பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 23, 2011

குட்டை பாவாடையும் கோவணமும்

நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது மரபு. இதனால் பிரிண்ட் மீடியாக்களும், வலைப்பதிவுகளும் காலத்தை ஓட்டுகிறது. ஸ்ரேயா சிவாஜி விழாவிற்கு வந்து சென்ற பிறகு மன்னிப்பு கேட்டார். நமிதா கையோடு ஒரு துண்டு எடுத்து வருகிறார். ஆனால் இந்து மக்கள் கட்சி போன்றவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்நாட்டின் முக்கியமாக பிரச்சனைகளுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பும், குஷ்பு கருத்தும் நமக்கு பழக்கப்பட்டது தான்...

குஷ்பு கருத்து:

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார். ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன.

இந்து மக்கள் கட்சி கருத்து:

தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.
கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அதற்கு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆக மொத்தம் இவர்களை போட்டு எனக்கு நான்கு நிமிட புகழ் வந்துவிட்டது

நல்ல படங்கள் கிடைக்கவில்லை, மன்னிக்கவும் :-)

13 Comments:

dondu(#11168674346665545885) said...

//ஆக மொத்தம் இவர்களை போட்டு எனக்கு நான்கு நிமிட புகழ் வந்துவிட்டது //
ஹா ஹா ஹா. நான்கு நிமிடம் என்பது உங்கள் பதிவுக்கு ஒத்து வராது. அதற்கு மேலும் வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

kg gouthaman said...

கடவுளே, கடவுளே, கடவுளே, கடவுளே

(அண்ணாமலை ரஜினி கூறியது.)

Vetrimagal said...

Too good!!! பயனுள்ள தகவல். எதிர்ப்பு சரியாகவே பட்டது.

உங்கள் புகழ் ஓங்குக!

Madhavan Srinivasagopalan said...

பாவாடையாவது போட்டுட்டு வராங்களே..
கலிகாலத்துல எதுவேணா நடக்கலாம்..
ஈச்வரே ரக்ஷது..

Siddharth said...

"குட்டை பாவாடையும் கோவணமும்"

- Bharathi Raja's Next Movie Title. Excellent one.

Anonymous said...

really, you coudnt get a couple of pictures? Now I am all confused about what exactly you are talking about, unacceptable idlyare :)

Anonymous said...

ச்சீய்...!

இவண்,
பாவடை நாயகம்
பி.எ.,எம்.எ., கெக்கே (பாரதிதாசன்), பிக்கே (அண்ணா), ஊ லலல்லா (யு.எஸ்.எ)

R.Gopi said...

"குட்டை பாவாடையும் கோவணமும்" - இந்த டைட்டில் ரெஜிஸ்டர் பண்ணி வச்சா நல்லது... பிற்காலத்தில் நல்ல டிமாண்ட் இருக்கும்....!!!

jaisankar jaganathan said...

//நல்ல படங்கள் கிடைக்கவில்லை, மன்னிக்கவு//

தேடிப்பிடிச்சு குடுங்க

Vadivelan R. V said...

நல்ல வேளை குட்டை பாவாடை அணிந்து வருகிறார்கள் வெறும் பாவாடை ஜாக்கெட் அணிந்து வந்திருந்தால் அவ்வளவுதான் இந்த நான்கு நிமிட புகழை விட இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும் இட்லி வடையாருக்கு.

www.gouthaminfotech.com

ஜில்பாத்ரி said...

ஜட்டியே போடாமல் விழாவுக்கு வந்து கால் மேல் கால் போட்டு தர்ம தரிசனம் தந்து புகழ் தேடும் பாலிவுட் நடிகைகளுக்கு இவர்கள் எவ்வளவோ தேவலாம்

Anonymous said...

எல்லாமே ரெண்டு நிமிஷம் தான் :)

G.Ganapathi said...

இப்படி படமே போடாமல் அதுவும் கவர்ச்சி படம் போடுவதற்கு ஏதுவாக ஒரு சிறந்த பதிவு கிடைத்து இருந்தும் அதனை பயன்படுத்தாமல் விட்டதற்கு உங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்