பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 26, 2011

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் இளையராஜா

இந்த வாரம் நடைபெற இருந்த இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. மலபார் கோல்டு ஹவுஸ் என்ற கேரளா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்வதால் சர்ச்சை. சர்ச்சை செய்பவர்கள் பெரியார் திகவினர்.
தமிழர் என்ற உணர்வு தேவைதான். ஆனால் அதுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்தின் முதல் வார்த்தை என்ன என்று ஆப்ஷன் A,B,C,D என்று எஸ்.எம்.எஸ் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுவது நல்லது.


இந்த சர்ச்சைக்கு இளையராஜாவின் பதில் "இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லியுள்ளார். அவரின் மனசாட்சி இதை நிச்சயம் சொல்லியிருக்காது.

இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லுவார்கள், ஆனால் முல்லை பெரியாறு பிரச்சனையினால் இசைக்கு மொழி உண்டு என்று இளையராஜாவே நிருபித்துவிட்டார்.

நாளைக்கே கன்னடர்களிடம் ஏதாவது பிரச்சனை என்றால் பெரியார் திகவினர் என்ன செய்வார்கள் ? பெரியார் கன்னடர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா ?


அச்சமில்லை அச்சமில்லை என்ற தமிழ் கவிஞர் பாரதியார் "கேரள நாட்டிளம் பெண்களுடனே" என்று பாடினார். இன்று கேரளாவை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் இருக்கிறார்கள் என்று பலர் நிருபிக்கிறார்கள்.


பிகு: இளையராஜாவை பற்றி சில வரிகள் இங்கே எடுத்திருக்கிறேன். அவரை விமர்சிக்கும் எண்ணத்தில் பதிவு எழுதவில்லை - இட்லிவடை

30 Comments:

வெண்பூ said...

//
தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் இருக்கிறார்கள் என்று இளையராஜா போல இருப்பவர்கள் நிருபிக்கிறார்கள்.
//

இந்த வார்த்தைகளுக்கு கடும் கண்டனங்கள்... இதே தமிழகத்தைச் சேர்ந்த எந்த நிறுவனமாவது ஸ்பான்ஸர் செய்து கேரளாவில் நிகழ்ச்சி நடத்திட முடியுமா என்று யோசியுங்க, அப்புறம் இளையராஜாவை திட்டலாம்.

உங்களுக்கு இளையராஜா போன்றவர்களை கீழ்த்தரப்படுத்த இது ஒரு சாக்கு அவ்வளவே. அசிங்கமாக இருக்கிறது.. :(

IdlyVadai said...

இளையராஜா தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தம் இல்லை. எல்லா இசை ரசிகர்களுக்கும் சொந்தம். கேரளா கவர்ச்சி பெண்கள் நடிக்கும் போது முண்டி அடித்துக்கொண்டு தன்மான தமிழர்கள் ஓடும் போது இந்த உணர்வு எங்கே போனது ? அவர்கள் அப்படி செய்கிறார்கள் நாமும் அப்படி செய்வோம் என்பது பாகிஸ்தானுடன் பேசும் போது சொல்லுங்கள், இந்தியர்களுடன் வேண்டாம்.

வெண்பூ said...

ரைட்டு பாஸ்... அவர் நிகழ்ச்சியை நடத்துவது வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதன் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்க முடியும். அதற்காகவே அவரின் ஆண்மையை குறை சொல்கிற அளவுக்கு செல்வது கேவலமாக இருக்கிறது.

அது என்ன பாகிஸ்தான் கூட மட்டும் அப்படி செய்யலாம், கேரளாகூட பண்ணக்கூடாதா?

நீ என்ன ஆயுதம் எடுக்கிறாய் என்பதை உன் எதிரிகள்தான் முடிவெடுக்கிறார்கள். இத்தனை நாளா மூடிட்டு தானே எல்லாரும் இருந்தாங்க, என்னமோ டேம் நாளைக்கே உடைஞ்சி கேரளாவே அழிஞ்சிடும்னு ஓவர் சீன் போட்டுட்டு இருக்குறவனுங்களுக்கு எதிரா இந்த மாதிரியான ஒத்துழையாமை போராட்டாம் கூட நடத்தக்கூடாதுன்னா எப்படி?

