பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 27, 2011

படமும் செய்தியும்


- நன்றி விகடன்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வருகிற 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். சில வார காலம் அங்கிருந்தபடியே அரசு பணிகளை மேற்கொள்வார் - தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லை!

18 Comments:

jaisankar jaganathan said...

கொடநாடு போனாலும் தமிழ்நாட்டை மறக்காம இருக்கும் முதல்வர்

Anonymous said...

சூப்பர்.
என்ன அரசாங்க பஸ்சிலா? இல்லை தனி விமானத்திலா ?

Anonymous said...

--- நல்ல அம்மா!!!, நல்ல எதிர்க்கட்சி ( அம்மாவை ஆட்சிகட்டிலில் அமர்த்திய )தலைவர்கள்!!!
-- ஆண்டவன்தான் தமிழ் நாட்டை காப்பாத்த வேண்டும்!!!
--- இப்போது கோயம்பேட்டில் வெள்ளி, சனி- மாலை நேரங்களிலும் பஸ்ஸில் மாலை போட்டு அழைகிரார்கலாம்.
--- வாரம் ஒரு முறை ஊருக்கு சென்றவர்கள் இனி மாதம் ஒரு முறை தான் பஸ் பயணம் .

Anonymous said...

அம்மா ஆட்சியில் தெருவில் நகை திருட்டு குறைந்து (நகைக்கடை , வட்டிக்கடையில் கொள்ளை அதிகரிப்பால்) மக்கள் பயமின்றி நடமாட்டம் .
மக்கள் (மக்கள் மின்கட்டணம் கட்ட முடியாமல்) விசிறி வாங்குவதால் , தடையின்றி மின்சாரம் கிடைக்கிறது ,வார இறுதியில் ஊருக்கு செல்லாலதால் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் இடம் தாராளம்.
மக்கள் மகிழ்ச்சி என்று பத்திரிகைகள் எழுதுவார்கள்.

Anonymous said...

அம்மா ஆட்சியில் தெருவில் நகை திருட்டு குறைந்து (நகைக்கடை , வட்டிக்கடையில் கொள்ளை அதிகரிப்பால்) மக்கள் பயமின்றி நடமாட்டம் .
மக்கள் (மக்கள் மின்கட்டணம் கட்ட முடியாமல்) விசிறி வாங்குவதால் , தடையின்றி மின்சாரம் கிடைக்கிறது ,வார இறுதியில் ஊருக்கு செல்லாலதால் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் இடம் தாராளம்.
மக்கள் மகிழ்ச்சி என்று பத்திரிகைகள் எழுதுவார்கள்.

Anonymous said...

தனி அரசாங்க பஸ்ஸில.. வசதி இருக்கு

Ganpat said...

"How to win friends and influence people"-Best selling book by Dale Carnegie
"How to win enemies and irritate people"-Best selling book by Dame Jaya

Anonymous said...

People should pay for their mistakes. 2001 to 2006 ADMK government gives somewhat good governance. People throw them away for free television and other freebies. So last five years 32,000 crores debt increased in transport(source: thuglak). If the people will do same mistake this time... Jayalalitha also turn to freebies/corrupt (she wont take any risk for TN sake) and tries to loot as much as possible in her period. Then people will suffer ever. Try to support and co-operate to good government. Money wont grow in trees for government also.

அமர் said...

நல்ல கவனியுங்கள். அம்மாவை விமர்சனம் செய்கிறவர்கள் எல்லாம் Anonymous. என்ன பயம். இட்லிவடையின் கடமை அம்மாவை ஆட்சிகட்டிலில் ஏற்றியவுடன் முடிந்துவிட்டது. இனி எவன் எக்கேடு கெட்டால் என்ன?

ஸ்ரீராம். said...

அனானியின் கமெண்ட் படித்துத் தோன்றியது...

"தமிழகத்தில் திருட்டு குறைந்தது. மக்களிடம் இருக்கும் காசு அத்தனையும் அரசாங்கமே பல துறைகளிலும் எடுத்து விட்டதால் மக்களிடம் திருட ஒன்றும் பாக்கி இல்லை என்ற விரக்தியில் திருடர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டனர்!"

jaisankar jaganathan said...

ஸ்ரீராம் கமெண்ட் அருமைங்க.

