைச்சிட்டீங்க....

இன்னும் கொஞ்சம் கூட பெரிசா எழுதியிருக்கலாம்.... நல்ல ஐடியா...

Anonymous said...

அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, ஜெயலலிதாவிடம் சசிகலா உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சசிகலாவின் உறவினர்கள், வெளியில் பணம் பெற்றுக் கொண்டு, அரசில் முக்கிய காரியங்களைச் சாதிப்பது, வழக்கமான நடைமுறையாக இருந்தது. இந்த முறை, முக்கிய பொறுப்புகள் அனைத்திலும், தங்கள் ஆதரவாளர்களை உட்கார வைத்து, ஜெயலலிதாவின் தயவு இல்லாமலேயே, இவர்கள் நேரடியாக உத்தரவு பிறப்பித்து, காரியங்களை சாதித்தது தான், அவர்களது ஆட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளது. பணம் "பத்தும்' செய்யும்: குறிப்பாக, கோவையில் இருந்து ஆட்டிப் படைத்த ராவணனைப் பிடித்தால், என்ன காரியம் வேண்டுமானாலும் முடிக்கலாம் என்ற, "இமேஜ்' உருவானது. அதற்கேற்ப, "பல லட்சங்களைப்' பெற்றுக் கொண்டு, எந்தப் பதவிக்கும் ஆட்களை நியமிப்பது, மாறுதல் அளிப்பது என, அனைத்துக் காரியங்களும் அங்கிருந்து நடந்துள்ளன. பணம் கொடுத்தால் போதும்,காரியம் நடந்துவிடும். மணல், டெண்டர் உட்பட அனைத்திலும், அவரது ஆதிக்கம் இருந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில், 65 பாயின்ட்களாக இருந்த டெண்டர் மதிப்புகள், 125 பாயின்ட்களாக உயர்த்தப்பட்டன.அதற்கு, பெரும் தொகை கைமாறியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு, மணல் கடத்த, அனுமதி பெற்றுத் தந்துள்ளனர். மணல் மூலம், மாதம் கோடிக்கணக்கில், தொடர் வருவாயும் பெற்றதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. டீலா நோ டீலா: எதிர்க்கட்சியைச் சேர்ந்த, "டிவி'யின் கேபிள் நெட்வொர்க்கிற்கு, தொந்தரவு கொடுக்காமல் இருக்க, பல கோடி ரூபாய் கைமாறியதாகவும், அந்த "டிவி'யைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்தபோது, அவர்கள் வழக்கில் இருந்து வெளிவரவும், வழக்கை அப்படியே கிடப்பில் போடவும், பேரம் பேசப்பட்டு, பெரும் தொகை கைமாறியதாக கூறப்படுகிறது. மாவட்ட அரசு நிர்வாகங்களில், முக்கிய பொறுப்புகளில் ஆட்களை நியமிக்க, கட்சிப் பொறுப்புகளில் ஆட்களை நியமிக்க என, 50 லட்சம், 20 லட்ச ரூபாய் என, தொகைகள் கைமாறி உள்ளன. இதுவரை சசிகலா
உறவினர்கள் சம்பாதித்த தொகை, பல ஆயிரம் கோடி ரூபாய் என்று கட்சியினர் கணிக்கின்றனர்

Anonymous said...

காசிக்குத்தான் போனாயோ சும்மா கிடந்து
ஊசித்தான் போனாயோ - எனதருமை இட்லியே
பேசித்தான் தீர்க்கலாம் பிணக்குகளை உடனே
வாசிக்க ஏதேனும் எழுது!

வெண்பா said...

//காசிக்குத்தான் போனாயோ சும்மா கிடந்து
ஊசித்தான் போனாயோ - எனதருமை இட்லியே
பேசித்தான் தீர்க்கலாம் பிணக்குகளை உடனே
வாசிக்க ஏதேனும் எழுது //

எங்கோ தளை தட்டுகிறதே.. வெண்பா போல் எழுத முயற்சிக்கப்பட்ட இந்த கவிதை(?)யில்..!

கடைசி இரண்டு வரிகள் நன்று..!

இணையதளம் said...

வெட்டிக் கதையடித்து வீணாக்கி நேரத்தை
திட்டித் தீர்த்திடவே தளம் அமைப்பார் – இட்லிவடை
எனும்பெயரில் இங்கே இணையதளம் அமைத்தார்
கடும்வியாதி இதுவென்றே கொள்.

கவிஞர் காத்துவாயன் said...

சாதிப்பற்றுதலால் ஜெயலலிதா அடிவருடும்
வியாதி ஊடகத்தால் விளைவதென்ன-பேதமுற்று
இட்லிவடை எழுதும் கட்டுரைகள் ஊசிப்போன
சட்னிக்கும் சாம்பாருக்கும் நேர்..!

சூர்ப்பணகை JJ said...

கவிஞர் காத்துவாயன்


சூர்ப்பணகை போலே சுடுசிந்தை தனைக்கொண்டு
ஆர்ப்பரிப்பது ஏனின்று இட்லிவடை -பார்ப்பனாராய்
பிறந்ததனால் ஜெதவறு செய்யமாட்டார் என்றெழுதும்
விதந்தன்னை உடனாக மாற்று..

Anonymous said...

"தளை"யில் தட்டியதற்க்கு நன்றி. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சரி செய்திருக்கலாம்தான். அந்த நேரத்தில் மனதில் வருவதை எழுதிவிடுவது வழக்கம்...இட்லிவடையர்களை மனம் கோணாமல் கேலி செய்வதே அடிப்படை நோக்கம்...

ராமசரவணன் said...

காத்துவாயனின் வெண்பாக்கள் சூப்பர். இவர் குமுதத்தில் அவ்வப்போது எழுதுபவர் தானே.! எது கைக்கு வந்தாலும் அதுவே எதுகை என்றில்லாமல் நல்ல சொல்லாக்கம்..!
உண்மை சிலருக்கு வலிக்கத்தான் செய்யும். கருணாவைப்பற்றியும் அவர் குடும்பத்தைத்தாறுமாறாக எழுதும்போது மட்டும் இனிக்கிறதோ ?

காத்துவாயரே, கடுமை குறைத்து கவிதை தொடரட்டும்.

ராமசரவணன்