Anonymous said...

Periyar is not Kannadiga. He was a Naicker, Telugu was his ancestral language.

குடுகுடுப்பை said...

இந்திய தேசியத்தை தமிழர்கள் எதிர்க்கும் பகிரங்கமாக எதிர்க்கும் இட்டலி, கேரளா சுப்ரீம் கோர்ட்டை மதிக்காதபோது,(இந்திய தேசியத்தின் உயர்பீடம்)இட்டலி காஞ்சு போயிறுதே ஏன். தமிழ்த்தேசிய வாதிகள் பேசுவது நிறைய முட்டாள்தனமாதுதான், ஆனால் அவர்களை உருவாக்குபவர்கள் அறிவுஜீவிகள்தானே.

சி. சரவணகார்த்திகேயன் said...

அது "சேர நாட்டிளம் பெண்களுடனே" என்பதாக ஞாபகம், "கேரள" அல்ல.

☀நான் ஆதவன்☀ said...

நீர் ஒரு அரைகுறை என்று அடிக்கடி இம்மாதிரி பதிவு மூலம் நிரூபிக்கிறீர்

Anonymous said...

We are not excepting this kind of artile from Idiy vadai....Hope you are daily reading the news papers.

Anonymous said...

Intermittently you are showing your true colour...If this continues I have to delete you from my bookmarks..

முருகன் said...

Too Bad... never expected this kind of article from ur end.

Kumaran said...

இட்லி வடைக்கு என்னாயிற்று, இதற்கு பேசாமல் மலயாளிகள் சொல்வது சரிதான், முல்லை பெரியாயறு அணையயை உடைத்துவிடலாம் என நேரடியாக எழுதிவிடவேண்டியதுதானே,
தமிழக அரசு விளம்பரத்தை வெளியிட முடியாது என மலயாள பத்திரிக்கைகள் ஒற்றுமையாக இருப்பதாக நேற்று இணையத்தில் படித்தேன் அதே நேரம் எது நடந்தால் நாமெக்கென நாம் கல்லா நிரம்பினால் சரி என தமிழுணர்வு பத்திரிகைகளும், நீரோ மன்னன் மாதிரி இசைப்புயல் அவர்களும் பேட்டியளிக்கும் போது, இளயராஜா அவர்கள் சற்றே ஆறுதல் தரும்படி அறிக்கை தந்துள்ளார் , இதில் இட்லி வடைக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை
மேலும் இதுபோல ஒரு பதிவை இட்லி வடையிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை

Ganpat said...

இட்லி வடை இரண்டிற்கும் ஒரு குணம் உண்டு அவைகளை நன்கு வேக விடவேண்டும் அவசரப்பட்டால் அவை அரை வேக்காடு என அழைக்கப்படும்.உணர்ந்து செயல்படவும்.

"இளையராஜா" என்ற பெயருக்கு பதில் "பலர்" என்று மற்றம் செய்வது விவேகம் எனில் இளையராஜா செய்ததும் விவேகமே!

ஆங்கிலேயர்/பாகிஸ்தான்/சீனாவுக்கு எதிர்ப்பு என்றால் நான் முதலில் இந்தியன் அப்புறம்தான் தமிழன்.அதுவே கேரளா/கர்நாடகா/ஆந்திரா வுடன் மனக்கசப்பு என்றால் நான் முதலில் தமிழன் அப்புறம்தான் இந்தியன்.

Penmanam said...

ஏழெட்டு வருஷங்களாகியும் இந்த இட்லி இன்னும் வேகவே இல்லையப்பா. அரைவேக்காடாவே இருக்கு.

Dhas said...

