பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 24, 2011

ஒன்லி ஒன்ஸ் !!

இன்று சரத் பவாரை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததை பல முறை எல்லா டிவிக்களும் போட்டு அவர் பல முறை அடி வாங்க வைத்துவிட்டார்கள். எல்லோருக்கும் உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மீடியா சும்மா இல்லாமல், அன்னாவிடம் கருத்து கேட்க அவரும் நம்மளை போல சந்தோஷத்தில் "பவாருக்கு ஒரே ஒரு அடிதான் கிடைத்ததா?" என்று மஞ்சள் கமெண்ட் அடிக்க. காந்தியின் மறு உருவம், அகிம்சையைத்தான் பின்பற்றும் அன்னா எப்படி இப்படி பேசலாம் என்று மீடியா பிடித்துக்கொண்டது.

இந்த தாக்குதலுக்கு இதற்கு முக்கிய காரணம் நேற்று அந்த சீக்கிய இளைஞர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடலை கேட்டது தான் என்று பரவலாக நம்பப்படுகிறது


அன்னாவை பின்பற்றுகிறவர்களுக்கு இது பெரிய அறை என்பது வேறு விஷயம் !

9 Comments:

ஜெகன்னாதன் said...

//இந்த தாக்குதலுக்கு இதற்கு முக்கிய காரணம் நேற்று அந்த சீக்கிய இளைஞர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடலை கேட்டது தான் என்று பரவலாக நம்பப்படுகிறது// இதற்கு மஞ்ஜள் ஹைலைட் செய்திருக்கணும்!

எல்லா சான்னலிலும் காலையிலிருந்து இப்போது (இரவு) வரை சுமார் 50,000 தடவையாவது பவார் அறை வாங்கியிருப்பார்.

-ஜெ.

Madhavan Srinivasagopalan said...

//பவாருக்கு ஒரே ஒரு அடிதான் கிடைத்ததா? //

பவாரும் காந்தி வழிய பின்பற்றி, 'மறு கன்னத்தையும்' காமிச்சிருக்கலாமில்லையா என்று 'பவார்' பற்றிய உயர்ந்த நோக்கில் அன்னா கேட்டிருக்கலாமே ?

Madhavan Srinivasagopalan said...

// எல்லா சான்னலிலும் காலையிலிருந்து இப்போது (இரவு) வரை சுமார் 50,000 தடவையாவது பவார் அறை வாங்கியிருப்பார்.//

கொலவெறி Song 2 மில்லியன் ஹிட்ஸ் ஆயிடிச்சம்..
அதுக்கு முன்னால 50 ஆயிரம் ஒரு சப்பை மேட்டர்..

Madhavan Srinivasagopalan said...

//எல்லா சான்னலிலும் காலையிலிருந்து இப்போது (இரவு) வரை சுமார் 50,000 தடவையாவது பவார் அறை வாங்கியிருப்பார்.//

அறைந்தவர் 500 பாட்ஷாவுக்கு(ரஜினி) சமமோ ? கூட்டி கழிச்சு பாத்தா சரியா வருதே...

BalajiS said...

IV,
Here is Anna had said,

"I was asking them, was he only slapped or did something else happen to him,".

But our congress friend Media (print/TV/...) as usual twisted to its flavour.

Dont jump!

BalajiS said...

IV,

This is what Anna had said.

"I was asking them, was he only slapped or did something else happen to him," he said.

As usual Congress media which includes almost all of media twisted to its flavour!

IdlyVadai said...

//"I was asking them, was he only slapped or did something else happen to him," he said.

As usual Congress media which includes almost all of media twisted to its flavour!//

The video is there for you to see. and if Anna has told like that why should the press people laugh in chorus ? we need to accept the truth and as a Gandhian he needs to accept it first !

Bharathis said...

ஏற்கெனவே கொலவெறி பாட்டையும் ஷரத் பவார் அறையையும் மிக்ஸ் ஆக்கி விட்டார்கள்!
http://www.youtube.com/watch?v=wo7K8fyYb2M&NR=1

Bharathis said...

ஏற்கெனவே கொலவெறி பாட்டையும் ஷரத் பவார் அறையையும் மிக்ஸ் ஆக்கி விட்டார்கள்! http://www.youtube.com/watch?v=wo7K8fyYb2M&NR=1