பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 19, 2011

வடிவேலு சொன்ன குட்டி கதை !

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் யாராவது உண்டா? உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கு. எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தா சரியாகுமா? சில நேரம் பிரச்சினையும் வரத்தான் செய்யும். அப்படித்தான் எனக்கும் பிரச்சினை வந்துள்ளது. எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இப்பவும் வரத்தான் செய்கிறது. நான்தான் அந்த வாய்ப்புகளை மறுத்து வருகிறேன்.
அவர் சொன்ன குட்டி கதை கீழே...

ஒருத்தர் மருத்துவர்கிட்ட போய், ஐயா எனக்கு தூக்கம் வரல. ரொம்ப மன உளச்சலா இருக்கு மருந்து கொடுங்கன்னு கேட்டாராம். அதுக்கு மருத்துவரோ, சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா எனக்கும் அப்படித்தான் வருது. இன்னிக்கு சனிக்கிழமை, அதனால நீங்க போயிட்டு திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொன்னாராம்.

அவரோ, ஐயா எனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைலதான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களில் எனக்கு வேலை அதிகம். எனக்கு இன்னிக்கு ஏதாவது வைத்தியம் பாருங்கண்ணு சொன்னாராம்.

சிறிது நேரம் யோசிச்ச மருத்துவர் ஐயா, நான் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல தூக்கம் வராம மன உளைச்சலில் அவதிப்படுகிறதால பக்கத்தில் வாராவாரம் நடக்கிற ‘பபுன்’ நிகழ்ச்சிக்கு போயி மனம் விட்டு சிரிச்சிட்டு வந்துடுவேன். அப்பத்தான் நிம்மதியாக தூங்க முடியும். இந்த வாரமும் அந்த நிகழ்ச்சிக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் நுழைவு சீட்டு வாங்கி இருக்கேன். வேணும்னா இன்னிக்கு மனைவியை விட்டு விடுகிறேன். உங்களுக்கு ஒரு சீட்டை தருகிறேன். வாங்க அந்த ‘பபுன்’ பார்த்துட்டு வந்தாலே கவலை எல்லாம் பறந்து போயிடும்னு சொன்னாராம்.

அப்போ இடைமறித்த அவரோ, ஐயா நான் தாங்க அந்த ‘பபுன்’ என்றாராம். மருத்துவர் அதிர்ந்து போய் பார்த்தாராம். அந்த ‘பபுன்’ நிலைதாங்க என்னோட நிலையும் என்றார் வடிவேலு.
பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு :-)

9 Comments:

LOSHAN said...

ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி ஞாபகம் வருகிறார்

Anonymous said...

ஐO, ஐO, PAVAM

Damodar said...

வேணாம் !!! வலிக்குது !!! அழுதுடுவேன் !!!

NIZAMUDEEN said...

கதையைப்
படித்ததுமே
கண்ணக்
கட்டுதே!

Jagannathan said...

என்ன, வடிவேலுவை ’மருத்துவர் ஐயா’ தினம் பார்ப்பதால் (டி வி யில்) வடிவேலுவுக்கு மன உளைச்சலா! ஆமாம். இவர் ஜெயுடன் சேர்வது என்ன ஆயிற்று? - ஜெ.

Anonymous said...

வடிவேலண்ணே, எங்களையெல்லாம் சிரிக்க வச்சிட்டு நீங்க வருதப்படகூடதுண்ணே....

"மேரா நாம் சோக்கர்" படத்துல ராஜ் கபூர் படிச்சிருக்கிற பாட்டப்பாத்து ஆறுதல் படுங்க,

http://www.youtube.com/watch?v=iJj64Ea__-w&feature=related

"அப்னி நசர்மே ஆஜ்கல்
தின்பி அந்தேரி ராத்ஹே"

அபாரம்ண்ணே......

Anonymous said...

இது என்.எஸ்.கே அவர்கள் சொன்ன நகைச்சுவைக் கதை.

திருடுவதில் இதையும் கூட விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

சிவா.. said...

vadivelu pic looks very nice...

சிவா.. said...

vadivelu pic looks very nice...