இங்கு எனக்கு முன் கருத்து பதிவு செய்தவர்களுக்காக: "இட்லி" சொல்வது புரியவில்லையா? இசை நிகழ்ச்சிக்கும் - அணைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அதற்கு இளையராஜா பயப்பட வேண்டும்? "அணை" இப்போது பிரச்சினை தான், அதற்காக இசை நிகழ்ச்சியை அதனுடன் முடிச்சு போட்டு பிரச்சினை வளர்ப்பவர்களே பேடிகள் ஆவார்கள்.

Anonymous said...

ஏன்யா, டிக்கெட் வாங்கிட்டு இப்போ கேன்சலாயிடுமேன்னு வருத்தத்தில் எழுதுன பதிவா இது? நீர் இட்லி வடையா இல்லை ஊசிப்போன இட்லி வடையா?

Anonymous said...

I think you are a mallu

Anonymous said...

கேரளாவோடு உள்ள பிரச்னையை போராடித் தீர்க்கலாம். எல்லாரும் காத்துக் கொண்டிருப்பது கோர்ட் தீர்ப்புக்காகவே! இளையராஜா போன்ற கலைஞர்கள் அபூர்வமானவர்கள். மனிதகுலத்துக்கே உரியவர்கள்...ஆனால் அவர் தவிர்க்க முயல்கிறேன் அல்லது தள்ளிப் போட விரும்புகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறார்...பார்க்கலாம்...

என்னோட வலையில்;
மலையாளிகளின் airlines
திருவள்ளுவரின் Tweets

Anonymous said...

அன்புள்ள இட்லி,

இளையராஜா போன்ற மேதைகளை, பெரியவர்களை அவமதிக்குமுன் நம்முடைய தகுதியைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இளையராஜவிற்கு என்ன நிர்பந்தமோ யார்கண்டது? இது போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அமெச்சூர் தனமாக எழுதுவதை குறைப்பது நல்லது.

ConverZ stupidity said...

@ வெண்பூ
//அது என்ன பாகிஸ்தான் கூட மட்டும் அப்படி செய்யலாம், கேரளாகூட பண்ணக்கூடாதா?

சொந்த வீட்டுக்குள்ளே கூட பிறந்த சகோதரனோட அடிச்சிகிரதுக்கும், உன் வீட்டு திண்ணை என்னோடதுன்னு வந்து வம்புச்சண்டைக்கு நிக்கிற பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பெரிய வித்யாசம் இருக்கு பாஸு... நீங்க யாரோட சண்டை போடுரீங்கங்கிரத முடிவு எடுங்க.

மேஜர் சந்தீப் ஒரு மலையாளத்தான்... நாட்டுக்காக உயிரை விடும்போது இதெல்லாம் நினைச்சிருந்தா கதைக்கு ஆகுமா. தமிழன் மிளகாய அதிகமா சாபிடரதால மூக்குக்கு கீழ நிக்க வேண்டிய கோபம் ஆளையே முளுகடிசிடுது. கொஞ்சம் கோபத்த ஒடுக்கு வச்சிட்டு மூளைக்கு வேலை கொடுத்து பைசல் பண்ண வேண்டிய விஷயம் இது. உணர்ச்சி வசப்பட்டு நஷ்டப்பட கூடாது. நம்ம பவர் என்னாகிறத அவங்க காய்கறி கிலோ கொடுத்து வாங்கும்போதே உணர்ந்து இருப்பானுங்க...

ConverZ stupidity said...

இட்லி, மஞ்சள் கமெண்ட்-ல எல்லோரும் ரசிக்கிறதே உங்க சறகாசம்-மும், கிண்டலும் தான். இனிமே, சில பதிவுகள்ள மஞ்ச கமெண்ட் இல்லாம பாத்துக்குங்க.

Ravi said...

Idlyvadai, I support your views. Maybe the comment relating to "Tamzihnaattu pengal" seemed a little unwarranted but otherwise I respect your thought.