R. Jagannathan said...

என் எண்ணங்கள் / கேள்விகள் (யாருக்கு? சும்மா, யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பது தெரியும்!):

புது சட்டசபை தயாராயில்லை; அங்கு மந்திரிகள் இருந்தால், செயலர்கள் 2 கி மீ தள்ளி இருக்கும்போது அரசின் செயல்கள் எப்படி நடக்கும்? - இது அம்மா ஜெ கோர்ட்டிலும் அறிக்கையிலும் சொன்னது!

இப்போது சில வாரங்கள் கொடநாட்டில் அம்மா இருந்தால் அரசு எப்படி நடக்கும்? - இது ஐயோ பாவம் ஜெ (நாந்தேன்)!

பெங்களூர் கோர்ட்டுக்குப் போனாலே 15 மந்திரிகள் 2, 3 நாள் அங்கு போய் டேரா போடுகிறார்கள் - எதற்கு என்று எனக்கு புரியவில்லை. காலையிலிருந்து மாலை வரை கோர்ட்டில் இருக்கும் ஜெ உடனே ஹெலிகாப்டர் / விமானம் என்று தினமும் சென்னை திரும்பிவிடுகிறார். இந்த மந்திரிகள் காரிலோ, விமானத்திலோ (அம்மாவின் விமானத்தில் அல்ல) போய் திரும்புகிறார்கள். ட்ராஃபிக் ராமசாமி அவர்கள் கேஸ் போட்டு அல்லது யாராவது RFI போட்டு இந்த செலவுகள் எல்லாம் யார் செய்தார்கள் என்று தெரிவிப்பார்களா?

பதவியேற்ற புதிதில் எல்லா திறப்பு விழாக்களையும் வீடியோ கான்ஃபெரென்ஸில் முடித்தது போல், அரசையும் கொடநாட்டிலிருந்து ஃபோன் / வீடியோ கான்ஃபெரென்ஸில் நடத்துவாரா?

இப்போது மழையினால் தமிழகம் பூராவும் தத்தளிக்கிறது. உடனடி முடிவுகள் எடுத்து (நிச்சயம் ஒரு மந்திரியும் முடிவு எடுக்க அநுமதியில்லை என்பது வெட்ட வெளிச்சம்) நிவாரண வேலைகள் தொடங்கவேண்டிய நேரத்தில் கொடநாடு விஜயம் அவசியமா என்று ஜெ சிந்திக்கவேண்டும். (இது கொஞ்ஜம் ஓவரா இருக்கோ?)

மற்ற செய்தி யான - ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்களே இருப்பதால் நோயாளிகள் அட்மிட் செய்யப்படுவதில்லையாம். ஆனால் சட்ட சபையையும் நூலகத்தையும் ஸ்பெஷல் ஆஸ்பத்திரியாக மாற்றி தமிழ் நாட்டில் நோயாளிகளை ஒழிப்பாராம், அதாவது நோய்களை குணப்படுத்துவாராம். எப்படியாம்?

இ.வ.அல்லது அதிமுகவினர் பதில் அளிப்பார்களா? (அம்மாவிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு!)
-ஜெ.

மாயன் : அகமும் புறமும் said...

எதிர்க்கட்சித் தலைவரா இருக்கும்போது 'எதிர்க்கட்சித் தலைவர் கொடநாடு போறார்'னு குத்தம் சொல்றீங்க! ஆளுங்கட்சியா இருக்கும் போதும் அப்படித்தான் சொல்றீங்க!பின்னே எப்பதான் போறது...

இன்று என் வலையில் ;

யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

மாயன் : அகமும் புறமும் said...

இனி வருஷா வருஷம் தேர்தல் நடத்தணும். அப்பதான் ஒரு பயம் இருக்கும்.

kothandapani said...

படுக்கையில் உள்ள இருவரையும் நோஞ்சானாக காட்டிவிட்டு அம்மாவை மட்டும் oversize ஆக காட்டியிருப்பதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ .......

kothandapani said...

அது என்ன புதுசா செயிதிகளுக்கும் படங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மஞ்சள் கமெண்ட் .... எப்போதான் இரண்டுக்கும் தொடர்பு இருந்து உள்ளது.........

S Suresh said...

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 30ம் தேதி கொடநாடு செல்லவிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Refer: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=358397

BalajiS said...

Ramanujar did what was required in his time.

Gandhi did what was necessary during his time.

Anna Hazare is doing what is necessary in his time!

Dont make stupid comparisons!