I think we should let go this kind of a hard-core regionlistic sentiment. What is being conducted here is a musical programme sponsored by a company which has its roots in Kerala. How can this be linked to the Mullaiperiyar Dam issue? Have we become that insane, so narrow-minded? Even if the sponsor took Kerala's side. Still this has programme has got no connection. What if such situation does not prevail in Kerala? Let's not take pride is such narrow thoughts. Shame on us if we do!

Ravi said...
This comment has been removed by the author.
லலிதா கிருஷ்ணன் said...

இட்லிக்கு, கொழாபுட்டு மேல் சகோதர
பாசம் ..தாங்கமுடியல........

Anonymous said...

டேம்999 படம் வெற்றி பெற வேண்டும் என்று பிராத்திக்கிறேன் என்று கூறிய தமிழ்நாட்டு இசை அமைப்பாளர் யார்? அவர் வீட்டு முன் தர்ணா செய்ய வக்கிருக்கா பெரியார் திகவிற்கு?

ConverZ stupidity said...

//Anonymous said...
டேம்999 படம் வெற்றி பெற வேண்டும் என்று பிராத்திக்கிறேன் என்று கூறிய தமிழ்நாட்டு இசை அமைப்பாளர் யார்? அவர் வீட்டு முன் தர்ணா செய்ய வக்கிருக்கா பெரியார் திகவிற்கு?

ஹி ஹி ஜோக்கடிக்காதீங்க சார். மதச்சார்பின்மைக்கு பாதகம் வந்துடும் மேலும் முதுகெலும்பு இல்லாதவங்க அத செய்ய மாட்டாங்கன்னு.

மதசார்பின்மைன்னா என்னன்னு தெரியாதவங்களுக்கு பதில் கீழே...

மல்லாக்க படுத்துகிட்டு மேல் நோக்கி துப்புறது

virutcham said...

தொ,கா யில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்கள், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளில் ஜட்ஜுகள் , தமிழ் தொ.கா திரைப்பட துறையில் பலவற்றில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்று வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிய மல்லுக்கள் நிறைய இருக்காங்களே. இப்போ எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்யாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்? நமக்கு இன உணர்வு போறவே போறாது . இது மாதிரி கேரளத்தில் பொறுப்பில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் இன மான உணர்வோடு உடனே பொட்டி கட்டிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு வராம இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க? சிறு தொழில்கள் செய்யும் பலரும் வேறு வழியில்லாமல் வர நேர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ?

மல்லுக்கள் கடையில் முன்னே எப்போவோ வாங்கிய நகை எல்லாம் உடனே இப்போவே தூக்கி கடாச வேண்டாமா ?

சமீபத்தில் விஜய் தொ.கா தமிழன் உணர்ச்சி பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுவது சரியா தவறா என்று கல்லூரி மாணவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. அதை நடைத்தியது சரியா தவறா?

mk said...

Kari thuppura madiri post panradhe unaku velaiya pochu.. Yellow comment la 'palar' nu mathitu nee aanmai pathi pesura.. Thu

vijayankrishna said...

'Sarakai vittuvittu,saakai koallaru sollum' um cirru puthiyai kaatuvatharkku-thaana, intha 'valaippathivu' (blog...)?

கிருஸ்ணா said...

ஐயா இட்லிவடை!! பெரியாரைப் பற்றி பேச உமக்கு தகுதி இல்லை.பெரியார் வேறு மொழியைச் சேர்ந்தவரானாலும் எம் இனத்திற்கு அறிவூட்டியவர்.இன்னொரு விடயம் இசைக்கு மட்டுமல்ல நீருக்கும் மொழி கிடையாது.தமிழகம் பாலைவனம் ஆக வேண்டும் என்பதே கேரளாவின் விருப்பம். ஆனால் பெரியார் தமிழினம் தன்மானத்துடன் வாழ வேண்டும் என நினைத்தவர்.ஒரு இசை நிகழ்ச்சியை ரத்துச் செய்வதால் இசைஞானி ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.அவருக்கு ஒரு அங்கீகாரம் தந்தது தமிழர்களே தவிர கேரளர்கள் அல்ல.

Anonymous said...

Good Bye to idly Vadai